بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

114:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
நாம் இதற்கு முன்னுள்ள அத்தியாயங்களை விளக்கியதன் தொடர்ச்சியாக


قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ.

114:1. நாம் அடிபணியும் இறைவன், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தையோ அல்லது நாட்டையோ பரிபாலிக்கின்ற இறைவன் அல்ல. உலகில் உள்ள ஒட்டு மொத்த மனித இனத்தையும் பரிபாலிப்பவனாகிய இறைவனை (ரப்புன்னாஸை) நாம் வழிபடுகிறோம்.
அதாவது ஒட்டு மொத்த உலக மக்கள் நன்மையை கருதியே அந்த ஏக இறைவனின் நெறிமுறைகளை முன்வைத்து செயல்படுகிறோம் என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்.


مَلِكِ ٱلنَّاسِ.

114:2. அகிலங்கள் அனைத்திலும் யாருடைய ஆட்சியும் அதிகாரமும் செயல்பட்டு வருகின்றதோ, அந்த ஏக இறைவனின் (மலிகின்னாஸின்) வழிகாட்டுதலின் அடிப்படையில் செயல்படுகிறோம் என்பதை மக்களிடம் சொல்.


إِلَٰهِ ٱلنَّاسِ.

114:3. யாருடைய வழிகாட்டுதலைக் கடைப்பிடிப்பதன் மூலமாக ஒட்டுமொத்த மனித இனமும் பாதுகாப்பாக இருக்குமோ, அந்த ஏக இறைவனிடம் (இலாஹின்னாஸிடம்) பாதுகாவல் தேடுகிறோம் என்பதை அறிவித்துவிடு.


مِن شَرِّ ٱلْوَسْوَاسِ ٱلْخَنَّاسِ.ᴑ

114:4. இப்படியாக நாம் இறைவழிகாட்டுதலை மிகவும் கவனத்துடன் கடைப்பிடித்து வரும் அதே சமயத்தில், மாபெரும் இந்த மார்க்கத்திற்கு எதிராக விதவிதமான வதந்திகளை எதிரணியினர் பரப்பி வருவதையும் கவனத்தில் கொள்கிறோம்.


ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِ.ᴑ

114:5. அவர்கள் வீணான சந்தேகங்களை மறைமுகமாக மக்கள் மனதில் ஏற்படுத்தி வருகிறார்கள். இதனால் மக்களிடத்தில் தொய்வும் உற்சாகக் குறைவும் ஏற்பட்டு விடும். எனவே இது விஷயமாக விழிப்புடன் இருக்கும்படி மக்களை அறிவுருத்தி வருவாயாக.


مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ.

114:6. இப்படி வதந்திகளை பரப்பி வருபவர்களில் ஒரு சிலர் நமக்கு அறிமுகமானவர்களும் இருக்கலாம். அதில் சிலர் நமக்கு அறிமுகமாகாத அன்னியர்களாகவும் இருக்கலாம்.
இருப்பினும் அத்தகைய வதந்திகளால் மக்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். நம் அறிவுப் புலன்களுக்கு உடனே புலப்படாமல் போய் விடும். எனவே இதிலிருந்து அனைவரும் வழிப்புடன் இருப்பது அவசியம் என்பதை மக்களிடம் எடுத்துரைப்பீராக.
யா அல்லாஹ்! நாம் செய்திருக்கும் இந்த சின்னஞ் சிறிய பணியினை ஏற்றுக் கொள்வாயாக. இதில் உள்ள குறைகளை மன்னித்தருள்வாயாக. ஆமீன்.