بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
7:0அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
الٓمٓصٓ.
7:1. அளவிலா வல்லமையும் ஞானமும் மிக்க அல்லாஹ்வின் புறத்திலிருந்து முஹம்மது நபி மூலமாக விடுக்கப் பட்ட முன்னெச்சரிக்கை இது.
كِتَٰبٌ أُنزِلَ إِلَيْكَ فَلَا يَكُن فِى صَدْرِكَ حَرَجٌۭ مِّنْهُ لِتُنذِرَ بِهِۦ وَذِكْرَىٰ لِلْمُؤْمِنِينَ.
7:2. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! தவறானச் செயல்களால் ஏற்படும் விபரீத விளைவுகளைப் பற்றி எடுத்துக் கூறி முன்னெச்சரிக்கை செய்வதற்காகவும், இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொள்பவர்களுக்கு நல்லுபதேசமாகவும் விளங்கும் இவ்வேதம், உம்மீது இறக்கி அருளப்படுகிறது. இதை மக்களுக்கு எடுத்துரைப்பதில் தயக்கம் காட்டாதீர்.
ٱتَّبِعُوا۟ مَآ أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ وَلَا تَتَّبِعُوا۟ مِن دُونِهِۦٓ أَوْلِيَآءَ ۗ قَلِيلًۭا مَّا تَذَكَّرُونَ.
7:3. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! உங்கள் இறைவனிடமிருந்து இறக்கியருளபட்ட இவ்வேத அறிவுரைகளை மட்டும் பின்பற்றுங்கள். இவற்றை விட்டுவிட்டு உங்களுடைய பாதுகாப்பான வாழ்க்கைக்குத் துணை நிற்கும் என எண்ணி வேறு எதையும் பின்பற்றாதீர்கள். இது விஷயமாக உங்களில் மிகச் சிலரே சிந்தித்து அறிவுரை பெறுகிறீர்கள்.
وَكَم مِّن قَرْيَةٍ أَهْلَكْنَٰهَا فَجَآءَهَا بَأْسُنَا بَيَٰتًا أَوْ هُمْ قَآئِلُونَ.
7:4. இவ்வாறு இறைவழிகாட்டுதலை விட்டுவிட்டு மாற்று வழிமுறைகளைப் பின்பற்றி வந்த எத்தனையோ சமுதாயங்கள், அல்லாஹ்வின் நியதிப்படி அழிந்து போயுள்ளன. வேதனைமிக்க அந்த அழிவுகள் அவர்கள் இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் போதோ, அல்லது பகலில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போதோ அவர்களை சூழ்ந்து கொண்டன.
அதாவது உழைக்காமல் தூங்கிய சமுதாயங்களும் அழிந்துள்ளன. உழைத்து முன்னேறி உல்லாசமாக வாழ்ந்த சமுதாயங்களும் அழிந்துள்ளன.
فَمَا كَانَ دَعْوَىٰهُمْ إِذْ جَآءَهُم بَأْسُنَآ إِلَّآ أَن قَالُوٓا۟ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ.
7:5. காரணம் அவர்களிடம் முன்னெச்சரிக்கை செய்பவர்கள் வந்த போதெல்லாம் அவர்களை அலட்சியப்படுத்தி விட்டு வேதனை வரும் சமயத்தில், “நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாகவே இருந்தோம்” என்று புலம்பிக் கொண்டிருந்தனர். இதைத் தவிர அவர்களால் வேறு எதையும் செய்ய முடியவில்லை.
فَلَنَسْـَٔلَنَّ ٱلَّذِينَ أُرْسِلَ إِلَيْهِمْ وَلَنَسْـَٔلَنَّ ٱلْمُرْسَلِينَ.
7:6. அவர்களிடம் வந்த இறைத்தூதர்கள் இறைவழிகாட்டுதல்களை அவர்களிடம் எடுத்துரைத்த போது, அவர்கள் அதற்கு என்ன பதில் கூறினார்கள் என்பதை நாம் திடமாக விசாரிப்போம். நபிமார்கள் மக்களிடம் என்ன போதித்தார்கள் என்பதையும் அவர்களிடம் நாம் உறுதியாக விசாரிப்போம்.
فَلَنَقُصَّنَّ عَلَيْهِم بِعِلْمٍۢ ۖ وَمَا كُنَّا غَآئِبِينَ.
7:7. அவர்கள் சொன்ன விஷயமும், மக்கள் செயல்பட்ட விவரங்களும் நமக்குத் தெரியாமல் இல்லை. அவற்றில் எதுவும் நமக்கு மறைவானதாகவும் இல்லை. இருந்தும் அவர்களின் மறுப்பிற்கு நபிமார்களின் முன்னிலையில் விசாரிக்கப்படும்.
وَٱلْوَزْنُ يَوْمَئِذٍ ٱلْحَقُّ ۚ فَمَن ثَقُلَتْ مَوَٰزِينُهُۥ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ.
7:8. ஆக “மனித செயல்களுக்கு ஏற்ற விளைவுகள்” தோற்றத்திற்கு வரும் கால கட்டத்தில், ஒவ்வொருவரின் செயல்களின் எடை மிகத் துல்லியமாக நிறுத்தப்படும். யாருக்கும் எவ்வித அநீதியும் இழைக்கப்பட மாட்டாது. யாருடைய நன்மையான செயல்களின் எடை கூடி நிற்கிறதோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள் ஆவர்.
وَمَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ فَأُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ خَسِرُوٓا۟ أَنفُسَهُم بِمَا كَانُوا۟ بِـَٔايَٰتِنَا يَظْلِمُونَ.
7:9. யார் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து தம் மனஇச்சையைப் படி வாழ்ந்து, நன்மையின் எடையை இலேசாக்கிக் கொள்கிறார்களோ, அவர்கள் தமக்குத் தாமே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள் ஆவார்கள்.
وَلَقَدْ مَكَّنَّٰكُمْ فِى ٱلْأَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَٰيِشَ ۗ قَلِيلًۭا مَّا تَشْكُرُونَ.
7:10. மேற்சொன்ன இத்திட்டத்தின்படி தான் அனைத்து வாழ்வாதார வசதிகளையும் ஏற்பாடு செய்து, மனிதனை இப்பூமியில் வாழ ஏற்பாடு செய்தோம். பரிணாம வளர்ச்சிக்காகச் செய்யப்பட்ட இவை யாவும் நீங்கள் கேட்காமலேயே, யாரிடமும் யாதொரு பிரதிபலனையும் எதிர் பார்க்காமாலேயே செய்யப் பட்டவையாகும். எனினும் மிகச் சிலரே நம் கட்டளைக்கு அடிபணிந்து நன்றி விசுவாசத்துடன் நடந்து கொள்கிறார்கள்.
அதாவது பூமியிலுள்ள வாழ்வாதாரங்களை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சரிசமமாகப் போய் சேரும்படி சரியான அமைப்பு முறையை ஏற்படுத்த வேண்டும் என்பது இறைவனின் அறிவுரை. ஆனால் மனிதன் அந்த வாழ்வாதாரங்கள் யாவும் தனக்கே சொந்தம் என நினைத்து, அவற்றை பதுக்கி வைத்துக் கொள்கிறான். இவை அல்லாஹ்வின் அறிவுரைக்கு எதிரான செயலாகும்.
وَلَقَدْ خَلَقْنَٰكُمْ ثُمَّ صَوَّرْنَٰكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَٰٓئِكَةِ ٱسْجُدُوا۟ لِءَادَمَ فَسَجَدُوٓا۟ إِلَّآ إِبْلِيسَ لَمْ يَكُن مِّنَ ٱلسَّٰجِدِينَ.
7:11. நம் செயல் திட்டப்படி மனிதர்களாகிய உங்கள் அனைவரின் படைப்பும் உயிரற்ற மண்ணின் சத்திலிருந்து தான் துவக்கினோம். (பார்க்க-23:13). அதை பலப் படித்தரங்களைக் கடக்கச் செய்து, அழகிய தோற்றத்திற்கு வரச் செய்தோம். அதன்பின் உலக படைப்புகளை ஆய்வு செய்து, அவற்றின் செயல் திறன்களைப் பற்றி அறியக் கூடிய ஆற்றலை நாம் உங்களுக்கு அளித்தோம் (பார்க்க 2:31). அதைத் தொடர்ந்து மனித இனத்தின் வாழ்வு சிறப்பாக விளங்க, பிரபஞ்ச இயற்கை சக்திகளாகிய மலக்குகளை மனித கட்டுப்பாட்டிற்குள் வரச் செய்தோம்.
இப்படியாக நம் செயல்திட்டப்படி இயற்கை சக்திகளை வசப்படுத்தக் கூடிய ஆற்றல்கள் மனிதனுக்கு கிடைத்தன. ஆனால் மனிதனுள் செயல்பட்டு வரும் இப்லீஸிய குணம் மட்டும், நம் கட்டளைக்கு அடிபணிய மறுத்தது. அதுதான் அவனில் இருக்கும் ஆணவப் போக்காகும். (பார்க்க 2:34)
இறைவன், மனித படைப்பு, இயற்கை சக்திகள், மற்றும் மனித உடலில் இயங்கி வரும் இப்லீஸிய தன்மை – ஆகிய இவற்றைப் பற்றி நீங்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, ஏற்கனவே 2:30-38இல் சொன்னது போல, அவற்றின் உண்மை நிலையை உரையாடல் வடிவில் உவமானமாகச் சொல்லப்படுகிறது.
இவை யாவும் உண்மையிலேயே எங்கோ எப்போதோ நடந்ததாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இறைக் கட்டளைக்கு மாறுசெய்யும் சக்தி இந்த பிரபஞ்சத்தில் உள்ள எந்தப் படைப்பிற்கும் இல்லை (பார்க்க 16:50) மேலும் தனது செயல் திட்டத்தில் யாரையும் இறைவன் கூட்டாக்கிக் கொள்வதுமில்லை (18:25). இதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
قَالَ مَا مَنَعَكَ أَلَّا تَسْجُدَ إِذْ أَمَرْتُكَ ۖ قَالَ أَنَا۠ خَيْرٌۭ مِّنْهُ خَلَقْتَنِى مِن نَّارٍۢ وَخَلَقْتَهُۥ مِن طِينٍۢ.
7:12. “ஆதம் முன் சிரம்பணியும்படி நான் கட்டளையிட்ட போது, அடிபணியாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று இறைவன் இப்லீஸிடம் கேட்க, அவன், “நான் ஆதமை விட மேலானவன். என்னை நீ நெருப்பினால் படைத்தாய். ஆதமை மண்ணிலிருந்து படைத்தாய்” என்று பதிலளித்தான்.
கவனித்தீர்களா? நான் உயர்ந்தவன் மற்றவன் தாழ்ந்தவன் என்ற ஆணவப்போக்கு மனிதனிடத்தில் இருக்கத்தான் செய்கிறது. இதனால் தான் அவன் இறைக் கட்டளைக்கும் சிரம்பணிய மறுக்கிறான். (பார்க்க 11:27)
மேலும் இப்லீஸ் நெருப்பில் படைக்கப்பட்டதாக இங்கு சொல்லப்படுகிறது. நெருப்பு மனித கண்ணுக்குப் புலப்படும்போது, நெருப்பால் படைக்கப்பட்ட இப்லீஸ் புலப்படுவதில்லை. எனவேதான் இப்லீஸ் அல்லது ஷைத்தான் என்னும் சொல் மன இச்சையைக் குறிக்கும் சொல்லாகும். அது மனித நேயத்தையும் ஒழுக்க மாண்புகளையும் சுட்டுப் பொசுக்கும் தன்மை உடையது என்பதே உண்மை. எனவேதான் ஷைத்தானை நெருப்பிற்கு உவமானமாகக் கூறப்படுகிறது.
ஆக மனிதன் இறைக் கட்டளைக்கு மாறு செய்வது என்பது மன இச்சைக்கு கட்டுப்படுவதே ஆகும். இதன் விளைவாக என்ன நடக்கிறது என்பதையும் கவனியுங்கள்.
قَالَ فَٱهْبِطْ مِنْهَا فَمَا يَكُونُ لَكَ أَن تَتَكَبَّرَ فِيهَا فَٱخْرُجْ إِنَّكَ مِنَ ٱلصَّٰغِرِينَ.
7:13. “இதிலிருந்து நீ இறங்கி விடு. நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை. ஆதலால் நீ இதை விட்டு வெளியேறு. நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் ஒருவனாகி விட்டாய்” என்று அல்லாஹ் கூறினான்.
அதாவது அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்க மறுத்து மன இச்சையின்படி மனிதன் வாழ்ந்தால் பிரபஞ்ச இயற்கை சக்திகளைத் தன் வசப்படுத்தி அவற்றை முறையாகப் பயன்படுத்தி, மனித நேயத்தையும் ஒழுக்கத்தையும் கட்டிக் காத்து சிறப்பாக வாழும் தகுதியை இழந்து விடுகிறான். இதனால் அவனுக்குக் கிடைத்த உயர்ந்த சுவனத்திற்கு ஒப்பான வாழ்விலிருந்து இறங்கி கீழ்த்தரமான வாழ்க்கைக்கு தள்ளப்படுகிறான்.
قَالَ أَنظِرْنِىٓ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ.
7:14. “மனிதனில் விழிப்புணர்ச்சி ஏற்படும் கால கட்டம் வரையில் நீ எனக்கு அவகாசம் கொடுப்பாயாக” என இப்லீஸ் இறைவனிடம் வேண்டிக் கொண்டான்.
قَالَ إِنَّكَ مِنَ ٱلْمُنظَرِينَ.
7:15. “நிச்சயமாக உனக்கு அவகாசம் கிடைக்கும்” என்று அல்லாஹ் பதிலளித்தான். (பார்க்க 6:135)
அதாவது மனிதன் செய்யும் தீய செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் கால கட்டம் வரை இந்த ஆணவப் போக்கும், பெருமையடித்து இறைக் கட்டளைக்கு மாறு செய்வதும் நடந்து வரும். அதன் பின் தீய விளைவுகள் துயரங்களாக உருவெடுக்கும் போது, அந்த இப்லீஸ்க்கு அங்கு வேலை இருப்பதில்லை. துயரங்களை சந்திப்பது மனிதன்தான். (பார்க்க 14:22) மேலும் மனிதன் செய்யும் செயல்களுக்கு உடனே அல்லாஹ் தண்டிப்பதில்லை. அவன் திருந்துவதற்காகவே இந்தக் கால அவகாசமும் வாய்ப்பும் அளிக்கப்பட்டதாகும். (பார்க்க- 16:61))
قَالَ فَبِمَآ أَغْوَيْتَنِى لَأَقْعُدَنَّ لَهُمْ صِرَٰطَكَ ٱلْمُسْتَقِيمَ.
7:16. அதற்கு இப்லீஸ், “நீ என்னை வழிகெட்டவனாக வெளியேற்றி விட்டதால், நீ காட்டும் நேர்வழியில் செல்லாதவாறு நான் அவர்களைத் தடுத்து வருவேன்” என்று கூறினான்.
கவனித்தீர்களா? இறைக் கட்டளையை ஏற்காமல் போனது இப்லீஸ்தான். இதை உணராமல் அல்லாஹ் தன்னை வழிகெட்டவனாக ஆக்கிவிட்டதாக பழியை அல்லாஹ்வின் மீதே சுமத்துகிறான். (பார்க்க 6:148) இந்த இப்லீஸிய தன்மையும் மனிதனிடத்தில் காணப்படுகிறது. அதாவது காலமெல்லாம் தவறான செயல்களில் ஈடுபட்டு விட்டு, தீய விளைவுகள் அவன் முன் தோன்றும் போது, ஏன் தான் இறைவன் நம்மைக் கஷ்டப் படுத்தி என்னை சோதிக்கிறானோ! நான் என்ன பாவத்தைச் செய்தேன்? என்று புலம்பிக் கொண்டிருப்பான். இப்படி தன் தவறை உணராமல் துயரங்களுக்கு அல்லாஹ்வை காரணமாகக் காட்டுவது நியாயமா?
ثُمَّ لَءَاتِيَنَّهُم مِّنۢ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَٰنِهِمْ وَعَن شَمَآئِلِهِمْ ۖ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَٰكِرِينَ.
7:17. “பின் நிச்சயமாக நான் அவர்களின் முன்பாகவும், அவர்களின் பின்னாடியும் அவர்களின் வலப் பக்கத்திலிருந்தும் அவர்களின் இடப் பக்கத்திலிருந்தும் அவர்களை வழிகெடுத்துக் கொண்டிருப்பேன். நீ அவர்களில் பெரும்பாலானவர்களை நன்றி விசுவாசம் உள்ளவர்களாக காணமாட்டாய்” என்று கூறினான். (பார்க்க 6:117-122)
அதாவது மனிதன் தீய வழியில் செல்வதற்கு எல்லா புறத்திலிருந்தும் வழிகளும் வாய்ப்புகளும் உள்ளன. ஆக பாவம் செய்வதற்குப் பல வழிகள் உண்டு. ஆனால் நேர்வழி பெறுவதற்கு இறைவழிகாட்டுதல் என்ற ஒரே ஒரு வழிதான் உள்ளது.
قَالَ ٱخْرُجْ مِنْهَا مَذْءُومًۭا مَّدْحُورًۭا ۖ لَّمَن تَبِعَكَ مِنْهُمْ لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنكُمْ أَجْمَعِينَ.
7:18. அதற்கு இறைவன், “நீ நிந்திக்கப் பட்டவனாகவும் வெறுக்கப் பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறிவிடு. அவர்களில் உன்னைப் பின்பற்றிவரும் அனைவரையும் நரகத்தில் சேர்ப்பேன்” என்று கூறினான்.
அதாவது இறைவழிகாட்டுதலை நிராகரித்து தம் மன இச்சையின்படி வாழும் சமுதாயம் சுவன வாழ்வை இழப்பதோடு, நிந்தனைக்கும் வெறுப்புக்கும் ஆளாகி நரக வேதனைகள் கொண்ட சமுதாயமாக மாறிவிடும். மேலும் இத்தகையவர்கள் இவ்வுலகில் வாழும் தகுதியை இழந்து அழிவைத் தான் சந்திப்பார்கள்.
இப்படி ஒரு செயல் திட்டத்தின் அடிப்படையில் தான் மனிதனை இவ்வுலகில் முழு சுதந்திரத்தை அளித்து இன்புற்று வாழ இறைவன் வழி செய்தான்.
وَيَٰٓـَٔادَمُ ٱسْكُنْ أَنتَ وَزَوْجُكَ ٱلْجَنَّةَ فَكُلَا مِنْ حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ ٱلشَّجَرَةَ فَتَكُونَا مِنَ ٱلظَّٰلِمِينَ.
7:19. “ஓ மனித இனமே! நீ உன் மனைவி மக்களோடு இச்சுவர்க்கத்தில் குடியிருந்து உன் விருப்பம் போல் உண்டு மகிழு. ஆனால் உனக்குள் குலம் கோத்திரம் என்ற பிரிவினை மட்டும் வேண்டாம். அவ்வாறு நீ பிரிந்து போனால், காலப் போக்கில் உன் இனத்தில் போட்டியும் பகைமையும் வளர்ந்து, ஒருவர் மற்றவருக்கு எதிராக அநியாயம் செய்து கொள்வீர்கள். இப்படியாக உங்களுக்கு அளிக்கப்பட்ட சுவன வாழ்வு உங்களை விட்டுப் பறிபோய்விடும்” (பார்க்க-2:36) என்பதே இறைவனின் அறிவுரையாக இருந்தது.
ஆதி காலத்தில் மனிதன் ஒரே இனத்தவனாக இருந்து சிறப்பாக வாழ்ந்து வந்தான் (பார்க்க-2:213) ஆனால் காலப்போக்கில் மனித இனம் பெருகிப் பல்கிடவே அவனது தேவைகளும் அதிகரித்தன. அதன் அடிப்படையில் அவரவர் தேவைக்கு ஏற்ப தொழில்களும் விரிவடைந்தன. இப்படியாக தொழில் ரீதியாக ஜாதி, இனம் என்று உருவாயின. கூடவே சுயநலமும் அவனுள் வளர்ந்ததால் ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு வாழும்படி இறைவன் செய்த அறிவுரைகளைப் புறந்தள்ளிவிட்டான். (பார்க்க 7:161) இதுவே, ‘ஷஜர’ என்ற அரபி வார்த்தைக்கு குலம் கோத்திரம் என்று பொருளாகும். சண்டை சச்சரவு என்ற அர்த்தத்திலும் வருகிறது (பார்க்க 4:65)
فَوَسْوَسَ لَهُمَا ٱلشَّيْطَٰنُ لِيُبْدِىَ لَهُمَا مَا وُۥرِىَ عَنْهُمَا مِن سَوْءَٰتِهِمَا وَقَالَ مَا نَهَىٰكُمَا رَبُّكُمَا عَنْ هَٰذِهِ ٱلشَّجَرَةِ إِلَّآ أَن تَكُونَا مَلَكَيْنِ أَوْ تَكُونَا مِنَ ٱلْخَٰلِدِينَ.
7:20. ஆக ஆண் பெண் ஆகிய இரு பாலரிலும் வளர்ந்த மனஇச்சை என்கின்ற ஷைத்தானிய ஊசலாட்டங்களால், அவர்களுடைய தன்மானமும், வெட்கமும், மரியாதையும் பறிபோவதைப் பற்றியும் கவலைக் கொள்ளவில்லை. காரணம், “நீங்கள் இருவரும் இச்சுவனத்தில் சாகா வரம் பெற்று விளங்க நான் உங்களுக்கு வழி காட்டுகிறேன். அதுவே உங்கள் சந்ததிகள் மூலம் கிடைக்கின்ற குடும்பம், குலம், கோத்திரம் ஆகும். அவற்றின் மூலமாக நீங்கள் பெயரும் புகழும் பெற்று நிரந்தரமாக உயர்ந்த ஸ்தானத்தை அடைவீர்கள். (மேலும் பார்க்க 20:120) இப்படியொரு பெயரும் புகழும் நீங்கள் பெறுவதை அல்லாஹ் நாடவில்லை” என்று தவறான எண்ணங்களை ஷைத்தான் அவர்களுடைய உள்ளங்களில் பதித்து அவர்களை வழிதவறச் செய்தான்.
இந்த சுயநலப் போக்கு இன்றைக்கும் ஒவ்வொருவரிடமும் காணப்படுகின்ற தீய குணங்களாகும். அதாவது மற்றவர்களின் உரிமைகளை பறித்து தேவைக்கு அதிகமாகவே தன் மனைவி மக்களுக்காகச் சொத்து செல்வத்தைச் சேர்த்து வைப்பதுதான் வாழ்க்கையின் இலக்கு என்ற குணம். இவையெல்லாம் நன்மைக்கே என்றும் எண்ணிக் கொள்வான். (பார்க்க 3:14) இந்த சுயநலம் எல்லையைக் கடந்து பேரன் கொள்ளுப் பேரன் என்று நீண்டுக் கொண்டே போகும். இதே அடிப்படையில் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும் முயல்வான் (பார்க்க 20:120)
وَقَاسَمَهُمَآ إِنِّى لَكُمَا لَمِنَ ٱلنَّٰصِحِينَ.
7:21. மேலும் “நான் உங்கள் நலனுக்காகத்தான் இந்த அறிவுரைகளைச் செய்கிறேனே அன்றி எனக்கு ஒன்றும் பலனில்லை” என்று ஷைத்தான் சத்தியம் செய்து கூறினான்.
فَدَلَّىٰهُمَا بِغُرُورٍۢ ۚ فَلَمَّا ذَاقَا ٱلشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْءَٰتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِن وَرَقِ ٱلْجَنَّةِ ۖ وَنَادَىٰهُمَا رَبُّهُمَآ أَلَمْ أَنْهَكُمَا عَن تِلْكُمَا ٱلشَّجَرَةِ وَأَقُل لَّكُمَآ إِنَّ ٱلشَّيْطَٰنَ لَكُمَا عَدُوٌّۭ مُّبِينٌۭ.
7:22. அத்தகைய ஷைத்தானிய ஆசைகளின் உந்துதல்களே சரியானவை எனக் கருதி வாழ்வின் உயர் இலட்சியங்களை விட்டுவிட்டு, வெறும் பாலுணர்வுகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, தன் குடம்பத்தை பெருக்கவே வாழலானார்கள். இதனால் அவர்கள் தம் உயர் அந்தஸ்தை இழந்து, கீழ்த்தரமான நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
அவர்களுக்குள் வளர்ந்த குடும்பம், குலம், கோத்திரம் என்ற ஈர்ப்பில் மூழ்கி, அதைத் தக்க வைத்துக்கொள்ள அவர்களிடம் இருந்த வெட்கமும் தன்மானமும் அவர்களை விட்டு மறைந்து போயின. எனினும் இச்சுவன பூமியில் தம் வெட்க ஸ்தலங்களை மூடி மறைப்பதற்காக மட்டும் ஆடையைப் பயன் படுத்திக் கொண்டார்கள்.
இறைவன் அவர்களிடம், “உங்களுக்குள் குலம் கோத்திரம் என்ற பிரிவினை வேண்டாம் என்று நான் உங்கள் இருவரையும் தடுக்க வில்லையா? உங்களில் இருக்கும் ஷைத்தானிய உணர்வுகளுக்கு அடிபணிய வேண்டாம் என்றும் அது உங்கள் வாழ்வை நாசமாக்கி விடும் என்றும் நான் உங்களுக்குச் சொல்ல வில்லையா?” என்று கேட்டான்.
அதாவது மனிதனிடத்தில் பாலுணர்வு இருப்பது உண்மைதான். அது இனப் பெருக்கத்திற்கு அவசியமான ஒன்றுதான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் அதை மட்டும் நோக்கமாகக் கொண்டு மனிதன் வாழும் போது, அவனிடத்தில் இருக்கவேண்டிய மனித ஒழுக்க மாண்புகள் மறைந்து விடுகின்றன. இறைவழிகாட்டுதல் இதை வாழ்வின் ஒரு பகுதியாக வைக்க அறிவுறுத்துகிறது. எனவே பாலுணர்வை (Sex) மட்டும் மையமாக வைத்து வாழ்ந்தால் பிறர் நலம் பேணல் என்ற மனித ஒழுக்க மாண்புகள் நசுங்கிப் போகும்.
قَالَا رَبَّنَا ظَلَمْنَآ أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ ٱلْخَٰسِرِينَ.
7:23. “அதற்கு அவ்விரு பாலரும் எங்கள் இறைவனே! உன் பேச்சைக் கேட்காமல் எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்கள் மீது கிருபை செய்து எங்களுக்குப் பாதுகாப்பான வாழ்வு கிடைக்க வழி செய்யா விட்டால், நாங்கள் பெரும் நஷ்டவாளிகள் ஆகிவிடுவோம்” என்று கூறினார்கள்.
சிந்தனையாளர்களே கவனித்தீர்களா? துயரங்களுக்கு இறைவனைக் காரணமாக்குவது ஷைத்தானிய குணம் (7:18) தம் தவறை உணர்ந்து இறைவனிடம் அதற்குப் பரிகார வழியைத் தேடுவது மனித பண்பு. இதனால் அவனுடைய பிரச்சனைக்கு இறைவனிடம் தீர்வு கிடைத்து விடுகிறது.
قَالَ ٱهْبِطُوا۟ بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّۭ ۖ وَلَكُمْ فِى ٱلْأَرْضِ مُسْتَقَرٌّۭ وَمَتَٰعٌ إِلَىٰ حِينٍۢ.
7:24. நீங்கள் ஷைத்தானிய மனஇச்சைக்கு அடிபணிந்து வாழ்ந்ததால், உங்களுக்குக் கிடைத்திருந்த உயர் அந்தஸ்திலிருந்து கீழிறங்க வேண்டியதாயிற்று. உங்களுள் பிரிவினை ஏற்பட்டு விட்டது. இதனால் உங்களுள் பகைமையும் வளர்ந்துள்ளது. இருப்பினும் நம் வழிகாட்டுதலைப் பின்பற்றி ஒற்றுமையுடன் கூடி வாழ்ந்தால் உங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். (பார்க்க 7:35) இருப்பினும் நீங்கள் குறிப்பிட்ட காலம் வரையில் உலகில் சுகமாக வாழ எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. (பார்க்க 7:10)
قَالَ فِيهَا تَحْيَوْنَ وَفِيهَا تَمُوتُونَ وَمِنْهَا تُخْرَجُونَ.
7:25. “இப்படியாக இவ்வுலகில் சமுதாயங்களின் வாழ்வும் மரணமும் தொடரும். அதாவது இறைவனின் வாழ்வாதார வசதிகளை சீர்செய்தால் உயிரோட்டமுள்ள வாழ்வும், அதற்கு மாறு செய்தால் உயிரோட்டமில்லா நடைபிண வாழ்வும் கிடைக்கும். இந்தத் தவறிலிருந்து மீண்டுவிட்டால், புத்துயிர் பெற்ற சமுதாயமாக சிறந்த முறையில் வாழ்வீர்கள். மேலும் தனி நபர் வாழ்வு மரணத்திற்குப் பின்பும் தொடரும்” என்பதே இறைவனின் செயல்திட்டமாகும்.
يَٰبَنِىٓ ءَادَمَ قَدْ أَنزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًۭا يُوَٰرِى سَوْءَٰتِكُمْ وَرِيشًۭا ۖ وَلِبَاسُ ٱلتَّقْوَىٰ ذَٰلِكَ خَيْرٌۭ ۚ ذَٰلِكَ مِنْ ءَايَٰتِ ٱللَّهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ.
7:26. ஓ மனித இனமே! மெய்யாகவே நாம் உங்களுடைய மானத்தை மறைக்கவும் உங்களை அலங்காரமாக ஆக்கவும், வண்ணமிகு ஆடைகளை அணிய வழி செய்துள்ளோம். அத்துடன் அச்சம், மடம் நாணத்துடன் கூடிய “இறையச்சம்” என்கிற ஆடையையும் உங்களுக்குள் அளித்துள்ளோம். இவையாவும் உங்களின் சிறப்பான சுவன வாழ்க்கை தொடர உறுதுணையாக நிற்பவையாகும். நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இத்தகைய வழிகாட்டுதல்கள் அளிக்கப்படுகின்றன.
يَٰبَنِىٓ ءَادَمَ لَا يَفْتِنَنَّكُمُ ٱلشَّيْطَٰنُ كَمَآ أَخْرَجَ أَبَوَيْكُم مِّنَ ٱلْجَنَّةِ يَنزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوْءَٰتِهِمَآ ۗ إِنَّهُۥ يَرَىٰكُمْ هُوَ وَقَبِيلُهُۥ مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ ۗ إِنَّا جَعَلْنَا ٱلشَّيَٰطِينَ أَوْلِيَآءَ لِلَّذِينَ لَا يُؤْمِنُونَ.
7:27. ஓ மனித இனமே! உங்கள் முன்னோர்கள், தம் மன இச்சைக்கு அடிபணிந்து அவர்களை அலங்கரிக்கக் கூடிய ஆடைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து, ஒருவர் மற்றவரின் வெட்க ஸ்தலங்களைப் பார்த்து ரசிக்கும்படி செய்து கொண்டனர். அதனால் சமுதாயத்தில் ஆபாசங்கள் அதிகமாகி, அவர்களுடைய மானம் போவதைப் பற்றியும் கவலை கொள்ளாமல், தரம் கெட்டுப் போயினர். அதன் விளைவாக சமுதாயத்தில் பல பிரச்னைகள் ஏற்பட்டு தங்களுக்குக் கிடைத்திருந்த மன நிறைவான நிம்மதியான சுவன வாழ்வை தொலைத்து விட்டார்கள். அவர்களை போல் நீங்களும் மானக்கேடான செயல்களைச் செய்யாதீர்கள்.
நீங்கள் இந்த சொற்ப நேர சிற்றின்பத்திற்கு முக்கியமளித்து உங்கள் வாழ்கையை பிரச்சனைக்குரியதாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். இத்தகைய தீய பழக்கமுள்ள கூட்டம் இன்னமும் உள்ளது. அது உங்களை ஈர்த்துக் கொண்டே வருகிறது. இதை நீங்கள் உணர்வதில்லை. ஆக நம் வழிகாட்டுதலை ஏற்றுக் கொள்ளாதவர்களை, மனஇச்சை என்னும் ஷைத்தான் நண்பர்களாக ஆக்கிக் கொள்ளும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
وَإِذَا فَعَلُوا۟ فَٰحِشَةًۭ قَالُوا۟ وَجَدْنَا عَلَيْهَآ ءَابَآءَنَا وَٱللَّهُ أَمَرَنَا بِهَا ۗ قُلْ إِنَّ ٱللَّهَ لَا يَأْمُرُ بِٱلْفَحْشَآءِ ۖ أَتَقُولُونَ عَلَى ٱللَّهِ مَا لَا تَعْلَمُونَ.
7:28. இப்படிப்பட்ட பழக்கத்திற்கு ஆளானவர்களிடம், மானக்கேடான செயல்களைப் பற்றி எடுத்துரைத்து அவற்றைத் தடுக்க முயன்றால் அவர்கள்,“இதில் தவறு ஒன்றுமில்லை. ஏனெனில் இவை யாவும் காலம் காலமாக நடந்து வருபவையே. எங்கள் முன்னோர்களும் இத்தகைய செயல்களைச் செய்வதையே கண்டோம். அல்லாஹ்வும் இப்படிப்பட்ட செயல்களைச் செய்ய அனுமதி அளித்துள்ளான்” என்பார்கள்.
ஆனால் உண்மை அதுவல்ல. “மானக்கேடான செயல்களை செய்ய அல்லாஹ் ஒருபோதும் அனுமதி அளித்ததில்லை. உண்மை என்னவென்று அறியாமலே அல்லாஹ் கூறியதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்கிறீர்களா?” என்று அவர்களிடம் கேளுங்கள்.
இன்றைக்கும் சமுதாயத்தில் இருக்கும் ஆபாசங்களைப் பற்றி எடுத்துரைத்தால், பாலுணர்வு என்பது இயற்கையான உந்துதல்தானே. இவை யாவும் அல்லாஹ்வே உருவாக்கி இருக்கிறான். எனவே அதை அனுபவிப்பதில் தவறு ஒன்றுமில்லை என்ற பேச்சு நம் காதுகளில் விழாமல் இல்லை. இது முற்றிலும் தவறான கண்ணோட்டமாகும்.
