بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
18:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் அகிலங்களும் பூமியும் செயல்பட்டு வருவதால், அவை அனைத்தும் அழகிய முறையில் சிறப்பாக செயல்படுகின்றன. அங்கு எவ்வித பிரச்சனையோ அல்லது மோதலோ இருப்பதில்லை. எனவே அவை அனைத்தும் பாராட்டுக்கு உரியதாக விளங்குகின்றன. அவற்றை படைத்து பரிபாலிக்கின்ற இறைவனாகிய அல்லாஹ் தான் மனிதனையும் படைத்தான். எனவே இவனும் எந்த பிரச்சனையும் இல்லாமல் சிறப்பாக வாழவேண்டும் என்பதற்காக
ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِىٓ أَنزَلَ عَلَىٰ عَبْدِهِ ٱلْكِتَٰبَ وَلَمْ يَجْعَل لَّهُۥ عِوَجَا ۜ.
18:1. எந்த கோணலும் முரண்பட்ட கருத்துக்களும் இல்லாத இந்தக் குர்ஆனை (பார்க்க 4:82) தம் அடியார் மூலமாக இறக்கி அருளுகிறான். இவ்வாறு அருளிய ஏக இறைவன் எல்லா பாராட்டுகளுக்கும் போற்றுதலுக்கும் உரியவனே ஆவான்.
قَيِّمًۭا لِّيُنذِرَ بَأْسًۭا شَدِيدًۭا مِّن لَّدُنْهُ وَيُبَشِّرَ ٱلْمُؤْمِنِينَ ٱلَّذِينَ يَعْمَلُونَ ٱلصَّٰلِحَٰتِ أَنَّ لَهُمْ أَجْرًا حَسَنًۭا.
18:2. இவ்வேதம் நடைமுறை உலக விஷயங்களை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது. மக்களின் எந்தெந்த தவறான செயல்களுக்கு என்ன விபரீத விளைவுகள் ஏற்படும் என்பதை எடுத்துரைத்து முன்னெச்சரிக்கை செய்கிறது. மேலும் இதன் வழிகாட்டுதலை ஏற்று அதன்படி ஆக்கப்பூர்வமான நற்செயல்களை செய்வோருக்கு கிடைக்கக் கூடிய அழகிய நற்பலன்களைப் பற்றியும் கூறுகிறது.
مَّٰكِثِينَ فِيهِ أَبَدًۭا.
18:3. இப்படியாக எதுவரையில் ஒரு சமுதாயம் சிறப்பாக செயல்படுமோ, அதுவரையில் சந்தோஷமான பாதுகாப்பான சுவனத்திற்கு ஒப்பான வாழ்வு நீடிக்கும்.
ஆனால் மக்கள் இந்த அறிவுரைகளை ஏற்காமல் வாழ்ந்தால், அவர்களுடைய வாழ்வில் பிரச்சனைகள் பல ஏற்படும். அவற்றை அல்லாஹ் தீர்த்து வைப்பான் என்று அல்லாஹ்வைப் பற்றி பற்பல கதைகளையும் கற்பனை செய்து சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்ட கதைகளில்
وَيُنذِرَ ٱلَّذِينَ قَالُوا۟ ٱتَّخَذَ ٱللَّهُ وَلَدًۭا.
18:4. அல்லாஹ்வுக்கு ஒரு புதல்வன் உண்டு என்ற கதையும் ஒன்றாகும். இத்தகைய தவறான கற்பனைகளால் அவர்களுடைய வாழ்வில் எவ்வித நற்பலன்களும் கிடைக்கப் போவதில்லை. மாறாக அவர்களுக்கு துயரங்கள் தான் ஏற்பட்டு வரும். இதை அவர்களுக்கு எடுத்துரைத்து எச்சரிக்கை செய்வதே இந்த வேதத்தின் நோக்கமாகும்.
مَّا لَهُم بِهِۦ مِنْ عِلْمٍۢ وَلَا لِءَابَآئِهِمْ ۚ كَبُرَتْ كَلِمَةًۭ تَخْرُجُ مِنْ أَفْوَٰهِهِمْ ۚ إِن يَقُولُونَ إِلَّا كَذِبًۭا.
18:5. மேலும் அல்லாஹ்வைப் பற்றி அவர்களுடைய கூற்றிற்கு அவர்களிடமோ அல்லது அவர்களுடைய மூதாதையர்களிடமோ எவ்வித ஆதாரமும் கிடையாது. இவை யாவும் அவர்களாகவே உருவாக்கிக் கொண்ட கற்பனைக் கதைகளே ஆகும். ஏதோ மனதில் தோன்றியவற்றை மக்களிடம் சொல்லி விடுவார்கள். அவர்கள் கூறுவது பொய்யே அன்றி வேறில்லை.
فَلَعَلَّكَ بَٰخِعٌۭ نَّفْسَكَ عَلَىٰٓ ءَاثَٰرِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا۟ بِهَٰذَا ٱلْحَدِيثِ أَسَفًا.
18:6. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! இந்த அளவிற்கு தெளிவான முறையில் இறைவனின் அறிவுரைகளை ஆதாரப்பூர்வமாக எடுத்துரைத்தும், மக்களில் பெரும்பாலோர் இவற்றை ஏற்றுக் கொள்வதில்லையே என எண்ணி வருத்தப்பட்டு நீர் உம்மையே மாய்த்து கொள்வீர் போலும்!
இதற்கு அவசியம் இல்லை. இறைவழிகாட்டுதலை தெளிவாக எடுத்துரைப்பதே உம்மீதுள்ள முக்கிய கடமையாகும். இதற்கு முன்பும் ஈஸா நபி உலக மக்களை நேர்வழியில் கொண்டுவர பலவாராக முயற்சிகளை மேற்கொண்டார். அவர் அதில் வெற்றியும் கண்டார். ஆனால் அவருடைய மறைவுக்குப் பின் அவரையே அல்லாஹ்வின் புதல்வனாக கற்பனை செய்து கொண்டு, அவர் பெயரில் ஜப மடங்களை ஏற்படுத்திக் கொண்டனர். (பார்க்க 57:27) தவறான கொள்கைகளை, மக்களிடம் அழகிய முறையில் சொல்லி வந்தால், காலப் போக்கில் அதில் அவர்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டு, அவற்றையே கடைப்பிடித்து வருவார்கள். இதே போன்று சொத்து செல்வங்கள் ஆட்சி அதிகாரம் என
إِنَّا جَعَلْنَا مَا عَلَى ٱلْأَرْضِ زِينَةًۭ لَّهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًۭا.
18:7. இவ்வுலகிலுள்ள அனைத்து படைப்புகளும் அழகாக இருப்பதால், மக்களுக்கு அதில் ஈர்ப்பு ஏற்படுவது இயல்பே. (பார்க்க3:14) ஆனால் இந்த பாக்கியங்களைப் பெற்றவர்களில் யார் அழகிய முறையில் செயல்பட்டு சிறப்பாக வாழ்கிறார்கள் என்பதையும், யார் அவற்றை தவறாக பயன்படுத்தி அழிவை சந்தித்துக் கொள்கிறார்கள் என்பதையும் பரிசோதித்துக் கொள்வதே இறைவன் படைத்ததின் நோக்கமாகும். (மேலும் பார்க்க 11:7)
இதை ஒரு உதாரணத்தைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம். ஒரு காணி நிலத்தை எடுத்து கொள்ளுங்கள். அதை நன்றாக பதப்படுத்தி, சீர் செய்து, உழுது, நீர் பாய்ச்சி, பயிரிட்டு வந்தால் அது பசுமையாகவும் பலனளிக்கக் கூடியதாகவும் இருக்கும். அதை அப்படியே விட்டுவிட்டால், காலப் போக்கில் அது பலனற்று போயிவிடும்.
وَإِنَّا لَجَٰعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًۭا جُرُزًا.
18:8. அந்நிலத்தின் மேல்பரப்பில் மாசு படிந்து புற்பூண்டும் விளையாத பாழ்நிலமாக மாறிவிடும். இதுதான் இறைவனின் நியதியாகும் அல்லவா?
அது போலவே மக்களும் இறைவழிகாட்டுதலை ஏற்று, சிறப்பாக ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களை தீட்டி, அதற்காகத் தம் செல்வங்களை பயன்படுத்தி உழைத்து வந்தால், அந்த சமுதாயமும் சிறப்பாக வாழும். உலக மக்களுக்கும் பலன்கள் கிடைத்து வரும். மாறாக இறைவழிகாட்டுதலை விட்டுவிட்டு மக்களிடம் சுயநலம் வளர விட்டால், அந்த சமுதாயத்தில் காலப் போக்கில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு, உழைப்பில் தொய்வு ஏற்பட்டு, கற்பனை கதைகளும், ஜப பீடங்களுகம், தர்கா வழிபாடுகளுமே உருவாகி வரும். இதற்கு வரலாற்று ஆதாரங்கள் பல உள்ளன. இவற்றில் ஈஸா நபிக்குப் பின் பத்ரஸ் என்ற பிரதேசத்தில் நடந்த அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற சரித்திரமே ஒரு சான்றாக விளங்குகிறது. இந்த வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்வதற்கு முன் ஒரு விஷயத்தை நீங்கள் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.
أَمْ حَسِبْتَ أَنَّ أَصْحَٰبَ ٱلْكَهْفِ وَٱلرَّقِيمِ كَانُوا۟ مِنْ ءَايَٰتِنَا عَجَبًا.
18:9. “அஸ்ஹாபுல் கஹ்ஃபு” அல்லது “அஸ்ஹாபுல் ரஃகீம்” என்று பெயரும் புகழும் பெற்ற குகையில் இருந்தோரை, “அபூர்வ பிறவிகள்” என்று எண்ணிக் கொண்டீர்களா? அவ்வாறில்லை. உண்மை ஒன்றிருக்க, அவர்களைப் பற்றி வேறு விதமாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. மக்களிடையே பேசப்படுவது போல அவர்கள் அபூர்வப் பிறவிகள் அல்லர்.
إِذْ أَوَى ٱلْفِتْيَةُ إِلَى ٱلْكَهْفِ فَقَالُوا۟ رَبَّنَآ ءَاتِنَا مِن لَّدُنكَ رَحْمَةًۭ وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًۭا.
18:10. ஓரிறைக் கொள்கையை மக்களிடம் சில இளைஞர்கள் எடுத்துரைத்தனர். (பார்க்க 18:14) இதனால் நாலாப்புறமும் எதிர்ப்புகள் வளரவே தற்காப்பு கருதி, அவ்வூரை விட்டு விலகி, ஒரு குகையினுள் தஞ்சம் அடைந்தனர். அத்துடன் அவர்கள், “எங்கள் இறைவா! உன்னிடமிருந்து அருட்கொடைகளைப் பெற வழிவகுப்பாயாக. இன்னும் நீ எங்களுக்காக எங்கள் உழைப்புகளை பலனுள்ளதாக சீராக்கித் தருவாயாக” என்று பிரார்தித்தனர்.
அதாவது மக்களின் ஆதரவு கிடைக்காததால் அவர்கள் ஒரு விசாலமான குகையினுள் தஞ்சமடைந்து, அதில் இருந்தபடி அவர்கள் தற்காப்பு பயிற்சிகளை மேற்கொண்டு வந்தனர். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் யாருக்கும் தெரியாமல் அவர்கள் செய்து வந்தார்கள். குகை மிகவும் விசாலமாக இருந்ததால் அங்கு அனைத்து வாழ்வாதார வசதிகளும் கிடைத்து வந்தன.
فَضَرَبْنَا عَلَىٰٓ ءَاذَانِهِمْ فِى ٱلْكَهْفِ سِنِينَ عَدَدًۭا.
18:11. அவ்வாறே அவர்கள் சில ஆண்டுகள் வரையில் அக்குகையிலேயே தங்கி, இறைவழிகாட்டுதலின் படி தம்மை ஆயப்படுத்திக் கொள்ள தற்காப்புப் பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டு வந்தார்கள். அவர்கள் அதில் முழுமையாகவே ஈடுபட்டிருந்ததால் வெளி உலக விஷயங்கள் அவர்களுடைய காதுகளுக்கு எட்டாமலே போயிற்று.
ثُمَّ بَعَثْنَٰهُمْ لِنَعْلَمَ أَىُّ ٱلْحِزْبَيْنِ أَحْصَىٰ لِمَا لَبِثُوٓا۟ أَمَدًۭا.
18:12. அதன்பின் அவர்களுடைய பயிற்சி காலம் முடிவுபெற்று, அக்குகையிலிருந்து வெளியே வரும் காலம் நெருங்கி வந்தது. இந்த இடைவெளி காலத்தில் இவர்களுக்கும், இவர்களை எதிர்த்தவர்களுக்கும் இடையில் உள்ள பலப் பரீட்சையை பார்த்துவிட அவர்கள் வெளியே வந்தனர்.
விஷயம் உங்களுக்குச் சரிவர புரியாததால்
نَّحْنُ نَقُصُّ عَلَيْكَ نَبَأَهُم بِٱلْحَقِّ ۚ إِنَّهُمْ فِتْيَةٌ ءَامَنُوا۟ بِرَبِّهِمْ وَزِدْنَٰهُمْ هُدًۭى.
18:13. நாம் அவர்களுடைய உண்மையான வரலாற்று நிகழ்வுகளை விவரமாக அறிவிக்கிறோம். அதாவது சில இளைஞர்கள், தங்கள் இறைவனின் வழிகாட்டுதலை ஏற்று செயல்பட்டு வந்தார்கள். அதன்படி அவர்கள் நடந்ததால் இறைவனின் நியதிப்படி, அவர்களுக்கு அனுபவ ரீதியான வழிகாட்டுதல்கள் அதிக அளவில் கிடைத்திருந்தன.
وَرَبَطْنَا عَلَىٰ قُلُوبِهِمْ إِذْ قَامُوا۟ فَقَالُوا۟ رَبُّنَا رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ لَن نَّدْعُوَا۟ مِن دُونِهِۦٓ إِلَٰهًۭا ۖ لَّقَدْ قُلْنَآ إِذًۭا شَطَطًا.
18:14. அதை தொடர்ந்து, அந்நாட்டில் நடைபெற்று வந்த அராஜக ஆட்சியை எதிர்த்து அவர்கள் போராட ஆரம்பித்தார்கள். அகிலங்களையும் பூமியையும் படைத்து பரிபாலிப்பவன் தான் எங்கள் இறைவன். எக்காரணத்தைக் கொண்டும் அல்லாஹ் காட்டிய வழிமுறைகளை விட்டுவிட்டு, மக்களுக்கு எதிராக செயல்படும் ஆட்சிமுறையை ஒருபோதும் ஏற்க மாட்டோம். அவ்வாறு நடந்தால் அது வரம்பு மீறின செயலாகும் என்று மக்கள் மத்தியில் உறுதிப்பட பிரச்சாரங்களை செய்து வந்தார்கள். இப்படியாக இறைவனின் நியதிப்படி, ஓரிறைக் கொள்கை அவர்கள் உள்ளங்களில் வலுவடைந்தன.
هَٰٓؤُلَآءِ قَوْمُنَا ٱتَّخَذُوا۟ مِن دُونِهِۦٓ ءَالِهَةًۭ ۖ لَّوْلَا يَأْتُونَ عَلَيْهِم بِسُلْطَٰنٍۭ بَيِّنٍۢ ۖ فَمَنْ أَظْلَمُ مِمَّنِ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًۭا.
