بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
82:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
முன்னுரை:இறைவழிகாட்டுதலின் படி ஒரு சமுதாயம் செயல்பட்டால் அங்கு ஏற்படும் மறுமலர்ச்சியைப் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மேல்கொண்டு விளக்கங்கள் இங்கு வருகின்றன.
إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتْ.
82:1. பரந்து விரிந்து கிடக்கும் வானங்களின் ஆராய்ச்சிகளைக் கொண்டு அவற்றில் மறைந்திருக்கும் உண்மைகள் வெளிப்பட்டு வரும்.
وَإِذَا ٱلْكَوَاكِبُ ٱنتَثَرَتْ.
82:2. நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் ஆய்வுகளும் மேற்கொள்ளப்படும்.
وَإِذَا ٱلْبِحَارُ فُجِّرَتْ.
82:3. ஆழ்கடல் ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படும். கடல்வழி பிரயாணமும் வாணிபமும் வேகமாக வளரும்.
وَإِذَا ٱلْقُبُورُ بُعْثِرَتْ.
82:4. பூமியில் புதைந்து கிடக்கும் பொக்கிஷங்கள் ஆராய்ச்சிகளின் மூலம் வெளியே கொண்டு வரப்படும்.
عَلِمَتْ نَفْسٌۭ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ.
82:5. இப்படியாக அந்த நாடு வேகமாக முன்னேறி வரும். அப்படியொரு கால கட்டத்தில் ஒவ்வொருவரின் உழைப்புக்கும் ஏற்ற பலன்களைப் பெற்றுக் கொள்வார்கள். இதுவரையில் செய்த செயல்களும் இனி செய்து வரும் செயல்களும் இதில் அடங்கும்.
இப்படியாக மனித வளம் வேகமாக வளரச் செய்வதுடன் மனித நேயத்தையும் கட்டிக் காப்பாற்றும் வகையில் இறைவனின் வழிகாட்டுதலின் படி ஆட்சி அமைப்பு உருவாக்கப்படுகிறது. உண்மை இவ்வாறிருக்கும் போது,
يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلْكَرِيمِ.
82:6. மனிதனே! இத்தகைய ஆட்சியமைப்பை எதிர்க்க துணிந்து விட்டாயே! இவ்வாறு செய்ய உன்னை தூண்டியது எது?
ٱلَّذِى خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ.
82:7. உன்னை பலப் படித்தரங்களில் படைத்து ஒழுங்குபடுத்தி அழகிய வடிவில் மனிதனாக படைத்த (95:4) ஏக இறைவனின் ஆட்சியமைப்பையா எதிர்க்கின்றாய்?
فِىٓ أَىِّ صُورَةٍۢ مَّا شَآءَ رَكَّبَكَ.
82:8. அல்லாஹ்வின் "மஷீயத்" என்னும் செயல்திட்டத்தின் படி, உடல் உறுப்புகளின் ஒவ்வொன்றையும் சரியாக பொருத்தி முழு மனிதனாக உங்களை படைக்கவில்லையா?
كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِٱلدِّينِ.
82:9. உண்மை இவ்வாறிருக்க அல்லாஹ் நிர்ணயித்துள்ள “மனித செயலுக்கேற்ற விளைவுகள்” என்ற சட்டம் என்பதெல்லாம் பொய் என்று நினைப்பது நியாயமா? அப்படியும் நீங்கள் பொய்ப்பிப்பதால் என்ன நடக்கப் போகிறது?
وَإِنَّ عَلَيْكُمْ لَحَٰفِظِينَ.ᴑ
82:10. உங்களுடைய செயல்கள் அனைத்தையும் கண்காணிக்கும் கண்ணியமிக்க காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
كِرَامًۭا كَٰتِبِينَ.ᴑ
82:11. ஆகவே நீங்கள் செய்வது எதுவும் அவர்களின் பார்வையிலிருந்து தப்பவே தப்பாது.
يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ.ᴑ
82:12. அதைத்தான் இறைவன் நிர்ணயித்துள்ள “மனித செயல்களுக்கு ஏற்ற விளைவுகள்” என்ற சட்டம் என்பதாகும்.
إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍۢ.
82:13. இந்த சட்டத்தின்படி ஆக்கப்பூர்வமான நற்காரியங்களை செய்து வரும் “அப்ரார்கள்”, என்னும் கண்ணியவான்கள் சகல வசதிகளையும் பெற்று மனநிறைவோடு சிறப்பாக வாழ்வார்கள்.
وَإِنَّ ٱلْفُجَّارَ لَفِى جَحِيمٍۢ.
82:14. மாறாக மனித ஒருமைப்பாட்டை சீர்குலைத்து பல பிரிவினர்களாகப் பிரித்து, தம்முள் பகைமையை வளர்த்துக் கொண்டால், அங்கு வளர்ச்சி தடைபட்டு அந்தச் சமுதாயமே வேதனை மிக்கதாய் மாறிவரும். (2:27)
يَصْلَوْنَهَا يَوْمَ ٱلدِّينِ.
82:15. அவர்கள் செய்து வந்த தீய செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும்போது, அந்த வேதனைகளை கண்கூடாக பார்த்துக் கொள்வார்கள்.
وَمَا هُمْ عَنْهَا بِغَآئِبِينَ.
82:16. நினைவில் கொள்ளுங்கள்! இப்போதும் அந்த வேதனைகளைப் பற்றிய உண்மைகள் அவர்களுக்கு தெரியாமல் இல்லை. தெரிந்து தான் இருக்கிறது. (29:54) (79:36) அதுதான் யவுமுத் தீன் என்பதாகும்.
وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ.
82:17.“யவுமுத் தீன்” என்பதன் பொருள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
ثُمَّ مَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ.
82:18."யவுமுத் தீனைப்" பற்றி இறைவனைத் தவிர வேறு யார்தான் உங்களுக்கு விளக்கம் தர முடியும் ?
يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌۭ لِّنَفْسٍۢ شَيْـًۭٔا ۖ وَٱلْأَمْرُ يَوْمَئِذٍۢ لِّلَّهِ.
82:19. "யவுமுத் தீன்" என்பது “மனித செயல்களுக்கு ஏற்ற விளைவுகள்” தோற்றத்திற்கு வருமே அந்தக் கால கட்டத்தைக் குறிக்கும் சொல்லாகும். அப்போது எவரும் மற்றவர்களை எந்த உதவியும் செய்ய சத்தி பெற மாட்டார்கள். ஆட்சி அதிகாரம் முழுவதும் அல்லாஹ் நிர்ணயித்த சட்டங்களுக்கு உட்பட்டே நடைபெறும். தனிநபர் ஆதிக்கம் அங்கு செல்லாது. இதுவே "யவ்முத் தீன்" என்பதாகும். (1:3). இது இம்மையிலும் மறுமையிலும் நடைபெறும்.