قُلْ أَمَرَ رَبِّى بِٱلْقِسْطِ ۖ وَأَقِيمُوا۟ وُجُوهَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍۢ وَٱدْعُوهُ مُخْلِصِينَ لَهُ ٱلدِّينَ ۚ كَمَا بَدَأَكُمْ تَعُودُونَ.
7:29. ஆனால் அல்லாஹ்வின் வழிகாட்டுதல், “நல்லொழுக்கமும் நீதியும் கொண்ட சமுதாயத்தை உருவாக்கவே நாடுகிறது. மானக்கேடான செயல்கள் தொடர்ந்தால் எப்படி பண்புள்ள சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்? நீங்கள் கடைப்பிடிக்கும் வாழ்க்கை நெறிமுறைகளில் ஒவ்வொன்றிலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் பக்கமே முழு கவனமும் இருக்க வேண்டும். இறைவழிகாட்டுதலுக்கு மட்டுமே அடிபணிந்து செயல்படவேண்டும்".
"அல்லாஹ்வின் படைப்பு சட்டத்தின் படி உங்களைப் படைத்தது போல், நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அவன் நிர்ணயித்த இலக்கின் படியே விளைவுகளை ஏற்படுத்திச் செல்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் தெளிவாக எடுத்துரையுங்கள்.
فَرِيقًا هَدَىٰ وَفَرِيقًا حَقَّ عَلَيْهِمُ ٱلضَّلَٰلَةُ ۗ إِنَّهُمُ ٱتَّخَذُوا۟ ٱلشَّيَٰطِينَ أَوْلِيَآءَ مِن دُونِ ٱللَّهِ وَيَحْسَبُونَ أَنَّهُم مُّهْتَدُونَ.
7:30. ஆனால் சமுதாயத்தில் அனைவரும் இறை அறிவுரைகளை ஏற்று நடக்க முன் வருவதில்லை. இறை உபதேசங்களை ஏற்றுக்கொண்டு நேர்வழி பெற்று சிறப்பாக வாழும் சமுதாயம் ஒரு பக்கம். அல்லாஹ்வின் அறிவுரைகளுக்கு செவி சாய்க்காமல் தம் மனஇச்சையின் படி செயல்படுவோர் மறு புரம். இவர்கள் முன்னோர்களின் வழிமுறைகளைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றி வருவார்கள். அது மட்டுமின்றி தாம் நேர்வழியிலேயே இருப்பதாக இவர்கள் நினைத்துக்கொண்டு வாழ்வார்கள். இத்தகையோர்களே வழிகேட்டில் செல்பவர்கள்.
۞ يَٰبَنِىٓ ءَادَمَ خُذُوا۟ زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍۢ وَكُلُوا۟ وَٱشْرَبُوا۟ وَلَا تُسْرِفُوٓا۟ ۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلْمُسْرِفِينَ.
7:31. ஓ மனித இனமே! இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழச் சொல்வதால் அலங்காரப் பொருட்களுக்கும், அழகு சாதனங்களுக்கும் தடை விதிப்பதாக எண்ணிக் கொள்ளாதீர்கள். அவற்றை நீங்கள் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இறைவனுக்கு அடிபணிந்து நடப்பதைக் கொண்டே உங்களில் அழகும் பொலிவும் கூடி வரும். ஏனெனில் இறைவனுடைய ஒவ்வொரு கட்டளையின் நோக்கமும் சந்தோஷங்கள் நிறைந்த அழகான உலகை உருவாக்கத் தான். எனவே நீங்கள் தாராளமாக உண்ணலாம் பருகலாம். ஆனால் வீண் விரயம் மட்டும் செய்யக் கூடாது. வீண் விரயம் செய்பவர்களுக்கு இறைவனின் நேசம் கிடைப்பதில்லை.
قُلْ مَنْ حَرَّمَ زِينَةَ ٱللَّهِ ٱلَّتِىٓ أَخْرَجَ لِعِبَادِهِۦ وَٱلطَّيِّبَٰتِ مِنَ ٱلرِّزْقِ ۚ قُلْ هِىَ لِلَّذِينَ ءَامَنُوا۟ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا خَالِصَةًۭ يَوْمَ ٱلْقِيَٰمَةِ ۗ كَذَٰلِكَ نُفَصِّلُ ٱلْءَايَٰتِ لِقَوْمٍۢ يَعْلَمُونَ.
7:32. பொது மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள அழகு அலங்காரப் பொருட்களுக்கும், உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த தூய்மையான உணவு வகைகளுக்கும் தடை விதிப்பவன் யார் என்று நீ கேட்பீராக. இவை யாவும் மூஃமின்களுக்கும் மற்றவர்களுக்கும் பொதுவானவை ஆகும். யார் அதற்காக உழைக்கிறார்களோ, அவர்களுக்கு வாழ்வாதாரங்கள் யாவும் கிடைத்து வரும். (பார்க்க 17:18-20) ஆனால் மறுமை நாளில் இவை மூஃமின்களுக்கு மட்டும்தான் கிடைக்கும். இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக இதைத் தெளிவாக அறிவிக்கிறோம்.
قُلْ إِنَّمَا حَرَّمَ رَبِّىَ ٱلْفَوَٰحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَٱلْإِثْمَ وَٱلْبَغْىَ بِغَيْرِ ٱلْحَقِّ وَأَن تُشْرِكُوا۟ بِٱللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِۦ سُلْطَٰنًۭا وَأَن تَقُولُوا۟ عَلَى ٱللَّهِ مَا لَا تَعْلَمُونَ.
7:33. மாறாக அல்லாஹ்வின் புறத்திலிருந்து தடுக்கப்பட்டவை எவை என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
(1) மானக்கேடான செயல்கள் தடை செய்யப்படுகின்றன. அவை வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ இருப்பினும் சரியே. அவற்றை சமுதாயத்தில் நடைபெறாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
(2) மனித ஆற்றல்களைக் குன்றச் செய்யும் செயல்கள் தடை செய்யப்படுகின்றன. உதாரணத்திற்கு போதைப் பொருட்கள் சூதாட்டங்கள் ஆபாசங்கள் போன்றவை. (5:90)
(3) நியாயமான காரணமின்றி யாரையும் துன்பறுத்தக் கூடாது. உதாரணத்திற்கு தீர விசாரிக்காமல் சந்தேகத்தின் பேரில் துன்புறுத்துவது போன்றவை.
(4) பிற சக்திகளை அல்லாஹ்வுக்கு இணையாக்குவது தடை செய்யப்படுகிறது. இறைவனுடைய வழிகாட்டுதலுக்கு இணையாக வேறு வழிமுறைகளைப் பின்பற்றுவதோ அல்லது அவற்றை மக்களிடம் போதிப்பதோ கூடாது.
(5) மற்ற சக்திகளையும் அல்லாஹ்வுக்கு இணையாக கருதுவதும் தடை செய்யப்படுகிறது.
(6) நீங்கள் அறியாத விஷயங்களை அல்லாஹ் சொன்னதாகப் பொய்க் கூறுவது தடை செய்யப்படுகிறது. அல்லாஹ்விடமிருந்து இறக்கி அருளப்படாத விஷயங்களை அல்லாஹ் கூறுவதாக இட்டுக்கட்டிச் சொல்வது தடை விதிக்கப்படுகிறது.
ஆக இவையாவும் சமுதாயத்தில் நடைபெறாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இவற்றைத் தடைசெய்து சமுதாய மேம்பாட்டிற்காக உழைக்க வேண்டும். இது போன்ற விஷயங்களில் அலட்சியமாக இருந்து விட்டால் காலப்போக்கில் அவையே சமுதாயச் சீரழிவுக்கு காரணிகளாக அமைந்துவிடும்.
وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٌۭ ۖ فَإِذَا جَآءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةًۭ ۖ وَلَا يَسْتَقْدِمُونَ.
7:34. இப்படியாக உலகில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் அவர்களுடைய செயல்பாடுகளுக்கு ஏற்ப காலத் தவணை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தத் தவணை நெருங்கும் போது, அவர்களுடைய வளர்ச்சியோ வீழ்ச்சியோ நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி அவர்கள் முன் தோன்றும். அதில் இம்மியளவும் பிந்தவும் செய்யாது முந்தவும் செய்யாது.
அதாவது சமுதாயம் அல்லது நாடு வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டால், அவற்றின் பலன்கள் உடனே கிடைத்துவிடாது. அதன் வளர்ச்சியின் வேகம் அங்குள்ள மக்களின் ஒத்துழைப்பு மற்றும் உழைப்பின் வேகத்தையும் பொறுத்தே அமையும். இப்படியாக இந்தக் காலத் தவணை நிர்ணயிக்கபட்டுள்ளது. அதே போல ஒரு சமுதாயம் இறை வழிகாட்டுதலுக்கு எதிராகச் செயல்படும் போது, அதன் விளைவுகள் உடனே தோற்றத்திற்கு வருவதில்லை. அதுவும் நிர்ணயிக்கப்பட்ட காலத் தவணைக்குப் பின் தோற்றத்திற்கு வரும். அச்சமுதாய மக்கள் தீய விளைவுகளை நிச்சயமாக சந்தித்துக் கொள்வார்கள். இதை இறைவனைச் சந்திப்பது என்ற பொருளில் வருகிறது. ஆக இது ஒரு விதை செடியாகி மரமாகி காய்ப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலத் தவணை போன்றதே ஆகும் (பார்க்க 6:32, 16:61) இதை அடிப்படியாக வைத்து மனிதனுக்கு என்ன அறிவுரை செய்யப்படுகிறது என்பதை கவனியுங்கள்.
يَٰبَنِىٓ ءَادَمَ إِمَّا يَأْتِيَنَّكُمْ رُسُلٌۭ مِّنكُمْ يَقُصُّونَ عَلَيْكُمْ ءَايَٰتِى ۙ فَمَنِ ٱتَّقَىٰ وَأَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ.
7:35. ஓ மனித இனமே! இறைவழிகாட்டுதலை உங்களுக்குத் தெளிவாக விளக்கினால், அவற்றைச் செவி சாய்த்து அதன்படி நடந்து கொள்ளுங்கள். அவை யாவும் உங்களுடைய நன்மையைக் கருதியே சொல்லப்பட்டவை ஆகும். அவற்றை உள்ளச்சத்துடன் ஏற்று தம் தவறுகளிலிருந்து விலகிக் கொள்ளும் சமுதாயம் மன நிம்மதியுடன் கூடிய சந்தோஷமான வாழ்வை ஈட்டிக்கொள்ளும்.
وَٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا وَٱسْتَكْبَرُوا۟ عَنْهَآ أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلنَّارِ ۖ هُمْ فِيهَا خَٰلِدُونَ.
7:36. மாறாக இறைவழிகாட்டுதல்கள் எதுவும் தேவையில்லை என்று ஆணவத்துடன் நடந்து கொள்ளும் சமுதாயத்தில் தவறான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும். அதனால் அவர்களுடைய தீய செயல்களின் விளைவாக அவர்களுடைய ஆற்றல்கள் குன்றி நரக வேதனைகளுக்கு ஆளாவார்கள். இதை மக்களுக்கு எடுத்துரையுங்கள்.
فَمَنْ أَظْلَمُ مِمَّنِ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوْ كَذَّبَ بِـَٔايَٰتِهِۦٓ ۚ أُو۟لَٰٓئِكَ يَنَالُهُمْ نَصِيبُهُم مِّنَ ٱلْكِتَٰبِ ۖ حَتَّىٰٓ إِذَا جَآءَتْهُمْ رُسُلُنَا يَتَوَفَّوْنَهُمْ قَالُوٓا۟ أَيْنَ مَا كُنتُمْ تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ ۖ قَالُوا۟ ضَلُّوا۟ عَنَّا وَشَهِدُوا۟ عَلَىٰٓ أَنفُسِهِمْ أَنَّهُمْ كَانُوا۟ كَٰفِرِينَ.
7:37. அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்க மறுக்கும் சமுதாயத்தில் அல்லாஹ் சொன்னதாகப் பல கற்பனைக் கதைகளை எல்லாம் சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள். இதனால் அல்லாஹ் தங்களுக்காக எல்லா காரியங்களையும் நிறைவேற்றித் தருவான் என்ற எதிர்பார்ப்பில் மக்களும் இருந்து விடுவார்கள். (மேலும் பார்க்க 2:210)
ஆனால் அவர்களுக்குக் கிடைக்கின்ற வாழ்வாதாரங்கள் யாவும் ஏற்கனவே அல்லாஹ் நிர்ணயித்த விதிமுறைகளின் படி அவர்களுடைய உழைப்பிற்கு ஏற்பத்தான். எனவே கற்பனை மிதப்பில் வாழ்கின்ற சமுதாயங்கள் தங்கள் ஆற்றல்களை எல்லாம் இழந்து நடைபிணமான வாழ்விற்குத் தள்ளப்படும்.
அப்படியொரு கால கட்டத்தில், “அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டு வேறு வழிமுறைகளைக் கற்பித்து உங்களை வழிகெடுத்து வந்தார்களே அவர்கள் எங்கே?” என்று கேட்கப்படும். “அவர்கள் எல்லாம் எங்களை விட்டுக் காணாமல் போய் விட்டார்கள். நாங்கள் இறைவழிகாட்டுதலுக்கு மாற்றமாகச் செயல்பட்டது உண்மைதான். அதனால் இப்போது வேதனையைச் சந்திக்க வேண்டியுள்ளது” என்று அவர்கள் தமக்கு எதிராக தாமே சாட்சி கூறுவார்கள்.
قَالَ ٱدْخُلُوا۟ فِىٓ أُمَمٍۢ قَدْ خَلَتْ مِن قَبْلِكُم مِّنَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ فِى ٱلنَّارِ ۖ كُلَّمَا دَخَلَتْ أُمَّةٌۭ لَّعَنَتْ أُخْتَهَا ۖ حَتَّىٰٓ إِذَا ٱدَّارَكُوا۟ فِيهَا جَمِيعًۭا قَالَتْ أُخْرَىٰهُمْ لِأُولَىٰهُمْ رَبَّنَا هَٰٓؤُلَآءِ أَضَلُّونَا فَـَٔاتِهِمْ عَذَابًۭا ضِعْفًۭا مِّنَ ٱلنَّارِ ۖ قَالَ لِكُلٍّۢ ضِعْفٌۭ وَلَٰكِن لَّا تَعْلَمُونَ.
7:38. இப்படியாக உங்களுக்கு முன் நகர் புறங்களிலும் நாட்டுப் புறங்களிலும் வாழ்ந்த எத்தனையோ சமுதாயங்கள், வேதனைகள் மிக்க நரக வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டே இருக்கின்றன. இப்போது உங்களுடைய செயல்பாடுகளைக் கவனிக்கும் போது, நீங்களும் அந்தப் பட்டியலில் இடம் பெற நாடுவது போல் தெரிகிறது. அவ்வாறு வேதனைகள் வந்தடையும் போது, இவர்கள் தங்களை வழிகெடுத்த முந்தைய சமூகத்தாரைச் சபிப்பார்கள். இப்படி சபிப்பதால் ஆகப் போவது ஒன்றுமில்லை. இவர்கள் வேதனை அளிக்கும் நரகத்தில் நுழைந்தே தீருவர். இவர்களுக்குப் பின்வரும் சமுதாயத்தினர் இவர்களை சபிப்பார்கள். “எங்கள் இறைவனே! இவர்கள் தான் எங்களை வழிகெடுத்தவர்கள். ஆதலால் இவர்களுக்கு இருமடங்கு வேதனை கொடு” என்பார்கள். “உங்களில் ஒவ்வொருவருக்கும் இருமடங்கு வேதனைகள் நிச்சயம் உண்டு” என்று பதிலளிக்கப்படும். இதுதான் நடக்கப் போகும் உண்மையாகும். ஆனால் இப்போது அவற்றைப் பற்றி எடுத்துரைத்தால், அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
وَقَالَتْ أُولَىٰهُمْ لِأُخْرَىٰهُمْ فَمَا كَانَ لَكُمْ عَلَيْنَا مِن فَضْلٍۢ فَذُوقُوا۟ ٱلْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْسِبُونَ.
7:39. அது மட்டுமின்றி முந்தைய சமூகத்தவர்கள், தங்களைப் பின்பற்றி வந்தவர்களை நோக்கி, “எங்களை விட உங்களுக்கு எவ்வித சிறப்பும் இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் நீங்களாகவே முன்வந்து எங்களைப் பின்பற்றினீர்கள். நாங்கள் உங்களை வற்புறுத்தவில்லை. எனவே உங்களுக்கும் சமமான வேதனைகளே கிடைக்கவேண்டும்” என்று கூறுவார்கள்.
إِنَّ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا وَٱسْتَكْبَرُوا۟ عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَٰبُ ٱلسَّمَآءِ وَلَا يَدْخُلُونَ ٱلْجَنَّةَ حَتَّىٰ يَلِجَ ٱلْجَمَلُ فِى سَمِّ ٱلْخِيَاطِ ۚ وَكَذَٰلِكَ نَجْزِى ٱلْمُجْرِمِينَ.
7:40. இப்படியாக இறைவழிகாட்டுதல்கள் சரியில்லை என ஆணவத்துடன் வாழ்பவர்கள், மற்ற சமூகத்தவர்களின் கலாச்சாரத்தை கண்மூடித்தனமாகப் பின்பற்றி நடந்தால், அவர்களுக்கு வானுலக அருட்கொடைகள் ஒருபோதும் கிடைக்காது. (பார்க்க:5:66, 7:96) அதாவது இறைவேத அறிவுரைகளைப் பின்பற்றுவதால் கிடைக்கும் வானுலக நன்மைகள் இவர்களுக்கு ஒருபோதும் கிடைக்காது. உதாரணமாக ஊசியின் துளையில் ஒட்டகம் நுழைய முடியுமா? அப்படித்தான் தம் சொந்த வழிமுறைகளைப் பின்பற்றி சுவன வாழ்வை ஈட்டிக்கொள்ள ஒருபோதும் முடியாது. இதுவே இறை வழிகாட்டுதலைப் புறக்கணித்து தவறான வழியில் செல்பவர்களுக்கு ஏற்படும் இழப்புகளாகும்.
சிந்தனையாளர்களே! இதுதான் உலக மக்களுக்கு இந்தக் குர்ஆன் விடும் (challenge) அறைகூவலாகும். உலகில் சாந்தியும் சமாதானமும் ஏற்பட வேண்டும் என்றால் இந்தக் குர்ஆனின் அறிவுரைகளுக்கு உட்பட்டு வந்தே ஆக வேண்டும். இதை விட்டு வேறு எந்த வழிமுறையைக் கடைப்பிடித்தாலும் இறுதியில் தோல்வியையே காண்பீர்கள் (மேலும் பார்க்க 3:85)
لَهُم مِّن جَهَنَّمَ مِهَادٌۭ وَمِن فَوْقِهِمْ غَوَاشٍۢ ۚ وَكَذَٰلِكَ نَجْزِى ٱلظَّٰلِمِينَ.
7:41. இப்படிப்பட்டவர்களின் விரிப்புகளும் போர்வைகளும் நரக வேதனைகளே ஆகும். இதுதான் அவர்களுக்குக் கிடைக்கும் கூலியாகும்.
அதாவது பொழுது விடிந்தாலும் பிரச்சனைகள், படுத்துத் தூங்கினாலும் மன வேதனை. இப்படியாக நாள் முழுக்க பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.
وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَآ أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْجَنَّةِ ۖ هُمْ فِيهَا خَٰلِدُونَ.
7:42. இதற்கு மாறாக இறைவழிகாட்டுதலை ஏற்று அதன்படி சமுதாய மேம்பாட்டிற்காக ஆக்கப்பூர்வமான நலத் திட்டங்களைத் தீட்டி செயல்படும் சமுதாயங்களில், சந்தோஷங்கள் நிறைந்த அமைதியான சுவனத்திற்கு ஒப்பான வாழ்வு கிடைக்கும். அங்கும் சில கட்டுப்பாடுகளும், கடமைகளும், கடின உழைப்பும் இருக்கும். ஆனால் அதன் நோக்கமே அவர்களுள் சிறந்த செயலை செய்யக்கூடிய ஆற்றல்கள் வளரவேண்டும் என்பதற்காகத் தானே அன்றி, அவர்களைக் சிரமப்படுத்த அல்ல. (மேலும் பார்க்க 2:286, 6:153, 23:62) ஆக எதுவரையில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்களோ, அதுவரையில் சுவனத்திற்கு ஒப்பான வாழ்வு நீடிக்கும்.
وَنَزَعْنَا مَا فِى صُدُورِهِم مِّنْ غِلٍّۢ تَجْرِى مِن تَحْتِهِمُ ٱلْأَنْهَٰرُ ۖ وَقَالُوا۟ ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى هَدَىٰنَا لِهَٰذَا وَمَا كُنَّا لِنَهْتَدِىَ لَوْلَآ أَنْ هَدَىٰنَا ٱللَّهُ ۖ لَقَدْ جَآءَتْ رُسُلُ رَبِّنَا بِٱلْحَقِّ ۖ وَنُودُوٓا۟ أَن تِلْكُمُ ٱلْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ.
7:43. இத்தகைய சிறந்த செயல்களால் உங்களிடையே இருந்து வந்த குரோத மனப்பான்மையும் பகையும் குறைந்து, பாசப் பிணைப்பு ஏற்படும் (பார்க்க 8:63) சகோதரத்துவமும் வளரும் (பார்க்க 15:47) இப்படியாக எழில் மிக்க சிறப்பான சமுதாயம் உருவாகும். அத்தகைய சமுதாயங்களில் பொருளாதார வசதிகள் வற்றாத ஜீவநதி போல் பெருகி வரும். இத்தகைய சிறப்பான பாக்கியத்தைப் பெறக்கூடிய வழிகாட்டுதலை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே போற்றுதலும் பாராட்டுகள் அனைத்தும் என்பதாக எல்லாப் புறங்களிலும் ஒலித்த வண்ணமிருக்கும். அல்லாஹ் எங்களுக்கு நேர்வழி காட்டிரா விட்டால், நாங்கள் ஒருபோதும் நேர்வழி பெற்று சிறப்பான வாழ்வைப் பெற்றிருக்கவே மாட்டோம். நிச்சயமாக இறைத்தூதர்கள் மனிதனின் சிறப்பான வாழ்விற்கு மிகச் சரியான பாதையைத் தான் காட்டிச் சென்றார்கள்” என்று அங்கு எப்போதும் போற்றுதலும் பாராட்டும் ஒலித்த வண்ணமிருக்கும். அதற்குப் பதிலளிக்கும் வகையில், “நீங்கள் செய்து வரும் ஆற்றல்மிக்க ஆக்கப்பூர்வமான சிறந்த செயல்களின் பலனாகவே, இத்தகைய சுவன வாழ்விற்கு வாரிசுகளாக ஆக்கப்பட்டிருக்கிறீர்கள்” என்று இறைவனின் செய்தியாக இருக்கும்
கவனித்தீர்களா? சிறப்பாக உழைப்பவர்களுக்கே சுவன வாழ்வு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதை விட்டுவிட்டு வெறும் வார்த்தை ஜாலங்களால் இறைவனை புகழ் பாடிக்கொண்டு இருப்பதால் சுவன வாழ்வு கிடைத்திடுமா? மேலும் சுவர்க்கத்திற்கு வாரிசுதாரர்கள் ஆவார்கள் என்கிறது. அதாவது உரிமையோடு சுவர்க்கத்திற்குச் செல்வது என்பது அதன் பொருளாகும். யாருடைய பரிந்துரையின் பேரிலோ அல்லது தானமாகவோ தரப்படுகின்ற ஒன்றல்ல என்பது புலனாகிறது.
وَنَادَىٰٓ أَصْحَٰبُ ٱلْجَنَّةِ أَصْحَٰبَ ٱلنَّارِ أَن قَدْ وَجَدْنَا مَا وَعَدَنَا رَبُّنَا حَقًّۭا فَهَلْ وَجَدتُّم مَّا وَعَدَ رَبُّكُمْ حَقًّۭا ۖ قَالُوا۟ نَعَمْ ۚ فَأَذَّنَ مُؤَذِّنٌۢ بَيْنَهُمْ أَن لَّعْنَةُ ٱللَّهِ عَلَى ٱلظَّٰلِمِينَ.
7:44. மேலும் அச்சுவனவாசிகள் நரகவாசிகளை அழைத்து, “எங்கள் இறைவன் அளித்த வாக்குறுதியின் படி சந்தோஷமான சுக வாழ்வு எங்களுக்குக் கிடைத்திருப்பது உண்மையென ஆகிவிட்டது. அதே போல் இறைவழிகாட்டுதலுக்கு எதிராகச் செயல்பட்டால் நரக வேதனைகளுக்கு ஆளாவீர்கள் என்று சொல்லப்பட்டதும் உண்மையே என ஆகிவிட்டதா?” என்று கேட்பார்கள். அதற்கவர்கள், “ஆம் அது உண்மையாகி விட்டது” என்பார்கள். இதற்கிடையில் “அக்கிரமச் செயல்களில் ஈடுபடுபவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளை இழந்து அழிந்து போவதும் உண்மையே” என்ற இறைச் செய்தியும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
சிந்தனையாளர்களே! இன்றைய உலகமே இந்த கூற்றுக்கு சாட்சியாக இருக்கின்றது. உலகப் படைப்புகளின் ஆய்வுகளை மேற்கொண்டு, ஆற்றல் மிக்க செயல்களைச் செய்யும் நாடுகள் சீரும் சிறப்புமாக வாழ்கின்றன. இருந்தும் அங்கு இறைவழிகாட்டுதலைப் பின்பற்றாததால் தவறான வழியில் செல்கிறார்கள். அதனால் அங்கு பிரச்சனைகள் தொடர்கின்றன. மறுபக்கம் கற்பனை உலகில் வாழும் சமுதாயங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்து துயரங்களை அனுபவிக்கின்றன. இறைவழிகாட்டுதலுடன் கூடிய சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள குர்ஆன் வலியுறுத்துகிறது. அதைப் பற்றி யாரும் எடுத்துரைப்பதும் இல்லை. கவலைப்படுவதும் இல்லை.
ٱلَّذِينَ يَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ وَيَبْغُونَهَا عِوَجًۭا وَهُم بِٱلْءَاخِرَةِ كَٰفِرُونَ.
7:45. அவர்கள் அல்லாஹ் காட்டிய வழியில் சிறந்த சமுதாயம் உருவாவதைத் தடுத்து வருவதோடு, இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பதில் உண்மைக்கு முரணாகவும் சொல்லி வருகின்றனர். தாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அதற்கேற்ற இறுதி பின் விளைவுகள் ஏற்படும் என்பதை ஏற்றுக் கொள்ளாததோடு அவற்றைப் பொய்ப்பித்தும் வருகின்றனர்.
وَبَيْنَهُمَا حِجَابٌۭ ۚ وَعَلَى ٱلْأَعْرَافِ رِجَالٌۭ يَعْرِفُونَ كُلًّۢا بِسِيمَىٰهُمْ ۚ وَنَادَوْا۟ أَصْحَٰبَ ٱلْجَنَّةِ أَن سَلَٰمٌ عَلَيْكُمْ ۚ لَمْ يَدْخُلُوهَا وَهُمْ يَطْمَعُونَ.
7:46. இதுதான் சுவனவாசிகளுக்கும் நரகவாசிகளுக்கும் இடையே உள்ள வேற்றுமைகளாகும். இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொள்பவர்களுக்கும், மறுப்பவர்களுக்கும் இடையே அவர்களுடைய உள்ளங்களில் திரை இருக்கும். (மேலும் பார்க்க- 57:13-14) இது அவர்களை இணைய விடாது. ஆக சுவனவாசிகள் தம் ஆற்றல்மிக்க நன்னடத்தை கொண்டு, உயர் பதவிகளின் சிகரத்தில் இருப்பார்கள். மக்களிடையே உள்ள செயல்பாடுகள் மற்றும் அவர்களின் நடத்தையை வைத்து நல்லவர்கள் யார் தீயவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு கொள்வார்கள். சுவர்க்க பூமியாகத் திகழும் சமுதாயத்தில் நுழைய தகுதி உடைய நல்லவர்களிடம், “இன்னும் ஆவல் எதற்கு? நீங்கள் அமைதிப் பூங்காவாகத் திகழும் இச்சுவர்க்கத்தில் மனநிறைவோடு நுழையுங்கள்” என்று அழைப்பார்கள்.
۞ وَإِذَا صُرِفَتْ أَبْصَٰرُهُمْ تِلْقَآءَ أَصْحَٰبِ ٱلنَّارِ قَالُوا۟ رَبَّنَا لَا تَجْعَلْنَا مَعَ ٱلْقَوْمِ ٱلظَّٰلِمِينَ.
7:47. அதே சமயம் நரகவாசிகளை அவர்கள் கவனிக்கும் போது, “எங்களை பரிபாலிப்பவனே! இத்தகைய மோசமான சமூகத்தவர்களுடன் இணைந்து வாழும்படி எங்களை செய்துவிடாதே” என்று கூறுவார்கள்.
وَنَادَىٰٓ أَصْحَٰبُ ٱلْأَعْرَافِ رِجَالًۭا يَعْرِفُونَهُم بِسِيمَىٰهُمْ قَالُوا۟ مَآ أَغْنَىٰ عَنكُمْ جَمْعُكُمْ وَمَا كُنتُمْ تَسْتَكْبِرُونَ.
7:48. மேலும் உயர் பதவியின் சிகரத்தில் இருப்பவர்கள், தவறான பாதையில் செல்பவர்களை அடையாளங் கண்டு அவர்களை அழைத்து, “நீங்கள் இதுவரையில் சேமித்து வைத்த செல்வங்களோ, நீங்கள் ஆணவத்துடன் கட்டிக் காத்து வந்த பதவிகளோ இப்போது எந்தப் பலனையும் அளிக்கவில்லையே” என்று கேட்பார்கள்.
أَهَٰٓؤُلَآءِ ٱلَّذِينَ أَقْسَمْتُمْ لَا يَنَالُهُمُ ٱللَّهُ بِرَحْمَةٍ ۚ ٱدْخُلُوا۟ ٱلْجَنَّةَ لَا خَوْفٌ عَلَيْكُمْ وَلَآ أَنتُمْ تَحْزَنُونَ.
7:49. நரகவாசிகளை நோக்கி,“ இவர்களைத் தானே அல்லாஹ் ஒருபோதும் அருள் புரிய மாட்டான் என்று உறுதியாகக் கூறி வந்தீர்கள்?” என்று கூறி, சுவனத்திற்கு செல்ல தகுதி உடையவர்களைப் பார்த்து, “நீங்கள் சுவனபதியில் நுழையுங்கள். இனி எவ்வித துயரமோ அச்சமோ இல்லாத சுகமான வாழ்வைப் பெறுவீர்கள்” என்று கூறுவார்கள்.
وَنَادَىٰٓ أَصْحَٰبُ ٱلنَّارِ أَصْحَٰبَ ٱلْجَنَّةِ أَنْ أَفِيضُوا۟ عَلَيْنَا مِنَ ٱلْمَآءِ أَوْ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ ۚ قَالُوٓا۟ إِنَّ ٱللَّهَ حَرَّمَهُمَا عَلَى ٱلْكَٰفِرِينَ.
7:50. நரகவாசிகளின் நிலையோ அந்தோ பரிதாபம்! அவர்கள் சுவர்க்கவாசிகளை அழைத்து அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றில் குடிக்க தண்ணீரோ அல்லது உண்ண உணவோ இருந்தால் அதில் கொஞ்சமேனும் எங்களுக்குக் கொடுங்கள் என்று கெஞ்சுவார்கள். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் வழிகாட்டுதலை நிராகரித்து தீய செயல்களில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு இதில் எதுவும் உரிமையில்லை” என்று கூறிவிடுவார்கள்.
ٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ دِينَهُمْ لَهْوًۭا وَلَعِبًۭا وَغَرَّتْهُمُ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا ۚ فَٱلْيَوْمَ نَنسَىٰهُمْ كَمَا نَسُوا۟ لِقَآءَ يَوْمِهِمْ هَٰذَا وَمَا كَانُوا۟ بِـَٔايَٰتِنَا يَجْحَدُونَ.
7:51. ஏனென்றால் அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலில் சீரிய சிந்தனை செலுத்துவதை விட்டுவிட்டு, அவற்றை வீண் விளையாட்டாக எடுத்துக் கொண்டார்கள். மேலும் அவர்களுக்குக் கிடைத்திருந்த தற்காலிக சொகுசு வாழ்வின் ஈர்ப்பில் மயங்கிக் கிடந்தனர். அவர்கள் செய்வது நல்லதா கெட்டதா என்பதைப் பற்றியும் சிந்திக்க முடியவில்லை. அதனால் இறைவன் நிர்ணயித்துள்ள “மனித செயல்களின் இறுதி விளைவுகளைப்” பற்றியும் கவலைக் கொள்ளவில்லை. எனவே அவர்களுடைய இன்றைய இழிநிலையைப் பற்றி இறைவன் கவலைப்பட போவதில்லை.
وَلَقَدْ جِئْنَٰهُم بِكِتَٰبٍۢ فَصَّلْنَٰهُ عَلَىٰ عِلْمٍ هُدًۭى وَرَحْمَةًۭ لِّقَوْمٍۢ يُؤْمِنُونَ.
7:52. உண்மை என்னவென்றால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வேத அறிவுரைகள் கண்மூடித்தனமான ஒன்றல்ல. அதில் சொல்லப்பட்ட ஒவ்வொன்றும் தெளிவான ஞானத்தின் (Logical & wise approach) அடிப்படையைக் கொண்டதாகும். அது உலக மக்களின் சிறப்பான வாழ்விற்கு மிகச் சரியான பாதையைக் காட்டுவதாக உள்ளது. எனவே அதைப் பின்பற்றினால் எல்லா வகையான அருட்கொடைகளும் கிடைப்பது உறுதி.