18:15. ஆனால் நாட்டு நடப்பு வேறு விதமாய் இருந்தது. மக்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கு மாற்றமான வழிமுறைகளையே பின்பற்றி வந்தனர். அவர்கள் அவ்வாறு பின்பற்றுவதற்கு, தெளிவான ஆதாரங்கள் இருந்திருக்க வேண்டும் அல்லவா? அதுவும் அவர்களிடத்தில் இல்லை. ஏதோ அல்லாஹ் சொன்னதாக இட்டுக் கட்டிக்கொண்டு ஒவ்வொருவரும் தம் மனம் போன போக்கில் வாழ்ந்து வந்தார்கள். இவ்வாறு அல்லாஹ்வின் பெயரில் இட்டுக்கட்டிக் கூறுபவனைவிட அநியாயக்காரர் வேறு யாராக இருக்க முடியும் என்று அந்த இளைஞர்கள் தீவிரமாக பிரச்சாரங்கள் செய்து வந்தனர்.
ஆனால் அம்மக்கள் இவர்களுடைய அழைப்பை ஏற்று நடக்க முன்வரவில்லை. அவர்களுடைய பிரச்சாரங்கள் நாலாப்புறமும் பரவிடவே, அந்நாட்டு அரசனின் பகைமைக்கும் ஆளானார்கள். இவர்களை தீர்த்துக் கட்ட திட்டங்கள் தீட்டப்பட்டன. இதை அறிந்த அவர்கள் பாதுகாப்பான இடத்தைத் தேடி அலைந்தனர்.
وَإِذِ ٱعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا ٱللَّهَ فَأْوُۥٓا۟ إِلَى ٱلْكَهْفِ يَنشُرْ لَكُمْ رَبُّكُم مِّن رَّحْمَتِهِۦ وَيُهَيِّئْ لَكُم مِّنْ أَمْرِكُم مِّرْفَقًۭا.
18:16. அல்லாஹ்வுக்கு மாற்றமாக அச்சமுதாயத்தினர் கடைப்பிடித்து வரும் வழிமுறைகளை விட்டு சில காலம் வரையில் ஒதுங்கி இருக்க முடிவெடுத்தார்கள். அதற்காக ஒரு மறைவான இடத்தை தேடினர். அவ்வாறு தேடியதில் விசாலமான குகை ஒன்று கிடைத்தது. அதனுள் இறைவனின் எல்லா வாழ்வாதார வசதிகளும் இருப்பதால் அங்கு உணவு பிரச்சனை எதுவும் இருக்காது என எண்ணி, தம் செயல் திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள அதுவே சரியான இடமாகும் என தீர்மானித்தனர். இப்படியாக அவர்கள் தமக்குள் கலந்தாலோசித்து முடிவெடுத்தனர்.
۞ وَتَرَى ٱلشَّمْسَ إِذَا طَلَعَت تَّزَٰوَرُ عَن كَهْفِهِمْ ذَاتَ ٱلْيَمِينِ وَإِذَا غَرَبَت تَّقْرِضُهُمْ ذَاتَ ٱلشِّمَالِ وَهُمْ فِى فَجْوَةٍۢ مِّنْهُ ۚ ذَٰلِكَ مِنْ ءَايَٰتِ ٱللَّهِ ۗ مَن يَهْدِ ٱللَّهُ فَهُوَ ٱلْمُهْتَدِ ۖ وَمَن يُضْلِلْ فَلَن تَجِدَ لَهُۥ وَلِيًّۭا مُّرْشِدًۭا.
18:17. மேலும் அக்குகையின் வாயில் மிகவும் குறுகலாகவும், உட்புறம் விசாலமாகவும் இருந்தது. அதன் வாயில் பக்கம் சூரிய ஒளி படாதவாறு வட திசையை நோக்கி அமைந்திருந்தது. அதாவது சூரியஒளி குகையின் வலப்புறம் சாய்வதாவும், அது அஸ்தமிக்கும் போது இடப்புறம் சாய்வதாகவும் அமைந்திருந்தது. எனவே தம் இரகசிய செயல் திட்டத்திற்கு இதுவே சரியான இடம் என அவர்கள் முடிவெடுத்தனர். ஆக இப்படிப்பட்ட விசாலமான குகைகள் உருவாகி இருப்பதும் அல்லாஹ்வின் வல்லமையின் அத்தாட்சிகளில் ஒன்றாகும் அல்லவா? யார் அல்லாஹ்வின் வழிகாட்டுதலில் இருக்கிறார்களோ, அவர்களே நேர்வழி பெற்றவர்கள் ஆவர். யார் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டு வழிகேட்டில் செல்ல நாடுகிறார்களோ, அவர்களுக்கு வேறு யாரிடமிருந்தும் நேர்வழி கிடைக்காது.
وَتَحْسَبُهُمْ أَيْقَاظًۭا وَهُمْ رُقُودٌۭ ۚ وَنُقَلِّبُهُمْ ذَاتَ ٱلْيَمِينِ وَذَاتَ ٱلشِّمَالِ ۖ وَكَلْبُهُم بَٰسِطٌۭ ذِرَاعَيْهِ بِٱلْوَصِيدِ ۚ لَوِ ٱطَّلَعْتَ عَلَيْهِمْ لَوَلَّيْتَ مِنْهُمْ فِرَارًۭا وَلَمُلِئْتَ مِنْهُمْ رُعْبًۭا.
18:18. மேலும் அவர்கள் தற்காப்பு கருதி எப்போதும் விழிப்போடு செயல்பட்டார்கள். அவர்கள் தூங்கும் போதும் கூட விழிப்புணர்வோடு தான் தூங்குவார்கள். இதற்காக தம் பயிற்சி முகாம்களை குகையின் வலப்புறமாகவும், இடப்புறமாகவும் அவ்வப்போது மாற்றிக் கொண்டார்கள். அது மட்டுமின்றி பாதுகாப்பு கருதி வேட்டை நாய்களையும் வளர்த்து வந்தார்கள். அவற்றை குகையின் வாயிலில் எப்போதும் தம் முன்னங்கால்களை விரித்து காவல் காக்கும்படி பயிற்சி அளித்திருந்தார்கள். அப்படியும் அக்குகையின் வழியாக யாராவது செல்ல நேர்ந்தால், அந்த நாய்களின் பார்வையைக் கண்டு வெருண்டு ஓடிவிடுவார்கள். அந்த அளவுக்கு அவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
وَكَذَٰلِكَ بَعَثْنَٰهُمْ لِيَتَسَآءَلُوا۟ بَيْنَهُمْ ۚ قَالَ قَآئِلٌۭ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ ۖ قَالُوا۟ لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍۢ ۚ قَالُوا۟ رَبُّكُمْ أَعْلَمُ بِمَا لَبِثْتُمْ فَٱبْعَثُوٓا۟ أَحَدَكُم بِوَرِقِكُمْ هَٰذِهِۦٓ إِلَى ٱلْمَدِينَةِ فَلْيَنظُرْ أَيُّهَآ أَزْكَىٰ طَعَامًۭا فَلْيَأْتِكُم بِرِزْقٍۢ مِّنْهُ وَلْيَتَلَطَّفْ وَلَا يُشْعِرَنَّ بِكُمْ أَحَدًا.
18:19. இவ்வாறாக அவர்கள் சில ஆண்டுகள் வரையில் பயிற்சி எடுத்து வந்தனர். அதன்பின், தாம் வாழ்ந்த இந்த இடைவெளி காலத்தில் வெளிஉலக நிலவரங்களை அறிந்து கொள்ள, அவர்கள் வெளியே வர தீர்மானித்தனர். அப்போது, தாம் எத்தனை காலமாக இக்குகையில் வாழ்ந்திருப்போம் என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டனர். அதற்கு சிலர், சில காலம் தான் வாழ்ந்திருப்போம் என்றார்கள். அதற்கு மற்றவர்கள் நாம் எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல. நாம் வாழ்ந்த காலத்தின் அளவை இறைவனே நன்கறிகிறான்.
எனவே உங்களில் யாராவது ஒருவர் கொஞ்சம் காசு பணத்தை எடுத்துக் கொண்டு, பட்டணத்திற்குச் சென்று வரட்டும். மக்கள் அவரை அடையாளம் காணாதவாறு அவர் மிகவும் எச்சரிக்கையோடு நடந்து கொள்ளட்டும். அதற்காக, ஏதோ உண்வு வகைகளை வாங்க வந்தது போல் நடந்து கொள்ளட்டும். எனவே அவர்கள் மாறுவேடத்தில் செல்லுதல் நலம் என்று தங்களுக்குள் கலந்தாலோசித்துக் கொண்டனர்.
إِنَّهُمْ إِن يَظْهَرُوا۟ عَلَيْكُمْ يَرْجُمُوكُمْ أَوْ يُعِيدُوكُمْ فِى مِلَّتِهِمْ وَلَن تُفْلِحُوٓا۟ إِذًا أَبَدًۭا.
18:20. ஏனென்றால் அவர்கள் உங்களை அடையாளம் கண்டு கொண்டால், உங்களை கல்லால் அடித்து கொன்று விடுவார்கள். அல்லது அவர்கள் தங்கள் மார்க்கத்தில் இணைந்துவிட வற்புறுத்துவார்கள். அப்போது நாங்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டோம். இவ்வாறு அவர்கள் தமக்குள் பேசி முடிவெடுத்து அவர்களில் ஓரிருவர் வெளியே புறப்பட்டுச் சென்றனர்.
சிந்தனையாளர்களே! மேலே சொன்ன வாசகத்தை கவனித்துப் பாருங்கள். அவர்கள் குகையில் தஞ்சம் புகுந்ததற்கு காரணம் மக்கள் அவர்கள் மேல் கொண்டிருந்த வெறுப்பு தான் என்பது இதிலிருந்து புலனாகிறது.
இரண்டாவதாக அவர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள் எனவும் பயப்படுகிறார்கள். எனவே அவர்கள் சில ஆண்டுகள் தான் அந்த குகையில் வாழ்ந்ததாக தெரிகிறது.
மேலும் அம்மக்கள் இவர்களை தம் மார்க்கத்தில் இணைத்து கொண்டால் தங்கள் இலட்சியத்தில் வெற்றியடை மாட்டோம் என்கிறார்கள். தம் நாட்டில் ஒரு மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்ற மாபெரும் இலட்சியத்துடன் தான் அவர்கள் அங்கு சென்றார்களே அன்றி தூங்கிக் கொண்டிருக்க அல்ல என்பது வெட்ட வெளிச்சமாகி விடுகிறது.
அவர்கள் எதிர் பார்த்து போலவே, நாட்டின் நிலவரங்கள் பெரிதும் மாறிப் போயி இருந்தன. அங்கு நடந்து வந்த அராஜக ஆட்சியினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு, இவர்களுடைய வருகையின் எதிர்பார்ப்பில் இருந்தார்கள்.
எனவே குகையில் வாழ்ந்து வந்த இளைஞர்களுக்கு, மக்களுடைய ஆதரவும் கிடைத்தது. இப்படியாக அவர்கள் அந்நாட்டில் புரட்சியை ஏற்படுத்தி, அராஜக ஆட்சியை அகற்றி இறைவழிகாட்டுதல் படி மக்களாட்சியை ஏற்படுத்திக் காட்டினார்கள். குர்ஆன் வாசகத்தைக் கவனித்துப் பாருங்கள்.
وَكَذَٰلِكَ أَعْثَرْنَا عَلَيْهِمْ لِيَعْلَمُوٓا۟ أَنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّۭ وَأَنَّ ٱلسَّاعَةَ لَا رَيْبَ فِيهَآ إِذْ يَتَنَٰزَعُونَ بَيْنَهُمْ أَمْرَهُمْ ۖ فَقَالُوا۟ ٱبْنُوا۟ عَلَيْهِم بُنْيَٰنًۭا ۖ رَّبُّهُمْ أَعْلَمُ بِهِمْ ۚ قَالَ ٱلَّذِينَ غَلَبُوا۟ عَلَىٰٓ أَمْرِهِمْ لَنَتَّخِذَنَّ عَلَيْهِم مَّسْجِدًۭا.
18:21. இவர்களைக் கண்ட அப்பட்டணவாசிகள், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானதே என்றும், அக்கிரமங்கள் ஒழிந்து தர்மமான ஆட்சி வந்தே தீரும் என்பதில் சந்தேகமில்லை என்றும், சந்தோஷத்தில் பேச ஆரம்பித்தார்கள்.
இப்படியாக அவர்கள் தங்கள் குகை வாழ்க்கையை முடித்துக் கொண்டு, அங்கு மக்களாட்சியை ஏற்படுத்தி, நாட்டு மக்களின் சேவையில் இறங்கினார்கள். இவையாவும் அந்த இளைஞர்களின் உழைப்புக்கும் விடாமுயற்சிக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
இப்படியாக அவர்கள் உலகில் சாதனைகளைப் படைத்து காலமாகி விட்டனர். அவர்களுடைய மறைவுக்குப் பின் அப்பட்டணவாசிகள் அவர்களுக்காக நினைவு ஆலயத்தை ஏற்படுத்த முடிவெடுத்து, அந்த ஆலயத்தின் தோரணம் மற்றும் வடிவமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதில் சர்ச்சையும் போட்டியும் நிலவி வந்தது. இறுதியாக யாருடைய கருத்து மிகைத்ததோ அதன்படியே கட்டிடமும் எழுப்பப்பட்டது.
நினைவுச் சின்னமாக இருந்த அந்த ஆலயம், காலப் போக்கில் ஜப பீடமாக மாறிவிட்டது. அவர்கள் படைத்த சாதனைகள் என்னவென்பதை நினைவில் கொண்டு, அதன்படி அம்மக்களும் செயல்பட்டிருந்தால் அவர்களுக்கும் உயர்வும் கண்ணியமும் கிடைத்திருக்கும். இதை எல்லாம் விட்டுவிட்டு அப்பட்டணத்தில் இப்போது என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை கவனியுங்கள்.
سَيَقُولُونَ ثَلَٰثَةٌۭ رَّابِعُهُمْ كَلْبُهُمْ وَيَقُولُونَ خَمْسَةٌۭ سَادِسُهُمْ كَلْبُهُمْ رَجْمًۢا بِٱلْغَيْبِ ۖ وَيَقُولُونَ سَبْعَةٌۭ وَثَامِنُهُمْ كَلْبُهُمْ ۚ قُل رَّبِّىٓ أَعْلَمُ بِعِدَّتِهِم مَّا يَعْلَمُهُمْ إِلَّا قَلِيلٌۭ ۗ فَلَا تُمَارِ فِيهِمْ إِلَّا مِرَآءًۭ ظَٰهِرًۭا وَلَا تَسْتَفْتِ فِيهِم مِّنْهُمْ أَحَدًۭا.
18:22. அந்தக் குகையில் இருந்தவர்கள் மூன்று பேர்தாம். நான்காவது அவர்களுடைய நாய் என்று பேசிக் கொள்கின்றனர். சிலர் இல்லை இல்லை அவர்கள் ஐந்து பேர், ஆறாவது அவர்களுடைய நாய் என்று அவர்களுக்கு தெளிவாகத் தெரியாததை யூகித்து சொல்கிறார்கள். இன்னும் சிலர் அவர்கள் ஏழு பேர் எட்டாவது அவர்களுடைய நாய் என்கிறார்கள்.
நபியே! அவர்கள் எத்தனை பேர் என்பது என் இறைவனுக்கு நன்றாகத் தெரியும் என்று அவர்களிடம் கூறிவிடுங்கள். அதுமட்டுமின்றி அங்கிருப்பவர்களில் சிலருக்கு அவர்களுடைய எண்ணிக்கையைப் பற்றி தெரியும். ஆனால் பெரும்பாலோருக்கு உண்மை நிலவரம் தெரியாது.
எனவே நீ தேவையில்லாமல் இது விஷயமாய் தர்க்கம் செய்ய வேண்டியதில்லை. மக்களுக்கு பலனுள்ள விஷயமாக இருந்தால் அதைப் பற்றி விவாதிக்கலாம். எனவே அவர்கள் எத்தனைப் பேர் என்ற விஷயத்தை நீர் யாரிடமும் கேட்க வேண்டாம்.
