بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
108:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
إِنَّآ أَعْطَيْنَٰكَ ٱلْكَوْثَرَ.
108:1. சமூக சீர்திருத்தவாதியே! உமக்கு நாம் அருளியுள்ள இவ்வேதம் "உலகளாவிய நன்மைகளும் சந்தோஷங்களும்" என்ற அடிப்படையைக் கொண்டவையாகும்.
எனவே இதிலுள்ள ஞான உபதேசங்களும், விதிமுறைகளும் மாறி வரும் காலத்திற்கு ஏற்றவாறு தெளிவாகும் வண்ணம் அமைந்துள்ளன. அதன்படி செயல்பட்டால், அளவற்ற நன்மைகள் கிடைப்பதில் ஒருபோதும் எந்த குறையும் இருக்காது. (13:35) (14:24-25)
فَصَلِّ لِرَبِّكَ وَٱنْحَرْ.
108:2. எனவே நீர் உம் இறைவனின் கட்டளைக்கு இணங்கி உம் வாழ்வை அவனுக்காக அர்ப்பணித்துக் கொள்வீராக.
இறைத்தூருக்கு இடப்பட்ட கட்டளைகள் யாதெனில் இறைவன் தன் பரிபாலனத் திட்டத்தின்படி படைத்துள்ள பல்வேறு படைப்புகளின் செயல்பாபாடுகளைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைப்பது.(பார்க்க 30:20-27) மக்களிடையே உள்ள மூட நம்பிக்கைகளைப் போக்கி அவர்களுடைய சிந்தனைகளை தூய்மை ஆக்குவது. மக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட திட்டங்களைப் பற்றி எடுத்துரைத்து, அதனால் ஏற்படும் பலன்களைப் பற்றி எடுத்துரைப்பது. (பார்க்க 2:151) அதன்பின் அந்த தூய சமுதாயத்தில் இறைவனின் வழிகாட்டுதலின் படி ஆட்சியமைப்பை ஏற்படுத்தி, இஸ்லாம் மார்க்கத்தை உண்மையாக்கிக் காட்டுவது (பார்க்க 9:33) இது போன்ற கடமைகளை நிறைவேற்ற தம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.
إِنَّ شَانِئَكَ هُوَ ٱلْأَبْتَرُ.
108:3. தற்போது உம்முடைய தோழமைக் கூட்டம் மிகவும் பலவீனமாக உள்ளது. மேலும் எதிர் தரப்பிலுள்ள கூட்டம் மிகவும் வலிமை வாய்ந்ததாக உள்ளது. ஆனால் பலம் வாய்ந்த கூட்டம் தான் இறுதியில் அழிவை சந்தித்து, நிராதரவாய் நிற்கும். ஒட்டு மொத்த மக்களின் நலனைக் காக்கும் குர்ஆனிய ஆட்சிமுறைதான் மேலோங்கி நிற்கும்.