هَلْ يَنظُرُونَ إِلَّا تَأْوِيلَهُۥ ۚ يَوْمَ يَأْتِى تَأْوِيلُهُۥ يَقُولُ ٱلَّذِينَ نَسُوهُ مِن قَبْلُ قَدْ جَآءَتْ رُسُلُ رَبِّنَا بِٱلْحَقِّ فَهَل لَّنَا مِن شُفَعَآءَ فَيَشْفَعُوا۟ لَنَآ أَوْ نُرَدُّ فَنَعْمَلَ غَيْرَ ٱلَّذِى كُنَّا نَعْمَلُ ۚ قَدْ خَسِرُوٓا۟ أَنفُسَهُمْ وَضَلَّ عَنْهُم مَّا كَانُوا۟ يَفْتَرُونَ.
7:53. ஆனால் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுப்போர் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை. எல்லாம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்ற அசட்டு தைரியத்தில் இருக்கிறார்கள். எனவே “மனித செயலுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற நியதியின்படி அந்த வேதனைகள் வந்தடையும் கால கட்டத்தில் அவர்களுக்கு வந்த முன் எச்சரிக்கைப் பற்றிய விழிப்புணர்வு வரும். அப்போது அவர்கள், “எங்கள் இறைத் தூதர்கள் சொன்னவை யாவும் உண்மையாகி விட்டதே. இப்போது இந்த வேதனை களிலிருந்து காப்பாற்ற யாராவது இருக்கிறார்களா? இருந்தால் நாங்கள் திருந்தி வாழ மீண்டும் எங்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கும்படி இறைவனிடம் பரிந்து பேசட்டும். அப்படி ஒரு வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தால், நாங்கள் செய்து கொண்டிருந்த தீய செயல்களை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமான நற்செயல்களையே செய்வோம்” என்று ஏங்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய இந்த நிலைமைக்கு அவர்களே பொறுப்பாளி ஆகிறார்கள். ஆனால் அவர்களுடைய ஏக்கம் ஒரு பலனையும் தராது. எனவே அவர்களுக்கு அப்படியொரு வாய்ப்பு மீண்டும் கிடைக்காது.
இதற்குக் காரணம் அல்லாஹ்வின் படைப்புகளையும் அவை செயல்படுவதைப் பற்றியும் சிந்தித்துப் பாருங்கள். எல்லாமே தத்தம் இலக்கை நோக்கி முன்னேறிச் செல்கின்றன. அங்கு எதுவும் தவறு செய்து விட்டு மீண்டும் சரிசெய்து கொண்டு சரியாகச் செயல்படலாம் என்ற பேச்சிற்கே இடமிருப்பதில்லை. எனவே மனித செயல்களும் தத்தம் இலக்கை நோக்கியே செல்கின்றன. அதன்படி நற்செயல்களோ, தீய செயல்களோ அதனதன் விளைவுகளை ஏற்படுத்தியே தீரும்.
إِنَّ رَبَّكُمُ ٱللَّهُ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ فِى سِتَّةِ أَيَّامٍۢ ثُمَّ ٱسْتَوَىٰ عَلَى ٱلْعَرْشِ يُغْشِى ٱلَّيْلَ ٱلنَّهَارَ يَطْلُبُهُۥ حَثِيثًۭا وَٱلشَّمْسَ وَٱلْقَمَرَ وَٱلنُّجُومَ مُسَخَّرَٰتٍۭ بِأَمْرِهِۦٓ ۗ أَلَا لَهُ ٱلْخَلْقُ وَٱلْأَمْرُ ۗ تَبَارَكَ ٱللَّهُ رَبُّ ٱلْعَٰلَمِينَ.
7:54. பிரபஞ்சம் மற்றும் பூமியின் படைப்பைப் பற்றிக் கவனித்துப் பாருங்கள். அவற்றை எல்லாம் ஆறு காலக் கட்டங்களில் படைத்து அவற்றை கட்டுக் கோப்பாக செயல்பட வைத்துள்ளான். அத்தகைய கட்டுப்பாட்டினால் தான் இரவு பகல் என இவ்வுலகில் மாறிமாறி வருகின்றன. மேலும் சூரியன், சந்திரன் மற்றும் எண்ணற்ற நட்சத்திரங்கள் அல்லாஹ் நிர்ணயித்துள்ள சுற்றுப் பாதையில் நீந்திச் செல்கின்றன. (பார்க்க 36:37-40) இதனால் இரவு பகல் என்ற நாட்களின் கணக்கோடு வாரம், மாதம், வருடம், என்ற கால நிர்ணயங்களும் மிகத் துல்லியமாகக் கிடைக்கின்றன. ஏனெனில் இவை எல்லாம் அல்லாஹ்வின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படுபவை ஆகும். அதே சமயத்தில் சூரியன், சந்திரன் மற்றும் எண்ணற்ற நட்சத்திரங்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் படியாகவும் அல்லாஹ் படைத்துள்ளான். ஆக இந்தப் படைப்புகள் யாவும் ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்காகவே படைக்கப்பட்டுள்ளன. இப்படியாக அகிலங்களைப் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனாகிய அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் அளவிலா விசாலத்தன்மை கொண்டவையாக உள்ளன.
எனவே அவை எல்லாம் ஒரு திசையில் முன்நோக்கிச் செல்லும் போது, பின்னுக்குத் தள்ளப்படுவது என்பது அல்லாஹ்வின் செயல்திட்டத்தில் இல்லை. எனவே மனிதனும் அடுத்த கட்ட வாழ்வை நோக்கிச் பயணிப்பவனாகவே இருக்கின்றான். இவ்வுலகில் வாழ மீண்டும் ஒரு வாய்ப்பு என்ற பேச்சிற்கே இடமிருப்பதில்லை.
பிரபஞ்சம் ஆறு நாட்களில் படைக்கப்பட்டதா? சிந்தனையாளர்களே! இந்த வாசகத்தில் வானங்கள் மற்றும் பூமி ஆறு நாட்களில் படைக்கப்பட்டுள்ளதாக மொழி பெயர்க்கப்படுகிறது. அதாவது அவற்றைப் படைப்பதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நேரம் ஆறு நாட்கள் என்று பொருள் கொள்கிறார்கள். இது முற்றிலும் தவறான கருத்தாகும்.
ஏனெனில் பிரபஞ்சப் படைப்புகளில் மாற்றங்கள் ஏற்படுவதற்கே எடுத்துக் கொள்ளப்படும் கால அளவு ஐம்பது ஐம்பதாயிரம் வருடங்கள் என்று சொல்லப்படுகிறது. (பார்க்க 71:4) எனவே இந்தப் படைப்புகளின் கால அளவு பல கோடி வருடங்களாகவும் இருக்கலாம். எது எப்படி இருப்பினும் இந்த வாசகத்தில் வரும் ஆறு நாட்கள் என்பதை ஆறு கால கட்டங்கள் என்பதே உணமையாகும்.
மேலும் இந்த ஆறு கால கட்டங்கள் என்பது இரவு பகல் என்னும் இரண்டு கால கட்டங்களும், கோடைக் காலம், இலையுதிர் காலம், மழைக் காலம், இளவேனிற் காலம் என நான்கு பருவ காலங்களும் சேர்ந்து ஆறு கால கட்டங்களில் உலகம் செயல்படுவதாகவும் கணக்கிட்டு கூறலாம்.
எனவே தற்சமயம் நம்மிடமுள்ள அறிவைக் கொண்டு இதைத்தான் தெரிந்து கொள்ள முடிகிறது. (மேலும் பார்க்க 41:9-10) விஞ்ஞான ஆய்வுகளின் மூலம் மேற்கொண்டு உண்மைகள் தெரிய வரும்.
ٱدْعُوا۟ رَبَّكُمْ تَضَرُّعًۭا وَخُفْيَةً ۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلْمُعْتَدِينَ.
7:55. எனவே இறைவனின் பிரம்மாண்டமான பரிபாலன அமைப்புச் சட்டங்களை அல்லும் பகலும் முழு ஈடுபாடுடன் ஆய்வு செய்யுங்கள். அவற்றிலிருந்து கிடைப்பவற்றை அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படி பயன்படுத்துங்கள். அதில் நீங்கள் வரம்பு மீறாதீர்கள். வரம்பு மீறுபவர்களுக்கு அல்லாஹ்வின் நேசம் கிடைக்காது.
وَلَا تُفْسِدُوا۟ فِى ٱلْأَرْضِ بَعْدَ إِصْلَٰحِهَا وَٱدْعُوهُ خَوْفًۭا وَطَمَعًا ۚ إِنَّ رَحْمَتَ ٱللَّهِ قَرِيبٌۭ مِّنَ ٱلْمُحْسِنِينَ.
7:56. இப்படியாக இறைவன் புறத்திலிருந்து கிடைக்கின்ற வாழ்வாதாரங்களை அனைவருக்கும் சமச் சீராக போய்ச் சேரும்படி ஏற்பாடு செய்து வாருங்கள். அத்தகைய சமச் சீர்நிலை ஏற்பட்ட பின் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி சமுதாயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள். இறை உபதேசங்களுக்கு மாறு செய்வதால் ஏற்படும் விளைவுகளுக்கு அஞ்சி, முழு கவனத்துடன் துரிதமாக செயல்பட்டு இறைவனிடம் உதவியை நாடுங்கள். ஆக்கப்பூர்வமான நற்செயல்களைச் செய்வோருக்கு அல்லாஹ்வின் உதவி விரைந்து வருவது உறுதி.
ஒரு பக்கம் உங்கள் முயற்சியும் உழைப்புகளும் தொடர, மறுபக்கம் அல்லாஹ்வின் பரிபாலன அமைப்பு முறை தன் பணியைத் தொடர்ந்து செய்து உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
وَهُوَ ٱلَّذِى يُرْسِلُ ٱلرِّيَٰحَ بُشْرًۢا بَيْنَ يَدَىْ رَحْمَتِهِۦ ۖ حَتَّىٰٓ إِذَآ أَقَلَّتْ سَحَابًۭا ثِقَالًۭا سُقْنَٰهُ لِبَلَدٍۢ مَّيِّتٍۢ فَأَنزَلْنَا بِهِ ٱلْمَآءَ فَأَخْرَجْنَا بِهِۦ مِن كُلِّ ٱلثَّمَرَٰتِ ۚ كَذَٰلِكَ نُخْرِجُ ٱلْمَوْتَىٰ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ.
7:57. அந்த வகையில் இறைவனின் அருட்கொடையாக இருக்கும் தென்றல் காற்றை மாறி மாறி வரச் செய்து, அதைக் கொண்டு கனத்த மேகங்களை உருவாக்கி, அவை அடர்த்தியானதும் உயிரற்று வரண்டு கிடக்கின்ற பூமியின் பக்கம் ஒடச் செய்து, மழை பொழியச் செய்கின்றான். பின்னர் அப்பூமி உயிர் பெற்று அதைக் கொண்டு எல்லா வகையான தாவரங்களும் கனிவகைகளும் விளைகிறது.
அது போலவே எல்லா ஆற்றல்களையும் இழந்து உயிரற்ற நிலையில் இருக்கும் சமுதாயத்தை இந்தக் குர்ஆனைக் கொண்டு உயிர்பெறச் செய்கின்றான். இவற்றை எல்லாம் சிந்தித்து நல்லுணர்வு பெறும் பொருட்டு இவ்வாறு இறைவன் தெளிவாக்குகின்றான்.
وَٱلْبَلَدُ ٱلطَّيِّبُ يَخْرُجُ نَبَاتُهُۥ بِإِذْنِ رَبِّهِۦ ۖ وَٱلَّذِى خَبُثَ لَا يَخْرُجُ إِلَّا نَكِدًۭا ۚ كَذَٰلِكَ نُصَرِّفُ ٱلْءَايَٰتِ لِقَوْمٍۢ يَشْكُرُونَ.
7:58. மேலும் மழை நீரைக் கொண்டு பூமி செழுப்பாகி, இறைவனின் நியதிப்படி தாவரங்கள் சிறப்பாக வளர்ந்து, நல்ல விளைச்சலைத் தருகிறது. ஆனால் மழை நீரைத் தக்க வைத்துக் கொள்ளும் சக்தி பெறாத நிலத்தில் விளைச்சல்கள் மிக சொற்பமாகவே இருக்கும். அது போல இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள சமுதாயம், அவற்றை ஏற்று அதன்படி ஆக்கப்பூர்வமான நற்செயல்களைச் செய்து, வளம் மிக்க நாடாக உருவாகும். அப்படிப்பட்ட ஆற்றல் இல்லாத சமுதாயம் குறைவான பலன்களையே பெறும். ஆக நன்றி விசுவாசத்துடன் நடந்து கொள்ள முன்வரும் சமுதாயங்களுக்கு இவ்வாறே இறைவழிகாட்டுதல் தெளிவாக்கப்படுகிறது.
இதே அடிப்படையில்தான் ஆதி காலம் முதல் இன்று வரையில் உலகிலுள்ள பல தரப்பட்ட சமுதாயங்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் ஏற்பட்டு வந்தன. உலக வரலாறே இதற்கு ஆதாரமாக இருக்கிறது. அந்த வகையில்
لَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِۦ فَقَالَ يَٰقَوْمِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُۥٓ إِنِّىٓ أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍۢ.
7:59. நாம் நூஹ் நபியை, அவருடைய சமுதாயத்தினரிடம் அனுப்பி வைத்தோம். அவர் தம் சமூகத்தாரிடம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு அடிபணிந்து வாழும்படி உபதேசித்து வந்தார். அல்லாஹ்வைத் தவிர வேறு யாருடைய வழிகாட்டுதலுக்கும் அடிபணியாதீர்கள் என்று அவர்களுக்கு அறிவுருத்தி வந்தார். மேலும் அவர்களுடைய தவறான செயல்களால் ஏற்படும் வேதனை மிக்க கால கட்டத்தைப் பற்றி முன் எச்சரிக்கை செய்து வந்தார்.
قَالَ ٱلْمَلَأُ مِن قَوْمِهِۦٓ إِنَّا لَنَرَىٰكَ فِى ضَلَٰلٍۢ مُّبِينٍۢ.
7:60. ஆனால் அவருடைய உபதேசங்களை கேள்வியுற்ற சமுதாயத் தலைவர்கள், இறைவனின் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. மாறாக அவர் வெளிப்படையான வழிகேட்டில் இருப்பதாக அவர்கள் குற்றம் சுமத்தினார்கள்.
قَالَ يَٰقَوْمِ لَيْسَ بِى ضَلَٰلَةٌۭ وَلَٰكِنِّى رَسُولٌۭ مِّن رَّبِّ ٱلْعَٰلَمِينَ.
7:61. அதற்கு நூஹ் நபி, தம்மிடம் எந்த வழிகேடும் இல்லை என்றும், அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் வழிகாட்டுதலை எடுத்துரைப்பவனாகவே இருப்பதாகவும் தம் சமூகத்தாரிடம் தொடர்ந்து பலமுறை வலியுறுத்தி வந்தார்.
أُبَلِّغُكُمْ رِسَٰلَٰتِ رَبِّى وَأَنصَحُ لَكُمْ وَأَعْلَمُ مِنَ ٱللَّهِ مَا لَا تَعْلَمُونَ.
7:62. மேலும் அவர், “இறைவழிகாட்டுதலை உங்களிடம் எடுத்துரைப்பது உங்களுடைய நன்மைக்காகத் தான். இவை நல்லுபதேசங்களே ஆகும். மேலும் இதுவரையில் நீங்கள் அறியாதிருந்த வழிகாட்டுதல்களை அல்லாஹ்விடமிருந்து நான் பெற்று உங்களுக்கு அறிவிக்கிறேன்” என்றார்.
أَوَعَجِبْتُمْ أَن جَآءَكُمْ ذِكْرٌۭ مِّن رَّبِّكُمْ عَلَىٰ رَجُلٍۢ مِّنكُمْ لِيُنذِرَكُمْ وَلِتَتَّقُوا۟ وَلَعَلَّكُمْ تُرْحَمُونَ.
7:63. மேலும் அவர், “உங்களைப் போன்ற ஒரு மனிதன் மூலமாகவே இறைவனிடமிருந்து நல்லறிவுரைகள் உங்களுக்கு வருவதை எண்ணி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? ஆனால் நீங்கள் செய்து வரும் தவறான செயல்களின் விளைவுகளைத் தெளிவாக எடுத்துரைத்து, முன்னெச்சரிக்கை செய்வதற்காகவும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு வாழ்ந்து உங்களுக்கு அருட்கொடைகள் கிடைத்திட வேண்டும் என்பதற்காகவும், இந்த அறிவுரைகள் இறக்கி அருளப்படுகின்றன” என்று அவர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தார்.
فَكَذَّبُوهُ فَأَنجَيْنَٰهُ وَٱلَّذِينَ مَعَهُۥ فِى ٱلْفُلْكِ وَأَغْرَقْنَا ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَآ ۚ إِنَّهُمْ كَانُوا۟ قَوْمًا عَمِينَ.
7:64. ஆனால் அவர்கள் நூஹ் நபியின் எல்லா அறிவுரைகளையும் புறக்கணித்து வந்தனர். எனவே அவரையும் அவரை ஏற்றுக்கொண்ட சிலரையும் கப்பலில் ஏற்றிக் (ஹிஜ்ரத் செய்ய வைத்து) காப்பாற்றினோம். இறுதியில் வரப் போகின்ற பிரளயத்தைப் பற்றி அவர் செய்த முன் எச்சரிக்கையையும் கண்மூடித்தனமாக ஏற்க மறுத்து அவர்கள் அதில் மூழ்கிப் போனார்கள். அந்த அளவிற்கு நிராகரிக்கும் போக்கு அவர்களுக்கு அழிவை தேடித் தந்துவிட்டது.
۞ وَإِلَىٰ عَادٍ أَخَاهُمْ هُودًۭا ۗ قَالَ يَٰقَوْمِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُۥٓ ۚ أَفَلَا تَتَّقُونَ.
7:65. இவ்வாறே “ஆது” சமூகத்தாரிடம், அவர்களில் ஒருவரான ஹுத் நபியை அனுப்பி வைத்தோம். அவரும் தம் சமூகத்தாரை நோக்கி, அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு அடிபணிந்து வாழும்படி அறிவுருத்தி வந்தார். அவனையன்றி வேறு யாருடைய அதிகாரங்களையும் ஏற்று நடக்காதீர்கள் என்றும், இறைவழிகாட்டுதலுக்கு எதிராகச் செயல்படுவதால் ஏற்படும் தீய விளைவுகளுக்கு அஞ்சி நடந்து கொள்ளும்படியும் தொடர்ந்து உபதேசித்து வந்தார்.
قَالَ ٱلْمَلَأُ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِن قَوْمِهِۦٓ إِنَّا لَنَرَىٰكَ فِى سَفَاهَةٍۢ وَإِنَّا لَنَظُنُّكَ مِنَ ٱلْكَٰذِبِينَ.
7:66. செல்வ சிறப்புடன் அங்கு வாழ்ந்து வந்த சமுதாயத் தலைவர்கள், இவருடைய போதனைகளை எதிர்த்து வந்தனர். அவர்கள் இவரை நோக்கி, “நீர் பேசி வருவதைக் கவனிக்கும் போது, நீ மடமையின் உச்சிக்கே சென்று விட்டதாகக் கருதுகிறோம். அந்த அளவிற்கு நீர் நடைமுறைக்கு ஒத்து வராத விஷயங்களைப் பேசி வருகிறீர்” என்று கூறலாயினர்.
قَالَ يَٰقَوْمِ لَيْسَ بِى سَفَاهَةٌۭ وَلَٰكِنِّى رَسُولٌۭ مِّن رَّبِّ ٱلْعَٰلَمِينَ.
7:67. அதற்கு அவர்,“என் சமூகத்தாரே! என் பேச்சில் எந்த மடத்தனமும் இல்லை. அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கின்ற ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் வழிகாட்டுதலை தான் எடுத்துரைக்கின்றேன்” என்றார்.
ُبَلِّغُكُمْ رِسَٰلَٰتِ رَبِّى وَأَنَا۠ لَكُمْ نَاصِحٌ أَمِينٌ.
7:68. மேலும் அவர், “என்னுடைய இறைவனின் வழிகாட்டுதலையே எடுத்துரைக்கின்றேன். இறைவனிடமிருந்து எனக்கு என்ன உபதேசங்கள் வருகின்றனவோ அவற்றை அப்படியே உங்களுக்கு எடுத்துரைக்கிறேன்” என்றார்.
أَوَعَجِبْتُمْ أَن جَآءَكُمْ ذِكْرٌۭ مِّن رَّبِّكُمْ عَلَىٰ رَجُلٍۢ مِّنكُمْ لِيُنذِرَكُمْ ۚ وَٱذْكُرُوٓا۟ إِذْ جَعَلَكُمْ خُلَفَآءَ مِنۢ بَعْدِ قَوْمِ نُوحٍۢ وَزَادَكُمْ فِى ٱلْخَلْقِ بَصْۜطَةًۭ ۖ فَٱذْكُرُوٓا۟ ءَالَآءَ ٱللَّهِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ.
7:69. நூஹ் சமூகத்தாரைப் போலவே இவர்களும் இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரிடம் எந்த தனிச் சிறப்புமின்றி, தங்களைப் போன்ற ஒரு சாதாரண மனிதராகவே இருக்கின்றாரே என்று ஆச்சரியப்பட்டனர். எனவே அவர், “உங்களின் தவறான செயல்களால் ஏற்படவிருக்கும் தீய விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்து முன் எச்சரிக்கை செய்வதற்காக, உங்களில் ஒருவருக்கு உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனைகள் வந்திருப்பதைப் பற்றியா நீங்கள் ஆச்சரியப் படுகிறீர்கள்? நூஹ் உடைய சமூகத்தார் அழிந்த பின் அவர்களிலிருந்து மீண்ட நீங்கள், வளர்ந்து இப்போது பலம் வாய்ந்த சமுதாயமாக உருவாகி இருப்பதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். மேலும் அல்லாஹ்வின் அருட்கொடைகள் உங்களுக்கு தாராளமாகக் கிடைத்து இருப்பதையும் எண்ணிப் பாருங்கள். எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்குக் கட்டுப்பட்டு வாழுங்கள். அதனால் நீங்கள் உங்கள் இலட்சிய வாழ்வில் வெற்றி பெறலாம்” என்று அவர் அறிவுருத்தி வந்தார்.
قَالُوٓا۟ أَجِئْتَنَا لِنَعْبُدَ ٱللَّهَ وَحْدَهُۥ وَنَذَرَ مَا كَانَ يَعْبُدُ ءَابَآؤُنَا ۖ فَأْتِنَا بِمَا تَعِدُنَآ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ.
7:70. அதற்கு அவர்கள்,“எங்கள் மூதாதையர்கள் எந்த வழிமுறைகளைப் பின்பற்றினார்களோ, அவற்றை விட்டுவிட்டு அல்லாஹ்வின் வழிகாட்டுதலை மட்டும் பின்பற்றி வரவேண்டும் என்று சொல்லத் தான் நீ எங்களிடம் வந்துள்ளீரோ? அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு எதிராகச் செயல்படுவதால் ஏற்படும் பின்விளைவுகள் அதிபயங்கரமாக இருக்கும் என்று அடிக்கடி மிரட்டுகிறீரே! நீர் சொல்வது உண்மையாக இருந்தால் அதை இப்போதே எங்கள் கண்முன் கொண்டுவாரும்” என்று கூறினர்.
قَالَ قَدْ وَقَعَ عَلَيْكُم مِّن رَّبِّكُمْ رِجْسٌۭ وَغَضَبٌ ۖ أَتُجَٰدِلُونَنِى فِىٓ أَسْمَآءٍۢ سَمَّيْتُمُوهَآ أَنتُمْ وَءَابَآؤُكُم مَّا نَزَّلَ ٱللَّهُ بِهَا مِن سُلْطَٰنٍۢ ۚ فَٱنتَظِرُوٓا۟ إِنِّى مَعَكُم مِّنَ ٱلْمُنتَظِرِينَ.
7:71. அதற்கு அவர், “இந்த அளவிற்கு அறிவுப்பூர்வமான இறைவழிகாட்டுதலை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். ஆனால் நீங்களும் உங்கள் மூதாதையர்களுமே ஏதேதோ பெயர்களை சூட்டிக் கொண்டு அவற்றை வணங்கி வருவதைப் பற்றி என்னிடம் தர்க்கித்து வருகிறீர்களா? ஆக நீங்கள் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுப்பதில் எல்லையைக் கடந்து விட்டீர்கள். அல்லாஹ்வின் நியதிப்படி உங்களுக்கு அழிவுகாலம் நெருங்கி விட்டது. நீங்கள் பல வேதனைகளுக்கு ஆளாவீர்கள். எனவே நீங்கள் உங்கள் வழிமுறைகளின்படி செயல்பட்டு, அதன் விளைவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருங்கள். நானும் இறைவழிகாட்டுதலின் படி செயல்பட்டு அதன் பலன்களை எதிர்பார்த்துக் கொள்கிறேன். யாருடைய பேச்சு உண்மையாகிறது என்பதை பார்த்துக் கொள்ளலாம்” என்று தீர்க்கமாகச் சொல்லிவிட்டார்.
فَأَنجَيْنَٰهُ وَٱلَّذِينَ مَعَهُۥ بِرَحْمَةٍۢ مِّنَّا وَقَطَعْنَا دَابِرَ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا ۖ وَمَا كَانُوا۟ مُؤْمِنِينَ.
7:72. இவ்வாறாக அவர்களுடைய செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வந்த கால கட்டத்தில், நாம் ஹுத் நபியையும் அவரைச் சார்ந்தவர்களையும் (ஹிஜ்ரத் செய்ய வைத்து) காப்பாற்ற வழி செய்தோம். அவருடைய உபதேசங்களை ஏற்க மறுத்தவர்கள் நம் விதிமுறையின்படி அழிவைச் சந்தித்துக் கொண்டனர். அதனால் அவர்கள் முற்றிலுமாக அழிந்து போயினர்.
‘ஆது’ சமூகத்தாரின் அழிவிற்குப் பின் அதில் மிஞ்சியவர்கள் மீண்டும் ஒரு பெரிய சமுதாயமாக உருவெடுத்தனர். அந்தச் சமூகத்தாரின் பெயர் ‘சமூது’ என்பதாகும். உலக வரலாற்றின் தொடரில் அங்கு நடந்த உண்மைச் சம்பவங்கள் என்னவென்பதையும் கவனியுங்கள்.
وَإِلَىٰ ثَمُودَ أَخَاهُمْ صَٰلِحًۭا ۗ قَالَ يَٰقَوْمِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُۥ ۖ قَدْ جَآءَتْكُم بَيِّنَةٌۭ مِّن رَّبِّكُمْ ۖ هَٰذِهِۦ نَاقَةُ ٱللَّهِ لَكُمْ ءَايَةًۭ ۖ فَذَرُوهَا تَأْكُلْ فِىٓ أَرْضِ ٱللَّهِ ۖ وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٍۢ فَيَأْخُذَكُمْ عَذَابٌ أَلِيمٌۭ.
7:73. ‘சமூது’ என்கின்ற சமூகத்தாரிடம், அவர்களிடையே வாழ்ந்து வந்த சாலிஹ் என்பவர் இறைத் தூதராக வந்தார். அவரும் தம் சமுதாய மக்களிடம், “அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு அடிபணிந்து வாழுங்கள். அதைத் தவிர வேறு எந்த வழிமுறையையும் பின்பற்றாதீர்கள். இதற்காக உங்கள் இறைவனிடமிருந்து அறிவுப்பூர்வமான தெளிவான வழிகாட்டுதல் வந்துள்ளது."
"அந்த வழிகாட்டுதலின் அடையாளச் சின்னமாக இந்த ஒட்டகத்தை நான் உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். நீங்கள் உங்கள் செல்வாக்கு ஆதிக்கத்தினால், ஏழை எளிய மக்களின் கால் நடைகளுக்கும் விளை நிலங்களுக்கும் நீர்ப் பாசன வசதி கிடைக்காதபடி தடுத்து வருகிறீர்கள். (26:155) ஆனால் தண்ணீர் இறைவனின் அருட்கொடையாகும். அதில் அனைவருக்கும் சம பங்கு உண்டு. எனவே இந்த ஒட்டகத்திற்கு எவ்விதத் தீங்கும் செய்யாமல் அதன் சுற்று வரும் போது, நீரை பருக அனுமதியுங்கள். அவ்வாறு செய்தால் நீங்கள் அனைவரும் இறைச் சட்டங்களைப் பேணி நடப்பதாகப் பொருள்படும். அதை தீங்கிழைத்து விட்டால் இறைச் சட்டங்களை மீறிவிட்டதாக பொருள்படும். உங்களுடைய சட்ட விரோதச் செயல்களே உங்களைக் காலப்போக்கில் நோவினைத் தரும் வேதனைகளில் தள்ளிவிடும்" என்றார்.
وَٱذْكُرُوٓا۟ إِذْ جَعَلَكُمْ خُلَفَآءَ مِنۢ بَعْدِ عَادٍۢ وَبَوَّأَكُمْ فِى ٱلْأَرْضِ تَتَّخِذُونَ مِن سُهُولِهَا قُصُورًۭا وَتَنْحِتُونَ ٱلْجِبَالَ بُيُوتًۭا ۖ فَٱذْكُرُوٓا۟ ءَالَآءَ ٱللَّهِ وَلَا تَعْثَوْا۟ فِى ٱلْأَرْضِ مُفْسِدِينَ.
7:74. மேலும் அவர், “ஆது சமூகத்தவர்களின் அழிவிற்குப்பின் எஞ்சியவர்களில் நீங்கள் வளர்ந்து பெரிய சமுதாயமாக உருவாகி இருக்கிறீர்கள். நீங்கள் வாழும் பூமியின் சமவெளியில் பெரிய பெரிய மாளிகைகளைக் கட்டி வாழ்கிறீர்கள். அதுமட்டுமின்றி மலைகளைக் குடைத்து வீடுகளை அமைத்தும் வருகிறீர்கள். இவற்றை எல்லாம் நீங்களே உருவாக்கிக் கொண்ட ஒன்றல்ல. அவை அல்லாஹ்வின் அருட்கொடைகளாகும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். எனவே நாட்டில் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தி குழப்பங்களை செய்துக் கொண்டு அலையாதீர்கள்” என்றும் அறிவுருத்தி வந்தார்.
قَالَ ٱلْمَلَأُ ٱلَّذِينَ ٱسْتَكْبَرُوا۟ مِن قَوْمِهِۦ لِلَّذِينَ ٱسْتُضْعِفُوا۟ لِمَنْ ءَامَنَ مِنْهُمْ أَتَعْلَمُونَ أَنَّ صَٰلِحًۭا مُّرْسَلٌۭ مِّن رَّبِّهِۦ ۚ قَالُوٓا۟ إِنَّا بِمَآ أُرْسِلَ بِهِۦ مُؤْمِنُونَ.
7:75. ஆனால் அவருடைய சமூகத்தாரில் தலைக்கனம் பிடித்த தலைவர்கள், அந்த அறிவுரைகளை ஏற்கவில்லை. இவை எல்லாம் தேவையற்றவை என்று கர்வத்துடன் செயல் பட்டு வந்தார்கள். அப்படியும் சாலிஹ் நபியிடம் அவர்கள் வந்தால், அங்கு கூடியிருக்கும் பலவீனமான மக்களை நோக்கி, “சாலிஹ் அவருடைய இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதர் தான் என நீங்கள் உறுதியாக அறிவீர்களா?” என ஏளனமாகக் கேட்பார்கள். அதற்கு அவர்கள், “நாங்கள் அவர் மூலம் அனுப்பப்பட்ட இறைவழிகாட்டுதலே மிகச் சரியானது என ஏற்றுக் கொள்கிறோம்” என்று அடக்கமாக பதிலளித்து வந்தார்கள்.
கவனித்தீர்களா? ஒருவருடைய நடை உடை பாவனையை வைத்து அவரை நபியாக ஏற்றுக் கொள்வதில்லை. அவர் கொண்டு வரும் இறைச் செய்திகளின் உண்மையைக் கண்டறிந்து அதை ஏற்றுக் கொள்வதே நபியை ஏற்றுக் கொள்வதற்கும் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்வதற்கும் உண்மையான அர்த்தமாகும் என்பதை இவ்வாசகம் நமக்குத் தெரியப்படுத்துகிறது.
قَالَ ٱلَّذِينَ ٱسْتَكْبَرُوٓا۟ إِنَّا بِٱلَّذِىٓ ءَامَنتُم بِهِۦ كَٰفِرُونَ.
7:76. அதற்கு அந்த தலைக்கனம் பிடித்த தலைவர்கள், “நீங்கள் எதை ஏற்றுக் கொள்வதாகச் சொல்கிறீர்களோ, அதை நாம் நிராகரிக்கிறோம்” என்று கூறினார்கள்.
فَعَقَرُوا۟ ٱلنَّاقَةَ وَعَتَوْا۟ عَنْ أَمْرِ رَبِّهِمْ وَقَالُوا۟ يَٰصَٰلِحُ ٱئْتِنَا بِمَا تَعِدُنَآ إِن كُنتَ مِنَ ٱلْمُرْسَلِينَ.
7:77. பின்னர் அவர்கள் நாளடைவில், “ஒட்டக” சின்னத்தின் அடிப்படையில் அவர்கள் சாலிஹ்வுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டனர். இப்படியாக அவர்கள் இறைவனின் கட்டளையை மீறிவிட்டனர். அவர்கள், சாலிஹே! நீர் இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவர் என்பது உண்மையானால் அடிக்கடி அச்சுறுத்தி வந்த அழிவை எம்மிடம் கொண்டு வந்து காட்டு என்று கூறலனார்கள்.
அவர்கள் இறைவழிகாட்டுதலை ஏற்று அதன்படி நடக்க விரும்பவில்லை. எனவே சாலிஹ் நபியின் முன்னெச்சரிக்கைகள் எதுவும் அவர்களுக்குப் பலனளிக்கவில்லை. எனவே மூன்று நாட்களுக்குள் நடக்கவிருக்கும் பேராபத்துகளைப் பற்றி அவர் செய்த எச்சரிக்கையையும் அம்மக்கள் அலட்சியப்படுத்தி விட்டார்கள்.(பார்க்க 11:65) நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் அந்த அழிவு ஏற்பட்டுவிட்டது.