ஏனெனில் அவர்கள் எத்தனைப் பேர் என்பது முக்கியமல்ல. மாறாக அவர்கள் ஆற்றிய தொண்டுகள் என்ன என்பதே முக்கியமாகும். அதுமட்டுமின்றி அவர்கள் அந்த குகையில் வாழ்ந்த காலத்தைப் பற்றியும் பலர் பலவிதமாக பேசி வருகிறார்கள். அதுவும் அவர்களுடைய பேச்சு, வழக்கத்திற்கு மாற்றமாகவே விசித்திரமான முறையில் உள்ளது. ஆனால் மனிதனின் நிலை என்ன?
وَلَا تَقُولَنَّ لِشَا۟ىْءٍ إِنِّى فَاعِلٌۭ ذَٰلِكَ غَدًا.
18:23. அவன் எந்த விஷயத்தைப் பற்றியும் நிச்சயமாக நாளைய தினம் அதை செய்வேன் என்று கூறவே முடியாது. ஏனெனில்
إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ ۚ وَٱذْكُر رَّبَّكَ إِذَا نَسِيتَ وَقُلْ عَسَىٰٓ أَن يَهْدِيَنِ رَبِّى لِأَقْرَبَ مِنْ هَٰذَا رَشَدًۭا.
18:24. நீங்கள் செய்வதாக இருக்கும் காரியம், அல்லாஹ்வின் “மஷீயத்” என்கின்ற நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைக்கு உட்பட்டதாக இருந்தால் மட்டுமே, உங்களால் அதை செய்ய முடியும். அதையும் மீறி நீங்கள் எடுத்துக் கொண்ட காரியத்தை நிறைவேற்ற முடியவில்லை என்றால், அந்த செயல்முறை தொடரில் எங்கு தவறு நடந்துள்ளது என்பதைக் கண்டறிந்து அதை நிவர்த்தி செய்தால், நீங்கள் அதை நிறைவேற்ற வழிகள் கிடைத்து விடும். இன்னும் அதை சிறப்பாக செய்ய இறைவனின் உதவிகள் கிடைக்கும். இதை மக்களிடம் எடுத்துரைப்பீராக.
இன்ஷா அல்லாஹ் - அல்லாஹ் நாடினால்:
உதாரணம் (1) வங்கியில் பணம் இருந்து, நாளைக்கு கண்டிப்பாக தருவதாக சொன்னால் அது தகும். பணமே இல்லாமால் இன்ஷா அல்லாஹ் நாளைக்கு தருகிறேன் என்றால் அது சரியாகுமா?
உதாரணம் (2) நான் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட ஊருக்கு கண்டிப்பாக வருகிறேன் என்று ஒருவர் சொல்ல முடியாது. ஏனெனில் அவர் வாகனத்தைப் பிடித்து, அதில் அமரும் வரையில் தான், அவருடைய முயற்சியில் உள்ள விஷயமாகும். மற்றபடி அவர் சேரும் வரையில் அந்த வாகனம் பழுதுபடாமல் இருப்பதும், ஓட்டுனர் ஜாக்கிரதையாக ஓட்டுவதும், எதிரே வருகின்ற எண்ணற்ற வாகன ஒட்டிகளும் அவ்வாறே சரியாக ஓட்டுவதும், சாலைகள் பழுதுபடாமல் இருப்பதும் அவர் கையில் இல்லை. இவை யாவும் சரியாக அமைந்தால்தான் அந்த ஊருக்கு குறிப்பிட்ட நேரத்தில் அவரால் செல்ல முடியும். இந்த பயணத் தொடரில் எது விடுபட்டாலும், அவரால் அங்கு அந்த நேரத்திற்குள் செல்ல முடியாது. இவை யாவும் இறைவன் நிர்ணயித்த சட்டங்களின் படி உள்ளவை ஆகும். எனவே அவர் இன்ஷா அல்லாஹ் குறிப்பிட்ட நேரத்தில் வருகிறேன் என்றுதான் சொல்ல வேண்டும் (One can complete his mission only when other things remain constant) அல்லாஹ்வின் மஷீயத் என்பது நிலைநிறுத்தப்பட்ட சட்டமாகும்.
உதாரணம் (3) ஒருவர் இன்ஷா அல்லாஹ் நான் உதவி செய்கிறேன் என்று வாக்களிக்கிறார். ஆனால் அதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ற வில்லை என்றால் அவருடைய பேச்சு உண்மையாகுமா? இன்ஷா அல்லாஹ் என்று சொன்னதற்கு ஏற்ப முயலவேண்டும். ஏனெனில் அவர் செய்வதாக சொன்னது அல்லாஹ்வை சாட்சியாக வைத்துதான்.
உதாரணம் (4) சிலர் அல்லாஹ்வின் செயல் திட்டத்தில் இல்லாததை எல்லாம் அல்லாஹ் செய்வதாக அல்லது செய்ததாக சொல்வார்கள். இது மிகப் பெரிய பாவச் செயலாகும். ஏனெனில் இவற்றை கேட்பவர்களின் மனதில் அல்லாஹ்வைப் பற்றிய தவறான எண்ணங்கள் ஏற்பட்டு அல்லாஹ் செய்யாததை எல்லாம் எதிர் பார்த்து உழைக்காமல் காத்து கிடப்பார்கள்.
“அல்லாஹ்வின் நாட்டம்” என்பது அல்லாஹ் தன் நாட்டப்படி ஏற்படுத்திய நிலைமாறா நிலையான சட்ட விதிமுறைகளாகும். அன்றாடம் அவ்வப்போது நாடி செயல்படுகின்ற ஒன்றல்ல. அல்லாஹ்வின் அந்த சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு மனிதன் எவ்வாறு செயல்படுகிறானோ, அதன்படியே அவன் எதிர் பார்க்கும் பலன்கள் கிடைக்கும். உதாரணத்திற்கு உழைத்து விவசாயம் செயவதன் மூலமே மனிதன் உணவு வகைகளை பெற முடியும். உணவிற்கான ஏற்பாடுகளை தான் அல்லாஹ் செய்துள்ளான். வானத்திலிருந்து உணவை நேரடியாக இறக்குவதில்லை.
மீண்டும் அந்த குகையில் வாழ்ந்தவர்களைப் பற்றிய விஷயத்திற்கு வாருங்கள். மக்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தைப் பற்றி, என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதையும் கவனியுங்கள்.
وَلَبِثُوا۟ فِى كَهْفِهِمْ ثَلَٰثَ مِا۟ئَةٍۢ سِنِينَ وَٱزْدَادُوا۟ تِسْعًۭا.
18:25. அவர்கள் தங்கள் குகையில் முன்னூறு வருடங்கள் வாழ்ந்தார்கள் என்றும், மற்றும் சிலர் மிகச் சரியாக கணக்கிட்டுச் சொல்வது போல் ஒன்பது வருடங்களைக் கூட்டி, முன்னூற்று ஒன்பது வருடங்கள் தங்கி இருந்ததாகவும் பேசிக் கொள்கிறார்கள்.
கவனித்தீர்களா? மனிதன் உலகில் அத்தனை வருடங்கள் உயிர் வாழ்கின்றானா? அல்லாஹ் நிர்ணயித்த விதிமுறையில் அவ்வாறு இருக்கிறதா? அதிக பட்சமாக ஒருவர் நூறு அல்லது நூற்று இருபது ஆண்டுகள் வரையில் தான் வாழமுடியும். இதை கவனத்தில் கொள்ளாமல், இப்படி பேசுவது சரியாகுமா? அவர்களைப் பற்றி எப்படிப்பட்ட சர்ச்சைகள் உள்ளன என்பதையும் கவனியுங்கள். அவர்கள் ஆற்றிய தொண்டுகள் என்ன? அவர்களைப் பற்றி பேசப்படும் விஷயம்தான் என்ன? ஆச்சரியமே!
அதே போல் இன்றைய கால கட்டத்தில் முஹம்மது (ஸல்) அவர்களும் சஹாபா பெருமக்களும் ஆற்றிய தொண்டுகள் என்ன ?அவர்கள் படைத்த சாதனைகள் என்ன ? அவற்றையெல்லாம் மறைத்து விட்டு வெறும் தாடி, தொப்பி ,ஜிப்பா மட்டும் மிஞ்சி நிற்கிறது.
قُلِ ٱللَّهُ أَعْلَمُ بِمَا لَبِثُوا۟ ۖ لَهُۥ غَيْبُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ أَبْصِرْ بِهِۦ وَأَسْمِعْ ۚ مَا لَهُم مِّن دُونِهِۦ مِن وَلِىٍّۢ وَلَا يُشْرِكُ فِى حُكْمِهِۦٓ أَحَدًۭا.
18:26. எனவே அவர்கள் குகையில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தனர் என்பது அல்லாஹ்வுக்கே நன்கு தெரியும் என்று சொல்லி விடுவீராக. வானங்களிலும் பூமியிலும் உள்ள மறைவான விஷயங்கள் யாவும் அவனுக்கே தெரியும். அவற்றை அவனே நன்றாகப் பார்ப்பவனும் தெளிவாக கேட்பவனாகவும் இருக்கிறான். எனவே அவனுக்கு யாருடைய உதவியும் அவசியமும் இல்லை. அவன் தன்னுடைய செயல்திட்டத்தில் யாரையும் கூட்டாக்கிக் கொள்வதும் இல்லை.
அவர்கள் எத்தனை பேர் இருந்தார்கள் என்பதையும், எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்பதையும் அல்லாஹ் இந்தக் குர்ஆன் மூலமாக அறிவித்து இருக்க முடியும். ஆனால் அவன் அதை ஏன் அறிவிக்கவில்லை? காரணம் அதனால் உலகார்க்கு யாதொரு பலனும் ஏற்படப் போவதில்லை.
ஒரு வேளை அதை அறிவித்து இருந்தால் அதையே ஒரு சாக்காக வைத்துக் கொண்டு, இஸ்லாமிய கொள்கையை எத்தி வைக்க குறைந்தது இத்தனை பேர் வேண்டும் என்று பேச வாய்ப்பு ஏற்படும். மேலும் அத்தகையவர்கள் இத்தனை ஆண்டுகள் வரையில் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் பேசுவார்கள். இவை எல்லாம் முக்கியமல்ல. அவர்களுடைய சாதனைகள் தாம் வருங்கால மக்களுக்கு படிப்பினையாக இருக்க முடியும். எனவே தேவையற்ற விஷயங்களை அல்லாஹ் அறிவிப்பதில்லை.
وَٱتْلُ مَآ أُوحِىَ إِلَيْكَ مِن كِتَابِ رَبِّكَ ۖ لَا مُبَدِّلَ لِكَلِمَٰتِهِۦ وَلَن تَجِدَ مِن دُونِهِۦ مُلْتَحَدًۭا.
18:27. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! உமக்கு வஹீ மூலமாக இவ்வேதத்தில் இறக்கி அருளியதை மட்டும் மக்களிடம் எடுத்துரைப்பீராக. ஏனெனில் இறைவனின் செயல் திட்டங்களில் ஒருபோதும் எக்காலத்திலும் எந்த மாற்றத்தையும் காண முடியாது. எனவே இதில் சொல்லப்பட்டவையும் எக்காலத்திலும் மாறாது. ஒருவேளை நீர் இவ்வழிகாட்டுதலை விட்டு விட்டால், அதன்பின் உமக்கும் எங்கும் புகலிடம் கிடைக்காது. மீண்டும் அவன் காட்டிய வழிக்கே வந்தாக வேண்டும்.
وَٱصْبِرْ نَفْسَكَ مَعَ ٱلَّذِينَ يَدْعُونَ رَبَّهُم بِٱلْغَدَوٰةِ وَٱلْعَشِىِّ يُرِيدُونَ وَجْهَهُۥ ۖ وَلَا تَعْدُ عَيْنَاكَ عَنْهُمْ تُرِيدُ زِينَةَ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۖ وَلَا تُطِعْ مَنْ أَغْفَلْنَا قَلْبَهُۥ عَن ذِكْرِنَا وَٱتَّبَعَ هَوَىٰهُ وَكَانَ أَمْرُهُۥ فُرُطًۭا.
18:28. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் பக்கம் அழைப்பு பணியில் அயராமல் ஈடுபட்டிருக்கும் தோழர்களோடு நீயும் இணைந்து உறுதியோடு செயல்பட்டு வா. இதில் சற்றும் அலட்சியம் காட்டாதே. (பார்க்க 6:52 8:62-64 89:29-30) சந்தோஷமாக வாழ முடியவில்லையே என்று எண்ணி அவர்களை விட்டு விலகிச் செல்லாதீர். யாருடைய உள்ளங்கள் நம்முடைய அறிவுரைகளை விட்டு திரும்பி விடுகிறதோ, அவர்களைப் பின்பற்றாதீர். ஏனெனில் இறைவழிகாட்டுதலை விட்டுவிடுபவர்கள், தம் மனோ இச்சையை தான் பின்பற்றுவார்கள். அதனால் அவர்களுடைய செயல்பாடுகளில் எவ்வித வரையறையும் இருக்காது.
وَقُلِ ٱلْحَقُّ مِن رَّبِّكُمْ ۖ فَمَن شَآءَ فَلْيُؤْمِن وَمَن شَآءَ فَلْيَكْفُرْ ۚ إِنَّآ أَعْتَدْنَا لِلظَّٰلِمِينَ نَارًا أَحَاطَ بِهِمْ سُرَادِقُهَا ۚ وَإِن يَسْتَغِيثُوا۟ يُغَاثُوا۟ بِمَآءٍۢ كَٱلْمُهْلِ يَشْوِى ٱلْوُجُوهَ ۚ بِئْسَ ٱلشَّرَابُ وَسَآءَتْ مُرْتَفَقًا.
18:29. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! மனிதகுலத்தின் சிறப்பான வாழ்விற்கு மிகச் சரியான வழிகாட்டுதல்கள் உங்கள் இறைவனிடமிருந்து வந்து விட்டன. ஆகவே நாடுவோர் இவற்றை ஏற்று அதன்படி செயல்பட்டு வாழ்வின் வெற்றி இலக்கை அடைந்து கொள்ளட்டும். நாடுவோர் இவற்றை நிராகரித்தும் விடலாம். ஆனால் நிரகரிப்பவர்கள் ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் கொள்ளட்டும். அதாவது யார் அவற்றை ஏற்க மறுத்து அநியாய செயல்களில் ஈடுபடுகிறார்களோ, அவர்கள் நரக வேதனைகளை அனுபவிக்க வேண்டிவரும். அத்தகையவர்களுக்கே அவை சித்தப்படுத்தப்பட்டுள்ளன. அவை அவர்களை நாலாப் புறங்களிலும் சூழ்ந்து கொள்ளும். அதிலிருந்து மீண்டு வர எந்த முகாந்திரமும் இருக்காது. உலோகப் பொருட்களை உருக்கி அவர்கள் தொண்டையில் புகட்டப்படுவது போல் (மேலும் பார்க்க 9:34-35) அவர்களுடைய முகங்களை அவை சுட்டெரித்து பொசுக்கிவிடும். இவை எவ்வளவு பெரிய அதிபயங்கர வேதனைகள் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும். இதை நீங்கள் உலக மக்களுக்கு வெளிப்படையாக அறிவித்து விடுங்கள்.
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ إِنَّا لَا نُضِيعُ أَجْرَ مَنْ أَحْسَنَ عَمَلًا.
18:30. இதற்கு மாறாக இறைவழிகாட்டுதலை ஏற்று அதன்படி ஆக்கப்பூர்வமான சமூக நலத்திட்டங்களை தீட்டி அதற்காக உழைப்பவர்களுக்கு, அவர்களுடைய நற்செயல்களின் பலனாக சிறந்த நிம்மதியான வாழ்வு கிடைப்பது நிச்சயம். அத்தயைவர்களுடைய உழைப்புகள் ஒரு போதும் வீண் போகாது.
