بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
101:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
ٱلْقَارِعَةُ.
101:1. ஆம். பேரிடி முழக்கங்களுடன் வெடிக்கக் கூடிய நிகழ்ச்சி!
مَا ٱلْقَارِعَةُ.
101:2. அதுவும் எப்படிப்பட்ட இடி முழக்கங்கள்?
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْقَارِعَةُ.
101:3. இறைவனைவிட வேறு யார் தான் அதைப்பற்றி சிறந்த முறையில் தெளிவாக்க முடியும்?
يَوْمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلْفَرَاشِ ٱلْمَبْثُوثِ.
101:4. அப்படி ஒரு கால கட்டத்தில் மக்களுடைய நிலை சிறகடிக்கப்பட்ட ஈசல்கள் போல் ஆகிவிடும்.
وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ ٱلْمَنفُوشِ.
101:5. மலைகளைப் போல் சொத்துக்களையும் அதிகாரங்களையும் குவித்து வைத்திருக்கும் தலைவர்களுடைய நிலைமை தடுமாறி பஞ்சாகப் பறந்துவிடும்.
فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَٰزِينُهُۥ. ᴑ
101:6. யாருடைய நற்செயல்களின் எடை கனத்திருக்கிறதோ,
فَهُوَ فِى عِيشَةٍۢ رَّاضِيَةٍۢ.ᴑ
101:7. அவர்களுடைய வாழ்க்கை வசதிகள் அவர்கள் விரும்பியவாறு சந்தோஷங்கள் நிறைந்ததாக இருக்கும். (பார்க்க 7:8)
وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ.ᴑ
101:8. யாருடைய நற்செயல்களின் எடை இலேசாக இருக்கிறதோ,
فَأُمُّهُۥ هَاوِيَةٌۭ.ᴑ
101:9. அவர்களுடைய நிலைமை துயரங்களும் இழிவும் கொண்டதாக இருக்கும். (பார்க்க 7:9) அப்படி ஒரு நிலையில் அவர்களின் சிந்திக்கும் திறன்கள் அற்றுப்போய் குழப்பத்தில் இருப்பார்கள்.
وَمَآ أَدْرَىٰكَ مَا هِيَهْ.
101:10. அந்த துயரமும் துக்கமும் என்னவென்று உனக்குத் தெரியுமா?
نَارٌ حَامِيَةٌۢ.
101:11. ஒரு நெருப்பு குண்டத்தில் ஒருவர் விழுந்துவிட்டால் எப்படி தவிப்பாரோ, அது போன்ற ஒரு துயர்மிக்க நிலையாகும். இறை வழிகாட்டுதல்கள் இல்லாமல் வாழ்பவர்களின் நிலை இப்படித்தான் இருக்கும் என்பதை அவர்கள் உணர வேண்டாமா?