فَأَخَذَتْهُمُ ٱلرَّجْفَةُ فَأَصْبَحُوا۟ فِى دَارِهِمْ جَٰثِمِينَ.
7:78. அங்கு ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள். (மேலும் பார்க்க – 11:68) இப்படியாக அவர்கள் வாழ்ந்த வீடுகளுக்குள்ளேயே புதைந்து அழிந்து போயினர்.
فَتَوَلَّىٰ عَنْهُمْ وَقَالَ يَٰقَوْمِ لَقَدْ أَبْلَغْتُكُمْ رِسَالَةَ رَبِّى وَنَصَحْتُ لَكُمْ وَلَٰكِن لَّا تُحِبُّونَ ٱلنَّٰصِحِينَ.
7:79. ஆனால் சாலிஹ்வும் அவரைச் சார்ந்தவர்களும் முன்னேற்பாடாக அந்த இடத்தை விட்டு விலகிச் சென்று (ஹிஜ்ரத் செய்து) விட்டனர். மேலும் அவர் விடுத்த இறுதி செய்தியில், என்னுடைய சமூகத்தாரே! மெய்யாகவே நான் உங்களுக்கு என் இறைவனிடமிருந்து கிடைத்த வழிகாட்டுதலை உங்களுக்கு எடுத்துக் கூறி உங்களுக்கு நல்லறிவுரை செய்தேன். ஆனால் நீங்கள் அதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை” என்று வருத்தத்துடன் கூறிவிட்டு சென்றார்.
சிந்தனையாளர்களே! புயல், வெள்ளம், எரிமலைப் பிழம்பு போன்ற அநேக இயற்கைச் சீற்றங்களின் காரணிகளையும் அவை நிகழப் போவது பற்றியும் அன்றைய காலத்தில் இறைத்தூதர்கள் மூலமாக முன்னெச்சரிக்கை செய்யப்பட்டன. இன்றைய காலத்தில் விஞ்ஞான அடிப்படையில் அவற்றைப் பற்றி முன்அறிவிப்பு செய்யப்படுகிறது. அதன்படி பாதுகாப்பாக இருக்க நாடுவோர் அந்த எச்சரிக்கையின்படி பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்து சென்று விடுகிறார்கள். அதை அலட்சியப் படுத்துபவர்கள் அதில் சிக்கி மடிந்து போகிறார்கள்.
மேலும் பூகம்பம் சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களைப் பற்றிய முன்அறிவிப்பும் மனிதனால் செய்ய முடியும் என்று இந்த நிகழ்ச்சியிலிருந்து தெரிய வருகிறது. விஞ்ஞான ஆராய்ச்சிகள் மூலம் அவற்றின் காரணிகள் மற்றும் அவை நிகழவிருக்கும் நேரம் மற்றும் இடத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.
ஆனால் மனிதனின் தவறான செயல்களால் சமுதாயத்தில் ஏற்படுகின்ற தீய விளைவுகளைப் பற்றிய முழு ஞானம் மனிதனிடத்தில் இருப்பதில்லை. எனவே அந்த ஆபத்துகளைப் பற்றி இறைவழிகாட்டுதல்கள் முன் எச்சரிக்கையாக எடுத்துரைக்கின்றன. அதையும் ஏற்று நடந்தால் அவற்றின் சீரழிவிலிருந்து பாதுகாத்து சிறந்ததோர் உலகைப் படைத்துக் கொள்ளலாம்.
وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِۦٓ أَتَأْتُونَ ٱلْفَٰحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنْ أَحَدٍۢ مِّنَ ٱلْعَٰلَمِينَ.
7:80. மனித வரலாற்றின் தொடரில் சாலிஹ் நபியைப் போன்று லூத் நபியின் வரலாறும் முக்கியம் வாய்ந்ததாகும். அவர் தம் சமூகத்தாரிடம், “உலகத்தில் இதற்கு முன் எவருமே செய்திராத மானக்கேடான செயலை அல்லவா நீங்கள் செய்து வருகிறீர்கள்?” என்று கண்டித்து வந்தார்.
إِنَّكُمْ لَتَأْتُونَ ٱلرِّجَالَ شَهْوَةًۭ مِّن دُونِ ٱلنِّسَآءِ ۚ بَلْ أَنتُمْ قَوْمٌۭ مُّسْرِفُونَ.
7:81. மேலும் அவர்,“மெய்யாகவே நீங்கள் காம இச்சையைத் தணித்துக் கொள்ள பெண்களை விட்டுவிட்டு, ஆண்களிடம் செல்கிறீர்களே! இது மனித நேயத்தையும் ஒழுக்க மாண்புகளையும் சீரழிக்கும் எவ்வளவு பெரிய தீய செயல் என்பதை எண்ணிப் பார்த்தீர்களா? நீங்கள் உண்மையிலேயே வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கிறீர்களே” என்றார்.
وَمَا كَانَ جَوَابَ قَوْمِهِۦٓ إِلَّآ أَن قَالُوٓا۟ أَخْرِجُوهُم مِّن قَرْيَتِكُمْ ۖ إِنَّهُمْ أُنَاسٌۭ يَتَطَهَّرُونَ.
7:82. “ஆஹா! இவர் மிகவும் பரிசுத்தமான மனிதராக இருக்கிறாரே! எனவே இவரையும் இவரைச் சார்ந்தவர்களையும் ஊரை விட்டு துறத்திவிட வேண்டியதுதான்” என்று அவர்கள் கூறியதைத் தவிர வேறு எதுவும் அந்தச் சமுதாயத்தினரின் பதிலாக இருக்கவில்லை.
فَأَنجَيْنَٰهُ وَأَهْلَهُۥٓ إِلَّا ٱمْرَأَتَهُۥ كَانَتْ مِنَ ٱلْغَٰبِرِينَ.
7:83. இப்படியாக அச்சமுதாயத்தினர் அவருடைய அறிவுரைகளைப் புறக்கணித்து வந்தனர். இறுதியாக அங்கு நேரவிருக்கும் பேராபத்தைப் பற்றிய முன்அறிவிப்பு வந்தது. (பார்க்க 11:81) அந்த முன் எச்சரிக்கையையும் அவர்கள் அலட்சியப்படுத்தி விட்டார்கள். (பார்க்க 26:173) மேலும் அவருடைய மனைவியும் கூட அவருடைய அறிவுரையை ஏற்கவில்லை. அந்த ஆபத்து எரிமலைப் பிழம்பாக வெடித்தது. அங்கு ஏற்பட்ட பேராபத்தில் அவர்கள் புதைந்துவிட்டனர். முன்னேற்பாடாக லூத் நபியும் அவரைச் சார்ந்தவர்களும் அவ்வூரை விட்டு வெளியேறி (ஹிஜ்ரத் செய்து) தப்பித்தனர்.
وَأَمْطَرْنَا عَلَيْهِم مَّطَرًۭا ۖ فَٱنظُرْ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلْمُجْرِمِينَ.
7:84. இப்படியாக இறைவனின் நியதிப்படி அவர்கள் மீது எரிமலைக் கற்கள் மற்றும் நெருப்பின் பிழம்புகள் பொழிந்தன. எச்சரிக்கை செய்தியை அவர்கள் பொருட்படுத்தவில்லை. இறை வழிகாட்டுதலுக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் இறுதி முடிவு என்னவாயிற்று என்பதை நீங்களே கவனித்துப் பாருங்கள்.
وَإِلَىٰ مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًۭا ۗ قَالَ يَٰقَوْمِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُۥ ۖ قَدْ جَآءَتْكُم بَيِّنَةٌۭ مِّن رَّبِّكُمْ ۖ فَأَوْفُوا۟ ٱلْكَيْلَ وَٱلْمِيزَانَ وَلَا تَبْخَسُوا۟ ٱلنَّاسَ أَشْيَآءَهُمْ وَلَا تُفْسِدُوا۟ فِى ٱلْأَرْضِ بَعْدَ إِصْلَٰحِهَا ۚ ذَٰلِكُمْ خَيْرٌۭ لَّكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ.
7:85. வரலாற்று நிகழ்வுகளின் வரிசையில் மத்யன் நாட்டில் பிறந்த ஷுஅய்ப் நபியின் வரலாறும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவரும் அங்கு வாழ்ந்து வந்தவர்களில் ஒருவராக இருந்தார். அவரும் அம்மக்களிடம் ஓரிறைக் கொள்கையைப் பரப்பி வந்தார்.
அவர், “என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று அதன்படி நடந்து கொள்ளுங்கள். அதைத் தவிர்த்து வேறு எந்தக் கட்டளைக்கும் அடிபணியாதீர்கள். நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான வழிகாட்டுதல் வந்துள்ளது.
அதன்படி நீங்கள் அனைவரும் நியாயமாக நடந்து கொள்ளுங்கள். கொடுக்கல் வாங்கல் போன்ற வணிகத் துறையில் உள்ள முறைகேடுகளை சரி செய்யுங்கள். அளவையிலும் எடை நிறுவையிலும் நியாயமாக சட்டங்களைக் (Uniform weighment and measurment System) கொண்டுவாருங்கள். பொதுமக்களுக்கு சேர வேண்டிய பொருட்களில் எடை அளவைக் குறைத்துவிடாதீர்கள்.
நாட்டில் இத்தகைய சீர்திருத்த நடவடிக்கைகளை நாங்கள் அறிவித்துள்ளோம். நீங்கள் அதற்கு ஒத்துழைப்பு தாருங்கள். அதற்கு மாறுசெய்து சமுதாயத்தில் குழப்பங்களை ஏற்படுத்தாதீர்கள். நீங்கள் இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொள்பவர்களாக இருந்தால், இந்த சீர்திருத்தங்களால் உங்களுக்கு நன்மைகள் பல ஏற்படும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” என்று அறிவுருத்தி வந்தார்.
وَلَا تَقْعُدُوا۟ بِكُلِّ صِرَٰطٍۢ تُوعِدُونَ وَتَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ مَنْ ءَامَنَ بِهِۦ وَتَبْغُونَهَا عِوَجًۭا ۚ وَٱذْكُرُوٓا۟ إِذْ كُنتُمْ قَلِيلًۭا فَكَثَّرَكُمْ ۖ وَٱنظُرُوا۟ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلْمُفْسِدِينَ.
7:86. மேலும் அவர், “சமுதாய மேம்பாட்டிற்காக கொண்டுவரும் சீரமைப்புப் பணிகளில் இடையூறாக நிற்காதீர்கள். அல்லாஹ் காட்டும் வழியில் பணியாற்றுபவர்களைப் பயமுறுத்தி அவர்களைத் தடுத்து சமுதாய சீர்திருத்தப் பணிகள் நிறைவேறாதவாறு கெடுத்து விடாதீர்கள். நீங்கள் அனைவரும் ஒரு கட்டத்தில் மிகச் சிறிய சமுதாயத்தினராக இருந்தீர்கள். அல்லாஹ்வின் அருளைக் கொண்டு உங்களுக்கு வசதி வாய்ப்புகள் பெருகியுள்ளன. இதைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள். எனவே சமூக சீர்கேடுகள் உருவாகும் வகையில் செயல்பட்டு குழப்பங்களை ஏற்படுத்தாதீர்கள். அவ்வாறு செயல்பட்டவர்களின் கதி என்னவாயிற்று என்பதை எண்ணிப் பாருங்கள்” என்று அவர் மக்களிடம் பலமுறை எடுத்துரைத்தார்.
وَإِن كَانَ طَآئِفَةٌۭ مِّنكُمْ ءَامَنُوا۟ بِٱلَّذِىٓ أُرْسِلْتُ بِهِۦ وَطَآئِفَةٌۭ لَّمْ يُؤْمِنُوا۟ فَٱصْبِرُوا۟ حَتَّىٰ يَحْكُمَ ٱللَّهُ بَيْنَنَا ۚ وَهُوَ خَيْرُ ٱلْحَٰكِمِينَ.
7:87. “ஆக என்னிடம் இறக்கி அருளப்பட்டுள்ள வேத அறிவுரைகளை உங்களில் சிலரே ஏற்றுக்கொண்டு இருக்கிறீர்கள். இன்னும் பெரும்பாலோர் அவற்றைப் பின்பற்றுவதில்லை. எனவே அவரவர் செயல் திட்டப்படி நடந்து கொள்ளலாம். இறுதியாக யாருடைய செயல்கள் அல்லாஹ்வின் நியதிப்படி நற்பலன்களைத் தருகின்றன என்பதைப் பார்த்துக் கொள்ளலாம். ஆக மனித செயல்களின் விளைவுகளை ஏற்படுத்துவதில் அல்லாஹ்வை விட சிறப்பாகத் தீர்ப்பளிப்பவன் வேறு யாராக இருக்க முடியும்?” என்றார்.
۞ قَالَ ٱلْمَلَأُ ٱلَّذِينَ ٱسْتَكْبَرُوا۟ مِن قَوْمِهِۦ لَنُخْرِجَنَّكَ يَٰشُعَيْبُ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَكَ مِن قَرْيَتِنَآ أَوْ لَتَعُودُنَّ فِى مِلَّتِنَا ۚ قَالَ أَوَلَوْ كُنَّا كَٰرِهِينَ.
7:88. அதற்கு, தலைக்கனம் பிடித்த செல்வ சீமான்கள், “ஷுஅய்பே! நாங்கள் அனைவரும் ஒரு தீர்மானத்திற்கு வந்துள்ளோம். நீரும் யோசித்து ஒரு முடிவுக்கு வாரும். நீரும் உம்மைச் சார்ந்தவர்களும் பழமை வாய்ந்த எங்கள் மார்க்க கோட்பாடுகளுக்கு உட்பட்டு வாழ முன்வந்தால் எங்களுடன் வாழ்ந்து கொள்ளலாம். அல்லது உம்மையும் உம்மைச் சார்ந்தவர்களையும் நாங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவோம்” என்றனர்.
அதற்கு அவர், “உங்கள் மார்க்கக் கோட்பாடுகளை நாங்கள் விரும்பவில்லை என்றாலும் உங்கள் மிரட்டலுக்குப் பயந்து அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டுமா?” என்று கேட்டார்.
قَدِ ٱفْتَرَيْنَا عَلَى ٱللَّهِ كَذِبًا إِنْ عُدْنَا فِى مِلَّتِكُم بَعْدَ إِذْ نَجَّىٰنَا ٱللَّهُ مِنْهَا ۚ وَمَا يَكُونُ لَنَآ أَن نَّعُودَ فِيهَآ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّنَا ۚ وَسِعَ رَبُّنَا كُلَّ شَىْءٍ عِلْمًا ۚ عَلَى ٱللَّهِ تَوَكَّلْنَا ۚ رَبَّنَا ٱفْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِٱلْحَقِّ وَأَنتَ خَيْرُ ٱلْفَٰتِحِينَ.
7:89. “நீங்கள் மார்க்க விஷயங்களில் அல்லாஹ் சொன்னதாகப் பல விஷயங்களைச் சேர்த்து சொல்லி வருகிறீர்கள். ஆனால் உண்மை விஷயங்கள் எங்களுக்குத் தெளிவான பின் நாங்கள் எப்படி உங்கள் வழக்கப்படி வாழ்வது? அவ்வாறு செய்தால் நாங்களும் மூடநம்பிக்கையில் வாழ வேண்டியதுதான்.
அகிலங்கள் அனைத்தும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனாகிய அல்லாஹ்வின் நாட்டப்படியே வாழ விரும்புகிறோம். இறைவழிகாட்டுதல் மனித வாழ்வின் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் எங்களுக்கு தெளிவாக்குகின்றது. அவற்றின் மீதே முழுமையான நம்பிக்கை வைத்து அதன்படியே செயல்படுகிறோம்” என்று அவர் தீர்க்கமாக பதில் அளித்துவிட்டார்.
மேலும் அவர், “இறைவன் நிர்ணயித்துள்ள “மனித செயல்களுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற சட்ட விதிமுறைகளின் படி அவரவர் செய்து வரும் செயல்களுக்கு ஏற்ப மிகச் சரியான பலன்களும் விளைவுகளும் கிடைத்து விடும். அப்போது யார் சரியான வழியில் செயல்படுகிறார்கள் என்ற தீர்ப்பு கிடைத்து விடும். இறைவனின் தீர்ப்பில் சிறிதளவும் பிழை இருக்காது” என்று அவர்களிடம் எடுத்துரைத்தார்.
وَقَالَ ٱلْمَلَأُ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِن قَوْمِهِۦ لَئِنِ ٱتَّبَعْتُمْ شُعَيْبًا إِنَّكُمْ إِذًۭا لَّخَٰسِرُونَ.
7:90. அதற்கு இறைவழிகாட்டுதலை ஏற்று நடக்க மறுத்த சமுதாயத் தலைவர்கள், ஷஅய்ப் நபியிடம் இணைந்தவர்களை நோக்கி, “நீங்கள் இவரோடு சேர்ந்து கொண்டால் இந்த ஊரை விட்டு நீங்களும் போக வேண்டியதுதான். உங்களுக்கு இங்கு எந்த வசதியும் கிடைக்காது” என்று கூறிவிட்டார்கள்.
فَأَخَذَتْهُمُ ٱلرَّجْفَةُ فَأَصْبَحُوا۟ فِى دَارِهِمْ جَٰثِمِينَ.
7:91. இறைவனின் நியதிப்படி வரவிருக்கும் பேரிடி முழக்கம் பற்றி அச்சமுதாய மக்களுக்கு முன்அறிவிப்பு செய்யப்பட்டது. (பார்க்க 11:94) அதன்படி அவரும் அவரைச் சார்ந்தவர்களும் இடம் பெயர்ந்து (ஹிஜ்ரத் செய்து) சென்று விட்டார்கள். (7:93) ஆனால் ஷுஅய்பின் அறிவுரைகளை நிராகாரித்து வந்தவர்கள் அங்கேயே தங்கிவிட்டனர். அதனால் அந்தப் பூகம்பத்தில் அவர்கள் சிக்கி பூமியில் புதைந்து விட்டனர்.
ٱلَّذِينَ كَذَّبُوا۟ شُعَيْبًۭا كَأَن لَّمْ يَغْنَوْا۟ فِيهَا ۚ ٱلَّذِينَ كَذَّبُوا۟ شُعَيْبًۭا كَانُوا۟ هُمُ ٱلْخَٰسِرِينَ.
7:92. இப்படியாக ஷுஅய்பின் முன்அறிவிப்புகள் யாவும் பொய்யெனக் கூறி அங்கேயே தங்கிவிட்டவர்கள், ஒருபோதும் வாழ்ந்திராதவர்களைப் போல் இந்த உலக வரைப் படத்திலிருந்து நீக்கப்பட்டனர். இறுதியில் ஷுஅய்பை நிராகரித்தவர்களே பெருத்த நஷ்டத்திற்கு ஆளானார்கள்.
فَتَوَلَّىٰ عَنْهُمْ وَقَالَ يَٰقَوْمِ لَقَدْ أَبْلَغْتُكُمْ رِسَٰلَٰتِ رَبِّى وَنَصَحْتُ لَكُمْ ۖ فَكَيْفَ ءَاسَىٰ عَلَىٰ قَوْمٍۢ كَٰفِرِينَ.
7:93. ஆக ஷுஅய்பும் அவரைச் சார்ந்தவர்களுகம் அந்த ஊரைவிட்டு ஹிஜ்ரத் செய்து விலகிச் சென்று விட்டனர். அப்போது அவர் கடைசியாகத் தம் சமூகத்தவர்களுக்கு விடுத்த செய்தியில், என் சமூகத்தவர்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு இறைவனுடைய வழிகாட்டுதலை எடுத்துரைத்து வந்தேன். அதன்படி நான் உங்களுக்கு நல்லறிவுரைகளை செய்து வந்தேன். ஆனால் நீங்களோ, என் அறிவுரைகளை ஏற்று அதன்படி நடக்கத் தயாராக இல்லை. எனவே உங்களைப் பற்றி கவலைப்பட்டு என்ன பயன்?” என்று அறிவிப்பு செய்தார்.
وَمَآ أَرْسَلْنَا فِى قَرْيَةٍۢ مِّن نَّبِىٍّ إِلَّآ أَخَذْنَآ أَهْلَهَا بِٱلْبَأْسَآءِ وَٱلضَّرَّآءِ لَعَلَّهُمْ يَضَّرَّعُونَ.
7:94. இப்படியாகப் பல நபிமார்கள் உலகிலுள்ள ஒவ்வொரு சமுதாயத்தினரிடமும் இறைவழிகாட்டுதலை எடுத்துரைத்து சீரமைப்பு ஏற்பாடுகளை செய்து வந்தனர். (பார்க்க 34:34, 43:23) இறைவழிகாட்டுதலின்படி செயல்பட்டவர்கள் சிறப்பாக வாழ்ந்தனர். அவற்றை நிராகரித்துத் தம் மனம்போன போக்கில் வாழ்ந்தவர்களின் சமுதாயத்தில் பசி, பட்டினி, வறுமை போன்ற துயரச் சம்பவங்கள் நடக்காமல் இருந்ததில்லை.
சிந்தனையாளர்களே! அப்படிப்பட்ட நிலமை இப்போதும் ஏற்படக் கூடாது என்பதற்காகத் தான் இந்த வரலாற்று நிகழ்ச்சிகள் உங்கள் சிந்தனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.
ثُمَّ بَدَّلْنَا مَكَانَ ٱلسَّيِّئَةِ ٱلْحَسَنَةَ حَتَّىٰ عَفَوا۟ وَّقَالُوا۟ قَدْ مَسَّ ءَابَآءَنَا ٱلضَّرَّآءُ وَٱلسَّرَّآءُ فَأَخَذْنَٰهُم بَغْتَةًۭ وَهُمْ لَا يَشْعُرُونَ.
7:95. அவர்கள் இறைவழிகாட்டுதலை ஏற்று அதன்படி நடக்கும் போது, துயரங்கள் நீங்கி அல்லாஹ்வின் நியதிப்படி நல்ல நிலைக்கு வந்து விடுகிறார்கள். அதன்பின் காலம் செல்லச் செல்ல இதற்கு முன் அவர்கள் சந்தித்த துயரச் சம்பவங்களை எல்லாம் மறந்து விட்டு மனித வாழ்வில் சுக துக்கங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான் என்று நினைத்துக் கொள்கிறார்கள். தங்கள் முன்னோர்களுக்கும் இப்படித் தான் ஏற்பட்டு வந்தன என்றும் கூறுவார்கள். எனவே “மனித செயலுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்பதெல்லாம் ஒன்றும் இல்லை என்று அலட்சியத்துடன் செயல்பட்டு, அதன் விளைவுகள் எதிர்பாராத விதமாய் தோற்றத்திற்கு வரும் போது, நிலைமை கட்டுக்கு அடங்காமல் போய் அழிவைச் சந்திக்கிறார்கள்.
وَلَوْ أَنَّ أَهْلَ ٱلْقُرَىٰٓ ءَامَنُوا۟ وَٱتَّقَوْا۟ لَفَتَحْنَا عَلَيْهِم بَرَكَٰتٍۢ مِّنَ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ وَلَٰكِن كَذَّبُوا۟ فَأَخَذْنَٰهُم بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ.
7:96. இதற்கு மாறாக அவ்வூரார், இறைவழிகாட்டுதலுக்கு மாற்றமாக நடப்பதால் ஏற்படும் விளைவுகளுக்கு அஞ்சி நடந்திருந்தால், அல்லாஹ்வின் நியதிப்படி அவர்களுக்கு வானளாவிய வளங்களையும் பூமியிலிருந்து பல்வேறு வசதி வாய்ப்புகளையும் பெற்று தாராளமான வளம் மிக்க வாழ்வு பெற வழிகள் பிறந்திருக்கும். ஆனால் அவர்கள் இறைவழிகாட்டுதலை நிராகரித்து, தம் மனோ இச்சைப்படி தவறான செயல்களில் ஈடுபட்டனர். அதனால் இறைவன் நிர்ணயித்துள்ள “மனித செயல்களுக்கு ஏற்ற இறுதி விளைவுகள்” என்ற வலையில் சிக்கிவிட்டனர்.
أَفَأَمِنَ أَهْلُ ٱلْقُرَىٰٓ أَن يَأْتِيَهُم بَأْسُنَا بَيَٰتًۭا وَهُمْ نَآئِمُونَ.
7:97. வரலாற்று நிகழ்வுகள் இதே விஷயத்தைத் திரும்ப திரும்பச் சொல்கின்றன. இதன் பின்பும் உலக மக்கள் அலட்சியமாக இருக்கப் போகிறார்களா? இறைவன் விடுக்கின்ற முன் எச்சரிக்கைகளை அலட்சியம் செய்து விழிப்புணர்வு இல்லாமல், வரப்போகும் பேராபத்துகளைப் பற்றி அஞ்சாமல் இருக்கப் போகிறார்களா?
أَوَأَمِنَ أَهْلُ ٱلْقُرَىٰٓ أَن يَأْتِيَهُم بَأْسُنَا ضُحًۭى وَهُمْ يَلْعَبُونَ.
7:98. விழிப்புணர்வுடன் செயல்பட்டு வாழப் போகிறீர்களா அல்லது உலக வாழ்க்கையை விளையாட்டாக எடுத்துக்கொண்டு, எந்தப் பாதுகாப்பு முன்னேற்பாடும் செய்யாமல் அத்தகைய ஆபத்துகள் வராது என்று அலட்சியமாக இருக்கப் போகிறார்களா?
أَفَأَمِنُوا۟ مَكْرَ ٱللَّهِ ۚ فَلَا يَأْمَنُ مَكْرَ ٱللَّهِ إِلَّا ٱلْقَوْمُ ٱلْخَٰسِرُونَ.
7:99. அல்லாஹ் படைத்த உலகில் நடக்கும் இந்த நிகழ்வுகளைப் பற்றி அறிந்தும், எந்தப் பாதுகாப்பு முன்னேற்பாடும் செய்யாமல் அவர்கள் அச்சமின்றி இருக்கின்றார்களா? இவ்வாறு அலட்சியமாக இருப்பவர்களே அல்லாஹ் உருவாக்கிய இயற்கை விதிமுறைகளின் படி ஏற்படும் அசம்பாவிதங்களின் ஆபத்துகளில் சிக்கி பெருத்த நஷ்டத்திற்கு ஆளாவார்கள்.
أَوَلَمْ يَهْدِ لِلَّذِينَ يَرِثُونَ ٱلْأَرْضَ مِنۢ بَعْدِ أَهْلِهَآ أَن لَّوْ نَشَآءُ أَصَبْنَٰهُم بِذُنُوبِهِمْ ۚ وَنَطْبَعُ عَلَىٰ قُلُوبِهِمْ فَهُمْ لَا يَسْمَعُونَ.
7:100. இவை யாவும் வரலாற்று உண்மைகளாகும். ஆனால் அவை நடந்து போன சம்பவங்கள் என நினைத்து, தங்களுக்கு அவ்வாறு நடக்காது என்று இன்றைய சமுதாயத்தவர்கள் கவனக் குறைவாக இருக்கப் போகிறார்களா? அல்லாஹ்வின் செயல் திட்டப்படி இவையாவும் இவ்வுலகில் திரும்பத் திரும்ப நிகழக் கூடியவையே ஆகும்.
பாவச் செயல்களில் ஈடுபடுவோர், இந்த ஆபத்துகளிலிருந்து தப்பிக்கும் தகுதியை இழந்து விடுகிறார்கள். இதைப் பற்றி சிந்தித்து இவர்கள் இன்னமும் திருந்த வில்லை என்றால் அந்த அளவிற்கு அவர்கள் உள்ளங்களில் திரை விழுந்துள்ளது என்றும், இவர்களும் செவிசாய்க்க மாட்டார்கள் என்றும் தெரிகிறது. எனவே அவர்களும் அதே போல் அழிவைச் சந்திக்க வேண்டி வரும்.
تِلْكَ ٱلْقُرَىٰ نَقُصُّ عَلَيْكَ مِنْ أَنۢبَآئِهَا ۚ وَلَقَدْ جَآءَتْهُمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَٰتِ فَمَا كَانُوا۟ لِيُؤْمِنُوا۟ بِمَا كَذَّبُوا۟ مِن قَبْلُ ۚ كَذَٰلِكَ يَطْبَعُ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِ ٱلْكَٰفِرِينَ.
7:101. இவ்வாறே உலகில் நடந்து வந்த வரலாற்று உண்மைகளை உமக்குத் தெளிவாக்குகிறோம். அவர்களிடம் வந்த இறைத் தூதர்கள், அவர்களுக்குத் தெளிவான வழிகாட்டுதலைத் தான் எடுத்துரைத்தார்கள். ஆனால் அவர்கள் உண்மைக்குப் புறம்பான விஷயங்களை நம்பி இருந்ததால், இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொள்பவர்களாக இல்லை. இவ்வாறே இறைவழிகாட்டுதலை ஏற்க மறுப்பவர்களின் உள்ளங்களில் அல்லாஹ்வின் நியதிப்படி திரை ஏற்பட்டு நிராகரிப்பவர்களாக ஆகிவிடுகிறார்கள்.
وَمَا وَجَدْنَا لِأَكْثَرِهِم مِّنْ عَهْدٍۢ ۖ وَإِن وَجَدْنَآ أَكْثَرَهُمْ لَفَٰسِقِينَ.
7:102. இப்படியாக முன்சென்ற சமுதாயங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி நடப்பதாக செய்து கொண்ட வாக்குறுதியைப் புறந்தள்ளி விட்டு, அவர்களில் பெரும்பாலோர் பாவச் செயல்களிலேயே மூழ்கி இருந்தனர். அதனால் அவர்கள் அழிவைச் சந்தித்துக் கொண்டனர்.
ثُمَّ بَعَثْنَا مِنۢ بَعْدِهِم مُّوسَىٰ بِـَٔايَٰتِنَآ إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَإِي۟هِۦ فَظَلَمُوا۟ بِهَا ۖ فَٱنظُرْ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلْمُفْسِدِينَ.
7:103. வரலாற்றின் தொடர் நிகழ்வுகளில் மூஸா நபியின் வரலாறும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவரிடம் ஆதாரப்பூர்வமான இறைவழிகாட்டுதலை அளித்து, ஃபிர்அவுன் என்ற மன்னனிடமும், அவனுடைய அரசவைத் தலைவர்களிடம் எடுத்துரைக்க அனுப்பி வைத்தோம்.
இதற்குக் காரணம் அவர்களுடைய தவறான அரசாட்சியால் நாட்டில் குழப்பங்களும் அக்கிரமங்களும் நடைபெற்று வந்தன. ஆனால் அவர்கள் இறை அறிவுரைகளைப் உதாசீனப்படுத்தி, அவற்றை அநியாயமாகப் புறக்கணித்து வந்தார்கள். அதன் விளைவாக அவர்களுடைய கதி என்னவாயிற்று என்பதைச் சற்று கவனித்துப் பாருங்கள்.
وَقَالَ مُوسَىٰ يَٰفِرْعَوْنُ إِنِّى رَسُولٌۭ مِّن رَّبِّ ٱلْعَٰلَمِينَ.
7:104. மூஸா நபி ஃபிர்அவுனிடம், “அகிலங்களைப் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனாகிய அல்லாஹ்வின் வழிகாட்டுதலை எடுத்துரைக்க வந்துள்ளேன்” என்று கூறினார்.
ஃபிர்அவ்னின் ஆட்சிக் காலத்தில் இஸ்ரவேலர்கள் அடிமைகளாக ஒடுக்கப்பட்டிருந்தனர். மேலும் ஃபிர்அவுன் அச்சமுதாயத்தைப் பல பிரிவினர்களாகப் பிரித்து அவர்களை மிகவும் பலவீனர்களாக ஆக்கி இருந்தான். அதைப் பற்றி தட்டிக் கேட்கும் வீரர்களைக் கொன்று விடுவதும் வீரமில்லா கோழைகளை பிழைக்க விட்டுவிடுவதும் அவனுடைய நடைமுறைச் சட்டமாக இருந்து வந்தது. (பார்க்க 28:4) எனவே மூஸா நபி இறைக் கட்டளைப்படி அந்த கொத்தடிமைகளை ஃபிர்அவ்னிடமிருந்து விடுதலை செய்ய வந்தார். எனவே அவர்:
حَقِيقٌ عَلَىٰٓ أَن لَّآ أَقُولَ عَلَى ٱللَّهِ إِلَّا ٱلْحَقَّ ۚ قَدْ جِئْتُكُم بِبَيِّنَةٍۢ مِّن رَّبِّكُمْ فَأَرْسِلْ مَعِىَ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ.
7:105. “அல்லாஹ்வின் வேத அறிவுரைகள் யாவும் மனிதனின் சிறப்பான வாழ்விற்கு மிகச் சரியான பாதையைக் காட்டக் கூடியதாக இருக்கின்றன. அவற்றைத் தெளிவாக்குவதை தவிர வேறு எதையும் நான் யாரிடமும் கூற இயலாது. எனவே நான் இறைவனிடமிருந்து தெளிவான ஆதாரப்பூர்வமான வழிகாட்டுதலைக் கொண்டுவந்துள்ளேன். அதன்படி நீர் ஆட்சி செய்தால் நாடு சிறப்பாகத் திகழும். இல்லையேல் நான் பனீ இஸ்ராயீல் சமுதாயத்தினரைத் தனியாக அழைத்துச் சென்று விடுகிறேன். நீ அவர்களுக்குச் சுதந்திரமளித்து என்னுடன் அனுப்பிவையுங்கள்” என்று ஃபிர்அவ்னிய மன்னரிடம் கூறினார்.
قَالَ إِن كُنتَ جِئْتَ بِـَٔايَةٍۢ فَأْتِ بِهَآ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ.
7:106. அதற்கு ஃபிர்அவ்ன், “நீர் தெளிவான ஆதாரப்பூர்வமான இறைவழிகாட்டுதலை எடுத்து வந்துள்ளதாக கூறுகிறாயே. அது உண்மை என்றால் இங்கு அதைக் கொண்டு வா” என்றான்.
فَأَلْقَىٰ عَصَاهُ فَإِذَا هِىَ ثُعْبَانٌۭ مُّبِينٌۭ.