أُو۟لَٰٓئِكَ لَهُمْ جَنَّٰتُ عَدْنٍۢ تَجْرِى مِن تَحْتِهِمُ ٱلْأَنْهَٰرُ يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِن ذَهَبٍۢ وَيَلْبَسُونَ ثِيَابًا خُضْرًۭا مِّن سُندُسٍۢ وَإِسْتَبْرَقٍۢ مُّتَّكِـِٔينَ فِيهَا عَلَى ٱلْأَرَآئِكِ ۚ نِعْمَ ٱلثَّوَابُ وَحَسُنَتْ مُرْتَفَقًۭا.
18:31. எதுவரையில் இவ்வாறு செயல்பட்டு வருகிறார்களோ, அதுவரையில் அவர்களுக்கு இத்தகைய சுவனத்திற்கு ஒப்பான வாழ்வு நீடித்து வரும். அவர்களுடைய வாழ்வாதார வசதிகள், ஜீவ நதிபோல் தாராளமாகக் கிடைக்கும. அவர்களுடைய நன் நடத்தையின் அடையாளமாக பொன் மகுடங்கள் சூட்டப்படும். அவரவர் பதவி அந்தஸ்திற்கு ஏற்ப, பசுமை நிறம் கொண்ட பட்டாடைகள் போர்த்திக் கொண்டு, ஆசனத்தில் அமர்ந்த வண்ணம் தம் பணிகளைத் தொடர்வார்கள். இப்படி ஒரு சிறந்த வாழ்வு கிடைப்பது எவ்வளவு பெரிய பாக்கியமிக்கது என்பதையும், மன நிறைவானது என்பதையும் கவனித்துப் பார்க்கட்டும். இதையும் உலக மக்களுக்கு எடுத்துரையுங்கள்.
۞ وَٱضْرِبْ لَهُم مَّثَلًۭا رَّجُلَيْنِ جَعَلْنَا لِأَحَدِهِمَا جَنَّتَيْنِ مِنْ أَعْنَٰبٍۢ وَحَفَفْنَٰهُمَا بِنَخْلٍۢ وَجَعَلْنَا بَيْنَهُمَا زَرْعًۭا.
18:32. மேற்சொன்ன நரகம் மற்றும் சுவன வாழ்வுக்கு ஒரு உதாரணத்தைக் கொண்டு விளங்கி கொள்ளலாம். ஒருவரிடம் திராட்சை தோட்டங்கள் இரண்டு இருந்தன. அவற்றைச் சுற்றி பேரித்த மரங்களும் இருந்தன. அவ்விரு தோட்டங்களுக்கும் இடையே செழிப்பான நிலமும் இருந்தது.
كِلْتَا ٱلْجَنَّتَيْنِ ءَاتَتْ أُكُلَهَا وَلَمْ تَظْلِم مِّنْهُ شَيْـًۭٔا ۚ وَفَجَّرْنَا خِلَٰلَهُمَا نَهَرًۭا.
18:33. அவ்விரு தோட்டங்களிலும் எவ்வித குறைவுமின்றி நிறைவான மகசூல்கள் கிடைத்து வந்தன. அத்தோட்டங்களின் பக்கமாக ஒடையும் ஒலித்தோடியது.
وَكَانَ لَهُۥ ثَمَرٌۭ فَقَالَ لِصَٰحِبِهِۦ وَهُوَ يُحَاوِرُهُۥٓ أَنَا۠ أَكْثَرُ مِنكَ مَالًۭا وَأَعَزُّ نَفَرًۭا.
18:34. இப்படியாக அவனுக்கு எல்லா வசதிகளும் கிடைத்து சிறப்பாக வாழ்ந்து வந்தான். இவை யாவும் அவனுக்கு இறைவன் புறத்திலிருந்து கிடைத்து வந்தன. ஒரு நாள் அவன் தன் தோழனிடம் பேச்சுவாக்கில், “உன்னைவிட நான் செல்வங்களிலும், ஆட்பலத்திலும் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருக்கிறேன் என்பதைப் பார்” என்று கூறி பெருமையடித்துக் கொண்டு விதண்டா வாதம் செய்துவந்தான்.
وَدَخَلَ جَنَّتَهُۥ وَهُوَ ظَالِمٌۭ لِّنَفْسِهِۦ قَالَ مَآ أَظُنُّ أَن تَبِيدَ هَٰذِهِۦٓ أَبَدًۭا.
18:35. இவ்வாறு பேசிக் கொண்டே அவன் தன் தோட்டத்திற்குள் நுழைந்தான். ஆனால் அவனிடம் இருந்த இந்த தற்பெருமையும் கர்வமும் அவனை கெடுத்துக் கொண்டிருப்பதை அவன் தெரிந்துகொள்ள வில்லை. எனவே அவன் தன் தோழனிடம், "நீ கூறுவது போல, இந்த தோட்டம் ஒருபோதும் அழிந்து விடாது என்றே நான் நினைக்கிறேன்” என்றான்.
இப்படிப்பட்ட கர்வமும் பெருமையும் கொள்வதால் அது உனக்கு அழிவைத் தேடித் தந்து விடும் என்று அவனுடைய தோழன் செய்த எச்சரிக்கையை அவன் பொருட்படுத்தவில்லை.
وَمَآ أَظُنُّ ٱلسَّاعَةَ قَآئِمَةًۭ وَلَئِن رُّدِدتُّ إِلَىٰ رَبِّى لَأَجِدَنَّ خَيْرًۭا مِّنْهَا مُنقَلَبًۭا.
18:36. மேலும் அவன், “நீ கூறுவது போல இறைவனின் நியதிப்படி என்னுடைய செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் காலம் ஏற்படும் எனவும் நான் நினைக்கவில்லை. அப்படியும் நான் இறைவன் முன் நிற்கவேண்டி இருந்தால், இங்கிருப்பதை விட மேலான இடத்திலேயே நான் இருப்பேன்” என்று தன்னை பெருமிதப்படுத்திக் கொண்டான்.
قَالَ لَهُۥ صَاحِبُهُۥ وَهُوَ يُحَاوِرُهُۥٓ أَكَفَرْتَ بِٱلَّذِى خَلَقَكَ مِن تُرَابٍۢ ثُمَّ مِن نُّطْفَةٍۢ ثُمَّ سَوَّىٰكَ رَجُلًۭا.
18:37. அதற்கு அவனுடைய தோழன், “இறைவன் விதித்துள்ள, “மனித செயல்களின் விளைவுகள்” என்ற சட்டத்தையா ஏற்க மறுக்கிறாய்? உன்னுடைய படைப்பைப் பற்றியே சற்று சிந்தித்துப் பார். மண்ணின் சத்திலிருந்து உருவாகும் இந்திரியத் துளியிலிருந்து படைத்து உன்னை சரியான மனிதனாக படைத்தானே அந்த இறைவனின் சட்ட விதிமுறைகளையா ஏற்க மறுக்கிறாய்?” என்று தர்க்கித்து வந்தான்.
அதாவது அவனுடைய படைப்பே இறைவனின் படைப்புச் சட்டப்படி ஏற்பட்டது. எனவே அவனுக்கு கிடைத்த செல்வங்களும் இறைவனின் நியதிப்படி உள்ள ஏற்பாடுகளின் மூலமாகத் தான் கிடைத்தவை ஆகும். ஆக நிலம் காற்று அந்த நீரோடைகள் ஆகிய எதையும் மனிதன் படைக்கவில்லை. அவை இறைவனின் படைப்புகளாகும். மனிதனின் உழைப்பு என்பது அதில் ஒரு பகுதியே ஆகும். உண்மை இவ்வாறிருக்கும் போது, தோட்டத்தில் கிடைக்கும் அனைத்து மகசூல்களும் தனக்கு மட்டுமே சொந்தம் என கருதுவது எப்படி நியாயமாகும்?
لَّٰكِنَّا۠ هُوَ ٱللَّهُ رَبِّى وَلَآ أُشْرِكُ بِرَبِّىٓ أَحَدًۭا.
18:38. மேலும் அவனுடைய தோழன், “அனைத்தையும் படைத்து பரிபாலிக்கும் இறைவனாகிய அல்லாஹ் ஒருவனே என்பதை நான் திடமாக நம்புகிறேன். அவனுடைய வழிகாட்டுதலில் வேறு எதையும் இணை வைத்து பின்பற்ற மாட்டேன்” என்றான்.
وَلَوْلَآ إِذْ دَخَلْتَ جَنَّتَكَ قُلْتَ مَا شَآءَ ٱللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِٱللَّهِ ۚ إِن تَرَنِ أَنَا۠ أَقَلَّ مِنكَ مَالًۭا وَوَلَدًۭا.
18:39. மேலும் அவன், “நீ உன் தோட்டத்திற்குள் பிரவேசிக்கும் போதெல்லாம், இந்த செல்வங்கள் யாவும் அல்லாஹ்வின் படைப்பு சட்டத்தின்படி எனக்கு கிடைத்தவை ஆகும் என்றும், அல்லாஹ்வைத் தவிர இவற்றை படைக்கும் பேராற்றல் உடையவன் வேறு யாரும் இல்லை என்பதையும் கவனத்தில் கொண்டு, அவன் கட்டளைப்படி நீ செயல்பட வேண்டும்” என்றே நான் விரும்புகிறேன். “தற்சமயம் என்னிடம் செல்வமும் ஆட்பலமும் உன்னைவிட குறைவாக இருக்கலாம். அதற்காக என்னுடைய அறிவுரைகளை ஏற்க மறுத்துவிடாதே” என்றார்.
فَعَسَىٰ رَبِّىٓ أَن يُؤْتِيَنِ خَيْرًۭا مِّن جَنَّتِكَ وَيُرْسِلَ عَلَيْهَا حُسْبَانًۭا مِّنَ ٱلسَّمَآءِ فَتُصْبِحَ صَعِيدًۭا زَلَقًا.
18:40.“வரவிருக்கும் காலத்தில் எனக்கு உன்னை விட சிறந்த தோட்டங்களை இறைவன் கொடுக்கவும் செய்யலாம். அல்லது உன்னுடைய தோட்டங்களை இடி மின்னல்கள் போன்றவற்றால் அழிக்கவும் செய்யலாம்”
أَوْ يُصْبِحَ مَآؤُهَا غَوْرًۭا فَلَن تَسْتَطِيعَ لَهُۥ طَلَبًۭا.
18:41.“அல்லது நீரோடைகள் காய்ந்து தண்ணீர் இரைக்க முடியாத படி பூமிக்குள் ஆழமாகச் சென்று விடும்படியும் செய்யலாம். அதாவது பஞ்சமும் ஏற்படலாம்”
“அப்படிப்பட்ட கால கட்டம் ஏற்படும் போது, உன்னால் என்ன செய்ய முடியும்? எனவே அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்கி செயல்பட்டு வா” என அறிவுரை செய்து வந்தார். ஆனால் அவனோ இவருடைய அறிவுரையை ஏற்கவில்லை. அவர் கூறியவாறே அந்த அழிவும் ஏற்பட்டு விட்டது.
وَأُحِيطَ بِثَمَرِهِۦ فَأَصْبَحَ يُقَلِّبُ كَفَّيْهِ عَلَىٰ مَآ أَنفَقَ فِيهَا وَهِىَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا وَيَقُولُ يَٰلَيْتَنِى لَمْ أُشْرِكْ بِرَبِّىٓ أَحَدًۭا.
18:42. அவ்வாறே அவனுடைய விலை மதிப்பற்ற பொருட்கள் அழிந்து போயின. அதற்காக, தான் செலவு செய்து உழைத்து வந்தவை எல்லாம் பலனற்றுப் போயிற்றே என கையை பிசைந்து கொண்டு அமர்ந்து விட்டான். அந்த அளவுக்கு அந்தத் தோட்டம் வேரோடு அழிந்து போய் இருந்தது. அந்த தருணத்தில் அவன், “என் இறைவனின் கட்டளைக்கு இணையாக வேறெதையும் பின்பற்றாமல் இருந்திருக்க வேண்டுமே” என்று புலம்பினான்.
وَلَمْ تَكُن لَّهُۥ فِئَةٌۭ يَنصُرُونَهُۥ مِن دُونِ ٱللَّهِ وَمَا كَانَ مُنتَصِرًا.
18:43. ஒரு பக்கம் அவனிடமிருந்த ஆட்பலமும் அவனுக்கு எந்த உதவியும் செய்ய முடியவில்லை. மறுபக்கம் அவனுடைய செல்வமும் அவனுக்கு எவ்வித பாதுகாப்பும் அளிக்கவில்லை. மிஞ்சி இருந்ததோ அல்லாஹ்வின் சட்டம் மட்டும் தான்.
هُنَالِكَ ٱلْوَلَٰيَةُ لِلَّهِ ٱلْحَقِّ ۚ هُوَ خَيْرٌۭ ثَوَابًۭا وَخَيْرٌ عُقْبًۭا.
18:44. அல்லாஹ்வின் அந்த சட்டங்களின் மூலம் தான் அவனுடைய பாதுகாப்பான வாழ்விற்கு வழிகள் கிடைக்கும். அதை விட்டால் அவனுக்கு வேறு எந்த வழியும் கிடைக்காது. ஏனெனில் “மனித செயல்களுக்கு ஏற்ற விளைவுகள்” என்ற சட்டம் எப்போதும் செயல்பட்டுக் கொண்டே வருகிறது. அதன்படி அவரவர் செயல்களுக்கு எற்ப பலன்கள் நிச்சயமாக கிடைத்து வரும். இப்படி ஒரு செயல்திட்டத்தை ஏற்படுத்த அல்லாஹ் எடுத்த முடிவு எப்போதும் மேலோங்கியே நிற்கும்.
மேற்சொன்ன விஷயம் ஏதோ ஒரு ஊரில் நடந்து முடிந்த கதை என்று எண்ணி, அதைப் பற்றி வியாக்கியாணம் பேசிக் கொண்டிராதீர்கள். இது ஒரு உதாரணமே ஆகும்.
அதாவது ஒரு சமுதாயமோ அல்லது நாடோ அல்லாஹ்வின் அறிவுரைகளை எடுத்து சொல்பவர், ஏழையா பணம் படைத்தவரா என்பதை பார்க்கக் கூடாது. அவர் செய்யும் அறிவுரைகளை ஏற்காமல் தம் மனோ இச்சைப்படி செயல்படும் போது, அவர்களுக்கு கிடைக்கின்ற நிம்மதியான சுவனத்திற்கு ஒப்பான வாழ்வு பறிபோய் விடுகிறது என்பதையே அந்த தோட்டமும் தோட்டக்காரனின் சுயநலப் போக்கின் உதாரணத்தைக் கொண்டு விளக்கப்படுகிறது.
இது இறைவன் ஏற்படுத்திய உலக நியதியாகும். இதிலிருந்து எந்த நாடும் தப்பிக்க முடியாது. இப்படிப்பட்ட அழிவுகள் ஏற்படுவது நூற்றாண்டுகள் என்ற அடிப்படையில் தான் நிகழும்.
وَٱضْرِبْ لَهُم مَّثَلَ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا كَمَآءٍ أَنزَلْنَٰهُ مِنَ ٱلسَّمَآءِ فَٱخْتَلَطَ بِهِۦ نَبَاتُ ٱلْأَرْضِ فَأَصْبَحَ هَشِيمًۭا تَذْرُوهُ ٱلرِّيَٰحُ ۗ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ مُّقْتَدِرًا.
18:45. இத்தகைய சுயநலப் போக்குடனும் கர்வத்துடனுடம் தற்காலிக சுகங்களை மட்டும் நோக்கமாக வாழும் சமுதாயத்தின் நிலையை இன்னொரு உதாரணத்தைக் கொண்டும் விளங்கி கொள்ளலாம். அதாவது இறைவனின் நியதிப்படி வானத்தலிருந்து மழை பொழிகிறது. அதனால் அப்பூமியிலிருக்கும் தாவரங்களும் செடி கொடிகளும் செழிப்பாகின்றன. அதே தாவரங்களும் செடிக் கொடிகளும் காய்ந்து பதராகி அவற்றை காற்று அடித்துக் கொண்டு போய் விடுகிறது. இப்படியாக எல்லா விஷயங்களிலும் அல்லாஹ்வின் பேராற்றலே மிகைத்து நிற்கிறது.