7:107. அதன்படி அவர் கைவசம் இருந்த தெளிவான ஆதாரங்களை ஃபிர்அவ்ன் முன் சமர்ப்பித்தார். அவற்றைக் கவனித்த அவன், அவை தன் சாம்ராஜ்ஜியத்தையே விழுங்கும் மலைப் பாம்பாக இருப்பதை எண்ணிப் பயந்தான். (பார்க்க 7:110)
وَنَزَعَ يَدَهُۥ فَإِذَا هِىَ بَيْضَآءُ لِلنَّٰظِرِينَ.
7:108. மேலும் அவர் கொண்டுவந்த வேத அறிவுரைகளைப் பின்பற்றுவதால் ஏற்படவிருக்கும் ஒளிமயமான வாழ்க்கையைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பவர்களுக்குப் பளிச்சிடும் மாசற்ற வெள்ளை அறிக்கையாக இருந்தது.
قَالَ ٱلْمَلَأُ مِن قَوْمِ فِرْعَوْنَ إِنَّ هَٰذَا لَسَٰحِرٌ عَلِيمٌۭ.
7:109. ஆனால் ஃபிர்அவ்ன் சமூகத்தாரைச் சேர்ந்த தலைவர்கள், “இவையாவும் மக்களை வசியப்படுத்தும் வெற்றுப் பேச்சுகளே ஆகும். அதில் இவர் மிகவும் தேர்ச்சிப் பெற்றவராக இருக்கிறார்” என்று ஏளனமாகப் பேசலானார்கள்.
يُرِيدُ أَن يُخْرِجَكُم مِّنْ أَرْضِكُمْ ۖ فَمَاذَا تَأْمُرُونَ.
7:110. அதற்கு ஃபிர்அவ்ன், “இவருடைய பேச்சைக் கேட்டால் நீங்கள் இந்த நாட்டில் இருக்கும் தகுதியை இழந்து, இதை விட்டு வெளியேறிவிட வேண்டியதுதான். எனவே இவரை முறியடிக்க நீங்கள் கூறும் யோசனை என்ன?” என்று தன் மந்திரிகளிடம் கேட்டான்.
قَالُوٓا۟ أَرْجِهْ وَأَخَاهُ وَأَرْسِلْ فِى ٱلْمَدَآئِنِ حَٰشِرِينَ.
7:111. அதற்கு அவர்கள், “இவருக்கும் இவருடைய சகோதரர் ஹாரூனுக்கும் சிறிது கால அவகாசம் அளித்து அனுப்பி விடுவாயாக. நாமும் நம் ஊரிலுள்ள மதத் தலைவர்களை அழைத்து இவர்களுடன் பேசி இவர்களை முறியடித்து விடலாம். இதற்கான கட்டளையை பிறப்பிப்பீராக” என்றனர்.
يَأْتُوكَ بِكُلِّ سَٰحِرٍ عَلِيمٍۢ.
7:112. மேலும் நாட்டிலுள்ள வாதத் திறமை மிக்க மதகுருமார்கள் எல்லாம் உம்மிடம் கொண்டு வரப்படுவார்கள் என்றனர்.
وَجَآءَ ٱلسَّحَرَةُ فِرْعَوْنَ قَالُوٓا۟ إِنَّ لَنَا لَأَجْرًا إِن كُنَّا نَحْنُ ٱلْغَٰلِبِينَ.
7:113. அவ்வாறே அவர்கள் அனைவரும் குறித்த நாளில் ஒன்று திரண்டனர். அவர்கள், “மூஸாவிடம் வாதத்தில் வென்றுவிட்டால் அதற்குரிய வெகுமதி எங்களுக்குக் கிடைக்கும் அல்லவா?” என்று ஃபிர்அவ்னிடம் கேட்டார்கள்.
சிந்தனையாளர்களே! கவனித்தீர்களா? இவர்களுக்கு இவர்களைப் பற்றிய கவலையே இருக்கும். நாடோ, நாட்டு மக்களைப் பற்றிய கவலையோ கொஞ்சமேனும் இருக்கிறதா? இதுதான் மதத் தலைவர்களுடைய இன்றைய நிலையும்.
قَالَ نَعَمْ وَإِنَّكُمْ لَمِنَ ٱلْمُقَرَّبِينَ.
7:114. அதற்கு ஃபிர்அவ்ன், “ஆம். நிச்சயமாக உங்களுக்கு வெகுமதி கிடைக்கும். நான் உங்களுக்குத் தக்க பதவிகளை அளிப்பேன். நீங்கள் அனைவரும் எனக்கு நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்” என்று கூறினான்.
அவ்வாறே மக்கள் திரளாகக் கூடும் பண்டிகை நாளன்று, அனைவர் முன்பும் இந்த விவாதம் வைத்துக்கொள்ள சம்மதித்து அனைவரும் கூடினார்கள். (பார்க்க 20:59).
قَالُوا۟ يَٰمُوسَىٰٓ إِمَّآ أَن تُلْقِىَ وَإِمَّآ أَن نَّكُونَ نَحْنُ ٱلْمُلْقِينَ.
7:115. அவர்கள், “மூஸாவே! நீர் முதலில் உம் ஆதாரங்களைச் சமர்ப்பிக்கின்றீரா, அல்லது நாங்கள் முதலில் வைக்கட்டுமா?” என்று அந்த மதகுருமார்கள் கேட்டனர்.
قَالَ أَلْقُوا۟ ۖ فَلَمَّآ أَلْقَوْا۟ سَحَرُوٓا۟ أَعْيُنَ ٱلنَّاسِ وَٱسْتَرْهَبُوهُمْ وَجَآءُو بِسِحْرٍ عَظِيمٍۢ.
7:116. அதற்கு மூஸா நபி, “நீங்கள் முதலில் உங்கள் ஆதாரங்களைச் சமர்ப்பியுங்கள்” என்று கூறினார். அவ்வாறே அவர்கள் தம்மிடம் இருந்த சித்தாந்தத்தை மக்கள் முன் சமர்ப்பித்தனர். அது ஒரு மகத்தான சித்தாந்தமாக மக்களை மிகவும் பிரமிக்க வைத்தது. அந்த அளவிற்கு அவர்களுடைய வாதத் திறமை யாவும் பரவசமூட்டுவதாக இருந்தது.
۞ وَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنْ أَلْقِ عَصَاكَ ۖ فَإِذَا هِىَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ.
7:117. அப்போது தம்மிடம் உள்ள மார்க்க உண்மைகளை அவர்கள் முன் எடுத்துரைக்கும்படி மூஸா நபிக்கு இறைவன் அறிவுறுத்தினான். அவ்வாறு அவற்றை எடுத்துரைக்கவே அவர்களுடைய சித்தாந்தங்களை எல்லாம் இது விழுங்கிவிட்டது. அவர்களுடைய சித்தாந்தங்கள் இறை மார்க்கத்தின் முன் எடுபடவில்லை.
فَوَقَعَ ٱلْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا۟ يَعْمَلُونَ.
7:118. மூஸா நபி கொண்டு வந்த மார்க்கமே மக்களுக்கு நல்வழிகாட்ட வல்லது என்ற உண்மை மக்களுக்கும் அந்த மத குருமார்களுக்கும் வெட்ட வெளிச்சமாகி விட்டது. அவர்களிடம் இருந்த மாயக் கதைகள் பலனற்றுப் போய்விட்டன.
فَغُلِبُوا۟ هُنَالِكَ وَٱنقَلَبُوا۟ صَٰغِرِينَ.
7:119. இப்படியாக அவர்கள் வாதத்தில் தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொண்டு, வெட்கத்தில் தலைகுனிந்தார்கள்.
وَأُلْقِىَ ٱلسَّحَرَةُ سَٰجِدِينَ.
7:120. மேலும் அந்த மதகுருமார்கள் மூஸா நபி கொண்டுவந்த வேத அறிவுரைகளின் முன் சிரம்பணிவதாக ஒப்புக்கொண்டனர்.
قَالُوٓا۟ ءَامَنَّا بِرَبِّ ٱلْعَٰلَمِينَ.
7:121. “அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனாகிய அல்லாஹ்வின் வழிகாட்டுதலை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்” என்றும் அறிவித்து விட்டனர்.
رَبِّ مُوسَىٰ وَهَٰرُونَ.
7:122. “அவனே மூஸா நபிக்கும் ஹாரூன் நபிக்கும் இறைவன் ஆவான்” என்றனர்.
قَالَ فِرْعَوْنُ ءَامَنتُم بِهِۦ قَبْلَ أَنْ ءَاذَنَ لَكُمْ ۖ إِنَّ هَٰذَا لَمَكْرٌۭ مَّكَرْتُمُوهُ فِى ٱلْمَدِينَةِ لِتُخْرِجُوا۟ مِنْهَآ أَهْلَهَا ۖ فَسَوْفَ تَعْلَمُونَ.
7:123. இதை அறிந்த ஃபிர்அவ்ன் கொதித்தெழுந்தான். அவன், “நீங்கள் என்னைக் கேட்காமலேயே மூஸா நபியின் வேத அறிவுரைகளை ஏற்றுக் கொண்டீர்களா? இது எனக்கெதிராக நீங்கள் அனைவரும் செய்த சதியே ஆகும். இந்த ஊரில் வாழும் மக்களுக்கு விடுதலைப் பெற்றுத் தருவதற்காக மூஸாவுடன் நீங்களும் இணைந்து சதி செய்யத் திட்டமிட்டு இருக்கிறீர்கள். இதன் விளைவுகளை நீங்கள் விரைவில் காண்பீர்கள்” என்றான்.
لَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُم مِّنْ خِلَٰفٍۢ ثُمَّ لَأُصَلِّبَنَّكُمْ أَجْمَعِينَ.
7:124. மேலும் அவன், “நிச்சயமாக நான் உங்களை மாறுகை, மாறுகால் வாங்கி உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்து கொன்று விடுவேன்” என்று கூறினான்.
قَالُوٓا۟ إِنَّآ إِلَىٰ رَبِّنَا مُنقَلِبُونَ.
7:125. அதற்கு அவர்கள், “நாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் இறைவன் நிர்ணயித்துள்ள இலக்கை நோக்கியே செல்கின்றது. எனவே அவரவர் செய்யும் செயலின் விளைவுகளிலிருந்து யாரும் தப்ப இயலாது” என்று மன்னனிடம் பதிலளித்தார்கள்.
وَمَا تَنقِمُ مِنَّآ إِلَّآ أَنْ ءَامَنَّا بِـَٔايَٰتِ رَبِّنَا لَمَّا جَآءَتْنَا ۚ رَبَّنَآ أَفْرِغْ عَلَيْنَا صَبْرًۭا وَتَوَفَّنَا مُسْلِمِينَ.
7:126. மேலும் அவர்கள், “எங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மைகளை அறிந்து ஏற்றுக் கொண்டோம் என்பதற்காக நீ எங்களைப் பழிவாங்குவது சரியாகுமா?” என்று கேட்டார்கள். மேலும் அவர்கள், “இறைவா! எங்களுடைய இந்த மார்க்க விஷயத்தில் மன உறுதியுடன் நிலைத்திருக்கச் செய்வாயாக. இறைவா! உன் கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து வாழ்நாள் முழுவதும் மக்கள் நலனைப் பேணிக் காக்கும் செயல்வீரர்களாக ஆக்குவாயாக” என்று பிரார்த்தித்தனர்.
சிந்தனையாளர்களே! மூஸா நபியும் அவருடைய சகோதரர் ஹாரூன் நபியும் மார்க்க உண்மைகளை மதத் தலைவர்களுக்கு எடுத்துரைத்து, அதனால் ஏற்படும் பலன்களையும் அதற்கு மாற்றமாகச் செயல்பட்டால் என்ன பின்விளைவுகள் ஏற்படும் என்பதையும் தெளிவாக்கினார்கள்.
நேற்று வரையில் பதவி ஆசையில், வாதத்தில் ஜெயித்தால் என்ன கிடைக்கும் என்று ஃபிர்அவ்னிடம் பேரம் பேசியவர்கள், மார்க்க உண்மைகள் தெளிவான பின் இறைக் கட்டளையை சாகும் வரை கடைப்பிடிக்க உறுதி பூண்டுள்ளதாக இறைவனிடம் மண்டியிட்டு பிரார்த்தித்ததை சற்று கவனித்துப் பாருங்கள்.
இவை யாவும் கண் இமைக்கும் நேரத்தில் கொம்பு போட்டு பாம்பாக்கிக் காட்டியதைப் பார்த்து, அறிந்து கொள்ளக் கூடிய ஒன்றல்ல. இன்றைக்கும் மதத் தலைவர்களுக்கு இறை வழிகாட்டுதலின் உண்மை நிலை அறிந்தால் அவர்களும் இவ்வாறே செயல்பட முன்வருவார்கள் என்று நம்புவோமாக.
وَقَالَ ٱلْمَلَأُ مِن قَوْمِ فِرْعَوْنَ أَتَذَرُ مُوسَىٰ وَقَوْمَهُۥ لِيُفْسِدُوا۟ فِى ٱلْأَرْضِ وَيَذَرَكَ وَءَالِهَتَكَ ۚ قَالَ سَنُقَتِّلُ أَبْنَآءَهُمْ وَنَسْتَحْىِۦ نِسَآءَهُمْ وَإِنَّا فَوْقَهُمْ قَٰهِرُونَ.
7:127. ஆக ஃபிர்அவ்னுக்கு ஆதரவாகச் செயல்பட்ட சமுதாயத் தலைவர்கள் ஃபிர்அவ்னை நோக்கி, “மூஸா நபியும் அவருடைய சமூகத்தாரும் மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி, காலம் காலமாக உம்மையும் நீர் வணங்கி வந்த தெய்வங்ளையும் புறக்கணித்து விடும்படி கூறி வருகிறார்கள். இதற்கு நீர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்? அவர்களை அப்படியே விட்டு வைப்பீரா?” என்று கேட்டார்கள். அதற்கு, “அவர்களில் இளமைத் துடிப்புடன் உள்ள வீரர்களைப் பிடித்துக் கொன்றுவிடுவேன். ஏனெனில் இப்படிப்பட்டவர்களால் நமக்கு ஆபத்துகள் ஏற்படும். மாறாக வீரமில்லா கோழைகளை உயிர் பிழைக்க விட்டுவிடுவேன். இப்படிப்பட்ட தீவிர நடவடிக்கை எடுப்பது எங்களுக்கு மிகவும் சுலபமான விஷயமே” என்று ஃபிர்அவ்ன் கூறினான்.
قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ ٱسْتَعِينُوا۟ بِٱللَّهِ وَٱصْبِرُوٓا۟ ۖ إِنَّ ٱلْأَرْضَ لِلَّهِ يُورِثُهَا مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ ۖ وَٱلْعَٰقِبَةُ لِلْمُتَّقِينَ.
7:128. ஃபிர்அவ்னின் இந்த சதித் திட்டத்தைப் பற்றி அறிந்த மூஸா நபி, தன் ஆதரவாளர்களிடம், “நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி விழிப்புணர்வுடன் செயல்படுங்கள். ஃபிர்அவ்னின் மிரட்டலுக்குப் பயப்படாதீர்கள். நீங்கள் அனைவரும் இறைக் கொள்கையில் நிலைத்திருந்து பணியாற்றுங்கள். இந்த நாடு ஒன்றும் அவனுக்குச் சொந்தம் அல்ல. இது அல்லாஹ்வுக்குச் சொந்தமானது. அதில் ஆட்சி செய்ய யார் தகுதியுடையவர்களாக இருக்கிறார்களோ, அவர்களுக்கே ஆட்சி அதிகாரத்தை அளிப்பது என்பது அல்லாஹ்வின் நாட்டமாகும். நீங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பேணி நடந்து அந்தத் தகுதிகளை உங்களுக்குள் வளர்த்துக் கொண்டால், உங்களுக்கு வெற்றி கிடைப்பது நிச்சயம்” என்று உபதேசித்தார்.
قَالُوٓا۟ أُوذِينَا مِن قَبْلِ أَن تَأْتِيَنَا وَمِنۢ بَعْدِ مَا جِئْتَنَا ۚ قَالَ عَسَىٰ رَبُّكُمْ أَن يُهْلِكَ عَدُوَّكُمْ وَيَسْتَخْلِفَكُمْ فِى ٱلْأَرْضِ فَيَنظُرَ كَيْفَ تَعْمَلُونَ.
7:129. காலம் காலமாய் அடிமைப் பட்டு வாழ்ந்து வந்த அவர்களிடம், இந்த கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளும் மனஉறுதி இருக்கவில்லை. எனவே அவர்கள் மூஸா நபியை நோக்கி, “நீர் எங்களிடம் வருவதற்கு முன்பும் கொத்தடிமைகளாய் நாங்கள் வாழ்ந்து துன்பப்பட்டோம். நீர் வந்த பின்பும் நாங்கள் துன்பப்பட வேண்டியுள்ளதே” என்று அவர்கள் மனந் தளர்ந்து பேசினர்.
அதற்கு மூஸா நபி அவர்களிடம், “உங்கள் இறைவனின் நியதிப்படி உங்களுடைய பகைவர்களின் அராஜக ஆட்சியை அழித்து, இந்த நாட்டை ஆளும் தகுதி உங்களிடம் வந்து விடும் அல்லவா? உங்களுடைய உழைப்பும் செயல் வேகத்தையும் பொறுத்தே இவையெல்லாம் கிடைக்கும்” என்று அவர்களுக்கு ஊக்கமளித்தார். (மேலும் பார்க்க 24:55)
وَلَقَدْ أَخَذْنَآ ءَالَ فِرْعَوْنَ بِٱلسِّنِينَ وَنَقْصٍۢ مِّنَ ٱلثَّمَرَٰتِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ.
7:130. இப்படியாக ஃபிர்அவ்னின் தவறான ஆட்சிமுறையால் நாட்டில் பல பிரச்னைகள் உருவாகி வந்தன. விவசாயத் துறையை சரிவர கவனிக்காது உணவுப் பற்றாக்குறையும் ஏற்பட்டது. இப்போதாவது அவர்கள் இறை அறிவுரைகளை ஏற்று அதன்படி நடந்திருக்கலாம் அல்லவா?
விவசாயம், நெசவு போன்றவற்றைப் பனீ இஸ்ராயீல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கவனித்து வந்ததாகத் தெரிகிறது. இப்போது அவர்களுடைய ஒத்துழைப்பு இல்லாததால் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகத்தாரும் இவர்களையும் சரிசமமாக நடத்தி இருந்தால், எந்தப் பிரச்னையும் இருந்திருக்காது. ஆனால் இவர்களை கொத்தடிமைகளாகவே பாவித்து வந்தனர். இதற்கு எதிராகத் தான் மூஸா நபி ஃபிர்அவ்னிடம் குரல் கொடுத்தார்.
فَإِذَا جَآءَتْهُمُ ٱلْحَسَنَةُ قَالُوا۟ لَنَا هَٰذِهِۦ ۖ وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌۭ يَطَّيَّرُوا۟ بِمُوسَىٰ وَمَن مَّعَهُۥٓ ۗ أَلَآ إِنَّمَا طَٰٓئِرُهُمْ عِندَ ٱللَّهِ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ.
7:131. மேலும் அவர்கள் செயல்பட்டு வந்த விதத்தையும் கவனியுங்கள். அவர்களுக்கு நன்மைகள் கிடைத்து வந்தால், அவை தங்களுக்கே சொந்தம் எனக் கூறி அவற்றைத் தக்கவைத்துக் கொள்வார்கள். பிறரைப் பற்றிய கவலை ஒருபோதும் அவர்களுக்கு இருக்காது. அதே சமயம் அவர்களுக்குக் கெடுதி ஏற்பட்டு விட்டால் அது மூஸா நபி மற்றும் அவரைச் சார்ந்தவர்களால் வந்த துர்பாக்கியங்கள் என்பார்கள். உண்மை அதுவல்ல. நற்பாக்கியங்களும் துர்பாக்கியங்களும் அல்லாஹ்வின் நியதிப்படி அவரவர் செயல்களைப் பொறுத்தே ஏற்பட்டு வருபவையாகும். இதற்கு மற்றவர்கள் எப்படிக் காரணிகளாக ஆக முடியும்? சற்றே சிந்தித்துப் பார்த்திருந்தால், இந்த உண்மைகளை அவர்கள் விளங்கியிருப்பார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் இதனைச் சிந்தித்து அறிவதில்லை.
وَقَالُوا۟ مَهْمَا تَأْتِنَا بِهِۦ مِنْ ءَايَةٍۢ لِّتَسْحَرَنَا بِهَا فَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِينَ.
7:132. மேலும் ஃபிர்அவ்ன் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மூஸாவிடம், “எங்களுடைய பழமை வாய்ந்த ஆச்சாரத்தை விட்டுவிட எவ்வளவுதான் நீங்கள் ஆதாரங்களைச் சமர்ப்பித்தாலும் நாங்கள் உம்முடைய வேத அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்று கூறி வந்தார்கள்.
அதாவது மூஸா நபி மற்றும் அவரைச் சார்ந்தவர்களால் எவ்வளவுதான் நஷ்டங்கள் வந்தாலும் தங்களுடைய பாணியை மாற்றிக் கொள்ள மாட்டோம். ஏற்கனவே சொன்னது போல விவசாயத்தைப் பனீ இஸ்ராயீல் சமூகத்தார் கவனித்து வந்ததால் அதன் நுணுக்கங்கள் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. திடீரென்று அவர்கள் அதைவிட்டு விலகி விட்டதால் விவசாயம் கேட்பாரற்று சீர்கெட்டுப் போயிற்று. அதனால்
فَأَرْسَلْنَا عَلَيْهِمُ ٱلطُّوفَانَ وَٱلْجَرَادَ وَٱلْقُمَّلَ وَٱلضَّفَادِعَ وَٱلدَّمَ ءَايَٰتٍۢ مُّفَصَّلَٰتٍۢ فَٱسْتَكْبَرُوا۟ وَكَانُوا۟ قَوْمًۭا مُّجْرِمِينَ.
7:133. பயிரை நாசமாக்கும் புயல் காற்றும், வெட்டுக்கிளியும், கொடிய கிருமிகளும், தவளைகளும், இரத்த அழுகல்களும் வருடந்தோரும் ஒன்றன் பின் ஒன்றாக வந்தன. அதைச் சீர் செய்யும் முறை அவர்களுக்குத் தெரியவில்லை. இப்படியாக ஃபிர்அவ்னைச் சார்ந்தவர்களுக்கு அல்லாஹ்வின் நியதிப்படி ஒன்றன்பின் ஒன்றாகப் பல தொல்லைகள் ஏற்பட்டு வந்தன. இருப்பினும் அவற்றை அவர்கள் கவனித்து, தக்க நடவடிக்கை எடுக்காமல் ஆணவத்துடனே நடந்து கொண்டார்கள். அந்த அளவிற்கு அவர்கள் கர்வம் கொண்ட சமூகத்தாராகவே இருந்தனர்.
وَلَمَّا وَقَعَ عَلَيْهِمُ ٱلرِّجْزُ قَالُوا۟ يَٰمُوسَى ٱدْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِندَكَ ۖ لَئِن كَشَفْتَ عَنَّا ٱلرِّجْزَ لَنُؤْمِنَنَّ لَكَ وَلَنُرْسِلَنَّ مَعَكَ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ.
7:134. தங்களுக்கு வேதனைகள் ஏற்பட்ட போது, அவர்கள் மூஸா நபியிடம், “மூஸாவே! உமது இறைவனின் பரிபாலன செயல்திட்டப்படி எங்களுக்கு உதவி புரிந்து, எங்களுடைய வேதனையை சரி செய்ய உதவி புரிவீராக. எங்களை விட்டு எங்கள் வேதனைகளை நீர் நீக்கிவிட்டால், நிச்சயமாக நாங்கள் உங்கள் வேத அறிவுரைகளை ஏற்றுக்கொள்வோம். மேலும் இஸ்ரவேலர்களை உம்முடன் அனுப்பி அவர்களுக்கு விடுதலை அளித்து விடுகிறோம்” என்று கூறலானார்கள்.
அதாவது விவசாயத்தைக் கவனிக்க இயலாமல் இஸ்ரவேலர்களின் உதவியைக் கொண்டு விளைச்சலுக்கு ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நீக்கித் தரும்படி மூஸா நபியிடம் கேட்டதாகத் தெரிகிறது. அவ்வாறே அவர்களின் கோரிக்கையின்படி அவர்கள் மீண்டும் பணியில் ஈடுபட்டு அந்தக் குறைகளை நீக்க ஒப்புக்கொண்டனர்.
فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ ٱلرِّجْزَ إِلَىٰٓ أَجَلٍ هُم بَٰلِغُوهُ إِذَا هُمْ يَنكُثُونَ.
7:135. அவ்வாறே நிர்ணயிக்கப்பட்ட கால அளவின்படி அவர்களுடைய துயரங்கள் அவர்களை விட்டு நீங்கின. ஆனால் அவர்கள் அளித்த வாக்குறுதிப்படி இஸ்ரவேலர்களுக்கு விடுதலை அளிக்கவில்லை.
فَٱنتَقَمْنَا مِنْهُمْ فَأَغْرَقْنَٰهُمْ فِى ٱلْيَمِّ بِأَنَّهُمْ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا وَكَانُوا۟ عَنْهَا غَٰفِلِينَ.
7:136. இப்படியாக அவர்கள் இறைவனின் அறிவுரைகளை பொருட்படுத்தாமல் அலட்சியமாகவே இருந்து வந்தனர். மூஸா நபியும் அவரைச் சார்ந்தவர்களும் அந்த நாட்டை விட்டு வெளியேறிவிட திட்டமிட்டு அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டனர். அவ்வாறு செல்லும் வழியில் குறுக்கே வந்த நதியை கடந்து சென்று விட்டனர். ஆனால் அவர்களைப் பின்தொடர்ந்து வந்த ஃபிர்அவ்னும் அவனது படையினரும் நதியில் மூழ்கி அழிந்து போயினர். (பார்க்க 44:23-24)
நதியைக் கடந்துச் சென்ற இச்சம்பவந்தைப் பற்றி திருக்குர்ஆனில் ஐந்து இடங்களில் வருகிறது. அதை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது மூஸா நபி தன் தோழர்களுடன் எகிப்து நாட்டை விட்டு பாலஸ்தீன நாட்டிற்குத் ஹிஜ்ரத் செய்துச் சென்றார். அந்த வழியில் குறுக்கே நைல் நதி வருகிறது. பஹர் என்ற வார்த்தைக்கு ஜீவ நதி அல்லது கடல் என்று அர்த்தங்கள் உண்டு.
இரவோடு இரவாகச் சென்று அதன் குறுக்கே ஓர் உலர்ந்தப் பாதையை ஏற்படுத்திக் கொள்ளும்படி இறைவனிடமிருந்து அறிவுரை வருகிறது (பார்க்க 20:77) அறிவுரையே அது. அதாவது யாருக்கும் தெரியாமல் பாலத்தைக் கட்டிக் கொள்ளும்படி அறிவுரை வருகிறது. அதன்படியே அவர்கள் அக்கால வசதிகளின்படி கயிறுகளைக் கொண்டும், மரக்கொம்புகளைக் கொண்டும் அந்த நதியின் குறுக்கே பாலத்தை கட்டினார்கள்.
அதன்பின் குறித்த தேதியில் அவர்கள் இரவோடு இரவாகத் தப்பிச் சென்றபோது, இந்தச் செய்தி ஃபிர்அவ்னுக்குத் தெரிய வந்தது. எனவே அவனும் தன் படைகளுடன் அவர்களைப் பிடிக்க பின் தொடர்ந்தான். அவனும் அந்த நதிக்கரைக்கு மறுநாள் காலை வந்தடைந்தான். (பார்க்க 26:60)
அந்த நதி ஆழமாகவும் அதன் இரு கரைகளும் மலைகளைப் போன்றும் காணப்பட்டது.(பார்க்க 26:63). இறைவனின் அறிவுரைப்படி மூஸா நபி தம் தோழர்களுடன் அந்த நதியை கடந்து விட்டனர். (பார்க்க 44:24) ஆனால் ஆக்ரோஷமாகவும் வேகமாகவும் வந்த ஃபிர்அவ்னும் அவனது சேனைகளும் அந்த நதியைக் கடந்தபோது (10:90), அந்தப் பாலம் இடிந்து விழுந்துவிட்டது.
அதனால் அவர்கள் அனைவரும் நதியில் விழுந்து மூழ்கிவிட்டார்கள். அதாவது மூஸா நபியே அந்த பாலத்தின் பிடிகளை அறுத்து எரிந்தார். இதுபோன்ற போர்க்கால யுக்திகளைப் பல நபிமார்கள் கடைப்பிடித்திருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் பல உள்ளன.
இப்படி ஒரு பாலத்தை அக்கால மக்களால் எவ்வாறு கட்ட முடிந்தது என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். இக்காலத்திலும் உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் “பிரமிடுகள்” என்ற கூர்முனை கோபுரங்களை கட்டியவர்களால் பாலத்தைக் கட்ட முடியாதா?
மேலும் கரையின் மறுபுறத்தில் ஃபிர்அவ்னும், அவனுடைய படையினரும் வந்திருப்பதை மூஸா நபியின் தோழர்கள் கண்டு, தங்கள் உயிருக்கு ஆபத்து வந்துவிட்டது எனப் பயப்படுகிறார்கள் (26:61) அவர்கள் கடந்தது கடல் என்றால் இது எப்படி சாத்தியமாகும்? கடலுக்கு இரு கரைகள் இருக்குமா?
மேலும் ஃபிர்அவ்ன் மூழ்கும் தருவாயில் இஸ்ரவேலர்கள் வணங்கும் இறைவன் மீது ஈமான் கொள்வதாக உறுதி அளிக்கிறான் (10:90). அதற்கு மூஸா நபி இது வரையில் மாறு செய்து கொண்டிருந்தாயே! இப்போது உன் பேச்சை எப்படி நம்புவது? எனக் கூறி அவனை மூழ்கடித்து விட்டார். (10:91) ஃபிர்அவ்ன் மூழ்கியது கடலில்தான் என்றால் இத்தகைய வாக்கு வாதத்திற்கு ஏது வாய்ப்பு?
எனவே ஃபிர்அவ்ன் பாலத்தின் பிடியில் தொங்கிக் கொண்டிருந்த போது, தன்னைக் காப்பாற்றும்படி மூஸா நபியிடம் மன்றாடியது தெளிவாகிறது. எனவே மூஸா நபி கடந்து சென்றது நைல் நதியைத்தான் என்ற நமது விளக்கம் ஆதாரப்பூர்வமானதே.
وَأَوْرَثْنَا ٱلْقَوْمَ ٱلَّذِينَ كَانُوا۟ يُسْتَضْعَفُونَ مَشَٰرِقَ ٱلْأَرْضِ وَمَغَٰرِبَهَا ٱلَّتِى بَٰرَكْنَا فِيهَا ۖ وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ ٱلْحُسْنَىٰ عَلَىٰ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ بِمَا صَبَرُوا۟ ۖ وَدَمَّرْنَا مَا كَانَ يَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهُۥ وَمَا كَانُوا۟ يَعْرِشُونَ.
7:137. இப்படியாகக் கொத்தடிமைகளாக மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வந்த இஸ்ரவேலர்கள் இறைவேத அறவுரைகளின்படி அயராது உழைத்து வந்தததால், அவர்களுடைய ராஜ்ஜியம் தென்கோடி வரை பரவியது. அது மட்டுமின்றி அவர்களுக்கு சகல விதமான வசதிகளும் பாக்கியங்களும் கிடைத்து வந்தன. இஸ்ரவேலர்கள் இறை வழிகாட்டுதலில் நிலைத்திருந்து அயராது பாடுபட்டு வந்ததால் இந்த பாக்கியங்கள் கிடைத்தன. இப்படியாக உம் இறைவனின் வாக்கு முழுமையாக நிறைவேறியது. மேலும் ஃபிர்அவ்னிய மன்னர்களும், அவர்களுடைய சமூகத்தாரும், அவர்களுடைய பிரம்மாண்டமான மாடமாளிகைகளும் காலப் போக்கில் அழிந்து தரை மட்டமாகி விட்டன.
ஆனால் ஆரம்ப கால கட்டத்தில் இஸ்ரவேலர்களின் மனோ நிலையும் மூடநம்பிக்கைகளும் எந்த அளவிற்கு மோசமாக இருந்தன என்பதையும் கவனியுங்கள். மூஸா நபி இறைவேத அறிவுரைகளின்படி அல்லும் பகலும் போதித்து அவர்களுக்கு தக்கப் பயிற்சி அளித்து அவர்களை எந்த அளவிற்கு உயர்த்திக் காட்டினார் என்பதையும் கவனியுங்கள். அது போலவே இன்றைக்கும் சமூகச் சீரமைப்பு பணியிலும் மக்களை நல்வழிபடுத்துவதிலும் நாமும் அயராது ஈடுபடவேண்டும்.
وَجَٰوَزْنَا بِبَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱلْبَحْرَ فَأَتَوْا۟ عَلَىٰ قَوْمٍۢ يَعْكُفُونَ عَلَىٰٓ أَصْنَامٍۢ لَّهُمْ ۚ قَالُوا۟ يَٰمُوسَى ٱجْعَل لَّنَآ إِلَٰهًۭا كَمَا لَهُمْ ءَالِهَةٌۭ ۚ قَالَ إِنَّكُمْ قَوْمٌۭ تَجْهَلُونَ.
7:138. ஃபிர்அவ்னின் அராஜக ஆட்சியின் பிடியிலிருந்து இஸ்ரவேலர்களை விடுவித்து நதியைக் கடந்து சென்றபின், வழியில் ஒரு கூட்டத்தினர் விக்கிரகங்களை வைத்து ஆராதனை செய்து கொண்டாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து மூஸா நபியிடம், “அவர்கள் வணங்கி வரும் தெய்வச் சிலைகளைப் போல் எங்களுக்கும் செய்து தருவீராக” என்று வேண்டினர். அதற்கு மூஸா நபி, “நீங்கள் இன்னமும் அறிவில்லாத சமூகத்தவர்களாகவே இருக்கிறீர்களே!” என்று கூறினார்.
அதாவது தொன்று தொட்டு கடைப்பிடித்து வந்த சடங்கு சம்பிரதாயங்களின் தாக்கங்களிலிருந்து விடுபடுவது சிரமமான காரியமே. அதில் பெரும் ஆத்ம திருப்தி கிடைப்பதாக பலர் எண்ணுகிறார்கள். ஆனால் அதனால் சமுதாயத்தில் ஏற்படும் தீய தாக்கங்களைப் பற்றி அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை.