அதாவது வானத்திலிருந்து பொழியும் மழையைக் கொண்டு எவ்வாறு பூமி செழிப்படைகிறதோ, அது போல வானத்திலிருந்து இறக்கி அருளப்படும் இறைவழிகாட்டுதல் சமுதாயத்தை ஜீவனுள்ள சமுதாயமாக மாற்றிவிடும்.
மேலும் செழிப்படைந்த அந்நிலத்தை சரிவர பராமரிக்காமல் விட்டுவிட்டால் அது எவ்வாறு பாழடைந்து விடுகிறதோ, அது போல சமுதாய ஒழுக்க மாண்புகளை கட்டிக் காக்க வலியுறுத்தும் இறைவழிகாட்டுதலைப் போதிக்காமல் விட்டுவிட்டால், அந்த சமுதாயம் எவ்வளவு தான் பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற்று செழித்திருந்தாலும் அது சீரழிந்து கொண்டே போய்விடும்.
ٱلْمَالُ وَٱلْبَنُونَ زِينَةُ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۖ وَٱلْبَٰقِيَٰتُ ٱلصَّٰلِحَٰتُ خَيْرٌ عِندَ رَبِّكَ ثَوَابًۭا وَخَيْرٌ أَمَلًۭا.
18:46. எனவே வாழ்வாதார வசதிகளாக விளங்கும் செல்வங்களும், பிள்ளைகளும் தேவையற்ற ஒன்றா என்ற கேள்வி எழுகிறது. அவை யாவும் இவ்வுலக வாழ்வை அலங்கரிக்கும் சாதனங்களே என்பதில் சந்தேகமில்லை. அதன் மேல் மக்களுக்கு ஈர்ப்பு ஏற்படுவது இயல்பானதே. (பார்க்க 3:14-15) அவை எல்லாம் விலக்கப்பட்டவையும் அல்ல. (பார்க்க 7:32) ஆனால் அதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வாழ்வதே சிறப்பு என எண்ணுவதே தவறாகும். உலக செல்வங்கள் யாவும் நிலைத்திருக்க வேண்டும் என்றால், இறைவழிகாட்டுதலின் அடிப்படையில் தூய சமுதாயத்தை உருவாக்கி, அதன் மேம்பாட்டிற்காக நலத் திட்டங்களை தீட்டி அதற்காக உதவி செய்வதும் உழைப்பதும் அவசியமான ஒன்றாகும். இதை நீங்கள் உளப்பூவர்மாக ஏற்று அதன்படி செயல்பட வேண்டும்.
وَعُرِضُوا۟ عَلَىٰ رَبِّكَ صَفًّۭا لَّقَدْ جِئْتُمُونَا كَمَا خَلَقْنَٰكُمْ أَوَّلَ مَرَّةٍۭ ۚ بَلْ زَعَمْتُمْ أَلَّن نَّجْعَلَ لَكُم مَّوْعِدًۭا.
18:48. அப்படி ஒரு கால கட்டத்தில், இறை ஆட்சியமைப்பின் செயல்திட்டங்களில் அனைவரும் ஓரணியாக நின்று செயல்படுவீர்கள். மனித படைப்பின் ஆரம்ப கால கட்டத்தில் எவ்வாறு சீரும் சிறப்புமாக நிம்மதியாக வாழ்ந்தார்களோ, அதே நிலைக்கு வந்து விடுவீர்கள். (பார்க்க 2:213&10:19) இறைவனின் நியதியின்படி ஏற்படும் இந்த மாற்றங்கள் ஒருபோதும் ஏற்படாது என்று எண்ணிக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் அப்படி ஒரு நிலை ஏற்பட்டே தீரும்.
وَوُضِعَ ٱلْكِتَٰبُ فَتَرَى ٱلْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَٰوَيْلَتَنَا مَالِ هَٰذَا ٱلْكِتَٰبِ لَا يُغَادِرُ صَغِيرَةًۭ وَلَا كَبِيرَةً إِلَّآ أَحْصَىٰهَا ۚ وَوَجَدُوا۟ مَا عَمِلُوا۟ حَاضِرًۭا ۗ وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًۭا.
18:49. அவ்வாறு அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு ஏற்படும் காலக் கட்டங்களில், இறைவனின் சட்டங்களே நடைமுறையில் இருக்கும். சமூக விரோதிகள் புரியும் குற்றங்களின் பதிவேடுகள் அவர்கள் முன் வைக்கப்படும் போது, அவர்கள் மிகவும் அச்சத்துடன் நடுங்குவதை நீர் காண்பீர். “அந்தோ! இந்த பதிவேட்டுக்கு என்ன வந்தது? பெரிய பெரிய குற்றங்கள் ஒருபுறம் இருக்கட்டும். சின்ன சின்ன குற்றங்கள் கூட இதில் பதிவாகி உள்ளதே!” என்று கதறுவார்கள். அதே சமயம் அவர்களில் யாருக்கும் அநியாயம் செய்யப்படவும் மாட்டாது. இறைவனின் சட்டப்படி என்ன தண்டனையோ அதுவே கிடைக்கும்.
وَإِذْ قُلْنَا لِلْمَلَٰٓئِكَةِ ٱسْجُدُوا۟ لِءَادَمَ فَسَجَدُوٓا۟ إِلَّآ إِبْلِيسَ كَانَ مِنَ ٱلْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِۦٓ ۗ أَفَتَتَّخِذُونَهُۥ وَذُرِّيَّتَهُۥٓ أَوْلِيَآءَ مِن دُونِى وَهُمْ لَكُمْ عَدُوٌّۢ ۚ بِئْسَ لِلظَّٰلِمِينَ بَدَلًۭا.
18:50. இறைவனின் செயல்திட்டப்படி பிரபஞ்ச இயற்கை சக்திகள் மனிதனுக்குக் கட்டுப்பட்டு செயல்படுகின்றன. ஆனால் அவனுள் இருக்கும் ஆணவப் போக்கு எனும் இப்லீஸிய குணம், மனிதனை கடடுப்படுத்தி தவறான வழியில் அழைத்துச் செல்கிறது. இந்த உண்மை மனிதனின் அறிவுப் புலன்களுக்கு புலப்படுவதில்லை. எனவே தான் அவன் இறைக் கட்டளைக்கு மாறு செய்கிறான். இதனால் அவன் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு, தன் மனோ இச்சையின்படி செயல்படும் தீயவர்களை கூட்டாக்கி கொண்டு சமுதாயத்தை நரகமாக்கி விடுகிறான். இப்படிப்பட்ட ஆணவப்போக்கு மனித நேயத்தை சீரழிக்கும் செயலாகும் அல்லவா? (மேல்கொண்டு விளக்கத்திற்கு பார்க்க 2:30-38,7:12-25&15:28-44)
இப்படிப்பட்ட சமுதாயங்களில் அல்லாஹ்வைப் பற்றி பல்வேறு கற்பனை கதைகளே சொல்லிக் கொண்டிருப்பார்கள். கூடவே கற்பனை தெய்வங்களும், மகான்களும், அவற்றின் வழிபாடுகளும் நடைபெற்று வரும். இப்படிப்பட்ட தவறான கண்ணோட்டங்கள் எல்லாம் மனித சிந்தனையில் வடிந்த கற்பனைகளே. எனவே நீங்கள் உலக படைப்புகளைப் பற்றியே சிந்தித்துப் பாருங்கள்.
۞ مَّآ أَشْهَدتُّهُمْ خَلْقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَلَا خَلْقَ أَنفُسِهِمْ وَمَا كُنتُ مُتَّخِذَ ٱلْمُضِلِّينَ عَضُدًۭا.
18:51. பிரம்மாண்டமான அகிலங்களையும் பூமியையும் நாம் படைத்தபோது, இத்தகைய தெய்வங்களோ மகான்களோ இருந்ததில்லை. எனவே அவர்கள் எனக்கு எவ்வாறு உதவி செய்திருக்க முடியும். அவர்கள் நினைத்திருப்பது போல், அத்தகையவர்களை நாம் அருகே வைத்துக் கொள்ளும் பேச்சிற்கே இடமில்லை. வழிதவறியவர்களை நான் உதவியாளர்களாக ஏற்படுத்திக் கொள்வதும் இல்லை.
இவை எல்லாம் பிற்காலத்தில் மனித சிந்தனையில் உருவான கற்பனை கதைகளே ஆகும். இப்படிப்பட்ட தவறான கண்ணோட்டங்களால் சமுதாயம் சீரழிந்து, பல வேதனைகளுக்கு ஆளாகிவிடுகிறது.
وَيَوْمَ يَقُولُ نَادُوا۟ شُرَكَآءِىَ ٱلَّذِينَ زَعَمْتُمْ فَدَعَوْهُمْ فَلَمْ يَسْتَجِيبُوا۟ لَهُمْ وَجَعَلْنَا بَيْنَهُم مَّوْبِقًۭا.
18:52. அப்படி வேதனைகள் ஏற்படும் கால கட்டத்தில் அல்லாஹ்வுக்கு இணையாக அவர்கள் ஏற்படுத்தி இருந்த கற்பனை தெய்வங்களையும், மகான்களையும் உதவிக்கு அழைக்கும் படி கூறப்படும். இவர்களும் அவர்களை அழைத்துப் பார்ப்பார்கள். ஆனால் அவர்களிலிருந்து எந்த பதிலும் வராது. மேலும் இறைவனின் நியதிப்படி அவர்களிடையே மோதல்களும் நாசகர விளைவுகளும் ஏற்பட்டே தீரும்.
وَرَءَا ٱلْمُجْرِمُونَ ٱلنَّارَ فَظَنُّوٓا۟ أَنَّهُم مُّوَاقِعُوهَا وَلَمْ يَجِدُوا۟ عَنْهَا مَصْرِفًۭا.
18:53. இப்படியாக தாம், நரக வேதனைகளை அனுபவிக்க போகிறோம் என்பதை அந்த குற்றவாளிகள் கண்கூடாகத் தெரிந்து கொள்வார்கள். மேலும் அதிலிருந்து தப்பிக்க வேறு எந்த வழிமுறையையும் அவர்களால் காணவே முடியாது.
وَلَقَدْ صَرَّفْنَا فِى هَٰذَا ٱلْقُرْءَانِ لِلنَّاسِ مِن كُلِّ مَثَلٍۢ ۚ وَكَانَ ٱلْإِنسَٰنُ أَكْثَرَ شَىْءٍۢ جَدَلًۭا.
18:54. இவ்வாறாக நாம், உலக மக்கள் அனைவரும் தெளிவாக விளங்கிக் கொண்டு சிறப்பாக வாழவேண்டும் என்பதற்காக, இந்த குர்ஆனில் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் பல்வேறு கோணங்களில் பல உதாரணங்களைக் கொண்டு விளக்குகிறோம். ஆனால் மனிதனோ இதை சிந்தித்து ஏற்று நடப்பதற்குப் பதிலாக, அதில் வீணான தர்க்கம் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கிறான்.
وَمَا مَنَعَ ٱلنَّاسَ أَن يُؤْمِنُوٓا۟ إِذْ جَآءَهُمُ ٱلْهُدَىٰ وَيَسْتَغْفِرُوا۟ رَبَّهُمْ إِلَّآ أَن تَأْتِيَهُمْ سُنَّةُ ٱلْأَوَّلِينَ أَوْ يَأْتِيَهُمُ ٱلْعَذَابُ قُبُلًۭا.
18:55. இப்படியாக நம்மிடமிருந்து நேர்வழி வந்த பின்பும், அதை ஏற்று தம் பாதுகாப்பான வாழ்விற்குரிய வழியை தேடிக்கொள்வதில் அவர்களுக்கு என்ன சிரமம் ஏற்படப் போகிறது? அதையும் மீறி அவர்கள் தம் தவறான போக்கில் நிலைத்திருந்தால், முன்சென்ற சமுதாயங்களுக்கு ஏற்பட்ட அழிவுகளைப் போலவே இவர்களுக்கும் ஏற்படுவதை காணவேண்டியது தான். இதைத் தவிர அவர்கள் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
وَمَا نُرْسِلُ ٱلْمُرْسَلِينَ إِلَّا مُبَشِّرِينَ وَمُنذِرِينَ ۚ وَيُجَٰدِلُ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِٱلْبَٰطِلِ لِيُدْحِضُوا۟ بِهِ ٱلْحَقَّ ۖ وَٱتَّخَذُوٓا۟ ءَايَٰتِى وَمَآ أُنذِرُوا۟ هُزُوًۭا.
18:56. ஆனால் நாமோ, நம் தூதர்களை எதற்காக அனுப்புகிறோம்? எந்தெந்த நற்செயல்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பதையும், எந்த தீய செயல்களுக்கு என்ன விபரீத விளைவுகள் ஏற்படும் என்பதையும் அறிவித்து முன்னெச்சரிக்கை செய்வதற்காகவே ஆகும். மேலும் இவை மனிதனின் சிறப்பான வாழ்விற்கு வழி காட்டக் கூடிய வழிகாட்டுதலாகவும் இருக்கின்றன. ஆனால் அவர்கள் கடைப்பிடித்து வருவதோ பலனற்ற வழிமுறைகளே ஆகும். இருந்தும் அவற்றை ஆதரித்து, இறைவழிகாட்டுதலுக்கு எதிராக தர்க்கம் செய்பவர்களாகவே இருக்கிறார்கள். இப்படியாக நாம் ஆதாரப்பூர்வமாக எடுத்துரைக்கும் முன் எச்சரிக்கைகளை விளையாட்டாகவே எடுத்துக் கொள்கிறார்கள்.
وَمَنْ أَظْلَمُ مِمَّن ذُكِّرَ بِـَٔايَٰتِ رَبِّهِۦ فَأَعْرَضَ عَنْهَا وَنَسِىَ مَا قَدَّمَتْ يَدَاهُ ۚ إِنَّا جَعَلْنَا عَلَىٰ قُلُوبِهِمْ أَكِنَّةً أَن يَفْقَهُوهُ وَفِىٓ ءَاذَانِهِمْ وَقْرًۭا ۖ وَإِن تَدْعُهُمْ إِلَى ٱلْهُدَىٰ فَلَن يَهْتَدُوٓا۟ إِذًا أَبَدًۭا.
18:57. நீங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு சமுதாயத்திற்கு நேர்வழி எவை, தீய செயல்கள் எவை என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்து அறிவுரை செய்தும், அவற்றை ஏற்க மறுப்பவர்களை என்னவென்று சொல்வது? இத்தனைக்கும் அவர்களுடைய செயல்களுக்கு ஏற்ப விளைவுகளை அவர்கள் சந்தித்தே ஆகவேண்டும் என்ற நிலை இருக்கும் போது, அந்த அறிவுரைகளை நிராகரிப்பவனை விட அநியாயக்காரன் வேறு யார் இருக்க முடியும்? அல்லாஹ்வின் நியதிப்படி இத்தகையவர்களின் உள்ளங்களில் திரை ஏற்பட்டு விடுகிறது. அதாவது அவர்களால் இறைவழிகாட்டுதலை விளங்கிக் கொள்ள முடிவதில்லை. அது மட்டுமின்றி அவர்களுடைய காதுகளில் செவிட்டுத்தனமும் ஏற்பட்டுவிடுகிறது. எனவே அவர்களை நேர்வழியின் பக்கம் அழைத்தாலும், அவர்கள் ஒருபோதும் நேர்வழி பெறவும் மாட்டார்கள்.
وَرَبُّكَ ٱلْغَفُورُ ذُو ٱلرَّحْمَةِ ۖ لَوْ يُؤَاخِذُهُم بِمَا كَسَبُوا۟ لَعَجَّلَ لَهُمُ ٱلْعَذَابَ ۚ بَل لَّهُم مَّوْعِدٌۭ لَّن يَجِدُوا۟ مِن دُونِهِۦ مَوْئِلًۭا.
18:58. ஆனால் அல்லாஹ்வின் செயல்திட்டமோ, அவர்களுடைய தவறான செயல்களுக்கு உடனுக்குடன் தண்டனை அளிக்கக் கூடாது என்பதே. மேலும் அவர்கள் திருந்தி பாதுகாப்பாக வாழ, தக்க கால அவகாசம் அளிக்கப்படுகிறது. இது அல்லாஹ்வின் மாபெரும் கருணை அல்லவா? அந்தக் கால அவகாசத்திற்குள் அவர்கள் திருந்தவில்லை என்றால் அவர்களுடைய செயல்களின் விளைவாக, அவர்களை வேதனைகள் சூழ்ந்துகொள்ளும். அதன் பின் அவர்கள் அவ்வேதனையிலிருந்து விடுபட அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டால் அவர்களுக்கு வேறு எந்த வழிமுறையும் இருக்காது.
وَتِلْكَ ٱلْقُرَىٰٓ أَهْلَكْنَٰهُمْ لَمَّا ظَلَمُوا۟ وَجَعَلْنَا لِمَهْلِكِهِم مَّوْعِدًۭا.
18:59. இப்படியாகத் தான் உலகில் வாழ்ந்த பல சமுதாயங்கள் அநியாய செயலில் ஈடுபட்டிருந்த போதும், அவர்கள் திருந்தி வாழ தக்க கால அவகாசம் அளிக்கப்பட்டது. அதன் பின்பே அவர்கள் திருந்தாததால் அழிந்து போனார்கள்.
“மனித செயல்களின் விளைவுகள்” தோற்றத்திற்கு வருவதற்குரிய காலத் தவணை என்பது அந்தந்த செயலைப் பொறுத்தே அமையும். உதாரணமாக நெருப்பில் கை வைத்தால் உடனே சுடும். போதைப் பொருள் பயன்படுத்தினால் உடனே போதை ஏறும். ஆனால் உடல் நலம் முழுவதுமாக கெடுவதற்கு பத்து இருபது ஆண்டுகள் ஆகும். ஒரு சமுதாயம் மானக்கேடான செயலில் ஈடுபட்டால், அது காலப்போக்கில் அழிவை சந்திக்கும். அந்த அழிவு ஏற்பட நாற்பது ஐம்பது ஆண்டுகள் கூட ஆகலாம். அல்லது நூற்றாண்டு என்ற கணக்கிலும் ஏற்படலாம்.
அதே போன்று நற்செயல்கள் செய்து வரும்போதும், அதன் பலன்கள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவின் படியே தோற்றத்திற்கு வரும். ஒரு விதை செடியாகி மரமாவதற்கு எவ்வாறு நேர காலம் நிர்ணயிக்கப் பட்டுள்ளதோ, அதே போன்றுதான் இதுவும். எனவே தான் செயல்களில் நன்மையோ தீமையோ அதன் பலன்கள் கண்டிப்பாக ஏற்பட்டே தீரும். அதற்கு நாம் அவசரப்பட்டால் அந்த பலன்களை அல்லது விளைவுகளை உடனே கொண்டு வர முடியாது.
இது போன்ற அவசரப் புத்தி இருப்பது மனிதனின் இயல்புதான். மூஸா நபியும் அரண்மனையில் வாழ்ந்ததால், அவரிடமும் நிதானமும், தொலை நோக்கு பார்வையும் குறைவாக இருந்தன. இதை இந்த குர்ஆனில் ஒரு பெரியாரிடம் நடந்த சம்பவத்தை எடுத்துக் காட்டி நமக்கு விளக்கம் அளிக்கிறது. மேலும் ஒரு நபிக்கு நபித்துவம் கிடைப்பதற்கு முன் இப்படிப்பட்ட பயிற்சிகள் அளிக்கப்படுவதும் உண்டு என்பதும் நமக்குப் புலனாகிறது.
وَإِذْ قَالَ مُوسَىٰ لِفَتَىٰهُ لَآ أَبْرَحُ حَتَّىٰٓ أَبْلُغَ مَجْمَعَ ٱلْبَحْرَيْنِ أَوْ أَمْضِىَ حُقُبًۭا.
18:60. மூஸா தம் பயணத் தோழரிடம், “இரு நதிகள் சங்கமம் ஆகும் இடத்தை அடையும் வரையில் தொடர்ந்து பயணிப்பேன் என்றார். எத்தனை நாட்கள் ஆனாலும் நான் அந்த பயணத்தை கைவிட மாட்டேன்” என்றார். நடந்து முடிந்த இந்த சம்பவ நிகழ்ச்சியைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைப்பீராக.
அதாவது மூஸா நபியின் கரங்களால் கொலை நடந்து விடுகிறது. அதைத் தொடர்ந்து அவர் ஊரைவிட்டு மிகத் தொலைவிலுள்ள மத்யன் நாட்டில் மறைவாக வாழ்ந்து வந்தார் (28:22). அங்கு அவர் ஷுஅய்ப் நபியிடம் பணி புரிந்தார். மூஸாவிடம் இருந்த அவதரப் புத்தியைப் பார்த்து, தக்க பயிற்சி அளிக்க இறை ஞானம் பெற்ற பெரியாரிடம் அனுப்பி வைத்ததாகத் தெரிகிறது. மேலும் அந்த பெரியார் வாழ்ந்தது ஆறுகள் ஓடும் பகுதியாகும்.
فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَا حُوتَهُمَا فَٱتَّخَذَ سَبِيلَهُۥ فِى ٱلْبَحْرِ سَرَبًۭا.
18:61. இப்படியாக அவர்கள் இரு நதிகள் இணையும் இடத்தை அடைந்தனர். அவ்விருவரும் இளைப்பாறுவதற்காக அங்கிருந்த கற்பாறையின் மீது கொஞ்சம் நேரம் அமர்ந்தனர் (18:63) தம் உணவுக்காக கொண்டு வந்த மீனையும் மறந்து விட்டு, அந்த இடத்தை விட்டு கடந்து சென்று விட்டனர். அது உயிருடன் இருந்ததால் அது தவழ்ந்த வண்ணம் நதிக்குள் சென்று விட்டது.
فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَىٰهُ ءَاتِنَا غَدَآءَنَا لَقَدْ لَقِينَا مِن سَفَرِنَا هَٰذَا نَصَبًۭا.
18:62. அவ்விருவரும் அந்த இடத்தை விட்டு கடந்து சென்ற பின், அவ்விருவருக்கும் பயணக் களைப்பு ஏற்பட்டதால் ஆகாரத்திற்காக கொண்டு வந்த மீனை எடுத்து பொரிக்கும் படி தம் தோழரிடம் மூஸா நபி சொன்னார்.
قَالَ أَرَءَيْتَ إِذْ أَوَيْنَآ إِلَى ٱلصَّخْرَةِ فَإِنِّى نَسِيتُ ٱلْحُوتَ وَمَآ أَنسَىٰنِيهُ إِلَّا ٱلشَّيْطَٰنُ أَنْ أَذْكُرَهُۥ ۚ وَٱتَّخَذَ سَبِيلَهُۥ فِى ٱلْبَحْرِ عَجَبًۭا.
18:63. அதற்கு அவருடைய தோழர், “நாம் இளைப்பாறுதலுக்காக கற்பாறையின் மீது அமர்ந்திருந்தோம் அல்லவா? அது சமயம் நான் கொண்டுவந்த மீனை மறந்து விட்டேன். மேலும் என்னிடம் இருந்த ஷைத்தானிய பலவீனம் தான், என்னை உங்களிடம் அதை அறிவிக்க மறக்கடித்து விட்டது. எனவே அந்த மீன் எப்படியோ நதிக்குள் தவழ்ந்து சென்று விட்டதாக தெரிகிறது. இதை உங்களிடம் அறிவிக்காதது ஆச்சரியமே” என்றான்.
அப்போதுதான் மூஸாவுக்கும் ஷுஅய்ப் நபி கொடுத்த ஊரின் அடையாளம் நினைவுக்கு வந்தது.
قَالَ ذَٰلِكَ مَا كُنَّا نَبْغِ ۚ فَٱرْتَدَّا عَلَىٰٓ ءَاثَارِهِمَا قَصَصًۭا.
18:64. அப்போது மூஸா, “நாம் தேடிவந்த இடம் அதுதான்” என்று கூறி அவ்விருவரும் வந்த வழியாக திரும்பிச் சென்றனர்.
فَوَجَدَا عَبْدًۭا مِّنْ عِبَادِنَآ ءَاتَيْنَٰهُ رَحْمَةًۭ مِّنْ عِندِنَا وَعَلَّمْنَٰهُ مِن لَّدُنَّا عِلْمًۭا.
18:65. இவ்வாறாக அவ்விருவரும் தேடிச் சென்ற பெரியவரை கண்டுபிடித்துக் கொண்டனர். அவர், இறைவன் புறத்திலிருந்து வசதி வாய்ப்புகளையும், இறை வழிகாட்டுதலின் ஞான உபதேசங்களையும் பெற்றிருந்தார்.
அவரிடமிருந்து ஞான உபதேசங்களைக் கற்றுக்கொள்ள வந்துள்ளதாக மூஸா நபி அவரிடம் கூறினார்.
قَالَ لَهُۥ مُوسَىٰ هَلْ أَتَّبِعُكَ عَلَىٰٓ أَن تُعَلِّمَنِ مِمَّا عُلِّمْتَ رُشْدًۭا.
18:66. அவரிடம் மூஸா, “நீங்கள் கற்றுக் கொண்டுள்ள நல்ல விஷயங்களை நானும் உங்களிடமிருந்து கற்று கொள்வதற்காக வந்துள்ளேன். எனவே நீங்கள் என்னையும் உங்களுடன் சேர்த்துக் கொள்வீர்களா?” என்று கேட்டார்.
قَالَ إِنَّكَ لَن تَسْتَطِيعَ مَعِىَ صَبْرًۭا.
18:67. அதற்கவர்,“நான் உன்னை சேர்த்துக்கொள்ளத் தயார். ஆனால் உன்னை பார்த்தால் நிதானத்தோடு நடந்து கொள்பவனாக தெரியவில்லையே” என்றார்.
وَكَيْفَ تَصْبِرُ عَلَىٰ مَا لَمْ تُحِطْ بِهِۦ خُبْرًۭا.
18:68. ஏனெனில் நான் உனக்கு புரியாத சில செயல்களை செய்யும் போது, உன்னால் எவ்வாறு பொறுமையாக இருக்க முடியும்?” என்று கோட்டார்.
قَالَ سَتَجِدُنِىٓ إِن شَآءَ ٱللَّهُ صَابِرًۭا وَلَآ أَعْصِى لَكَ أَمْرًۭا.
18:69. அதற்கு மூஸா, “நீங்கள் செய்வது இறைவனின் செயல்திட்டப்படி இருந்தால், நான் உங்களுடன் இணைந்து செயலாற்றுவேன். எந்த விஷயத்தையும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன். இதை நீங்களே விரைவில் தெரிந்து கொள்வீர்கள்” என்றார்.
قَالَ فَإِنِ ٱتَّبَعْتَنِى فَلَا تَسْـَٔلْنِى عَن شَىْءٍ حَتَّىٰٓ أُحْدِثَ لَكَ مِنْهُ ذِكْرًۭا.
18:70. அதற்கு அவர், “சரி. நீர் என்னுடன் வரலாம். ஆனால் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளவேண்டும். எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் நானாகவே அறிவிக்கும் வரையில் நீர் எதைப் பற்றியும் என்னிடம் குறுக்கு கேள்வி கேட்கக் கூடாது” என்று நிபந்தனை இட்டார்.
فَٱنطَلَقَا حَتَّىٰٓ إِذَا رَكِبَا فِى ٱلسَّفِينَةِ خَرَقَهَا ۖ قَالَ أَخَرَقْتَهَا لِتُغْرِقَ أَهْلَهَا لَقَدْ جِئْتَ شَيْـًٔا إِمْرًۭا.
18:71. அவ்வாறே அவ்விருவரும் அந்த நிபந்தனைகளின் படி புறப்பட்டுச் சென்றனர். பின்பு அவர்கள் ஒரு படகில் ஏறிக் கொண்டனர். அது நீரில் மிதந்து செல்லும் போது, அந்த படகில் ஒரு பக்கமாக ஓட்டை போட்டு விட்டார். அதை கண்ட மூஸா, "நீங்கள் இதில் ஏன் ஓட்டையை போட்டீர்கள்? இதனால் பயணிப்பவர்கள் மூழ்கிப் போவார்கள் அல்லவா? நீங்கள் ஒரு ஆபத்தான காரியத்தை செய்து விட்டீர்களே!” என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
قَالَ أَلَمْ أَقُلْ إِنَّكَ لَن تَسْتَطِيعَ مَعِىَ صَبْرًۭا.
18:72. அதற்கு அவர், “உம்மால் என்னுடன் பொறுமையாக ஒருபோதும் இருக்க முடியாது என்று முன்பே நான் சொல்லவில்லையா?” என்றார்.
قَالَ لَا تُؤَاخِذْنِى بِمَا نَسِيتُ وَلَا تُرْهِقْنِى مِنْ أَمْرِى عُسْرًۭا.
18:73. அதற்கு மூஸா,“நான் ஒப்புக்கொண்ட நிபந்தனையை மறந்து விட்டதை காரணம் காட்டி, அதை ஒரு குற்றமாகக் கருதி என்னை ஒதுக்கி விடாதீர்கள். பெரியவர்களாகிய நீங்கள் சின்ன சின்ன தவறுகளை மன்னித்து என்னை மீண்டும் உங்களுடன் வர அனுமதி அளியுங்கள்” என்றார்.
فَٱنطَلَقَا حَتَّىٰٓ إِذَا لَقِيَا غُلَٰمًۭا فَقَتَلَهُۥ قَالَ أَقَتَلْتَ نَفْسًۭا زَكِيَّةًۢ بِغَيْرِ نَفْسٍۢ لَّقَدْ جِئْتَ شَيْـًۭٔا نُّكْرًۭا.
18:74. அவ்வாறே மீண்டும் ஒரு நாள் அவ்விருவரும் பயணத்தை தொடங்கினர். வழியில் அவர் ஒரு இளைஞனைக் கண்டதும், அவனை அவர் கொன்று விட்டார். இதை கண்டவுடன், “எந்த பாவமும் அறியாத அந்த வாலிபனை கொன்று விட்டீர்களே! இது மிகப்பெரிய பாவச் செயல் அல்லவா?” என்று மீண்டும் அவருடைய செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
۞ قَالَ أَلَمْ أَقُل لَّكَ إِنَّكَ لَن تَسْتَطِيعَ مَعِىَ صَبْرًۭا.
18:75. அதற்கு அவர், “உம்மால் ஒருபோதும் பொறுமையாக இருக்க இயலாது என்று உமக்கு நான் சொல்ல வில்லையா?” என்று கேட்டார். எனவே நீ என்னை விட்டு விலகிவிட வேண்டியது தான் என்றார்.
قَالَ إِن سَأَلْتُكَ عَن شَىْءٍۭ بَعْدَهَا فَلَا تُصَٰحِبْنِى ۖ قَدْ بَلَغْتَ مِن لَّدُنِّى عُذْرًۭا.
18:76. அதற்கு மூஸா,“இதன் பின்னர் நான் எந்த விஷயத்தைப் பற்றியாவது கேட்டால், நீங்கள் என்னை உங்கள் தோழனாக வைத்து கொள்ள வேண்டாம். இனி என் புறத்திலிருந்து எந்தக் குறையும் காணமாட்டீர்கள்” என்றார்.