إِنَّ هَٰٓؤُلَآءِ مُتَبَّرٌۭ مَّا هُمْ فِيهِ وَبَٰطِلٌۭ مَّا كَانُوا۟ يَعْمَلُونَ.
7:139. எனவே அவர், “நிச்சயமாக இவர்கள் கடைப்பிடித்து வரும் வழிமுறைகள் உலகில் நிரந்தரமாக நீடிக்கக் கூடியவை அல்ல. ஏனெனில் அவை உலக வாழ்விற்கு எந்தப் பலனும் அளிப்பதில்லை. எனவே அவை வீணானவையே ஆகும்” என்று எடுத்துரைத்தார்.
قَالَ أَغَيْرَ ٱللَّهِ أَبْغِيكُمْ إِلَٰهًۭا وَهُوَ فَضَّلَكُمْ عَلَى ٱلْعَٰلَمِينَ.
7:140. எனவை அவர், “உலகில் வாழும் மக்களில் மிகச் சிறந்த சமுதாயமாக உங்களை ஆக்கிட இறைவனிடமிருந்து வழிகாட்டுதலைப் பெற்றிருக்கிறேன். இவை அகிலங்களைப் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனிடமிருந்து வருபவையாகும். அல்லாஹ்வின் அப்படிப்பட்ட உயர்ந்த கொள்கைக் கோட்பாடுகளை விட்டுவிட்டு, வேறு வழிமுறைகளையா உங்களுக்கு கற்றுத் தருவேன்?” என்று கேட்டார்.
وَإِذْ أَنجَيْنَٰكُم مِّنْ ءَالِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوٓءَ ٱلْعَذَابِ ۖ يُقَتِّلُونَ أَبْنَآءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَآءَكُمْ ۚ وَفِى ذَٰلِكُم بَلَآءٌۭ مِّن رَّبِّكُمْ عَظِيمٌۭ.
7:141. “என் சமூகத்தாரே! நீங்களே சற்று நினைத்துப் பாருங்கள். ஃபிர்அவ்னின் அராஜகப் பிடியிலிருந்து இறைவழிகாட்டுதல் தானே உங்களைக் காப்பாற்றியது. காலம் காலமாக அவர்கள் உங்களைக் கொடூரமான முறையில் வேதனைப்படுத்தி வந்தார்கள் அல்லவா? உங்களிடையே இருந்த வீரம் மிக்க ஆண்களை கொன்று விடுவதும், வீரமற்ற கோழைகளால் தங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதால் அவர்களைப் பிழைக்க விடுவதும் ஃபிர்அவ்னுடைய கொடுமையாக இருந்ததல்லவா? இறைவனுடைய நியதியின்படி ஏற்பட்டிருந்த இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகள் உங்கள் வாழ்வில் பெரும் சோதனையாகவே இருந்து வந்தது அல்லவா?” என்று அவர்களிடம் எடுத்துரைத்தார்.
அதாவது அப்படிப்பட்ட இக்கட்டான வேதனை மிக்க சூழ்நிலைகளிலும் கூட, அவர்கள் வணங்கி வந்த தெய்வங்கள் அவர்களைக் காப்பாற்றியதா? இல்லையே. ஏன்? அவை எல்லாம் மனித கற்பனையில் உருவானவை. ஆனால் இறைவனின் வழிகாட்டுதல் பெற்ற மூஸா நபி, அதன்படி திட்டங்களைத் தீட்டி நதியைக் கடக்கச் செய்து அவர்களைக் காப்பாற்றினார் அல்லவா?. இப்போது மீண்டும் பழையபடி சிலை வணக்க வழிபாட்டிற்காக ஏற்பாடு செய்து தரச் சொல்வது சரியாகுமா?
இப்படியாக மூஸா நபி வேத அறிவுரைகளை எடுத்துரைத்து அவர்களில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி, சிறந்த சமுதாயமாக விளங்கச் செய்து, பல திட்டங்களைத் தீட்டி அதன்படி அவர்களை வழிநடத்திச் சென்றார்.
இதற்கிடையில் இறைவழிகாட்டுதல் பெற சில நாட்கள் அச்சமுதாயத்தை விட்டுப் பிரிந்து போக நேர்ந்தது.
۞ وَوَٰعَدْنَا مُوسَىٰ ثَلَٰثِينَ لَيْلَةًۭ وَأَتْمَمْنَٰهَا بِعَشْرٍۢ فَتَمَّ مِيقَٰتُ رَبِّهِۦٓ أَرْبَعِينَ لَيْلَةًۭ ۚ وَقَالَ مُوسَىٰ لِأَخِيهِ هَٰرُونَ ٱخْلُفْنِى فِى قَوْمِى وَأَصْلِحْ وَلَا تَتَّبِعْ سَبِيلَ ٱلْمُفْسِدِينَ.
7:142. ஒரு மாதம் பத்து நாட்களுக்கு (நாற்பது நாட்களுக்காக, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரும்படி மூஸா நபிக்கு இறைவனிடமிருந்து செய்தி வந்தது (மேலும பார்க்க 2:51) அதன்படி தம் பயணத்தை மேற்கொள்ள ஆயத்தமான போது, அவர் தம் சகோதரர் ஹாரூனிடம்,“நான் திரும்பி வரும் வரையில் இவர்களை நிர்வகிக்கும் பொறுப்பை நீ ஏற்றுக்கொள். அவர்களிடையே குழப்பங்கள் எதுவும் ஏற்படாதவாறு கவனித்துக்கொள்” என்று உபதேசித்து அங்கிருந்து விடைபெற்றார்.
وَلَمَّا جَآءَ مُوسَىٰ لِمِيقَٰتِنَا وَكَلَّمَهُۥ رَبُّهُۥ قَالَ رَبِّ أَرِنِىٓ أَنظُرْ إِلَيْكَ ۚ قَالَ لَن تَرَىٰنِى وَلَٰكِنِ ٱنظُرْ إِلَى ٱلْجَبَلِ فَإِنِ ٱسْتَقَرَّ مَكَانَهُۥ فَسَوْفَ تَرَىٰنِى ۚ فَلَمَّا تَجَلَّىٰ رَبُّهُۥ لِلْجَبَلِ جَعَلَهُۥ دَكًّۭا وَخَرَّ مُوسَىٰ صَعِقًۭا ۚ فَلَمَّآ أَفَاقَ قَالَ سُبْحَٰنَكَ تُبْتُ إِلَيْكَ وَأَنَا۠ أَوَّلُ ٱلْمُؤْمِنِينَ.
7:143. இறைவனின் கட்டளைப்படி குறித்த நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மூஸா நபி சென்று இறைவனின் செயல்திட்டங்களைப் பற்றி அறிந்து கொண்டார்.
அவற்றை எல்லாம் கேட்டு பிரமித்துப் போன மூஸா நபி, இந்த அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனைக் கண்கூடாகக் காணவேண்டும் என்ற அளவுகடந்த ஆசை ஏற்பட்டது. ஒரு எல்லைக்கு உட்பட்டதை மட்டும் பார்க்கும் வல்லமையுடைய மனித பார்வை, எல்லை இல்லா இறைவனின் வல்லமையை எவ்வாறு காண இயலும்? (பார்க்க 6:103)
எனவே அங்கிருக்கும் மலையை நீ ஆய்வு செய்து கவனி. அது தன் இடத்தில் அசையாது நிலைத்திருந்தால, நீ என்னைப் பார்த்ததாகப் பொருள்படும் என கூறி, அம்மலை மீது ஒரு மின்னல் போன்ற ஒளியை வெளிப்படுத்தினான். இறைவனின் ஒளியினால் அந்த மலை எரிந்து தூள் தூளாகி விட்டது. எனவே அதைப் பார்த்த மூஸா நபியும் மூர்ச்சையானார்.
அதன்பின் அவர் சுய நினைவுக்கு வந்ததும், தன் நிலையை உணர்ந்த அவர், “இறைவா! நீ மனித கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்டவன். நான் உன் கட்டளையின் படியே நடந்து கொள்கிறேன். உன் வழிகாட்டுதலை ஏற்றுக் கொள்பவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்” என்று பிராhத்தித்தார்.
அதாவது பரந்து விரிந்து அளவிலா சக்திகளுக்கு அதிபதியாக இருக்கும் இறைவன், தன் சக்தியின் சிறு பகுதியையும் உருவகப்படுத்திக் காட்டினால், அதன் விளைவுகள் என்னவாகும் என்பதை இவ்வாசகத்திலிருந்து தெரிகிறது. மேலும் நபித்துவத் தொடர் இருந்து வந்த காலத்தில் நடந்த சம்பவம் என்பதால் உண்மை நிலை அந்த நபிக்கும் அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரியும். ஆனால் அல்லாஹ்வைக் காணும் ஆசை இயலாதவையே என்பது மட்டும் நமக்குப் புலனாகிறது. எனவே அல்லாஹ்வை நேரில் காணும் ஆசையை விட்டுவிட்டு, அவன் அருளியுள்ள வழிகாட்டுதலைப் பின்பற்றி நடந்தால் நமக்கு மகத்துவமும் கண்ணியமும் கிடைத்து வரும். (பார்க்க 6:103-104)
قَالَ يَٰمُوسَىٰٓ إِنِّى ٱصْطَفَيْتُكَ عَلَى ٱلنَّاسِ بِرِسَٰلَٰتِى وَبِكَلَٰمِى فَخُذْ مَآ ءَاتَيْتُكَ وَكُن مِّنَ ٱلشَّٰكِرِينَ.
7:144. “மூஸாவே! உனக்கு இரு விஷயங்களில் மற்றவர்களை விட மேன்மை உள்ளது. அதில் ஒன்று நாம் உன்னுடன் பேசியது. இது நபித்துவம் சம்பந்தப்பட்ட விஷயமாகும். இரண்டாவது மக்களை நல்வழிபடுத்த இறைவழிகாட்டுதலை அளித்தது. எனவே நான் உனக்கு அளித்துள்ள வேத அறிவுரைகளை உறுதியுடன் பின்பற்றி வா. அதிலுள்ள கட்டளைகளின்படி நடந்து நன்றியுள்ள விசுவாசிகளின் பட்டியலில் உன்னை இணைத்துக்கொள்” என்று இறைவன் கூறினான்.
وَكَتَبْنَا لَهُۥ فِى ٱلْأَلْوَاحِ مِن كُلِّ شَىْءٍۢ مَّوْعِظَةًۭ وَتَفْصِيلًۭا لِّكُلِّ شَىْءٍۢ فَخُذْهَا بِقُوَّةٍۢ وَأْمُرْ قَوْمَكَ يَأْخُذُوا۟ بِأَحْسَنِهَا ۚ سَأُو۟رِيكُمْ دَارَ ٱلْفَٰسِقِينَ.
7:145. மேலும் இறைவனின் வேத அறிவுரைகளை அழியா ஏட்டில் பதித்து, அதில் ஒவ்வொன்றைப் பற்றியும் தெளிவாக செதுக்கி எழுதி, அவற்றை நன்றாக மனதில் பதியவைத்து, பின்பற்றி வரும்படி அவருக்குக் கட்டளையிட்டோம். மேலும் அவற்றையே பின்பற்றி வரும்படி அவருடைய சமூகத்தாருக்கு உபதேசிக்கச் சொன்னோம். மேலும், “அவர்களுடைய எல்லா சமூகப் பிரச்னைகளுக்கும் மிகச் சரியான தீர்வுகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நிலைமைக்கு ஏற்றவாறு மிகச் சிறந்த பொருத்தமான கட்டளையைப் பின்பற்றி தீர்த்து வைக்கும்படி மக்களுக்கு எடுத்துச் சொல். (பார்க்க 39:18). அவ்வாறு செயல்பட்டு வந்தால் திசை மாறிச் செல்பவர்களை, உங்களால் அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்பதை அவர்களிடம் எடுத்துச் சொல்” என்று அறிவுரை செய்தோம்.
سَأَصْرِفُ عَنْ ءَايَٰتِىَ ٱلَّذِينَ يَتَكَبَّرُونَ فِى ٱلْأَرْضِ بِغَيْرِ ٱلْحَقِّ وَإِن يَرَوْا۟ كُلَّ ءَايَةٍۢ لَّا يُؤْمِنُوا۟ بِهَا وَإِن يَرَوْا۟ سَبِيلَ ٱلرُّشْدِ لَا يَتَّخِذُوهُ سَبِيلًۭا وَإِن يَرَوْا۟ سَبِيلَ ٱلْغَىِّ يَتَّخِذُوهُ سَبِيلًۭا ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا وَكَانُوا۟ عَنْهَا غَٰفِلِينَ.
7:146. ஆக சமுதாயத்தில் அநியாயமாக கொள்ளையடித்து, சம்பாதித்துக் கொண்டு பெருமையுடன் வாழ்பவர்கள் நம் நியதிப்படி திசைமாறிச் சென்று விடுவார்கள். எவ்வளவுதான் ஆதாரப்பூர்வமான வழிகாட்டுதலை எடுத்துரைத்தாலும் அவற்றை அத்தகையவர்கள் நிராகரித்து விடுவார்கள். அவர்கள் நேர்வழியினை அறிந்தாலும் அது தம் நன்மைக்காகத் தான் என்பதை கவனிக்காமல் அதற்கு மாற்றமாகவே செயல்படுவார்கள். அதே சமயம் அவர்கள் தவறான வழியினைக் கண்டால் அதிலிருந்து சுகம் கிடைப்பதால் அவற்றை நேரானவழி என எடுத்துக் கொள்வார்கள். இவை எல்லாம் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுப்பதன் விளைவாக ஏற்படுவதாகும். மேலும் சீரிய சிந்தனை ஏதுமின்றி அலட்சியமாக வாழ்வதன் விளைவாகத் தான் இப்படிப்பட்ட மனப்பான்மை அவர்களிடம் ஏற்பட்டு விடுகிறது.
وَٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا وَلِقَآءِ ٱلْءَاخِرَةِ حَبِطَتْ أَعْمَٰلُهُمْ ۚ هَلْ يُجْزَوْنَ إِلَّا مَا كَانُوا۟ يَعْمَلُونَ.
7:147. இறைவழிகாட்டுதலையும், “மனித செயலுக்கேற்ற இறுதி விளைவுகளைச்” சந்திக்க நேரிடும் என்பதையும் ஏற்காமல் தன்னிச்சையாகச் செயல்படும் சமுதாயங்களின் செயல்திட்டங்கள் யாவும் நிலையான பலன்களை அளிக்காமல் இறுதியில் வீழ்ச்சி அடையச் செய்துவிடும். எனவே ஒரு சமுதாயம் எவ்வாறு செயல்படுகிறதோ அதன்படிதானே பலன்களையும் விளைவுகளையும் பெறமுடியும்?
وَٱتَّخَذَ قَوْمُ مُوسَىٰ مِنۢ بَعْدِهِۦ مِنْ حُلِيِّهِمْ عِجْلًۭا جَسَدًۭا لَّهُۥ خُوَارٌ ۚ أَلَمْ يَرَوْا۟ أَنَّهُۥ لَا يُكَلِّمُهُمْ وَلَا يَهْدِيهِمْ سَبِيلًا ۘ ٱتَّخَذُوهُ وَكَانُوا۟ ظَٰلِمِينَ.
7:148. அந்த நாற்பது நாட்கள் கடந்து மூஸா நபி தம் சமூகத்தாரிடம் திரும்பிச் சென்று, அங்கு நடப்பவற்றைக் கவனித்தார். அவர்களை சாமிரி என்பவன் வழிகெடுத்து (பார்க்க 20:85) அவர்களிடமிருந்த நகைநட்டுகளை உருக்கி காளைக்கன்றின் பொம்மையைத் தயாரித்து அதை வழிபாட்டு தெய்வமாக ஆக்கி இருந்தான். அதில் ஒரு பசுமாட்டின் ஓசையும் ஒலிக்கச் செய்தது. (பார்க்க 20:88) மற்றபடி அது வேறு எதுவும் பேசவில்லை. மனிதப் பிரச்னைகளுக்கு அதனால் எந்த தீர்வையும் தர இயலாது. இதை அவர்கள் கவனித்து இருக்கவேண்டாமா? எதைப் பற்றியும் சிந்திக்காமல் அநியாயமாக அதை தெய்வமாக ஆக்கிக் கொண்டார்களே! என்று வருத்தப்பட்டார்.
அதாவது ஐந்தறிவு பெற்ற ஒரு பிராணியை ஆறறிவு பெற்ற மனிதன் தன்னைவிடச் சிறந்தது என பாவித்து அதன்முன் மண்டியிட்டு உதவி கேட்பது மனிதச் சிந்தனை எந்த அளவிற்கு அற்றுப் போய்விட்டது என்பதையே காட்டுகிறது. இதைப் பற்றி அவர்கள் மீது கோபப்பட்டு என்ன பயன்? அது வாழையடி வாழையாக அந்த சமுதயாத்தவரின் இரத்தத்தில் வேரூன்றிப் போய்விட்ட ஒரு விஷயம்தானே.
وَلَمَّا سُقِطَ فِىٓ أَيْدِيهِمْ وَرَأَوْا۟ أَنَّهُمْ قَدْ ضَلُّوا۟ قَالُوا۟ لَئِن لَّمْ يَرْحَمْنَا رَبُّنَا وَيَغْفِرْ لَنَا لَنَكُونَنَّ مِنَ ٱلْخَٰسِرِينَ.
7:149. எனவே அவர்களிடம் மூஸா நபி எடுத்துரைத்ததும் அவர்கள் தம் தவறை உணர்ந்து, “நாங்கள் வழிதவறி விட்டோம் என்பதைத் தெரிந்து கொண்டோம். எங்கள் இறைவன் எங்களுக்கு வழிகாட்டுதல் அளித்து நாங்கள் செய்த தவறுகளின் பாதிப்பிலிருந்து மீள வழி செய்திருக்காவிட்டால் நாங்கள் நஷ்டம் அடைந்தவர்களாகி இருப்போம்” என்று கூறினர். இதற்கு முன்:
وَلَمَّا رَجَعَ مُوسَىٰٓ إِلَىٰ قَوْمِهِۦ غَضْبَٰنَ أَسِفًۭا قَالَ بِئْسَمَا خَلَفْتُمُونِى مِنۢ بَعْدِىٓ ۖ أَعَجِلْتُمْ أَمْرَ رَبِّكُمْ ۖ وَأَلْقَى ٱلْأَلْوَاحَ وَأَخَذَ بِرَأْسِ أَخِيهِ يَجُرُّهُۥٓ إِلَيْهِ ۚ قَالَ ٱبْنَ أُمَّ إِنَّ ٱلْقَوْمَ ٱسْتَضْعَفُونِى وَكَادُوا۟ يَقْتُلُونَنِى فَلَا تُشْمِتْ بِىَ ٱلْأَعْدَآءَ وَلَا تَجْعَلْنِى مَعَ ٱلْقَوْمِ ٱلظَّٰلِمِينَ.
7:150. மூஸா நபி தம் சமூகத்தாரிடம் திரும்பி வந்ததும், தம் சமூகத்தாரின் செயலைக் கண்டு மிகவும் கோபத்துடனும் வெறுப்புடனும் நடந்து கொண்டார். “நீங்கள் செய்த இக்காரியம் மிகவும் கெட்டது. இறைவனின் நியதிப்படி ஏற்படும் வேதனைகளுக்காக அவசரப்பட்டு இப்படிப்பட்ட செயலைச் செய்கிறீர்களா?” என்று கோபத்துடன் அவர் கொண்டுவந்த வேத உபதேசங்கள் அடங்கிய ஓலைச் சுவடுகளைக் கிடப்பில் போட்டு விட்டார்.
மேலும் அவர் தம் சகோதரர் ஹாரூனிடமும் கோபத்தில் அவருடைய முடியைப் பிடித்து இழுத்து கடுமையாக சாடினார்.(பார்க்க 20:92 & 93). அதற்கு அவர், “என் தாயின் மகனே! நான் அவர்களிடம் எடுத்துக் கூறியும், அவர்கள் என்னைப் பொருட்படுத்தவே இல்லை. அதில் நான் தீவிரம் காட்டியிருந்தால் இச்சமுதாயத்தில் பிளவு ஏற்பட்டு இருக்கும். அப்போது, “நான் வரும் வரை நீ ஏன் காத்திருக்கவில்லை?” என்று நீர் என்னைத் திருப்பிக் கேட்டிருப்பீர். (பார்க்க 20:94)
மேலும் அவர்கள் என் பலவீனத்தைப் பயன்படுத்தி என்னைக் கொலை செய்யும் அளவிற்கு துணிந்து விட்டார்கள். இப்படி நீர் என்னிடம் கடினமாக நடந்துகொள்வது, நம் பகைவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இப்படிச் செய்யாதீர். மேலும் என்னை அவர்களின் பட்டியலில் சேர்த்து விடாதீர்” என்று மூஸா நபியிடம் கூறினார்.
இவ்வாறு இருவரும் மோதிக் கொள்வதால் பிரச்னைகள் தீர்ந்துவிடாது. மாறாக அவை தேவையற்ற விளைவுகளையே ஏற்படுத்தும். அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும். வேத உபதேசங்களின்படி மக்களிடம் மூடநம்பிக்கையில் உருவான வழிபாட்டு முறைகளால் ஏற்படும் விபரீத விளைவுகளை எடுத்துரைத்து, அவர்களை நல்வழிப்படுத்த ஆவன செய்திருக்க வேண்டும். இதைச் செய்யாமல் அவர்களுடன் கோபப்பட்டு தமக்குள் சண்டையிட்டுக் கொண்டு இருந்தது தவறானச் செயலாகும். இதைத் தான் அவர்கள் உணர்ந்து இறைவழிகாட்டுதல்படி தம் பணிகளைத் தொடர்ந்தனர்.
சிந்தனையாளர்களே! இன்னொரு விஷயத்தையும் கவனித்தீர்களா? சமுதாயத்தில் பிளவு ஏற்படக் கூடாது என்பதற்காக சிலை வணக்க வழிபாடு நடப்பதையே ஒரு இறைத்தூதர் சகித்துக் கொள்கிறார். அந்த அளவிற்கு சமூக ஒற்றுமைக்காக பாடுபட்டவர்களே இறைத்தூதர்கள் ஆவர். நாமும் சமூக ஒற்றுமைக்காகப் பாடுபடவேண்டும்.
قَالَ رَبِّ ٱغْفِرْ لِى وَلِأَخِى وَأَدْخِلْنَا فِى رَحْمَتِكَ ۖ وَأَنتَ أَرْحَمُ ٱلرَّٰحِمِينَ.
7:151. எனவே அவர்,“என் இறைவனே! நானும் என் சகோதரர் ஹாரூனும் செய்த தவறான செயல்களின் பாதிப்பிலிருந்து எங்களைத் காத்தருள்வாயாக. உன் “வழிகாட்டுதல்” என்கின்ற அருட்கொடையில் எங்களை ஆழ்த்திக் கொள்வாயாக. நீயே அனைவரின் மீதும் அளவிலா கிருபையும் அன்பும் பொழிபவன் ஆவாய்” என்று அவர்கள் மனதில் எழுந்த எண்ணங்கள் வார்த்தைகளாக உதிர்ந்தன.
إِنَّ ٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ ٱلْعِجْلَ سَيَنَالُهُمْ غَضَبٌۭ مِّن رَّبِّهِمْ وَذِلَّةٌۭ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۚ وَكَذَٰلِكَ نَجْزِى ٱلْمُفْتَرِينَ.
7:152. அவர், “எவர்கள் காளைக் கன்றின் வழிபாட்டில் ஈடுபடுகிறார்களோ, அவர்கள் தங்கள் இறைவனின் நியதிப்படி ஏற்படும் தீய விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும். இறுதியில் அவர்களை வேதனையும் இழிவும் பீடித்துக்கொள்ளும். மூடநம்பிக்கையில் வாழ்பவர்களுக்கு இப்படிப்பட்ட அவல நிலைதான் ஏற்படும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் எடுத்துரைத்தார். (பார்க்க 2:54)
وَٱلَّذِينَ عَمِلُوا۟ ٱلسَّيِّـَٔاتِ ثُمَّ تَابُوا۟ مِنۢ بَعْدِهَا وَءَامَنُوٓا۟ إِنَّ رَبَّكَ مِنۢ بَعْدِهَا لَغَفُورٌۭ رَّحِيمٌۭ.
7:153. “மாறாக எவர்கள் அறியாமையில் தாம் செய்த தவறுகளை விட்டுவிட்டு மனந்திருந்தி அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று அதன்படி நடக்கிறார்களோ (4:17), நிச்சயமாக அவர்களுக்குப் பிரச்சினைகள் எதுவும் இல்லாத பாதுகாப்பான சந்தோஷமான வாழ்வு கிடைக்கும். இப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்த இறைவன் மிகவும் கிருபையாளன் ஆவான்” என்று அவர் போதித்தார்.
وَلَمَّا سَكَتَ عَن مُّوسَى ٱلْغَضَبُ أَخَذَ ٱلْأَلْوَاحَ ۖ وَفِى نُسْخَتِهَا هُدًۭى وَرَحْمَةٌۭ لِّلَّذِينَ هُمْ لِرَبِّهِمْ يَرْهَبُونَ.
7:154. இப்படியாக மூஸா நபியின் கோபமும் தணிந்து தம் சமூகத்தாரிடையே சுமுகமான சூழ்நிலை உருவானது. மேலும் அவர் கிடப்பில் போட்டு விட்ட ஓலைச் சுவடுகளை எடுத்து அதிலிருந்து மக்களுக்கு உபதேசித்து வந்தார். அவற்றில் வரையறுக்கப்பட்ட குறிப்புகள் யாவும் தம் இறைவனுக்குப் பயந்து அதன்படி செயல்படுபவர்களுக்கு நேர்வழியும் அருட்கொடைகளும் கிடைக்கும் வழிமுறைகளாக இருந்தன.
இப்படியாக அவர்களுக்கு மூஸா நபி நற்போதனைகளை அளித்து வந்தார். மூஸா நபிக்கு இறைவனைக் காணும் ஆசை ஏற்பட்டது போல, அவருடைய சமுதாயத்தினருக்கும் ஏற்பட்டது. ஆனால் அவர்கள் இறைவனைக் கண்கூடாக காணும் வரையில், இறைவனிடமிருந்து வழிகாட்டுதல்கள் வருகின்றன என்ற மூஸா நபியின் பேச்சை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று அடம்பிடித்தனர். (பார்க்க 2:55) எனவே இறைவனைக் காட்டுவதற்காக அவர்களை குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்து வந்தார்.
وَٱخْتَارَ مُوسَىٰ قَوْمَهُۥ سَبْعِينَ رَجُلًۭا لِّمِيقَٰتِنَا ۖ فَلَمَّآ أَخَذَتْهُمُ ٱلرَّجْفَةُ قَالَ رَبِّ لَوْ شِئْتَ أَهْلَكْتَهُم مِّن قَبْلُ وَإِيَّٰىَ ۖ أَتُهْلِكُنَا بِمَا فَعَلَ ٱلسُّفَهَآءُ مِنَّآ ۖ إِنْ هِىَ إِلَّا فِتْنَتُكَ تُضِلُّ بِهَا مَن تَشَآءُ وَتَهْدِى مَن تَشَآءُ ۖ أَنتَ وَلِيُّنَا فَٱغْفِرْ لَنَا وَٱرْحَمْنَا ۖ وَأَنتَ خَيْرُ ٱلْغَٰفِرِينَ.
7:155. இன்னும் மூஸா நபி நாம் குறிப்பிட்ட இடத்திற்கு நம்மை சந்திப்பதற்காக தம் சமூகத்தாரிலிருந்து எழுபது நபர்களைத் தேர்ந்தெடுத்து அழைத்து வந்தார். அங்கு திடீரென்று இடி முழக்கம் ஏற்பட்டு அனைவரும் மூர்ச்சையானார்கள.
அதற்கு மூஸா நபி, “இறைவா! நீ நாடியிருந்தால் என்னையும் அவர்களையும் இதற்கு முன்னரே அழித்திருக்கலாம். எங்களிலுள்ள அறிவிலிகள் செய்த குற்றத்திற்காக எங்கள் அனைவரையும் நீ அழித்து விடுகிறாயா? எனினும் இது எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசோதனையே தவிர வேறு எதுவும் இல்லை என்பதை நாங்கள் உணர்கிறோம்.
சிந்தித்துச் செயலாற்ற முன்வராதவர்களை நீ வழி தவறச் செய்கிறாய். ஆக்கப்பூர்வமாக சிந்தித்து படிப்பினை பெற நாடுவோருக்கு நேர்வழியை காட்டுகிறாய். உன்னுடைய வழிகாட்டுதலே எங்கள் உயிர் நாடி. அதைப் பின்பற்றுவதைக் கொண்டே எங்களுக்குப் பாதுகாப்பான வாழ்க்கை கிடைக்கும். உன் கிருபை எங்கள் மீது எப்போதும் இருக்கவே நாடுகிறோம். எனவே எங்களுக்குப் பாதுகாப்பான வாழ்க்கை கிடைக்க வழி காட்டுவதில் உன்னைவிட சிறந்தவன் வேறு யாரும் இலர்” என்று பிரார்த்தித்தார்.
அதாவது சாதாரண இடி முழக்கத்தையே தாங்கிக் கொள்ளும் சக்தி பெறாதவர்களுக்கு சகல வல்லமையும் பெற்றுத் திகழும் அல்லாஹ்வைக் கண் கூடாகக் காண்பது எப்படி?
இரண்டாவதாக அச்சமுதாயத்தவர்களில் எந்த அளவிற்கு மன வலிமை குன்றி இருந்தது என்பதையும் இது நமக்கு எடுத்துக்காட்டுகிறது. பொது வாழ்வில் பங்கெடுக்கும் போது பல இக்கட்டான சூழ்நிலைகளைச் எதிர்கொள்ள வேண்டி வரும். அதற்கு தைரியமும் மனவலிமையும் நிதானமும் அவசியமாகின்றன. தற்சமயம் அம்மக்களிடத்தில் அவை இருந்ததாக தெரிவதில்லை. அதற்காகத் தக்கப் பயிற்சி அளித்தல் தேவை.
மூன்றாவதாக அவர்கள் இறைவனைக் கண்டால்தான் மூஸாவின் மீது நம்பிக்கை கொள்வோம் என்று நிபந்தனையிட்டுக் கூறியபோதே அவர்களை அழித்திருக்கலாம். ஆனால் அவர்களை அழித்துவிட அல்லாஹ் நாடவில்லை. தங்கள் நிலைமையை அவர்களுக்கு எடுத்துக்காட்டி அவர்களை புரியவைக்க வேண்டும் என்பதே அந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
۞ وَٱكْتُبْ لَنَا فِى هَٰذِهِ ٱلدُّنْيَا حَسَنَةًۭ وَفِى ٱلْءَاخِرَةِ إِنَّا هُدْنَآ إِلَيْكَ ۚ قَالَ عَذَابِىٓ أُصِيبُ بِهِۦ مَنْ أَشَآءُ ۖ وَرَحْمَتِى وَسِعَتْ كُلَّ شَىْءٍۢ ۚ فَسَأَكْتُبُهَا لِلَّذِينَ يَتَّقُونَ وَيُؤْتُونَ ٱلزَّكَوٰةَ وَٱلَّذِينَ هُم بِـَٔايَٰتِنَا يُؤْمِنُونَ.
7:156. மேலும் மூஸா நபி இறைவனிடம், “இவ்வுலகின் நிகழ்கால சந்தோஷங்களும் வருங்கால நிலையான சந்தோஷங்களும் எங்களுக்குக் கிடைத்திட வழி ஏற்படுத்துவாயாக. நிச்சயமாக எங்கள் வாழ்வின் ஒவ்வொரு விஷயத்திலும் உன்னுடைய வழிகாட்டுதலையே முன் நோக்குகிறோம்” என்று பிரார்த்தித்தார்.
அதற்கு இறைவன், “நம்மிடமிருந்து கிடைக்கின்ற வேதனைகள் எல்லாம் நாம் ஏற்கனவே நிர்ணயித்தபடி நம் வழிகாட்டுதலுக்கு எதிராகச் செயல்படுபவர்களுக்குத் தான் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மற்றபடி என் அருட்கொடைகள் யாவும் அனைவருக்கும் பொதுவானவையே ஆகும். எந்தச் சமுதாயம் நம் வழிகாட்டுதலை முழு மனதோடு ஏற்று அதைப் பேணி நடந்து, சமுதாய மேம்பாட்டிற்காக ஆக்கப்பூர்வமான நலத்திட்டங்களைத் தீட்டி அதற்காக செலவிடுமோ, அவர்களுக்குத் தான் உங்கள் பிரார்த்தனையின் படி நிகழ்கால உலக ஆதாயங்களும், வருங்கால நிலையான பலன்களும் கிடைக்க வழிகள் பிறக்கும்” என்று இறைவனிடமிருந்து பதில் வந்தது.
இவை எல்லாம் உலகில் நடந்த உண்மை வரலாறாகும். உலகிலுள்ள ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் இறைவழிகாட்டுதல்கள் கிடைத்து வந்தன (பார்க்க 14:4). மேலும் இறைத்தூதர்கள் அயராது பாடுபட்டு சமுதாய சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து சிறந்த சமுதாயமாக உறுவாக்கிச் சென்றார்கள். மூஸா நபியும் அதே போன்று அரும்பாடுபட்டு அந்நாட்டு மக்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவந்தார். (பார்க்க 7:137) அதே அடிப்படையைக் கொண்ட இந்தக் குர்ஆனும் முஹம்மது நபி மூலம் இறக்கியருளப்பட்டது. நபித்துவம் கிடைப்பதற்கு முன் அவர் எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்தார் (பார்க்க 29:48).
ٱلَّذِينَ يَتَّبِعُونَ ٱلرَّسُولَ ٱلنَّبِىَّ ٱلْأُمِّىَّ ٱلَّذِى يَجِدُونَهُۥ مَكْتُوبًا عِندَهُمْ فِى ٱلتَّوْرَىٰةِ وَٱلْإِنجِيلِ يَأْمُرُهُم بِٱلْمَعْرُوفِ وَيَنْهَىٰهُمْ عَنِ ٱلْمُنكَرِ وَيُحِلُّ لَهُمُ ٱلطَّيِّبَٰتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ ٱلْخَبَٰٓئِثَ وَيَضَعُ عَنْهُمْ إِصْرَهُمْ وَٱلْأَغْلَٰلَ ٱلَّتِى كَانَتْ عَلَيْهِمْ ۚ فَٱلَّذِينَ ءَامَنُوا۟ بِهِۦ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَٱتَّبَعُوا۟ ٱلنُّورَ ٱلَّذِىٓ أُنزِلَ مَعَهُۥٓ ۙ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ.
7:157. இதற்கு முன் வந்த தவ்ராத், இன்ஜீல் போன்ற வேதங்களில், இந்த இறைத்தூதரின் வருகையைப் பற்றிய குறிப்புகள் வந்திருப்பதைக் காண்பார்கள். (பார்க்க 66:6) இவர் இதற்குமுன் எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்தார். (பார்க்க 29:48) எனவே அந்த வேதங்களைப் படித்துவிட்டு உங்களிடம் இந்த வரலாற்று உண்மைகளை கூறவில்லை. இது வஹீ என்னும் இறைவழிகாட்டுதல் மூலம் அறிவிக்கப்படுவதாகும்.
எனவே யார் இவரைப் பின்பற்றுகிறார்களோ, அவர்களுக்கு இவ்வுலக நிகழ்கால வாழ்வும் வருங்கால நிலையான வாழ்வும் சிறப்பாக அமையும். ஏனெனில் இவர் ஏற்படுத்தி வரும் அமைப்பு, ஆக்கப்பூர்வமான சமூக நலத்திட்டங்களைக் கொண்டவை ஆகும்.
மேலும் திருக்குர்ஆன் எவற்றைத் தீமையான செயல்கள் என்று கோடிட்டுக் காட்டுகிறதோ, அவை சமுதாயத்தில் நடைபெறாதவாறு சட்டங்களைப் பிறப்பிக்கிறார். வாழ்வாதார விஷயங்களில் எவை ஆகுமானவை, எவை ஆகாதவை என்ற சட்டங்களையும் கொண்டுவருகிறார். சமுதாய மேம்பாட்டிற்கும் சுகாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் செயல்களுக்கு தடைஉத்தரவு பிறப்பிக்கிறார்.
அவருடைய செயல் திட்டங்கள், சமுதாயத்தில் நிகழ்ந்து வரும் தேவையற்ற சடங்கு சம்பிரதாயங்களின் சுமைகளைக் களைத்து, தீய பழக்க வழக்கங்களுக்கு மக்கள் அடிமைப்பட்டு தவிப்பதை விட்டு தடுப்பதாக உள்ளன.
எனவே எவர்கள் அதன்படி நடைமுறைப்படுத்த துணை புரிந்து கண்ணியத்துடன் தேவையான உதவிகளைச் செய்து, ஒளிமயமான மனித வாழ்விற்காக அருளப்பட்டுள்ள இறை அறிவுரைகளை பின்பற்றுகிறார்களோ, அவர்கள்தாம் தம் வாழ்வின் வெற்றி இலக்கை அடைவார்கள்.
قُلْ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنِّى رَسُولُ ٱللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا ٱلَّذِى لَهُۥ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ يُحْىِۦ وَيُمِيتُ ۖ فَـَٔامِنُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِ ٱلنَّبِىِّ ٱلْأُمِّىِّ ٱلَّذِى يُؤْمِنُ بِٱللَّهِ وَكَلِمَٰتِهِۦ وَٱتَّبِعُوهُ لَعَلَّكُمْ تَهْتَدُونَ.
7:158. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! “மனிதர்களே! நிச்சயமாக நான் உலக மக்கள் அனைவருக்காகவும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை எடுத்துரைக்கும் தூதராக வந்துள்ளேன். அகிலங்கள் அனைத்தும், இந்த பூமியும் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டிற்குள் செயல்பட்டு வருகின்றன. அவனைத் தவிர வேறு யாருடைய கட்டளைக்கும் அவை அடிபணிவதில்லை. எனவே உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் அல்லாஹ்வின் சட்ட விதிமுறைகளின்படி உயிர் வாழ்வதும், மரணிப்பதும் நடைபெற்று வருகின்றன. அதே அடிப்படையில் சமுதாயங்களின் வாழ்வும் மரணமும் நிகழ்கின்றன. எனவே மனிதர்களாகிய நீங்கள், அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று அதன்படி வாழுங்கள். அந்தக் கட்டளைகள் நபித்துவத்திற்கு முன் எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்த (பார்க்க 29:48) நபியின் மூலமாக இறக்கி அருளப்படுகின்றன. எனவே அதனடிப்படையில் அவர் கொண்டுவரும் சட்டதிட்டங்களைப் பின்பற்றுங்கள். இதுவே ஒளிமயமான வாழ்விற்கு மிகச் சரியான பாதையின் பக்கம் உங்களை அழைத்துச் செல்லும்” என்பதை அறிவித்துவிடுங்கள்.
وَمِن قَوْمِ مُوسَىٰٓ أُمَّةٌۭ يَهْدُونَ بِٱلْحَقِّ وَبِهِۦ يَعْدِلُونَ.
7:159. மூஸா நபியின் சமூகத்தார் அனைவருமே வழிகேட்டில் சென்றுவிட்டதாகக் கருத முடியாது. ஏனெனில் அவர்களில் சிலர் அல்லாஹ் காட்டி இருந்த நேரான பாதையில் நடந்து அதன்படியே மக்களையும் நேர்வழியில் வழிநடத்திச் சென்று நியாயமான முறையில் ஆட்சி செய்தவர்களும் இருந்திருக்கிறார்கள்.
وَقَطَّعْنَٰهُمُ ٱثْنَتَىْ عَشْرَةَ أَسْبَاطًا أُمَمًۭا ۚ وَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ إِذِ ٱسْتَسْقَىٰهُ قَوْمُهُۥٓ أَنِ ٱضْرِب بِّعَصَاكَ ٱلْحَجَرَ ۖ فَٱنۢبَجَسَتْ مِنْهُ ٱثْنَتَا عَشْرَةَ عَيْنًۭا ۖ قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍۢ مَّشْرَبَهُمْ ۚ وَظَلَّلْنَا عَلَيْهِمُ ٱلْغَمَٰمَ وَأَنزَلْنَا عَلَيْهِمُ ٱلْمَنَّ وَٱلسَّلْوَىٰ ۖ كُلُوا۟ مِن طَيِّبَٰتِ مَا رَزَقْنَٰكُمْ ۚ وَمَا ظَلَمُونَا وَلَٰكِن كَانُوٓا۟ أَنفُسَهُمْ يَظْلِمُونَ.
7:160. நிர்வாக வசதிக்ககாக மூஸா நபி தம் சமூகத்தவர்கள் வாழ்ந்த பிரதேசத்தைப் பன்னிரண்டு பகுதிகளாகப் (12 Districts) பிரித்தார். அவர்களுக்குத் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டபோது, அவர்கள் மூஸா நபியை அணுகி, அதற்கான ஏற்பாட்டை செய்து தரும்படி வேண்டினார்கள். அவ்வாறே இறைவனின் நியதிப்படி தண்ணீர் ஊற்று பொங்கிவரும் இடங்களை அடையாளம் காட்டினார். அவரோடு இருந்த கூட்டத்தாரிடம் பாறைகளை அகற்றிக் கிணறுகளைத் தோண்டும்படி அறிவுறுத்தினார். அவ்வாறே அவர்கள் அவற்றைத் தோண்டி எடுத்ததும், பன்னிரண்டு ஊற்றுக்கள் பொங்கி வந்தன. அவற்றைப் பிரித்து ஒவ்வொரு ஊராரும் நீர்ப் பாசனத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தினார். (பார்க்க 2:60)
அது மட்டுமின்றி பருவ கால மழையும் முறைப்படி பொழிந்து வந்தது. எனவே அவர்களுக்குத் தாராளமாக உணவு வகைகள் கிடைத்து வந்தன. அவர்களிடம், “இறைவன் அருளியுள்ள வாழ்வாதாரங்களில் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த எல்லா உணவு வகைகளையும் உண்டு மகிழுங்கள்” என்று அறிவுறுத்தினார். (பார்க்க- 2:57)
இத்தனை வசதி வாய்ப்புகளைச் செய்திருந்தும், அவர்கள் காலப் போக்கில் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி வாழ்வதை விட்டுவிட்டு, தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள். அதனால் அல்லாஹ்வுக்கு ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.
وَإِذْ قِيلَ لَهُمُ ٱسْكُنُوا۟ هَٰذِهِ ٱلْقَرْيَةَ وَكُلُوا۟ مِنْهَا حَيْثُ شِئْتُمْ وَقُولُوا۟ حِطَّةٌۭ وَٱدْخُلُوا۟ ٱلْبَابَ سُجَّدًۭا نَّغْفِرْ لَكُمْ خَطِيٓـَٰٔتِكُمْ ۚ سَنَزِيدُ ٱلْمُحْسِنِينَ.
7:161. அவர்களிடம், “அவ்வூர்களில் நிம்மதியாக வசித்திருங்கள். நீங்கள் விரும்பும் இடங்களுக்கெல்லாம் தாராளமாகச் சென்று அங்கு விளையும் ஆரோக்கியமான உணவுகளையும் உண்ணலாம் பருகலாம். ஆனால் ஒரு நிபந்தனை. உங்கள் வாழ்வின் ஒவ்வொரு விஷயத்திலும் இறைக் கட்டளைக்கு மட்டுமே தலைசாய்த்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும். இதனால் உங்களிடம் இருந்து வந்த தவறான பழக்க வழக்கங்களின் தாக்கங்களிலிருந்து நிவாரணம் பெற்று பாதுகாப்பாக வாழ வழிகள் பிறக்கும். இப்படியாக ஆக்கப்பூர்வமான நற்செயல்களைச் செய்வோருக்கு தக்க பிரதிபலன்களை கிடைக்கச் செய்வோம்” என்றுதான் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. (மேலும் பார்க்க – 2:58)
فَبَدَّلَ ٱلَّذِينَ ظَلَمُوا۟ مِنْهُمْ قَوْلًا غَيْرَ ٱلَّذِى قِيلَ لَهُمْ فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِجْزًۭا مِّنَ ٱلسَّمَآءِ بِمَا كَانُوا۟ يَظْلِمُونَ.
7:162. ஆனால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாழ்க்கை வழிகாட்டுதல்களை, காலப்போக்கில் மாற்றி அமைத்துக் கொண்டனர். இதனால் அவர்கள் சிறந்த செயல் வீரர்களாக, தலை நிமிர்ந்து வாழ்வதற்குப் பதிலாகக் கோழைகளாக சொகுசாக வாழவே முற்பட்டனர் (பார்க்க 2:61) எனவே அவர்கள் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள. அதனால் அவர்களில் செயல் வேகம் குறைந்து பலவீனர்களாகி விட்டார்கள். வானுலக ஆபத்துக்களை சமாளிக்கும் தகுதியை பெரும்பாலோர் இழந்து அழிவை சந்தித்தார்கள்.
ஆக இறைச் சட்டங்களை மீறும்போது அங்கிருக்கின்ற சட்ட ஒழுங்குகள் சீர்கெட்டு, அநியாத்ததைத் தட்டி கேட்கும் பலம் வாய்ந்த அரசமைப்பு இருப்பதில்லை. அதனால் அந்தச் சமுதாயம் அழிவை சந்திக்க நேர்கிறது. இதே போலத்தான் கடலோரம் வாழ்ந்த மீனவக் குப்பத்தைச் சேர்ந்தவர்களும் சட்டத்தை மீறி செயல்பட்டு அழிவை தேடிக் கொண்டார்கள்.
وَسْـَٔلْهُمْ عَنِ ٱلْقَرْيَةِ ٱلَّتِى كَانَتْ حَاضِرَةَ ٱلْبَحْرِ إِذْ يَعْدُونَ فِى ٱلسَّبْتِ إِذْ تَأْتِيهِمْ حِيتَانُهُمْ يَوْمَ سَبْتِهِمْ شُرَّعًۭا وَيَوْمَ لَا يَسْبِتُونَ ۙ لَا تَأْتِيهِمْ ۚ كَذَٰلِكَ نَبْلُوهُم بِمَا كَانُوا۟ يَفْسُقُونَ.
7:163. கடலோரம் வாழ்ந்த மீனவ இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி என்ன என்பதை அவர்களிடம் நீர் கேளும். அவர்களிடையே வருடத்தில் சில நாட்களுக்கு மீன் பிடிக்கத் தடை உத்தரவு இருந்து வந்தது. ஆனால் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தடை உத்தரவை மீறி, மீன் பிடிக்க ஆரம்பித்தார்கள். தடை செய்யப்பட்ட காலத்தில் மீன்களும் இயல்பாகவே கடலின் மேல்பரப்பிற்கு வந்து துள்ளி விளையாடும். மற்ற காலங்களில் அவ்வாறாக இருப்பதில்லை. இதை அறிந்த அம்மீனவர்கள் தடை உத்தரவை மீறி, மீன் பிடிக்க ஆரம்பித்தார்கள். எனவே அங்குள்ள அனைவரும் கட்டுப்பாட்டை மீறி நடக்கவே, மற்ற விஷயங்களிலும் அவ்வாறே மீறி நடந்து காலப்போக்கில் சட்ட ஒழுங்கு சீரழிந்துவிட்டது. அதனால் அவர்களுடைய குணங்கள் குரங்குகள் மற்றும் பன்றிகளைப் போன்று தரங்கெட்டுப் போனார்கள். (பார்க்க- 2:65,4:47,5:60&16:124)
وَإِذْ قَالَتْ أُمَّةٌۭ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا ۙ ٱللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًۭا شَدِيدًۭا ۖ قَالُوا۟ مَعْذِرَةً إِلَىٰ رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُونَ.
7:164. ஏற்கனவே 7:159இல் சொன்னது போல அவர்களில் நல்லவர்களும் இருந்தார்கள். அவர்கள் மக்களிடம், இறைக் கட்டளையை மீறி நடப்பதால் ஏற்படும் விபரீத விளைவுகளை எடுத்துரைத்து வந்தார்கள். இதைக் கேள்வியுற்ற சிலர் அவர்களிடம், “அல்லாஹ்வின் நியதிப்படி அழிந்து வேதனைகளுக்கு ஆளாகப் போகிறவர்களுக்கு ஏன் வீணாக உபதேசம் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “இறைவனின் கட்டளைப்படி அவர்களுக்கு நேர்வழியைக் காட்டுவது நம் மீதுள்ள கடமையாகும். எனவே நாம் நேர்வழி காட்டும் பொறுப்பை நிறைவேற்றிக் கொள்கிறோம். ஒரு வேளை அவர்கள் திருந்தி நேர்வழி பெற்றுவிடலாம் அல்லவா? எனவேதான் நாம் அவர்களுக்கு உபதேசம் செய்கிறோம்” என்று கூறினார்கள்.
அதாவது தெரிந்தோ தெரியாமலோ ஒரு சமுதாயம் தவறான வழியில் செல்கிறது என்றால் அதை அவர்களிடம் எடுத்துரைத்து சீர்திருத்துவது வேத ஞானம் பெற்றவர்களின் கடமையாகும். அவர்கள் எப்படி வேண்டுமானாலும் அழிந்து போகட்டும். நமக்கென்ன வந்தது என்று இருந்து விட்டால் நீங்கள் வேத ஞானம் பெற்றும், அதை மக்கள் நலனுக்காகப் போதிக்கவில்லை என்று பொருள்படும். (பார்க்க 3:104) எனவே அவர்களின் தீய செயல்களின் தாக்கம் உங்களுக்கும் ஏற்பட்டு நீங்களும் அழிந்து விடுவீர்கள். (2:259)
فَلَمَّا نَسُوا۟ مَا ذُكِّرُوا۟ بِهِۦٓ أَنجَيْنَا ٱلَّذِينَ يَنْهَوْنَ عَنِ ٱلسُّوٓءِ وَأَخَذْنَا ٱلَّذِينَ ظَلَمُوا۟ بِعَذَابٍۭ بَـِٔيسٍۭ بِمَا كَانُوا۟ يَفْسُقُونَ.
7:165. இறைவழிகாட்டுதல் விஷயத்தில் அலட்சியப் போக்கு ஏற்படும் போது, தீய செயலகளால் ஏற்படும் விளைவுகளை மக்களுக்கு எடுத்துரைத்து அவற்றை விட்டு தடுக்கவேண்டியது வேத ஞானம் பெற்றவர்கள் மீதுள்ள கடமையாகும். அவ்வாறு நேர்வழி காட்டுபவர்களுக்கு அல்லாஹ்வின் நியதிப்படி ஆபத்திலிருந்து பாதுகாப்பு கிடைக்க வழிகள் பிறக்கும். அதே சமயத்தில் வரம்பு மீறி அக்கிரமம் செய்துக் கொண்டிருப்பவர்கள், “மனித செயல்களுக்கு ஏற்ற இறுதி விளைவுகள்” என்ற அல்லாஹ்வின் நியதிப்படி கடுமையான வேதனைக்கு ஆளாகி விடுவார்கள்.
فَلَمَّا عَتَوْا۟ عَن مَّا نُهُوا۟ عَنْهُ قُلْنَا لَهُمْ كُونُوا۟ قِرَدَةً خَٰسِـِٔينَ.
7:166.இவ்வாறு நேர்வழி எடுத்துரைத்த போதும், வரம்பு மீறின செயல்கள் அதிகமாகிவிடவே அவர்களுடைய நிலைமையும் மோசமாகி குரங்குகள் போன்றத் தன்மை உடைய பாவிகளாக ஆகிவிடுகிறார்கள்.
وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ مَن يَسُومُهُمْ سُوٓءَ ٱلْعَذَابِ ۗ إِنَّ رَبَّكَ لَسَرِيعُ ٱلْعِقَابِ ۖ وَإِنَّهُۥ لَغَفُورٌۭ رَّحِيمٌۭ.
7:167. எனவே சட்டம் ஒழுங்கு சீர்குலையும் போது, அங்கு அநியாயமும் அக்கிரமச் செயல்களும் மலிந்து, அச்சமுதாயம் மிகவும் பலவீனம் அடைந்து வரும். இந்த பலவீனத்தைப் பயன்படுத்தி மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள், அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அவர்களை நசுக்கி விடுவார்கள். இப்படித்தான் உலகம் நிலைத்திருக்கும் நாள் வரையில் நடந்து வரும் என்று உம் இறைவன் அளித்த வாக்கு அவர்களுக்கு நினைவூட்டப் படுகிறது. தீய வழியில் செல்பவர்கள் யாரும் இறைவனின் இத்தகைய சூழ்நிலையிலிருந்து தப்ப முடியாது. அதே சமயத்தில் அவன் காட்டிய வழியில் திருந்தி ஆக்கப்பூர்வமாகச் செயல்படுபவர்களுக்கு பாதுகபாப்பான வாழ்வு நிச்சயமாக கிடைக்கும். மனிதனை உடனுக்குடன் தண்டிக்காமல், அவன் திருந்துவதற்குத் தக்க வாய்ப்பை அளிக்கும் இறைவன் மாபெரும் கிருபையாளனே. (பார்க்க 16:61)
وَقَطَّعْنَٰهُمْ فِى ٱلْأَرْضِ أُمَمًۭا ۖ مِّنْهُمُ ٱلصَّٰلِحُونَ وَمِنْهُمْ دُونَ ذَٰلِكَ ۖ وَبَلَوْنَٰهُم بِٱلْحَسَنَٰتِ وَٱلسَّيِّـَٔاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ.
7:168. மேற்சொன்ன இறைவன் நிர்ணயித்த விதிமுறைகளின் படி, அநியாயக்கார கூட்டம் (7:164) பல பிரிவினர்களாகப் பிரிந்து சிதறித் திரியும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அப்பிரிவுகளில் நல்லவர்களும் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பல சந்தோஷங்கள் கிடைத்தன. அவர்களில் தவறான செயல்களில் நிலைத்தவர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் பல வேதனைகளைச் அனுபவித்து அழிந்தனர். இப்படியாக நன்மையும் தீமையும் ஏற்பட வைப்பதன் நோக்கமே அவர்கள் நேர்வழி பெற்று திருந்துவதற்காக வாய்ப்பளிப்பதே ஆகும். அவர்களை ஒரே அடியாக அழித்து விடுவது அல்லாஹ்வின் நோக்கமல்ல. (பார்க்க 16:61)
சிந்தனையாளர்களே! மீன் பிடிக்க தடை உத்தரவை மீறிய ஒரே ஒரு குற்றத்திற்காக அவர்களை அல்லாஹ் இழி நிலைக்குத் தள்ளிவிடவில்லை. அந்தத் தடை உத்தரவை மீறியதால் சமுதாயத்தில் இருந்த மற்ற கட்டுப்பாடுகளும் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ந்து விட்டன. இறுதியில் அனைவருமே ஒருவருக்கொருவர் போட்டி பொறாமை ஏற்பட்டு இறுதியில் கலகம் செய்து அங்கு அக்கிரமங்களும் அநியாயங்களும் தலை விரித்து ஆடின. இதனால் சமுதாயம் பலவீனம் அடைந்து எல்லா ஆற்றல்களையும் இழந்துவிட்டது. இன்றைய உலகிலும் இவ்வாறு நடப்பதையே காண்பீர்கள்.
فَخَلَفَ مِنۢ بَعْدِهِمْ خَلْفٌۭ وَرِثُوا۟ ٱلْكِتَٰبَ يَأْخُذُونَ عَرَضَ هَٰذَا ٱلْأَدْنَىٰ وَيَقُولُونَ سَيُغْفَرُ لَنَا وَإِن يَأْتِهِمْ عَرَضٌۭ مِّثْلُهُۥ يَأْخُذُوهُ ۚ أَلَمْ يُؤْخَذْ عَلَيْهِم مِّيثَٰقُ ٱلْكِتَٰبِ أَن لَّا يَقُولُوا۟ عَلَى ٱللَّهِ إِلَّا ٱلْحَقَّ وَدَرَسُوا۟ مَا فِيهِ ۗ وَٱلدَّارُ ٱلْءَاخِرَةُ خَيْرٌۭ لِّلَّذِينَ يَتَّقُونَ ۗ أَفَلَا تَعْقِلُونَ.
7:169. இப்படியாகத் தான் இவ்வுலகில் காலம் காலமாக நடந்து வந்ததுள்ளது. ஒரு சமுதாயத்தின் அழிவிற்குப் பின் மற்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சிப் பொறுப்பை எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் இறை வேதங்களைப் பின்பற்றி சமுதாயத்தை வழிநடத்திச் செல்லும் தகுதியைப் பெற்றார்கள்.
அதன்பின் அவர்களுக்கு வசதி வாய்ப்புக்கள் பெருகி வரும் போது, தம் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள, தமக்குச் சாதகமாக, சட்டங்களில் திருத்தங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். அதனால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் எண்ணிக் கொண்டார்கள். இது போன்று வேறு ஆதாயங்களும் அவர்களுக்குக் கிடைத்தால், அதற்குத் தகுந்தாற்போல் சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டு வருவார்கள்.
இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக இறைச் சட்டங்களுக்கு மாற்றமான சட்டங்களைப் நடைமுறைப்படுத்த ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் அவர்களிடம் இறைவன் இறைத்தூதர்கள் மூலம் வாங்கிக் கொண்ட வாக்குறுதி என்ன? அல்லாஹ்வின் வழிகாட்டுதலில் உண்மையைத் தவிர வேறு எதையும் இணைத்து மக்கள் மீது திணிக்கக் கூடாது என்பதே. அதை அவர்கள் படித்தும் வருகிறார்கள். படித்து என்ன பயன்? அதை அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை.
தற்காலிக சொகுசு வாழ்வின் சந்தோஷங்களில் மூழ்கி இருக்கிறார்கள். வருங்கால நிலையான பலன்களைப் பற்றி சிந்திப்பதே இல்லை. வருங்கால நிலையான வாழ்வைப் பாதிக்கும் எந்தச் செயலையும் சரியானவையாகக் கருத முடியாது. அதில் எவ்வளவுதான் தற்காலிக பலன்கள் இருந்தாலும் வருங்கால நல வாழ்வைப் பற்றி சிந்தித்து அவற்றை புறந்தள்ளி விடவேண்டும். இதை அவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டாமா?
وَٱلَّذِينَ يُمَسِّكُونَ بِٱلْكِتَٰبِ وَأَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ إِنَّا لَا نُضِيعُ أَجْرَ ٱلْمُصْلِحِينَ.
7:170. எந்தச் சமுதாயம் இறைவன் அளித்த வேத அறிவுரைகளை உறுதியாகப் பின்பற்றி அதன்படி சட்ட ஒழுங்கை முறையாகக் கடைப்பிடித்து வருமோ, அவர்களுக்கு சிறப்பான வாழ்க்கை வசதிகள் கிடைக்க வழிகள் பிறக்கும். இப்படியாக அவர்கள் சமுதாய மேம்பாட்டிற்காக செய்து வரும் ஆற்றல்மிக்க செயல்கள் எதுவும் வீணாகிப் போகாது.
அதாவது மனித ஒழுக்க மாண்புகளைப் பற்றி அக்கறைக் கொள்ளாமல் பொருளாதார வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தினால் அது இறுதியில் அழிவைச் சந்திக்க நேரிடும்.
۞ وَإِذْ نَتَقْنَا ٱلْجَبَلَ فَوْقَهُمْ كَأَنَّهُۥ ظُلَّةٌۭ وَظَنُّوٓا۟ أَنَّهُۥ وَاقِعٌۢ بِهِمْ خُذُوا۟ مَآ ءَاتَيْنَٰكُم بِقُوَّةٍۢ وَٱذْكُرُوا۟ مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ.
7:171. அதே போல் பனீ இஸ்ராயீல் சமுதாயத்தினரிடமும் வாக்குறுதி வங்கினோம் (பார்க்க 2:63) அவர்கள் வாழ்ந்த உயரமான மலைப் பகுதிகளில் அதிர்ச்சி ஏற்பட்ட போது, அவர்கள் மிகவும் நடுங்கிப் போனார்கள். உறங்கிக் கொண்டிருந்த சமுதாயத்தை தட்டி எழுப்பி அவர்களுள் அது விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவே இருந்தது. இவை யாவும் இவ்வுலகில் நடப்பவையே ஆகும். இதை எதிர் கொள்ளும் மன வலிமை வளர வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு அளிக்கப்பட்ட வேத அறிவுரைகளை உறுதிபட பின்பற்றி வரும்படி நினைவூட்டுவதாக இருந்தது. அதிலுள்ள அறிவுரைகளைச் சிந்தித்து அதன்படி செயலாற்றியதால் அவர்களுள் தைரியமும் செயல்வேகமும் கூடி வந்தன.
وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنۢ بَنِىٓ ءَادَمَ مِن ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَىٰٓ أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ ۖ قَالُوا۟ بَلَىٰ ۛ شَهِدْنَآ ۛ أَن تَقُولُوا۟ يَوْمَ ٱلْقِيَٰمَةِ إِنَّا كُنَّا عَنْ هَٰذَا غَٰفِلِينَ.
7:172. இப்படியாக மனித இனம் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றி மறைந்து பல இன்னல்களையும் துயரங்களையும் கடந்து, படிப்படியாக முன்னேறியும் வந்தன. அவர்களை வழிநடத்திச் சென்ற தலைவர்கள் அவர்களுக்குப் பின் நிர்வாகப் பொறுப்பை எடுத்துக் கொள்பவர்களிடம், பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்கள். அதில், “உங்களைப் பரிபாலித்து பாதுகாத்து வருவது உங்கள் இறைவன்தானே” என்று கேட்க அவர்கள், “அது உண்மையே என்று உறுதி அளிப்பார்கள். மேலும், “இறைவனின் வழிகாட்டுதலுக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்களாக நாங்கள் சான்று பகர்வோம்” என்றும் அவர்கள் உறுதி அளிப்பார்கள். (பார்க்க 3:81) இதைப் பற்றி எல்லாம் இப்போது அவர்கள் மறந்து விட்டிருப்பார்கள். எனவே இப்படி காலம் காலமாக நடந்து வந்த உண்மையைப் பற்றி அவர்களுக்கு நினைவூட்டுங்கள். காரணம், நாளைய தினம் அவர்களுக்குப் பிரச்னைகள் உருவெடுக்கும் போது, நாங்கள் இதைப்பற்றி அறியாமல் பராமுகமாய் இருந்துவிட்டோம் என்று யாரும் குறை சொல்லக்கூடாது அல்லவா?
أَوْ تَقُولُوٓا۟ إِنَّمَآ أَشْرَكَ ءَابَآؤُنَا مِن قَبْلُ وَكُنَّا ذُرِّيَّةًۭ مِّنۢ بَعْدِهِمْ ۖ أَفَتُهْلِكُنَا بِمَا فَعَلَ ٱلْمُبْطِلُونَ.
7:173. அல்லது அவர்கள், “அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு இணையாக வேறு வழிமுறைகளை எல்லாம் கொண்டு வந்தது எங்கள் மூதாதையர்களே. நாங்கள் எதுவும் மாற்றங்களைக் கொண்டு வரவில்லை. நாங்களோ அவர்களைப் பின்பற்றி வந்த சந்ததிகளே ஆவோம். அந்த வழிகெட்டவர்கள் செய்த தவறுகளுக்காக எங்களை நீ அழித்து விடலாமா?” என்று அவர்கள் அல்லாஹாவிடம் முறையிடலாம் அல்லவா? இப்படி ஒரு பேச்சுக்கு இடம் இருக்கக் கூடாது என்பதற்காகவே இந்த வழிகாட்டுதல்கள் மீண்டும் இறக்கி அருளப்படுகின்றன.
அதாவது ஒருவர் தன்னுடைய அறியாமைக்கு முன்னோர்களை சாக்காகச் சொல்லி தப்பிக்க முடியாது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருக்கும் இறைவன் அறிவாற்றலையும், சிந்தனா சக்தியையும் உடல் வலிமையையும் அளித்துள்ளான். இறை வழிகாட்டுதல்கள் அடங்கிய குர்ஆன் உலகம் முழுவதும் அவரவர் மொழியில் பரவி உள்ளது. அதை ஆய்வு செய்து நேர்வழி பெற வழி செய்வது ஒவ்வொரு ஆலிம்களின் பொறுப்பாகும். நேர்வழி பெற முயற்ச்சிகளை மேற்கொள்ள வேண்டியது ஒவ்வொருவருடைய கடமையும் ஆகும்.
وَكَذَٰلِكَ نُفَصِّلُ ٱلْءَايَٰتِ وَلَعَلَّهُمْ يَرْجِعُونَ.
7:174. அவர்கள் தம் தவறான செயல்களை விட்டுவிட்டு அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் பக்கம் திரும்புவதற்காக இப்படிப்பட்ட விளக்கங்களை நாம் அளிக்கிறோம்.
وَٱتْلُ عَلَيْهِمْ نَبَأَ ٱلَّذِىٓ ءَاتَيْنَٰهُ ءَايَٰتِنَا فَٱنسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ ٱلشَّيْطَٰنُ فَكَانَ مِنَ ٱلْغَاوِينَ.
7:175. மேலும் அவர்களுக்கு ஒரு சமுதாயத்தினரின் வரலாற்றை உதாரணமாக மேற்கோள்காட்டி எடுத்துரையுங்கள். அச்சமுதாயத்தினருக்கு ஆதாரப்பூர்வமான இறைவழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டிருந்தன. அவற்றை சில காலம் பின்பற்றி சிறப்பாக வாழ்ந்தார்கள். ஆனால் காலப்போக்கில் அவர்கள் அவற்றை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக நழுவிவிட்டார்கள். அதன் விளைவாக சுயநலமும் ஆணவப்போக்கும் கர்வமும் கொண்ட ஷைத்தானிய குணங்கள் அவர்களைப் பீடித்துக்கொண்டன. அதனால் அவர்கள் வழி தவறிச் செல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
وَلَوْ شِئْنَا لَرَفَعْنَٰهُ بِهَا وَلَٰكِنَّهُۥٓ أَخْلَدَ إِلَى ٱلْأَرْضِ وَٱتَّبَعَ هَوَىٰهُ ۚ فَمَثَلُهُۥ كَمَثَلِ ٱلْكَلْبِ إِن تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَث ۚ ذَّٰلِكَ مَثَلُ ٱلْقَوْمِ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا ۚ فَٱقْصُصِ ٱلْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ.
7:176. அவர்கள் அல்லாஹ்வின் நாட்டத்திற்கு ஏற்ப செயல்பட்டிருந்தால், அவர்கள் மிகவும் உயர்ந்த நிலைக்குச் சென்றிருப்பார்கள். ஆனால் அவர்களோ வாழ்வின் உயர் இலட்சியங்களுக்குப் பதிலாக தற்காலிக சொகுசு வாழ்வின் பக்கமே சாய்ந்து, தம் மன இச்சைக்கு அடிமையாகி விட்டார்கள்.
இதனால் அவர்களுடைய நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி, பிடுங்கித் தின்னும் நாய்களைப் போன்று தாழ்ந்து போனார்கள். நாய்களை நீங்கள் விரட்டினாலும் விரட்டாவிட்டாலும் அவை நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டு திருப்தியடையாமல் அலையும். அதுபோன்று அவர்களுக்கு மனநிறைவு ஒருபோதும் ஏற்படாது. இதனால் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு கலகம், கலவரம் மூண்டு அழிவுக்குக் காரணமானார்கள்.
ஆக இறைவழிகாட்டுதல்கள் என்பதெல்லாம் பொய்யெனக் கூறி தம் மனஇச்சைப்படி நடக்கும் சமுதாயத்தவர்களுக்கு இதுவே ஒரு முன் உதாரணமாகும். ஆகவே உலக மக்கள் சிந்தித்துணரும் பொருட்டு இந்த வரலாற்றுச் சான்றுகளை உதாரணமாக மேற்கோள்காட்டி எடுத்துரையுங்கள்.
سَآءَ مَثَلًا ٱلْقَوْمُ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا وَأَنفُسَهُمْ كَانُوا۟ يَظْلِمُونَ.