فَٱنطَلَقَا حَتَّىٰٓ إِذَآ أَتَيَآ أَهْلَ قَرْيَةٍ ٱسْتَطْعَمَآ أَهْلَهَا فَأَبَوْا۟ أَن يُضَيِّفُوهُمَا فَوَجَدَا فِيهَا جِدَارًۭا يُرِيدُ أَن يَنقَضَّ فَأَقَامَهُۥ ۖ قَالَ لَوْ شِئْتَ لَتَّخَذْتَ عَلَيْهِ أَجْرًۭا.
18:77. அதன்பின், ஒரு நாள் அவ்விருவரும் ஒரு கிராமத்திற்குச் சென்றனர். அந்த கிராமத்தாரிடம் தமக்கு உணவளிக்கும் படி அவ்விருவரும் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அந்த கிராமத்தார் அவர்களுக்கு உணவளிக்க மறுத்து விட்டனர். பின்னர் அங்கே பாழடைந்த நிலையில் இருந்த ஒரு சுவரைக் கண்டனர். ஆகவே அவர் அதை சரிசெய்து புதுப்பித்து வைத்தார். இதைக் கண்ட மூஸா, இந்த ஊரார் நமக்கு உணவளிக்க மறுத்தும் கூட, நீங்கள் இந்த சுவரை சரி செய்தீர்களே! குறைந்தபட்சம் அவர்களிடம் இருந்து கூலியையாவது வசூலித்திருக்கலாம் அல்லவா?” என்று தம்மைக் கட்டுப்படுத்த முடியாமல் புலம்ப ஆரம்பித்தார்.
قَالَ هَٰذَا فِرَاقُ بَيْنِى وَبَيْنِكَ ۚ سَأُنَبِّئُكَ بِتَأْوِيلِ مَا لَمْ تَسْتَطِع عَّلَيْهِ صَبْرًا.
18:78. இதைக் கேட்ட அவர், “போதும். இத்துடன் நம்முடைய பயணத் தொடரை முடித்து கொள்ளலாம். இனி உமக்கும் நமக்கும் ஒத்து வராது. மேலும் எதைப் பற்றி உம்மால் பொறுமையாக இருக்க முடியவில்லையோ அதன் விளக்கத்தை நான் திட்டமாக இப்போது அறிவித்து விடுகிறேன்” என்று கூறினார்.
أَمَّا ٱلسَّفِينَةُ فَكَانَتْ لِمَسَٰكِينَ يَعْمَلُونَ فِى ٱلْبَحْرِ فَأَرَدتُّ أَنْ أَعِيبَهَا وَكَانَ وَرَآءَهُم مَّلِكٌۭ يَأْخُذُ كُلَّ سَفِينَةٍ غَصْبًۭا.
18:79. முதலாவதாக அந்த மரக் கலத்தைப் பற்றியது. அது ஏழை மீனவர்களுக்குச் சொந்தமானது. அங்கிருந்த கொடுங்கோலன், பழுதுபடாத நல்ல மரக்கலத்தை கண்டால், உடனே அவன் அபகரித்துக் கொள்வான். எனவே அதனை பழுதாக்கினேன்” என்றார்.
وَأَمَّا ٱلْغُلَٰمُ فَكَانَ أَبَوَاهُ مُؤْمِنَيْنِ فَخَشِينَآ أَن يُرْهِقَهُمَا طُغْيَٰنًۭا وَكُفْرًۭا.
18:80. அதையடுத்து இரண்டாவதாக அந்த இளைஞனைக் கொன்றது. “அவனுடைய தாய் தந்தையர் சமூக சேவையில் ஈடுபடும் நல்லவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் காலப் போக்கில் அவனுடைய தீய செயல்களின் வலையில் சிக்கிக் கொள்வார்கள் என நான் பயந்தேன்” என்றார்.
சிலர் அந்த இளைஞனைத் திருத்துவதை விட்டுவிட்டு அவனை ஒரே அடியாக கொல்வது நியாயமான செயலா என்று ஆட்சேபிக்கிறார்கள். ஏற்கனவே அங்கு கொடுங்கோலனின் அரசாட்சி நடைபெற்று வருகிறது. எனவே அவனை சீர்திருத்துவதற்கு எந்த ஏற்பாடும் இருக்க வாய்ப்பில்லை. இத்தகையவர்களை நாட்டில் நடமாட விட்டால் பெருமளவு மக்களுக்கு கெடுதல்களையே செய்து வருவார்கள். எனவே அவனை திருத்த வழியில்லாததால் அவனை encounter முறையில் கொன்றுவிடுவதே மேல் என்று தம் செயலுக்கு நியாயமான விளக்கத்தை அளித்தார். (பார்க்க 2:191)
وَأَمَّا ٱلْجِدَارُ فَكَانَ لِغُلَٰمَيْنِ يَتِيمَيْنِ فِى ٱلْمَدِينَةِ وَكَانَ تَحْتَهُۥ كَنزٌۭ لَّهُمَا وَكَانَ أَبُوهُمَا صَٰلِحًۭا فَأَرَادَ رَبُّكَ أَن يَبْلُغَآ أَشُدَّهُمَا وَيَسْتَخْرِجَا كَنزَهُمَا رَحْمَةًۭ مِّن رَّبِّكَ ۚ وَمَا فَعَلْتُهُۥ عَنْ أَمْرِى ۚ ذَٰلِكَ تَأْوِيلُ مَا لَمْ تَسْطِع عَّلَيْهِ صَبْرًۭا.
18:82. அதை அடுத்து நான் செப்பனிட்ட சுவரைப் பற்றியது. அவ்வூரில் இரு அநாதை சிறுவர்கள் இருக்கிறார்கள். நான் செப்பனிட்ட சுவற்றிற்கு அடியில் புதையல் ஒன்று இருக்கிறது. அது அவ்விருவருக்கும் சொந்தமானது. அவ்விருவருவடைய தந்தை நல்ல ஒழுக்கமுள்ள மனிதராக வாழ்ந்து வந்தார். அச்சிறுவர்கள் வாலிப வயதை அடையும் வரையில் அதை பத்திரப்படுத்தி வைக்க எண்ணி, அதை அவ்வாறு புதைத்து வைத்துள்ளார். அதன்பின் அவர்களுக்கு மிகவும் பயன்படும் என்பதே உன் இறைவனின் நாட்டமாகும். எனவே நான் செய்தவை அனைத்தும் இறைவனின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டவையே ஆகும். என் சொந்த விருப்பு, வெறுப்பின்படி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை. எதைப் பற்றி நீர் பொறுமையாக இல்லையோ அதன் விளக்கம் இதுதான்” என்று கூறினார்.
படிப்பினைகள்:
(1) இறை ஞானம் பெற்ற பெயரியவருக்கும் மூஸாவுக்கும் இடையே நடை பெற்ற இச்சம்பவத்தை நாம் எடுத்துக் கொண்டு, அதிலிருந்து கிடைக்கின்ற படிப்பினைகள் என்னவென்று அறிந்து கொள்ள வேண்டுமே தவிர அந்த சம்பவ நிகழ்ச்சியைப் பற்றி எதிர்மறையாக சிந்திப்பது உச்சிதமல்ல.
(2) நாட்டில் ஏழை எளியோருடைய உரிமையை யாரும் பறிக்காதவாறு பாதுகாப்பது ஒரு அரசின் முக்கிய கடமையாகும். ஆனால் அரசே மக்களுக்கு விரோதமாக செயல்பட்டால் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மக்களும் முயல்வார்கள்.
(3) சமூக விரோத செயலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் நாட்டில் உலவ விடக்கூடாது. அத்தகையவர்களை கைது செய்து சிறையில் அடைக்கவோ அல்லது தேவை ஏற்படின் கொன்றுவிடவோ அரசுக்கு அனுமதி உண்டு.
(4) தனியார் சொத்தை பாதுகாப்பது அரசின் முக்கியப் பணியாகும். அதற்காக எந்த செலவும் செய்ய தயக்கம் காட்டக் கூடாது. பொருட் செல்வம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்றாகும்.
(5) வஹீ எனும் இறைவழிகாட்டுதல்கள் தற்காலிக மற்றும் வருங்கால பாதுகாப்பான வாழ்விற்கு வழி வகுக்கிறது. எனவே சில செயல்களுக்கு தடை விதிக்கிறது. ஒரு சில செயல்களை நிறைவேற்ற சொல்கிறது.
(6) அவை தற்சமயம் தேவையற்றதாகத் தோன்றும். இவை எதனால் என்றால் மனிதனின் தனிப்பட்ட அறிவுக்கு எவை சரியானவை எவை தவறானவை என்று புலப்படுவதில்லை. ஆனால் தொலை நோக்குப் பார்வையுடன் சமுதாய நலனை வைத்துப் பார்க்கும் போதுதான், அவை சரியானவை எனப் புலப்படும். (பார்க்க 2:216) எனவே மூஸா நபிக்கும் இந்த உண்மை விளங்காததால் அவரும் அந்தப் பெரியவரின் செயல்களுக்கு ஆட்சேபணை தெரிவிக்கிறார்.
(7) இறைவனின் செயல்திட்டங்கள் இவ்வுலகில் மனிதக் கரங்களால் தான் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது இறைவனின் நாட்டமாகும் என்று இதிலிருந்து தெரிகிறது. மேலும் அந்த பெரியவர் ஒரு நபியாகவும் இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
وَيَسْـَٔلُونَكَ عَن ذِى ٱلْقَرْنَيْنِ ۖ قُلْ سَأَتْلُوا۟ عَلَيْكُم مِّنْهُ ذِكْرًا.
18:83. அதே போன்று மக்களிடையே பிரபலமாகப் பேசப்பட்டுவரும் ஜுல்ஃகர்னைன் (Cyrus) எனும் மன்னரைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். “அவருடைய வரலாற்று சாதனைகளின் சிலவற்றை உங்கள் சிந்தனைக்குக் கொண்டு வருகிறோம்” என்று கூறிவிடுங்கள்.
إِنَّا مَكَّنَّا لَهُۥ فِى ٱلْأَرْضِ وَءَاتَيْنَٰهُ مِن كُلِّ شَىْءٍۢ سَبَبًۭا.
18:84. இறைவனின் நியதிப்படி அவருக்கு நாட்டை ஆளும் பொறுப்பு கிடைத்திருந்தது. அந்நாட்டிலுள்ள எல்லா வளங்களையும் ஆய்வு செய்து மக்கள் அனைவரும் சீரும் சிறப்புமாக வாழ வழிசெய்து வந்தார்.
எனவே தன் நாட்டை சிறப்பாக ஆட்சி செய்வதுடன் அண்டை நாடுகளும் அவ்வாறே சிறப்பாக இன்புற்று வாழவேண்டும் என எண்ணி அவர்களுடைய பிரச்னைகளை தீர்த்து வைக்க
فَأَتْبَعَ سَبَبًا.
18:85. அவர் பல இலட்சிய பயணங்களை மேற்கொண்டார்.
حَتَّىٰٓ إِذَا بَلَغَ مَغْرِبَ ٱلشَّمْسِ وَجَدَهَا تَغْرُبُ فِى عَيْنٍ حَمِئَةٍۢ وَوَجَدَ عِندَهَا قَوْمًۭا ۗ قُلْنَا يَٰذَا ٱلْقَرْنَيْنِ إِمَّآ أَن تُعَذِّبَ وَإِمَّآ أَن تَتَّخِذَ فِيهِمْ حُسْنًۭا.
18:86. அவருடைய முதல் பயணம் மேற்கு திசையை நோக்கி இருந்தது. செங்கடல் (Red Sea) வரையில் அவருடைய பயணம் தொடர்ந்தது. அங்கு அவர் சேறு கலந்த செந்நீரில் சூரியன் மறைவது போல் கண்டார். அந்த கடலோரப் பகுதியில் ஒரு சிறிய சமுதாயத்தினரை கண்டார். அவர்கள் இவருடைய படையைக் கண்டு தம்மை தாக்க வந்ததாக நினைத்து எதிர்த்தார்கள். அதை முறியடித்து அவர்களை தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். அவர்களை வேதனையும் செய்யலாம் அல்லது அழகிய நன்மையும் செய்யலாம் என்ற முழு அதிகாரத்தில் அவர் இருந்தார்.
قَالَ أَمَّا مَن ظَلَمَ فَسَوْفَ نُعَذِّبُهُۥ ثُمَّ يُرَدُّ إِلَىٰ رَبِّهِۦ فَيُعَذِّبُهُۥ عَذَابًۭا نُّكْرًۭا.
18:87. ஆனால் அவர் அதை சுதந்திர நாடாக அறிவித்து, அம்மக்களுக்கு நல்ல அறிவுரைகளை செய்து, இறைச் சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தினார். “அதற்கு எதிராக யார் அநியாய அக்கிரம செயல்களில் ஈடுபடுகிறார்களோ, அவர்களுக்கு கடுமையான வேதனைகள் அளிக்கப்படும். இந்த தண்டனைகள் மரணத்திற்குப் பின்பும் இறைவனின் நியதிப்படி தொடரும்” என்றார்.
وَأَمَّا مَنْ ءَامَنَ وَعَمِلَ صَٰلِحًۭا فَلَهُۥ جَزَآءً ٱلْحُسْنَىٰ ۖ وَسَنَقُولُ لَهُۥ مِنْ أَمْرِنَا يُسْرًۭا.
18:88.“அதே சமயம், யார் இறைவனின் வழிகாட்டுதலை ஏற்று, ஆக்கப்பூர்வமான நற்செயல்களை செய்கிறார்களோ, அவர்களுக்கு அழகிய நன்மைகள் கிடைக்கும்படி செய்வோம். இந்த அறிவுரைகள் யாவும் உங்கள் நன்மையைக் கருதியே அளிக்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்றார்.
இப்படியாக அவர் அண்டை நாட்டில் நிகழ்ந்து வந்த அநியாய செயல்களை ஒழித்துக் கட்டி, சிறந்ததொரு ஆட்சியமைப்பு ஏற்பட தக்க ஏற்பாடுகளை செய்துத் தந்தார்.
ثُمَّ أَتْبَعَ سَبَبًا.
18:89. அதன்பின் அவர் தன் இலட்சியப் பயணத்தைத் தொடர்ந்தா
حَتَّىٰٓ إِذَا بَلَغَ مَطْلِعَ ٱلشَّمْسِ وَجَدَهَا تَطْلُعُ عَلَىٰ قَوْمٍۢ لَّمْ نَجْعَل لَّهُم مِّن دُونِهَا سِتْرًۭا.
18:90. இப்போது அவர் மேற்கொண்ட பயணத்தின் திசை கிழக்கு திசையை நோக்கி இருந்தது. அந்த பகுதியல் வாழ்ந்த மக்கள், வீட்டு வசதி எதுவுமின்றி திறந்த வெளியில் வெயிலிலும் மழையிலும் அவதிப்பட்டு வருவதைக் கண்டார். மேலும் அங்கு வெயிலின் கடுமையும் அதிகமாகவே இருந்தது.
كَذَٰلِكَ وَقَدْ أَحَطْنَا بِمَا لَدَيْهِ خُبْرًۭا.
18:91. வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள கூடாரத்தை கட்டும் ஞானம் கூட அச்சமூகத்தாரிடம் இருந்ததில்லை. ஆனால் இறைவன் புறத்திலிருந்து கிடைத்த எல்லா ஞானங்களும் ஜுல்ஃகர்நைனிடம் இருந்தன.
எனவே அவர் அங்குள்ளவர்களுக்கு அக்காலத்தில் இருந்த வசதி வாய்ப்பிற்கு ஏற்றவகையில் கூடாரங்கள் மற்றும் கூரை வீடுகளை கட்டும் வழியை கற்றுக் கொடுத்து சிறந்த முறையில் வாழ வழிசெய்தார்.
ثُمَّ أَتْبَعَ سَبَبًا.
18:92 இப்படியாக அவர் தம் கடமையை எளிதாக முடித்துக் கொண்டு, தம் படைகளுடன் இலட்சியப் பயணத்தைத் தொடர்ந்தார்.