7:177. மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறோம். அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் எல்லாம் சரி வராது எனக் கூறி, தம் மனஇச்சையின்படி செயல்படும் சமுதாயங்களின் உதாரணம் மிகவும் கெட்டதாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்படிப்பட்டவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார்களே அன்றி அல்லாஹ் அவர்களுக்கு அணுவளவும் அநியாயம் செய்வதில்லை (பார்க்க 4:40)
مَن يَهْدِ ٱللَّهُ فَهُوَ ٱلْمُهْتَدِى ۖ وَمَن يُضْلِلْ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْخَٰسِرُونَ.
7:178. எனவே எந்தச் சமுதாயம் அல்லாஹ் காட்டிய நேர்வழியில் நிலைத்திருந்து, அதன்படி செயல்படுகின்றதோ, அதுவே நேர்வழியில் இருப்பதாகப் பொருள்படும். மாறாக எந்தச் சமுதாயம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டு தன் மனஇச்சையின்படி செயல்படுமோ, அது இறுதியில் முற்றிலும் நஷ்டமடைந்தோர் பட்டியலில் இடம் பெறும்.
وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًۭا مِّنَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ ۖ لَهُمْ قُلُوبٌۭ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌۭ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ ءَاذَانٌۭ لَّا يَسْمَعُونَ بِهَآ ۚ أُو۟لَٰٓئِكَ كَٱلْأَنْعَٰمِ بَلْ هُمْ أَضَلُّ ۚ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْغَٰفِلُونَ.
7:179. இத்தகையவர்களின் செயல்களைப் பார்த்தால் நரகத்திற்கென்றே படைக்கப்பட்டவர்கள் போல் காணப்படுவார்கள். காரணம்: நகர்ப்புற மக்களும் சரி, கிராமவாசிகளும் சரி. அவர்களுக்குச் சிந்தனா சக்திகள் இருந்தும் அவற்றைக் கொண்டு நல்லுணர்வு பெற நாடுவதே இல்லை. அவர்களுக்குக் கண்கள் இருந்தும் அவற்றைக் கொண்டு உலகில் நடைபெற்று வரும் அநியாயத்தைப் பற்றி பார்ப்பதே இல்லை. அவர்களுக்கு காதுகள் இருந்தும் அவற்றைக் கொண்டு இறை அறிவுரைகளைக் கேட்க நாடுவதே இல்லை.
இத்தகையவர்கள் கால்நடைகளைப் போன்றவர்களே ஆவார்கள். இல்லை. அவையாவது தம் இயல்பின் அடிப்படையில் சிறப்பாக வாழ்ந்து வருகின்றன. இவர்களுக்கு அதுவும் கிடையாது. எனவே இவர்கள் அவற்றைவிட மோசமானவர்கள் என்றே சொல்லலாம். இத்தகையவர்களே இறைவழிகாட்டுதலில் அலட்சியம் செய்பவர்கள் ஆவார்கள்.
எனவேதான் அவர்களைக் கண்டால் நரகத்திற்கென்றே படைக்கப்பட்டவர்கள் போன்று காணப்படுகிறார்கள். இதிலிருந்து வெளிவர வழிகள் உண்டா?
وَلِلَّهِ ٱلْأَسْمَآءُ ٱلْحُسْنَىٰ فَٱدْعُوهُ بِهَا ۖ وَذَرُوا۟ ٱلَّذِينَ يُلْحِدُونَ فِىٓ أَسْمَٰٓئِهِۦ ۚ سَيُجْزَوْنَ مَا كَانُوا۟ يَعْمَلُونَ.
7:180. இத்தகைய வேதனைமிக்க வாழ்விலிருந்து விடுபட, அல்லாஹ்வின் அழகிய குணநலன்களை மனித அளவில் சமுதாய மக்களுள் வளர ஆவன செய்ய வேண்டும். அல்லாஹ்வின் குணநலன்களே உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில குணநலங்களை மட்டும் எடுத்துக் கொண்டு அதைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவோரை விட்டு விலகி இருங்கள். அவர்களுடைய செயல்களுக்குத் தக்க விளைவுகளை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள்.
அதாவது அல்லாஹ் ஞானமிக்கவன், அன்புடையோன், நீதிமிக்கவன், உணவளிப்பவன், உயிர் கொடுப்பவன், நேர்வழி காட்டுபவன், கிருபை மிக்கவன் என பல அழகிய சிறப்பு குணநலன்கள் முழுமையான நிலையில் உள்ளன.
அல்லாஹ்வின் படைப்பான மனிதனிடத்திலும் இந்த குணநலன்கள் வளராத நிலையில் இருக்கின்றன. அவற்றைச் சரிசமமாக மக்களுள் வளரச் செய்வது சமுதாய அமைப்பின் தலையாய கடமையாகும்.
சில சமுதாயத்தவர்கள் அல்லாஹ்வின் சில குணநலன்களை மட்டும் தவறாக எடுத்துரைத்து நேர்வழியிலிருந்து விலகி விடுகிறார்கள். உதாரணத்திற்கு அன்பே கடவுள் என்று சொல்லிக்கொண்டு அன்பு, காதல், களியாட்டம் என்று வழிதவறி சென்று விடுகிறார்கள். சிலர் இசையே (Music) கடவுள் என்று கூறி, ஆட்டம் பாட்டம் என சமுதாயத்தைக் கெடுத்து விடுவார்கள். இவையெல்லாம் தவறான வழிமுறைகளாகும்.
அதுமட்டுமின்றி அல்லாஹ்வின் குண நலன்களை சரிசமமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் சொல்லப்படுகிறது. அதாவது அன்பு, பாசம் என்ற குணநலம், நீதி நியாயம் என்ற குணநலன்களுக்குக் குறுக்கீடாக இருக்கக் கூடாது. அல்லாஹ்வின் சிறப்புப் பண்புகள் மனிதனிடத்தில் மனித அளவில் சரிசமமாக வளர வேண்டும். (மேலும் பார்க்க 2:138)
وَمِمَّنْ خَلَقْنَآ أُمَّةٌۭ يَهْدُونَ بِٱلْحَقِّ وَبِهِۦ يَعْدِلُونَ.
7:181. நாம் படைத்துள்ள சமுதாயங்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் மனித வாழ்வின் சரியான பாதையைக் கடைப்பிடிப்பதுடன் மக்களுக்கும் நேர் வழியை காட்டி வருகிறார்கள். அதே அடிப்படையில் நீதமாகவும் செயல்படுகிறார்கள். அத்தகையவர்களே நேர்வழி பெற்றவர்கள் ஆவர்.
وَٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا سَنَسْتَدْرِجُهُم مِّنْ حَيْثُ لَا يَعْلَمُونَ.
7:182. இதற்கு மாறாக இறைவழிகாட்டுதல்கள் என்பதெல்லாம் சரியில்லை எனக் கூறி, தம் மனோ இச்சையின்படி செயல்படும் சமுதாயங்களும் இருக்கின்றன. அங்கு சீர்கேடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் உணரா வண்ணம் வளர ஆரம்பிக்கும்.
وَأُمْلِى لَهُمْ ۚ إِنَّ كَيْدِى مَتِينٌ.
7:183. ஆக அவர்கள் செய்யும் தீய செயல்களுக்கு உடனே தண்டனை கிடைப்பதில்லை (பார்க்க 16:61) அவர்கள் திருந்தி வாழ தக்க வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது அல்லாஹ்வின் செயல்திட்டமாகும். (பார்க்க 7:164). இந்தச் செயல் திட்டம் நிரந்தரமான ஒன்றாகும்.
أَوَلَمْ يَتَفَكَّرُوا۟ ۗ مَا بِصَاحِبِهِم مِّن جِنَّةٍ ۚ إِنْ هُوَ إِلَّا نَذِيرٌۭ مُّبِينٌ.
7:184. மக்களே! இந்த அளவிற்கு அறிவுப்பூர்வமாகவும், வரலாற்று ஆதாரங்களுடன் இறைவழிகாட்டுதல்களை எடுத்துரைத்தும், நீங்கள் சிந்தித்துப் பார்க்க மாட்டீர்களா? உங்களுடன் வாழும் இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவர் மனநிலை சரியில்லாதவரா? உங்களுடைய தவறான செயல்களின் விளைவுகள் என்னவாகும் என்பதை எடுத்துரைத்து, அவற்றைத் தவிர்த்து முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவே அவர் உங்களை அறிவுறுத்துகிறார் அல்லவா? இப்படி எடுத்துரைப்பவர் மனநிலை சரியில்லாதவர் ஆவாரா?
أَوَلَمْ يَنظُرُوا۟ فِى مَلَكُوتِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا خَلَقَ ٱللَّهُ مِن شَىْءٍۢ وَأَنْ عَسَىٰٓ أَن يَكُونَ قَدِ ٱقْتَرَبَ أَجَلُهُمْ ۖ فَبِأَىِّ حَدِيثٍۭ بَعْدَهُۥ يُؤْمِنُونَ.
7:185. மேலும் பிரபஞ்சப் படைப்புகளையும் பூமியையும் அவற்றில் படைக்கப்பட்டுள்ள எண்ணற்ற படைப்புகளையும் அவர்கள் ஆராய்ந்து பார்ப்பதில்லையா? அவை எல்லாமே முறைப்படி நடந்து வருவதைக் கவனிப்பதில்லையா? ஒரு விதை செடியாகி மரமாக வளர்ந்து காய்ப்பதற்குக் காலஅளவு நிர்ணயிக்கப்பட்டது போல், ஒவ்வொரு படைப்பும் வளர்ந்து இறுதி இலக்கை அடைய காலஅளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதை கவனிப்பதில்லையா? அதே போல மனித செயல்களுக்கு ஏற்ற விளைவுகள் தோற்றத்திற்கு வருவதற்கும் காலஅளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதையும் அறிந்து, முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டாமா? இந்த அளவிற்குத் தெளிவாக எடுத்துரைத்தும் நம்பிக்கை கொள்ளவில்லை என்றால் வேறு எந்தப் பேச்சை இவர்கள் நம்பி ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள்?
مَن يُضْلِلِ ٱللَّهُ فَلَا هَادِىَ لَهُۥ ۚ وَيَذَرُهُمْ فِى طُغْيَٰنِهِمْ يَعْمَهُونَ.
7:186. இந்த அளவிற்கு நடந்த மற்றும் நடக்கப்போகும் விஷயங்களைத் தெளிவாக்கிய பின்பும், தவறான வழியில் செல்ல நாடுவோரை நேரான வழியில் செலுத்த எவராலும் முடியாது. அல்லாஹ்வின் நியதிப்படி அவர்கள் தவறான வழியிலேயே தட்டழிந்து திரியுமம்படி ஆகிவிடும்.
يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا ۖ قُلْ إِنَّمَا عِلْمُهَا عِندَ رَبِّى ۖ لَا يُجَلِّيهَا لِوَقْتِهَآ إِلَّا هُوَ ۚ ثَقُلَتْ فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ لَا تَأْتِيكُمْ إِلَّا بَغْتَةًۭ ۗ يَسْـَٔلُونَكَ كَأَنَّكَ حَفِىٌّ عَنْهَا ۖ قُلْ إِنَّمَا عِلْمُهَا عِندَ ٱللَّهِ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ.
7:187. “தீய செயல்களின் விளைவாக அழிவுகள் ஏற்படும் என்று அடிக்கடி சொல்லி வருகிறீரே, அந்தத் தருணம் எப்போது வரும?” என்று நிராகரிப்பவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். அதன் ஞானம் இறைவனிடத்தில் இருப்பதாகக் கூறிவிடுங்கள். அது ஏற்படும் நேரத்தைக் கணித்து எவராலும் வெளிப்படுத்த இயலாது.
அந்த அழிவுகள் தோற்றத்திற்கு வரும் கால கட்டத்தில் ஆட்சி அதிகார உச்சத்தில் இருப்பவர்களுக்கும், பூமி தமக்கே சொந்தம் என உரிமை கொண்டாடும் செல்வந்தர்களுக்கும் பெரும் சுமையாவே இருக்கும். இவ்வாறு நடக்கும் என்று அவர்கள் சற்றும் எதிர் பார்த்திருக்கவே மாட்டார்கள்.
அந்த நேர காலத்தை நீர் முற்றிலும் அறிந்தவராக உம்மைக் கருதி அவர்கள் அதைப் பற்றி கேட்கிறார்கள். அதன் ஞானம் நிச்சயமாக அல்லாஹ்விடமே உள்ளது. ஆக மனிதர்களில் பெரும்பாலோர் அதை அறிய மாட்டார்கள் என்பதை அவர்களுக்கு அறிவித்துவிடுங்கள்.
சிந்தனையாளர்களே! இந்த வாசகத்தில் வரும் வானங்கள் மற்றும் பூமி என்ற வார்த்தைகளுக்கு ஆட்சி அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களுக்கும், பூமியை தம் கைவசப்படுத்தி ஆட்டிப் படைக்கும் செல்வந்தர்களுக்கும் உவமானமாகக் கூறியுள்ளோம். ஏனெனில் இவையாவும் இவ்வுலகில் காலம் காலமாக நடந்து வருபவையே ஆகும்.
இப்படி ஒரு நிலை ஏற்படுவது அந்தந்த நாட்டிலுள்ள மக்களும் ஆட்சியாளர்களும் நடந்து கொள்ளும் விதத்தைப் பொறுத்தே அமையும். எந்த அளவிற்கு தீய செயல்களில் ஈடுபடுகிறார்களோ, அந்த அளவிற்கு அந்த அழிவுகள் விரைந்து வரும். இதை இறைவழிகாட்டுதலின் ஞானமுள்ளவர்களால் ஒரளவிற்குக் கணித்து கூற முடியும். மற்றபடி யாராலும் அந்த அழிவைப் பற்றி நாள் குறித்து ஒருபோதும் கூற இயலாது.
மேலும் இந்த வாசகத்தில் வரும் வானங்கள் மற்றும் பூமி என்ற வார்த்தைகளுக்கு நேரடி அர்த்தம் எடுத்துக் கொண்டால், இந்த உலகம் முடிவுக்கு வரும் கால கட்டம் என்று பொருளாகிறது. இதைப் பற்றிய ஞானத்தை அல்லாஹ் எந்த மனிதருக்கும் அளிக்கவில்லை. அது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும்.
قُل لَّآ أَمْلِكُ لِنَفْسِى نَفْعًۭا وَلَا ضَرًّا إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۚ وَلَوْ كُنتُ أَعْلَمُ ٱلْغَيْبَ لَٱسْتَكْثَرْتُ مِنَ ٱلْخَيْرِ وَمَا مَسَّنِىَ ٱلسُّوٓءُ ۚ إِنْ أَنَا۠ إِلَّا نَذِيرٌۭ وَبَشِيرٌۭ لِّقَوْمٍۢ يُؤْمِنُونَ.
7:188. ஆக உலகம் முடிவுக்கு வரும் நேரத்தைக் குறித்துக் கொடுக்கும்படி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். “ஆனால் என்னைப் பற்றியே நாளைய தினம் என்ன நடக்கும் என்று கணித்துக் கூற இயலாது. (பார்க்க 46:9) நான் எதைச் செய்வதாக இருந்தாலும் அல்லாஹ்வின் செயல்திட்டப்படியே நடந்து என் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியுமே அன்றி நானாகவே எந்த நன்மையோ தீமையோ ஏற்படுத்திக் கொள்ள சக்தி இல்லாதவன். மேலும் மறைவானவைப் பற்றிய ஞானமும் என்னிடம் இல்லை. அவ்வாறு இருந்திருந்தால் பல நன்மைகளை எனக்காகத் தேடிக்கொண்டிருப்பேன். அவ்வாறு செய்திருந்தால் என்னை எந்தத் தீங்கும் தீண்டியிராது.
ஆனால் என் வாழ்வின் இலட்சியம் அதுவல்ல. அது எனக்கு அளிக்கப்பட்டுள்ள கடமையும் அல்ல. மாறாக இறைவழிகாட்டுதலை ஏற்று நடக்கும் சமூகத்தவர்களுக்கு தவறான செயல்கள் எவை என்பதையும், அதனால் ஏற்படவிருக்கும் தீய விளைவுகளை என்னவென்பதையும் எடுத்துரைத்து முன் எச்சரிக்கை செய்வதுமே ஆகும். மேலும் திருக்குர்ஆன் காட்டும் வழியில் ஆக்கப்பூர்வமான நற்செயல்களைச் செய்து வருவதால் ஏற்படும் நற்பலன்களைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதும் என் மீதுள்ள கடமையாகும்” என்று அவர்களிடம் தெளிவாக்கிவிடுங்கள்.
மேலும் நான் தன்னிச்சையாக உங்களுக்கு அறிவுரை செய்யவில்லை. மாறாக ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்கியே நான் உங்களுக்கு இந்த நல்லுபதேசங்களைச் செய்கின்றேன். ஏக இறைவன் யார் என்றால் உங்கள் அனைவரையும் ஓர் உயிர் அணுவிலிருந்து உருவாக்கி, பரிபக்குவப்படுத்தி மனிதனாகப் படைக்கும் வல்லமையுடைய அல்லாஹ்வே ஆவான்.
۞ هُوَ ٱلَّذِى خَلَقَكُم مِّن نَّفْسٍۢ وَٰحِدَةٍۢ وَجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِيَسْكُنَ إِلَيْهَا ۖ فَلَمَّا تَغَشَّىٰهَا حَمَلَتْ حَمْلًا خَفِيفًۭا فَمَرَّتْ بِهِۦ ۖ فَلَمَّآ أَثْقَلَت دَّعَوَا ٱللَّهَ رَبَّهُمَا لَئِنْ ءَاتَيْتَنَا صَٰلِحًۭا لَّنَكُونَنَّ مِنَ ٱلشَّٰكِرِينَ.
7:189. அல்லாஹ்வே உங்கள் அனைவரையும் ஓர் உயிர் அணுவிலிருந்து படைத்தான். அந்த உயிரணுக்களில் ஆண் பெண் என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஆண் பெண் ஆகிய இருவரும் இணையும்போது, அந்த உயிரணு தாயின் கர்ப்பப் பைக்குள் சென்று கருவுற்று அங்கு தங்கி வளர்கிறது. ஆரம்பத்தில் இலேசாக இருக்கும் அந்தத் துளி, வளர்ந்து சுமையாகி, அதை அந்தத் தாயும் சில காலம் சுமந்து நடமாடுகிறாள்.
அதன்பின் அந்தத் தாயும் தந்தையும், “இறைவனே! எங்களுக்கு நல்லவிதமாக எந்தக் குறையுமின்றி குழந்தை பிறக்க வழி செய்தால், நாங்கள் இருவரும் உனக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்” என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்.
فَلَمَّآ ءَاتَىٰهُمَا صَٰلِحًۭا جَعَلَا لَهُۥ شُرَكَآءَ فِيمَآ ءَاتَىٰهُمَا ۚ فَتَعَٰلَى ٱللَّهُ عَمَّا يُشْرِكُونَ.
7:190. ஆனால் அதன்பின் நடப்பது என்ன? அவர்களின் வேண்டுதலின்படி நல்லவிதமாகக் குழந்தை பிறந்த பின் அவர்கள் செய்த பிரார்த்தனைகளை எல்லாம் மறந்துவிட்டு, இறந்து போன பெரியார்களையும் அவுலியாக்களையும் அல்லாஹ்வுக்கு இணையாக எடுத்துக் கொள்கிறார்கள். அல்லாஹ்வின் அளவிலா வல்லமையோ இவர்களுடைய கற்பனைகளையும் விட மிகவும் அப்பாற்பட்டதாக உள்ளது.
أَيُشْرِكُونَ مَا لَا يَخْلُقُ شَيْـًۭٔا وَهُمْ يُخْلَقُونَ.
7:191. எப்பொருளையும் படைக்கும் ஆற்றல் இல்லாதவர்களையா இவர்கள் அல்லாஹ்வுக்கு இணையாக்குகிறார்கள்? உண்மை என்னவென்றால் அவர்கள் எல்லாம் அல்லாஹ்வின் படைப்புகளே அன்றி எதனையும் படைக்கும் ஆற்றல் உடையவர்கள் அல்லர். இதனைக் கூடவா அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை?
وَلَا يَسْتَطِيعُونَ لَهُمْ نَصْرًۭا وَلَآ أَنفُسَهُمْ يَنصُرُونَ.
7:192. அவர்கள் இணைவைக்கும் தெய்வங்கள் இவர்களுக்கு உதவி செய்வது இருக்கட்டும். அவர்கள் தமக்குத் தாமே கூட உதவி செய்துகொள்ளும் சக்தி பெற்றவர்களாக இல்லையே!
وَإِن تَدْعُوهُمْ إِلَى ٱلْهُدَىٰ لَا يَتَّبِعُوكُمْ ۚ سَوَآءٌ عَلَيْكُمْ أَدَعَوْتُمُوهُمْ أَمْ أَنتُمْ صَٰمِتُونَ.
7:193. இத்தகைய மூடநம்பிக்கையில் மூழ்கி இருப்பவர்களை இறைவழிகாட்டுதலின் பக்கம் அழைப்பு விடுத்தாலும், அவர்கள் ஒருபோதும் அதை ஏற்று பின்பற்ற மாட்டார்கள். எனவே நீங்கள் அவர்களை அழைப்பதும் அழைக்காமல் இருப்பதும் சமமேயாகும்.
إِنَّ ٱلَّذِينَ تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ عِبَادٌ أَمْثَالُكُمْ ۖ فَٱدْعُوهُمْ فَلْيَسْتَجِيبُوا۟ لَكُمْ إِن كُنتُمْ صَٰدِقِينَ.
7:194. ஆக அல்லாஹ்விற்கு இணையாக அவர்கள் யாரை உதவிக்கு அழைக்கிறார்களோ, அவர்களும் உங்களைப் போன்ற படைப்பினங்களே என்று அவர்களுக்கு விளக்கிவிடுங்கள். அதையும் மீறி அவர்கள் அதில் நிலைத்திருந்தால், “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவற்றிடம் உதவிவை நாடுங்கள். அவை பதில் அளிக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளலாம்” என்று அவர்களிடம் அறைகூவல் விடுங்கள்.
أَلَهُمْ أَرْجُلٌۭ يَمْشُونَ بِهَآ ۖ أَمْ لَهُمْ أَيْدٍۢ يَبْطِشُونَ بِهَآ ۖ أَمْ لَهُمْ أَعْيُنٌۭ يُبْصِرُونَ بِهَآ ۖ أَمْ لَهُمْ ءَاذَانٌۭ يَسْمَعُونَ بِهَا ۗ قُلِ ٱدْعُوا۟ شُرَكَآءَكُمْ ثُمَّ كِيدُونِ فَلَا تُنظِرُونِ.
7:195. மேலும் அவர்களிடம்,“ நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதி வணங்கி வருபவற்றிற்கு நடக்கக் கூடிய சக்திகள் உண்டா? அல்லது பிடிப்பதற்குரிய கைகள்தான் உண்டா? அல்லது அவற்றிற்கு பார்க்கக்கூடிய கண்கள்தான் உண்டா? அல்லது கேட்கக் கூடிய காதுகள்தான் உண்டா? இவை எல்லாம் உயிருடன் இருக்கும் உங்களுக்கு அளித்தது அல்லாஹ்தானே! ஆனால் கற்பனை தெய்வங்களுக்கு எதிராகப் பேசினால், அவை தீங்கிழைத்து விடும் என்று பயமுறுத்துகிறீர்களே! அப்படி என்றால் நீங்கள் இணை வைப்பவற்றை எல்லாம் அழைத்து எனக்கு தீங்கிழைத்திட கூவிப் பாருங்கள். இதில் சிறிதும் கால தாமதம் செய்யாதீர்கள். அவற்றால் என்ன செய்ய முடிகிறது என்பதைப் பார்த்துக் கொள்ளலாம்.” என்று பகிரங்கமாக அரைகூவல் விடுங்கள்
إِنَّ وَلِۦِّىَ ٱللَّهُ ٱلَّذِى نَزَّلَ ٱلْكِتَٰبَ ۖ وَهُوَ يَتَوَلَّى ٱلصَّٰلِحِينَ.
7:196. எனக்குப் பாதுகாவலன் அல்லாஹ் மட்டுமே என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. அவன்தான் இறைவழிகாட்டுதல்கள் அடங்கிய வேதத்தை இறக்கி அருளி இருக்கிறான். இதைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எல்லா விதமான பாதுகாப்பும் நேரான வழியும் நன்மைகளும் கிடைத்து வரும்.
அதாவது மனிதனுக்கு இவ்வுலகில் வாழ்வதற்காக உரிய ஆற்றல்களை அளித்ததோடு, சிறந்த முறையில் கல்வி பயில வைத்து சிறப்பான வாழ்க்கையைப் பெற இறை வழிகாட்டுதல்களை அளித்தது அல்லாஹ்தான். ஆனால் அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதப்படுபவை இப்படி எந்த வகையிலாவது வழி காட்டுகின்றதா?(10:35)
وَٱلَّذِينَ تَدْعُونَ مِن دُونِهِۦ لَا يَسْتَطِيعُونَ نَصْرَكُمْ وَلَآ أَنفُسَهُمْ يَنصُرُونَ.
7:197. “யாரை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதி உதவியைத் தேடுகிறீர்களோ, அவை தமக்குத் தாமே கூட உதவி செய்துகொள்ள எவ்வித ஆற்றலையும் பெறாத நிலையில் உள்ளவை ஆகுமே! உண்மை இவ்வாறிருக்க, உங்களுக்கு அவை எவ்வாறு உதவி செய்யமுடியும்?” என்று அவர்களிடம் கேளுங்கள்.
وَإِن تَدْعُوهُمْ إِلَى ٱلْهُدَىٰ لَا يَسْمَعُوا۟ ۖ وَتَرَىٰهُمْ يَنظُرُونَ إِلَيْكَ وَهُمْ لَا يُبْصِرُونَ.
7:198. இத்தகைய மூட நம்பிக்கையில் இருப்பவர்களை நீங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் பக்கம் அழைத்தாலும், அவர்கள் அதைக் காது கொடுத்து கேட்க மாட்டார்கள். அப்படியும் அவர்கள் உம்மிடம் வந்தாலும் அவர்கள் உங்களைப் பார்ப்பது போல் தோன்றும். ஆனால் அவர்களுடைய கவனம் எல்லாம் வேறு திசையில் இருக்கும்.
خُذِ ٱلْعَفْوَ وَأْمُرْ بِٱلْعُرْفِ وَأَعْرِضْ عَنِ ٱلْجَٰهِلِينَ.
7:199. இத்தகையவர்களைப் பற்றி அதிகமாகக் கவனம் செலுத்தாமல், நீங்கள் சமுதாய மேம்பாட்டுத் திட்டங்களின் பக்கமே கவனம் செலுத்தி வாருங்கள். இந்த அறிவிலிகளை விட்டு நீங்கள் ஒதுங்கியே இருங்கள்.
وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ ٱلشَّيْطَٰنِ نَزْغٌۭ فَٱسْتَعِذْ بِٱللَّهِ ۚ إِنَّهُۥ سَمِيعٌ عَلِيمٌ.
7:200. எப்போதும் ஒரு விஷயத்தை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். எப்போதாவது உங்கள் மன இச்சையானது உங்களைத் தவறான செயல்களின் பக்கம் ஈர்க்கச் செய்து, தவறிழைக்கத் தூண்டினால் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் பக்கம் கவனம் செலுத்தி அதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கிறான் என்பதை உணர்ந்து அந்தத் தவறிலிருந்து ஒதுங்கிக் கொள்ளுங்கள்.
إِنَّ ٱلَّذِينَ ٱتَّقَوْا۟ إِذَا مَسَّهُمْ طَٰٓئِفٌۭ مِّنَ ٱلشَّيْطَٰنِ تَذَكَّرُوا۟ فَإِذَا هُم مُّبْصِرُونَ
7:201. மனஇச்சையின் ஊசலாட்டங்களால் தாம் செய்யவிருந்த தவறான செயலுக்கு அல்லாஹ் நிர்ணயித்துள்ள விபரீத விளைவுகள் என்ன என்பதை எண்ணி அதற்கு அஞ்சி அதிலிருந்து விலகிக் கொள்வார்கள். இவர்களே விழிப்புணர்வுடன் நடந்துகொள்பவர்கள் ஆவார்கள்.
وَإِخْوَٰنُهُمْ يَمُدُّونَهُمْ فِى ٱلْغَىِّ ثُمَّ لَا يُقْصِرُونَ.
7:202. ஆனால் மனஇச்சைக்கு அடிமையாகி விட்டவர்கள், தாம் செய்யும் செயல்களின் தாக்கங்களைப் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டார்கள். அதுமட்டுமின்றி தன்னுடன் வாழ்பவர்களையும் வழிகேட்டிலேயே அழைத்துச் செல்வார்கள். இப்படியாக அவர்கள் பாவச் செயல்களை செய்வதில் எந்தக் குறைவும் வைக்க மாட்டார்கள்.
وَإِذَا لَمْ تَأْتِهِم بِـَٔايَةٍۢ قَالُوا۟ لَوْلَا ٱجْتَبَيْتَهَا ۚ قُلْ إِنَّمَآ أَتَّبِعُ مَا يُوحَىٰٓ إِلَىَّ مِن رَّبِّى ۚ هَٰذَا بَصَآئِرُ مِن رَّبِّكُمْ وَهُدًۭى وَرَحْمَةٌۭ لِّقَوْمٍۢ يُؤْمِنُونَ.
7:203. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! அவர்கள் உம்முடன் இணைந்துகொள்ள வேண்டும் என்றால், அவர்களுக்குச் சாதகமான சட்டங்களைக் கொண்டு வரவேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார்கள். (மேலும் பார்க்க 10:15, 11:113, 17:74, 68:9). அவர்கள் விரும்பியபடி இறை வாசகங்களைக் கொண்டுவராவிட்டால், நீரே உன் புறத்திலிருந்து ஏன் ஏற்படுத்திக் கொடுக்கக்கூடாது என்றும் கேட்கிறார்கள்.
“எனக்கு அறிவிக்கப்படுகின்ற இறைவழிகாட்டுதலை பின்பற்றுவதோடு சரி. அதைத் தவிர என்னால் வேறு எதுவும் செய்வதற்கில்லை. மேலும் எனக்கு வந்துள்ள இறைவழிகாட்டுதல்கள் மனிதனின் ஒளிமயமான வாழ்விற்குப் பேரொளியாகவும் நேர்வழியாகவும் நல்லருளாகவும் இருக்கின்றன. அவ்வழிகாட்டுதலை ஏற்று நடப்பவர்களுக்கு நற்பலன்கள் கிடைப்பது நிச்சயம்” என்று அவர்களிடம் விளக்கிவிடுங்கள்.
وَإِذَا قُرِئَ ٱلْقُرْءَانُ فَٱسْتَمِعُوا۟ لَهُۥ وَأَنصِتُوا۟ لَعَلَّكُمْ تُرْحَمُونَ.
7:204. இத்தகையவர்களை விட்டுவிட்டு, இறைவழிகாட்டுதலை ஏற்று நடப்பவர்களின் பக்கம் உன் கவனத்தைச் செலுத்துவீராக. நீர் அவர்களிடம், “இந்தக் குர்ஆனின் விஷயங்களை அறிவிக்கும் போது, அவற்றை முழு கவனத்துடன் செவி சாய்த்து அமைதியுடன் கேளுங்கள். அப்போது தான் அதை அனைவராலும் கேட்டுப் புரிந்துக் கொள்ள முடியும். மேலும் இறைவழிகாட்டுதல்களைப் பெற்றுச் சிறப்பாகவாழ வழிகள் பிறக்கும்” என்று அறிவுரை செய்யுங்கள்.
وَٱذْكُر رَّبَّكَ فِى نَفْسِكَ تَضَرُّعًۭا وَخِيفَةًۭ وَدُونَ ٱلْجَهْرِ مِنَ ٱلْقَوْلِ بِٱلْغُدُوِّ وَٱلْءَاصَالِ وَلَا تَكُن مِّنَ ٱلْغَٰفِلِينَ.
7:205. குர்ஆனிய அறிவுரைகளைக் கேட்பதோடு நம் கடமை முடிந்துவிட்டது என்று இருந்து விடாதீர்கள். அவற்றைக் கேட்டபின் நீங்கள் தனித்திருக்கும் போது, அதன் நுணுக்கங்களைப் பற்றியும் அதன் செயல் வடிவத்தைப் பற்றியும் அல்லும் பகலும் உளப்பூர்வமாக ஆழமாகச் சிந்தித்து செயல்படுங்கள். அப்போதுதான் நீங்கள் உங்கள் வாழ்வில் ஒருபோதும் அலட்சியத்துடன் நடந்து கொள்ள மாட்டீர்கள்.
إِنَّ ٱلَّذِينَ عِندَ رَبِّكَ لَا يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِۦ وَيُسَبِّحُونَهُۥ وَلَهُۥ يَسْجُدُونَ ۩.
7:206. இறை நெருக்கம் பெறுபவர்கள் யார் என்றால், அவர்கள் ஒருபோதும் பெருமை அடித்துக் கொள்ள மாட்டார்கள். அதாவது அவர்கள் மற்றவர்களுடன் பெருந்தன்மையோடு நடந்து கொள்வார்கள். மேலும் அவர்கள் இறைக் கட்டளைக்கு அடிபணிந்து நடப்பார்கள். அவர்களுக்கு இடப்பட்ட கடமையைச் செவ்வனே நிறைவேற்றுவதில் சற்றும் அசர மாட்டார்கள். இறைக் கட்டளைக்கு முற்றிலும் தலைவணங்கி நடப்பதே தம் வாழ்வின் இலட்சியம் என்று உறுதியாக இருப்பார்கள். அதில் எந்தக் குறைவும் வைக்க மாட்டார்கள். இத்தகையவர்களே இறை நெருக்கம் பெறும் பாக்கியம் உடையவர்கள் ஆவார்கள்.
அகிலங்களைப் படைத்துப் பரிபாலிப்பவனே! நாங்களும் உன் நெருக்கத்தைப் பெறும் பாக்கியத்தை அடைய நாடுகிறோம். அதற்காக உன் வழிகாட்டுதல்படி நடக்க எங்களுக்கும் மன வலிமையைத் தந்தருள்வாயாக. ஆமீன்.