حَتَّىٰٓ إِذَا بَلَغَ بَيْنَ ٱلسَّدَّيْنِ وَجَدَ مِن دُونِهِمَا قَوْمًۭا لَّا يَكَادُونَ يَفْقَهُونَ قَوْلًۭا.
18:93. இம்முறை அவர் சென்ற இடம் மலைப் பிரதேசமாக இருந்தது. அந்த மலைப் பிரதேசங்களில் வாழ்ந்து வந்த மக்களை சந்தித்தார். அவர்கள் பேசிய மொழி மாற்று மொழியாக இருந்ததால், அவர்கள் சொல்வதை இவரால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.
قَالُوا۟ يَٰذَا ٱلْقَرْنَيْنِ إِنَّ يَأْجُوجَ وَمَأْجُوجَ مُفْسِدُونَ فِى ٱلْأَرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا عَلَىٰٓ أَن تَجْعَلَ بَيْنَنَا وَبَيْنَهُمْ سَدًّۭا.
18:94. அதன்பின் தக்க மொழி பெயர்ப்பாளரை நியமித்து, அங்கிருந்த நிலவரத்தை தெரிந்து கொண்டார். அவர்கள் மிகவும் துக்கப்பட்டவர்களாக ஜுல்ஃகர்நைனிடம் தம் குறைகளை எடுத்துரைத்தனர். அவர்கள் அசுரர்களாலும், காட்டு மிராண்டிகளாலும் அடிக்கடி தாக்கப்பட்டு, நிம்மதி இழந்து வாழ்வதாக கூறினர். எனவே அவர்கள் தம் நாட்டிற்குள் நுழைய முடியாதபடி உயரமான தடுப்பு சுவரை எழுப்பித் தருமாறு வேண்டிக் கொண்டனர். அதற்குண்டான செலவை அவர்களே ஏற்று கொள்வதாகவும் அவரிடம் சொன்னார்கள். (மேலும் விளக்கத்திற்குப் பார்க்க 21:96)
قَالَ مَا مَكَّنِّى فِيهِ رَبِّى خَيْرٌۭ فَأَعِينُونِى بِقُوَّةٍ أَجْعَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ رَدْمًا.
18:95. அதற்கு அவர், “என் இறைவன் எனக்கு எல்லா வசதி வாய்ப்புகளையும் அளித்துள்ளான். எனவே உங்களுடைய பண உதவி எனக்குத் தேவையில்லை. எனக்கு பணியாட்களை மட்டும் ஏற்பாடு செய்து தாருங்கள். நான் உங்களுக்கும், உங்கள் பகைவர்களுக்கும் இடையே தடுப்பு சுவரை எழுப்பி தருகிறேன்” என்றார்.
ءَاتُونِى زُبَرَ ٱلْحَدِيدِ ۖ حَتَّىٰٓ إِذَا سَاوَىٰ بَيْنَ ٱلصَّدَفَيْنِ قَالَ ٱنفُخُوا۟ ۖ حَتَّىٰٓ إِذَا جَعَلَهُۥ نَارًۭا قَالَ ءَاتُونِىٓ أُفْرِغْ عَلَيْهِ قِطْرًۭا.
18:96. மேலும் அவர் தம் கண்காணிப்பில் அந்த சுவரை எழுப்பினார். அவர் பெரிய பெரிய இரும்புப் பாளங்களை தம்மிடம் கொண்டுவரும்படி கூறினார். அதன்பின் அந்த இருமலைகளுக்கு நடுவே தடுப்பு சுவரை எழுப்பினார். அந்த சுவர் மலை உச்சி வரை சென்றது. அதன்பின் செம்பு உருக்குவதற்காக தீயை மூட்டச் செய்தார். அது நன்றாக உருகியதும் அந்த சுவரின் மேற்பகுதியிலிருந்து அதை ஊற்றும்படி கூறினார்.
இப்படியாக அந்த சுவர் வழுவழுப்பாகவும் உயரமாகவும் மிகவும் உறுதியாகவும் ஆகிவிட்டது.
فَمَا ٱسْطَٰعُوٓا۟ أَن يَظْهَرُوهُ وَمَا ٱسْتَطَٰعُوا۟ لَهُۥ نَقْبًۭا.
18:97. எனவே அந்த அசுரர்களாலும் காட்டு மிராண்டிகளாலும் அந்த சுவற்றின் மீது ஏறவும் முடியவில்லை. அதை துளைத்து துவாரமிடவும் முடியவில்லை. இப்படியாக அவர்களுடைய பாதுகாப்பான வாழ்விற்கு வழி பிறந்தது.
قَالَ هَٰذَا رَحْمَةٌۭ مِّن رَّبِّى ۖ فَإِذَا جَآءَ وَعْدُ رَبِّى جَعَلَهُۥ دَكَّآءَ ۖ وَكَانَ وَعْدُ رَبِّى حَقًّۭا.
18:98. “என் இறைவனிடமிருந்து கிடைத்த அருட்கொடைகளாகிய உலோகப் பொருட்களைக் கொண்டே இந்த உறுதிமிக்க சுவரை என்னால் உருவாக்க முடிந்தது. ஆனால் என் இறைவனின் நியதிப்படி ஏற்படக் கூடிய வெள்ளம், பூகம்பம் போன்ற நிகழ்வுகளால் மட்டுமே இதை தூள்தூளாக ஆக்க முடியும். இப்படி நிகழும் வாய்ப்புகள் உள்ளன என்பதே இறைவனின் வாக்கு ஆகும்” என்றார்.
ஜுல்ஃகர்நைனின் கருத்துக் கணிப்பு மிகவும் சரியானதாக இருந்தது. வரவிருக்கும் காலங்களில் சமுதாயத்தின் பாதுகாப்பான வாழ்விற்கு இப்படிப்பட்ட உறுதியான சுவர்களோ, கருங்கற்களால் கட்டப்படும் கோட்டைகளோ உதவி புரியாது என்பதை அவர் அறிந்திருந்தார். மாறாக மக்கள் அனைவரும் இறைவழிகாட்டுதலின்படி சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே சந்தோஷமான பாதுகாப்பான வாழ்விற்கு வழி கிடைக்கும். அவ்வாறு செயல்படவில்லை என்றால் இந்த சுவர்களும் கோட்டைகளும் தூள்தூளாகி விடும். இது எவ்வாறு நடக்கும்? இறைவழிகாட்டுதலின்படி ஒரு சமுதாயம் நடக்கவில்லை என்றால்
۞ وَتَرَكْنَا بَعْضَهُمْ يَوْمَئِذٍۢ يَمُوجُ فِى بَعْضٍۢ ۖ وَنُفِخَ فِى ٱلصُّورِ فَجَمَعْنَٰهُمْ جَمْعًۭا.
18:99. வரவிருக்கும் காலங்களில் இறைவனின் நியதிப்படி நாடுகளில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு கடல் அலைகள் ஒன்றன் மேல் ஒன்று மோதுவதைப் போல, சிலர் சிலருடன் மோதிக் கொள்ளும் நிலைமை உருவாகி விடும். அதைத் தொடர்ந்து, கலவரங்களும் போர்களும் மூளும். போரின் சங்கொலியும் முழங்கும். இப்படியாக அவர்கள் அனைவரும் களத்தில்தான் சந்திக்க நேரிடும்.
وَعَرَضْنَا جَهَنَّمَ يَوْمَئِذٍۢ لِّلْكَٰفِرِينَ عَرْضًا.
18:100. அப்போது இறைவழிகாட்டுதலுக்கு மாற்றமாக வாழும் சமுதாயம் தோல்வியுற்று நரக வேதனைகளில் சிக்கிக்கொள்ள நேரிடும்.
ٱلَّذِينَ كَانَتْ أَعْيُنُهُمْ فِى غِطَآءٍ عَن ذِكْرِى وَكَانُوا۟ لَا يَسْتَطِيعُونَ سَمْعًا.
18:101. அவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ்வின் அறிவுரைகளை விட்டு கண்மூடித்தனமாக செயல்பட்டு வந்தவர்கள். இறைவழிகாட்டுதலை எடுத்து சொன்னாலும், அதை ஏற்று நடக்கத் தயாராக இருந்ததில்லை.
அவர்களிடம் ஆற்றல் மிக்க ஆக்கப்பூர்வமான எந்த செயல் திட்டங்களும் இருப்பதில்லை. இதனால் அத்தகைய சமுதாயங்களில் வளர்ச்சி குன்றி விடுகிறது. அந்நியர்களின் தாக்குதலுக்கு அவர்களால் தாக்கு பிடிக்க முடியாமல் அழிவை சந்திக்கின்றனர். இப்படியாக ஜுல்ஃகர்நைன் சென்ற இடமெல்லாம் அங்கிருந்த குறைகளை நிவர்த்தி செய்து வைத்ததோடு, இறைவழிகாட்டுதலை எடுத்துரைத்து சீர்திருத்தங்களை செய்த மாபெரும் மன்னவராகத் திகழ்ந்தார்.
இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! இந்த வரலாற்று உண்மைகளை எடுத்துரைத்து சமுதாய சீர்திருத்தப் பணிகளில் தம்மை ஈடுபடுத்தி கொள்ளும்படி உங்களுடைய சமூகத்தவர்களுக்கு அறிவுருத்துவீராக. இந்த உண்மைகளை எடுத்துரைத்த பின்பும் அவர்கள் ஏற்று கொள்ளாமல் இருப்பார்களா?
أَفَحَسِبَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَن يَتَّخِذُوا۟ عِبَادِى مِن دُونِىٓ أَوْلِيَآءَ ۚ إِنَّآ أَعْتَدْنَا جَهَنَّمَ لِلْكَٰفِرِينَ نُزُلًۭا.
18:102. இதையும் மீறி அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாக நடந்து நிரந்தரமாக பாதுகாப்பாக வாழ்ந்திடலாம் என்ற நினைப்பில் இருக்கிறார்களா? ஒருபோதும் அப்படி நடக்க சாத்தியமில்லை. இறைவழிகாட்டுதலுக்கு மாற்றமாக செயல்படும் சமுதாயங்கள், அழிவை சந்திப்பது தவிர்க்க முடியாததாகும்.
இதற்கு காரணம் என்ன? இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து வாழும் சமுதாயங்களில் என்ன தவறு நடக்கிறது என்பதை அவர்களுக்கு அறிவித்துவிடுங்கள்.
قُلْ هَلْ نُنَبِّئُكُم بِٱلْأَخْسَرِينَ أَعْمَٰلًا.
18:103. இத்தகைய சமுதாயங்களில் நடைபெற்று வரும் செயல்களில், “மிகப் பெரும் நஷ்டத்தை விளைவிக்கும் செயல்கள் எவை என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று அவர்களிடம் கேளுங்கள்.
ٱلَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا.
18:104. யாருடைய செயல் திட்டங்கள், சமுதாய மக்களுக்கு நிகழ்கால உலக வாழ்வில் பலனளிக்காமல் இருக்க, தாங்கள் உண்மையிலேயே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ, அத்தகையவர்கள் தாம் மிகப் பெரிய நஷ்டவாளிகள் ஆவார்கள்.
18:105. இத்தகையவர்களே இறைவழிகாட்டுதலை நிராகரிக்கும் காஃபிர்கள் ஆவார்கள். இத்தகையவர்களின் செயல்கள் யாவும் வீணாகி, இறைவனின் நியதிப்படி அழிவை சந்திக்க வேண்டிவரும் என்பதை ஏற்று கொள்ளாதவர்கள் ஆவார்கள். இத்தகையவர்களின் செயல்கள் மறுமை நாளிலும் நன்மையின் எடைத் தட்டில் ஒருபோதும் நிற்காது.
ذَٰلِكَ جَزَآؤُهُمْ جَهَنَّمُ بِمَا كَفَرُوا۟ وَٱتَّخَذُوٓا۟ ءَايَٰتِى وَرُسُلِى هُزُوًا.
18:106. இந்த பேருண்மைகளை அறிந்திருந்தும், அவர்கள் அவற்றை ஏற்க மறுத்து, அதற்கு மாற்றமாக செயல்படுவதன் காரணமாக அவர்களுக்கு ஏற்படும் அழிவுகளாகும். மேலும் அவர்கள் இறைவழிகாட்டுதலை நிராகரித்ததோடு, இறைத் தூதர்களையும் மதிக்காமல் ஏளனப் படுத்தினார்கள்.
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ كَانَتْ لَهُمْ جَنَّٰتُ ٱلْفِرْدَوْسِ نُزُلًا.
18:107. மாறாக எந்தச் சமுதாயம் இறைவழிகாட்டுதலை ஏற்று ஆக்கப்பூர்வமான சமூக நலத்திட்டங்களைத் தீட்டி, உழைத்து வருமோ அவர்களுடைய சமுதாயம் சுவனத்திற்கு ஒப்பானதாக மாறிவரும். மேலும் அங்கு எல்லா வகையிலும் சுகமளிக்கும் சந்தோஷங்கள் நிறைந்திருக்கும்.
خَٰلِدِينَ فِيهَا لَا يَبْغُونَ عَنْهَا حِوَلًۭا.
18:108. அங்கு அவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். அங்கு கிடைக்கும் சந்தோஷமான வாழ்வை விட்டு வேறு எங்கும் போக விரும்ப மாட்டார்கள்.
قُل لَّوْ كَانَ ٱلْبَحْرُ مِدَادًۭا لِّكَلِمَٰتِ رَبِّى لَنَفِدَ ٱلْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَٰتُ رَبِّى وَلَوْ جِئْنَا بِمِثْلِهِۦ مَدَدًۭا.
18:109. இவையெல்லாம் இறைவனின் பரிபாலனத் திட்டங்களின்படி உருவாகும் சமூக அமைப்பில் தான் சாத்தியமாகும். அல்லாஹ்வின் இந்த பரிபாலன அமைப்பின் சிறப்புகளையும், அதன் விசாலத் தன்மைகளைப் பற்றியும் கடல் நீரை மையாக ஆக்கி மரம் செடிகளை எழுதுகோல்களாக ஆக்கி எழுதினாலும் அவை மாளாது. இப்படியொரு வேறு கடலையும் மையாக கொண்டுவந்தாலும் அவை எல்லாம் தீர்ந்து விடும். ஆனால் அவனுடைய புகழை எழுதிமுடிக்க முடியாது.
قُلْ إِنَّمَآ أَنَا۠ بَشَرٌۭ مِّثْلُكُمْ يُوحَىٰٓ إِلَىَّ أَنَّمَآ إِلَٰهُكُمْ إِلَٰهٌۭ وَٰحِدٌۭ ۖ فَمَن كَانَ يَرْجُوا۟ لِقَآءَ رَبِّهِۦ فَلْيَعْمَلْ عَمَلًۭا صَٰلِحًۭا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِۦٓ أَحَدًۢا.
18:110. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! நீர் மக்களிடம், “நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதனே அன்றி வேறில்லை. ஆனால் எனக்கு இறைவன் புறத்திலிருந்து வஹீ எனும் இறைவழிகாட்டுதல்கள் அருளப்படுகின்றன. மற்றபடி எனக்கும் உங்களுக்கும் உள்ள இறைவன் ஒருவனே. எனவே நாம் அனைவரும் அவனுடைய கட்டளைக்கு மட்டுமே கட்டுப்பட்டு வாழவேண்டும். இந்த உண்மையை ஏற்று ஆக்கப்பூர்வமான நற்செயல்களை செய்து, சமுதாயத்தை மேம்படுத்த வாருங்கள். இதற்காக நற்செயல்கள் என எவற்றை அவன் கோடிட்டு காட்டுகிறானோ, அதன்படியே நாம் செயல்படுவோம். அந்த செயல்திட்டத்தில் வேறு எந்த சித்தாந்தத்தையும கற்பனை செய்து இணைத்துக் கொள்ள மாட்டோம்” என்று அறிவித்து விடுவீராக.